Friday, September 25, 2009



நடிகர்களுக்கு யார் பட்டப்பெயர்களை வழங்குகிறார்களோ தெரியாது ஆனால் ரசிகர்கள் வழங்கினார்கள் என்னும் பெயருடன் தனக்கு தாங்களே பலர் வைத்து கொண்டு விடுவர். முன்பு ஸ்டார் என்னும் பட்டத்தின் மேல் இருந்த நடிகர்களின் காதல் இப்போது தளபதி மேல்.

இப்போ இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் சூர்யாவை தவிர அனேகமாக எல்லோருக்கும் பட்டம் உண்டு. இளைய தளபதி இருக்கும் போதே அவருக்கே சூட்டலாம் என நினைத்து விஜய் தரப்பு வைத்திருந்த புரட்சி தளபதி பட்டத்தை தானாகவே சூட்டிக்கொண்டார் விஷால். தொடர்ந்து வீரத்தளபதி ஜெ.கே.ரித்தீஷ்,அன்புதளபதி நரேன், சின்ன தளபதி பரத் என போனவர் வந்தவர் எல்லாம் பெயருக்கு முன்னாள் தளபதியாகி விட்டனர்.

இப்போது தான் தன வினையை தானே நொந்திருக்கின்றார் இவர்களில் ஒருவர். ஏற்கனவே பலர் கூறியும் கேட்காதவர் இப்போது இந்த பட்டப்பெயர் வேண்டாம் என முடிவெடுக்க காரணம் தொடர் தோல்விகள் தான். விஷால் எப்போது தன்னை புரட்சிதளபதியாக்கினாரோ அப்போதிலிருந்து காலம் சரியில்லாமல் போய்விட்டது. இப்போதுதான் இது மண்டையில் உறைக்க இனி அந்த பட்டத்தை பாவிக்க வேண்டாம் என தன ரசிக சிகாமணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள் சொன்னதால் இந்த பெயரை வைத்தேன் என சொன்னவர் இப்போது ரசிகர்களிடம் கேட்காமலே பெயரை எடுத்து விட்டார். இதற்கு ஒன்றும் சொல்லமாட்டாங்களா உங்கள் ரசிகர்கள் புரட்சி தளபதி மன்னிக்கவும் விஷால் அவர்களே.

6 கருத்துரைகள்:

Nimalesh said...

pavam pa namba Vijay........lol

விஷால் ரசிகர்கள் said...

எங்கள் தளபதி புரட்சிப் புயல் வெற்றிப்பட நாயகன் விஷாலைக் கலாய்க்கும் இளைய தலைவலியின் ரசிகரைக் கண்டிக்கின்றோம்.

யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...

என்னதான் இருந்தாலும் இளைய-தளபதியாக பல ஹிட்s தந்தவர் விஜய், சும்மா சீண்டி பார்க்க வேண்டாம், அடுத்த படம் ........?......?......? ஹாலிவுட் rangeல இருந்தாலும் இருக்கும் ..... யார் கண்டது

ராம்ஜி.யாஹூ said...

SITTING IN SRILANKA HOW COME YOUR ARE ABLE TO WRITE THAT TAMIL CINEMAVIL PARAPARAPU, TAMILNADU STAMBITTHADHU...

I CANT CONTROL MY LAUGH.

மஞ்சூர் ராசா said...

ஒழுங்கா நல்லப்படங்களில் நடித்திருந்தால் இது போன்ற பிரச்சினைகள் வந்திருக்காது. சும்மா ஹீரோயிசம் காண்பித்தால் இப்படித்தான்.

Tamil astrology said...

உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive