மத்திய அமைச்சரும் கலைஞரின் வாரிசுமான மு.க. அழகிரி தன் மகன் தயாரிப்பில் உருவாகும் தூங்கா நகரம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதாக பேச்சடிபடுகின்றது. (கலைஞரே எவ்வளவு பெரிய நடிகர் இவரால் முடியாதா என்ன? சாரி பாசத்தலைவர் நடிகர் இல்லை வசன கர்த்த என்ன. அப்போ உள்குத்தெண்டு நினைக்கிறிங்களா நினச்சிட்டு போங்க.) நமபமுடியாமல் இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்கின்றார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தை தொடக்கி வைத்தவரே இந்த மதுரை நாயகன் தான். அப்படி இருக்கையில் மதுரையை பற்றிய படத்தில் இவர் இல்லாமல் போகமுடியுமா. பாசக்கார தலைவர் பாடையில் போன பின் வரலாறாய் அவர் வாழ்ந்தகாலம் வந்தாலும் வரும் பள்ளிப்பாடத்தில்.
தமிழ் படத்துக்கும் தலையின் படத்துக்கும் இடையில் தன் தனயன் தயாரிக்கும் படத்தில் தன் இப்போதைய பதவியான மத்திய அமைச்சராகவே பட்டையை கிளப்ப தயாரிவிட்டார் அண்ணல். தொண்டர்களே ஹீரோவைவிட பெரிய கட அவுட்,பனர், பால் அபிஷேகம் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ரெடி...ஸ்டார்ட்....
ஒரு சின்ன சந்தேகம் தளபதி இருக்கார்....இளைய தளபதியும் இருக்கார்....சின்ன தளபதியும் இருக்கார் அப்போ இவருக்கு பெரிய தளபதி என டைட்டில் போடுவாங்களோ?
4 கருத்துரைகள்:
மதுரையிலுள்ள எங்களுக்கே தெரியாமல் அண்ணே...படமா...? நல்ல தகவல் ..மதுரை அதிருமில்ல....
உங்கூர்ல எலெக்சனாமே, அதப்பத்தி எதாச்சும் எழுதுங்க பாஸூ...
//Madurai Saravanan கூறியது...
மதுரையிலுள்ள எங்களுக்கே தெரியாமல் அண்ணே...படமா...? நல்ல தகவல் ..மதுரை அதிருமில்ல...//
நன்றி நன்றி அதிர வச்சிடுங்க,
//டவுசர் பாண்டி... கூறியது...
உங்கூர்ல எலெக்சனாமே, அதப்பத்தி எதாச்சும் எழுதுங்க பாஸூ..//
பாஸ் அரசியலா அப்பிடி எண்டாலே என்ன என தெரியாது அதுவும் நம்மூரு அரசியலா வேண்டாம் வம்பு ஆளவிடுங்க சாமி....
Post a Comment