இலங்கைத் தமிழ் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முதல் தடவையாக நடந்து முடிந்தபின்னர் அடுத்த சந்திப்பு எப்போது என்று எல்லோரும் எதிர்பார்த்த போது நாங்கள் இருக்கிறோம் என சந்திப்பென்ற பெயரில் சில விரும்பத்தகாத சம்பவங்களோடு நடந்து முடிந்தது அந்த நிக்கிறம் மன்னிக்கவும் இருக்கிறம் சந்திப்பு.
அந்த குறைகளை நிவர்த்தி செய்து முற்று முழுதாக ஒரு ஆரோக்கியமான பதிவர் சந்திப்பு நடை பெறுவதற்கான ஆயத்த முயற்ச்சிகள் இடம்பெற்ற வேளையில் எனக்கு ஒரு மிரட்டல் விஜய்க்கு பதில் என்னுடைய கொடும்பாவியை எரிக்கப்போவதாக. (இப்போ சூர்யாவின் கொடும்பாவியும் எரிப்பிங்களா?) என் அன்பான பதிவர்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்றதன் வெளிப்பாடே அது.
இருந்தாலும் நம் குடும்பம், அன்பான நண்பர்களை பார்க்க வேண்டும் என எனக்கும் ஆசை.எல்லோரையும் சந்திக்கப்போகும் அந்த இனிய நாள் எப்போது என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்வைத்தார்கள் பாருங்கள் எனக்கு ஒரு இடி ஏற்ப்பாட்டாளர்கள். ஏனையா உங்களுக்கு என்மேல் என்ன கோவம்.? என் கையில் மாட்டிநீர்கள்? (அன்பாக திட்டுவேன்) இந்த சந்திப்புக்கான நாள் பலருக்கு உசிதமாக இருந்தாலும் இந்த துர்ப்பாக்கியசாலிக்கு ஏற்ப்புடையதாக இல்லை. காரணம் என் பெரியப்பாவின் அந்திரிட்டிக்கு நான் இன்றிரவு யாழ்ப்பாணம் செல்கின்றேன். என்ன செய்வது நண்பர்களே உங்களை பார்க்க முடியவில்லை. உங்கள் இனிமையான வார்த்தைகளை கேட்கமுடியவில்லை உங்களுடன் என் அன்பை நேரட்டியாக பகிர முடியவில்லை இது என் விதி.
ஏற்ப்பாட்டுக்குழு நண்பர்களே என்னை மன்னித்து விடுங்கள் நான் வரமாட்டேன். ஆனால் மற்ற பதிவுலக நண்பர்களே நீங்கள் கண்டிப்பாக செல்லுங்கள் இந்த இனிமையான் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். சந்திப்பு வெற்றிபெற உங்கள் குடும்பத்தில் ஒருவனின் வாழ்த்துக்கள். மீண்டும் விரைவில் சந்திப்போம் .....
இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.
கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
சிற்றுண்டியும் சில பாடல்களும்
கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.
உங்களுக்குள் உரையாடுங்கள்
கடந்தமுறை என்னைப்போன்ற ஒரு சிலரால் இப்படி பங்கேற்க முடியாமல் போக அவர்கள் மனம் நோகா வண்ணம் நேரடி ஒளி/ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதே போல் இம்முறையும் உங்கள் வீடுகளில் இருந்தே நீங்கள் பார்த்து மகிழ.http://livestream.com/srilankatamilbloggers
இதுவரை வருகிறோம் ஐயா போடாதவர்கள் இங்கே சென்று போட்டு விடுங்கள்.
http://srilankantamilbloggers. blogspot.com/2009/12/blog- post.html
தகவல்கள் தந்துதவிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்.கடந்தமுறை என்னைப்போன்ற ஒரு சிலரால் இப்படி பங்கேற்க முடியாமல் போக அவர்கள் மனம் நோகா வண்ணம் நேரடி ஒளி/ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதே போல் இம்முறையும் உங்கள் வீடுகளில் இருந்தே நீங்கள் பார்த்து மகிழ.http://livestream.com/srilankatamilbloggers
இதுவரை வருகிறோம் ஐயா போடாதவர்கள் இங்கே சென்று போட்டு விடுங்கள்.
http://
3 கருத்துரைகள்:
அப்பாடா நல்ல காலம்.. சென்றமுறைபோல் பண்ணுகிறேன் பேர்வழி என்று அறுக்க மாட்டியள்.. அவசரம் இல்ல. யாழ்ப்பாணம் போய் நிண்டு எல்லாம் முடிஞ்சாப்பறம் வாங்கோ..
அப்பிடியா??/ சரி...சரி... கவலைப்படாதையுங்க சதீஸ்..... மூன்றாவது சந்திப்பில சந்திக்கலாம்.......
பார்த்துக் கவனமாகப் போய்வாடா..
Post a Comment