ஆதவன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த திரைப்படம். ஆனால் மிகப்பெரிய எதிர்ப்பையும் சூர்யாவின் ரசிகர்களிடம் சலசலப்பையும் உண்டாக்கிய படம். இந்த படம் பற்றி என் முன்னைய பதிவின் தொடர்ச்சி......என் முன்னைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.
ஒருகாலகட்டத்தில் இவர்தான் வேண்டும் என அத்தனை ஹீரோக்களும் அடம்பிடித்த நாயகி. இன்று நாயகியின் அம்மாவின் அம்மா போன்ற தோற்றம். கட்டழகில் இன்னும் எதுவும் குறையவில்லை ஆனால் முகத்திலே கிழடு விழுந்து விட்டது நயனத்துக்கு. இதை எல்லாம் விட்டு விட்டு பார்த்தால். பிரபுதேவாவுடன் ஊரே நாறடித்த கள்ளக்காதல் தமிழ் நாட்டில் பல எதிர்ப்பலைகளை கொண்டுவந்தது. நயன்தாராவிற்கு எதிராக மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்க தயாராகின. பெரும்பாலானோர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெறுத்தனர். இந்த நேரத்தில் ஆதவன் வந்தது என்ன சூர்யா செய்த பாவமா? நயனின் இந்த நடத்தை கூட ஆதவன் சறுக்களுக்கு காரணமாக அமையலாம்.
இதற்கடுத்து இன்னும் சில பிரச்சனைகள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தன் காட்டுக்கத்தலை காட்டி விட விடுவார்களா? அவர்கள் வறுத்தெடுத்து விட்டனர். என்ன செய்வது மினிமம் கரண்டி இயக்குனர் கே.எஸ்.ஆரால் கூட ஆதவனின் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை.
இப்படி ஆதவன் அஸ்தமித்த காரணம் என நான் பட்டியலிட்டாலும் ஆதவன் உணமையிலேயே அஸ்தமித்த படமா என்றால் அது தப்பு தான். சூர்யா,கே.எஸ்.ஆர்,நயன்தாராவின் பிரச்சனைகள் பெரிதாக பேசப்பட்டது ஒரு காரணமாக அமைந்தாலும் வடிவேலு படத்தை தூக்கி நிறுத்த பாடுபட்டிருக்கின்றார். அதேபோல போட்ட முதலுக்கு மோசமில்லாமல் ஆதவன் வசூலித்து விட்டது. அப்படியானால் ஆதவன் தோல்வியா இல்லையே. இது சூர்யாவின் தப்பா? இல்லை ரசிகர்கள் தப்பா? உண்மையில் சூர்யா என்னும் நடிகனிடம் ரசிகர்கள் இன்னும் எதிர்பார்த்தது ரசிகர்கள் தப்பு அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சூர்யா படத்தினைக் கொடுக்காதது அவர் தப்பு. இந்த படத்துக்கு ஆதரவாகவும் எதிரமறையாகவும் எழுதிய சில பதிவர்களின் தப்பு. என தப்புக்கள் நிறைய இருந்தாலும் ஆதவன் எனக்கென்னவோ வசூலில் ஏமாற்றாமல் சூர்யாவிற்கு படிப்பினையையும் நல்ல பொழுது போக்குள்ள சினிமாவையும் கொடுத்ததேன்றே சொல்வேன். சுருக்கி சொல்லப்போனால் விஜய்யின் குருவி, அஜித்தின் ஏகன் வழியில் சூர்யாவிற்கும் ஒருபடம்......
டிஸ்கி:என் மாமா (வந்தியர்தாங்க) நேற்று இரவு ரொம்ப கவலைப்பட்டார் வேட்டைக்காரன் டிரைலரில் நம் தலைவி அனுஷ்காவை காட்டவில்லை என்று தலைவருக்கு பயங்கர கவலை அதனால் என் மாமனை குளிர்விக்க இதோ ஸ்வீட்டி ஷெட்டி...அதுதாங்க அனுஷ்காவின் நிஜபெயராம்.
2 கருத்துரைகள்:
ஆதவன் திரைப்படத்தில் வடிவேலு இல்லன படம் வெளிவந்த அடுத்த நாளே படப்பெட்டிகள் திரும்ப தயாரிப்பாளர் வீட்டுக்கு போயிருக்கும்.
சுமாரான வெற்றி என்று நினைக்கின்றேன்.
//டிஸ்கி:என் மாமா (வந்தியர்தாங்க) நேற்று இரவு ரொம்ப கவலைப்பட்டார் வேட்டைக்காரன் டிரைலரில் நம் தலைவி அனுஷ்காவை காட்டவில்லை என்று தலைவருக்கு பயங்கர கவலை அதனால் என் மாமனை குளிர்விக்க இதோ ஸ்வீட்டி ஷெட்டி...அதுதாங்க அனுஷ்காவின் நிஜபெயராம்.//
நல்ல மாமா..... நல்ல ____....
வாழ்க உங்கள் உறவு........
Post a Comment