என்னடா நிறைய நாளைக்கு பிறகு இவன் எழுதிறான் என பார்க்கின்றீர்களா? ஓ ஒருவேளை புதுசா ஏதும் வேலைக்கு போயட்டானோ இல்லை ஒரு சில பதிவர்கள் போல கா_ல் இல் மாட்டி விட்டாரோ என்று எல்லாம் கற்பனை பண்ணப்படாது. நாங்கள் எப்போதும் வீட்டிலேயே பிசியாய் இருக்கும் பிரபலங்கள்.(நாங்கள் தான் அப்படி சொல்லணும்) அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு பதிவு எழுதவில்லை? ஏன் நீ குடியிருக்கும் மூஞ்சி புத்தகப்பக்கமும் வரவில்லை இப்போ இங்கே வந்து என்ன பெரிசா அலம்பிறாய் என கேட்கலாம். பதில் சொல்லவா? சொல்லத்தானே வேணும்.
கடந்த மாதம் எனக்கு டயலாக் வழங்கி இருந்த இணையப்பாவனைகான எல்லையை நான் தாண்டி விட்டேன் என என் இணையம் மெதுவாகி விட்டது. நமக்கு எதுவும் பாஸ்டா இருந்தா தானே கிக். சிலோ ஆனதில் ஒரு சில நாள் அதை பாவிச்சு அலுத்துப்போய் அப்பிடியே இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த நேரம் எனக்கு அது உதவியாய் இருந்தது. கரணம் பல ஆய்வுகள் புண்ணாக்குகள் எல்லாம் இணையத்தை அதிகம் பாவிக்கும் நபர்கள் அந்த இணையம் இன்றி இருப்பது கடினம் என்றார்கள் அந்த இணையம் இல்லாமல் ஒரு அமைதியான வாழ்க்கை எப்படி இருக்கும் டென்சன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்க்க எனக்கும் ஒரு ஆசை தான். காரணம் நான் அதிக நேரம் இங்கே குந்தி இருப்பவன் ஆனால் இதை விட்டு இருக்கும் போது எனக்கு நிறைய நேரம் வேறு இடத்தில் செலவழிக்க கிடைத்தது. சோ நோ கவலை. இணையத்துக்கு அடிமையானவன் போல இருந்த நான் இணையம் இன்றி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருந்தேன் இணையத்தோடு இருந்த நாளை விட இணையம் இல்லாத நாள் உண்மையில் மன அமைதியோடு இருந்தது.
இணையம் கூடவே இருப்பதும், நாம் விலகி இருப்பது, இருந்தும் மன கட்டுப்பாடோடு இருப்பது என எல்லாமே நம் கையில் தான் இருக்கின்றது. ரஜினி பட பாடல்போல கையில் கொஞ்சம் காசு இருந்தால் அதற்க்கு நீதான் எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன் என்பது போல நம் மன கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இணையம் என்ன எதுவுமே நம்மை ஒன்றும் செய்யாது. அடிமையாவதும் அதில் இருந்து வெளியே வருவதும் நம் கையில் தான்.
அடுத்து இன்னொரு விஷயம். கடந்த எட்டாம் திகதி எனது இருபத்திரண்டாவது பிறந்தநாள்(வயசை சொன்னால் நம்பணும் நான் பிறந்தது 8.8.88 ங்கோ). வெற்றியில் கடந்த வருடம் வேலை செய்யும் போது ஏராளமான நேயர்கள் வாழ்த்தி இருந்தார்கள். இந்த வருடமும் அந்த நண்பர்கள் எனக்கு வாழ்த்தியது அதிர்ச்சி கலந்த சந்தோசம். என்னை அவர்கள் எல்லோரும் மறந்திருப்பர் என நினைத்தேன். ஆனால் என்னை மறக்காமல் வாழ்த்தி திக்கு முக்காட வைத்துவிட்டனர். சிலர் என் தொலைபேசிக்கு அழைப்பெடுத்தி வாழ்த்தியதும் சந்தோசம். பாடசாலை நண்பர்கள், முகப்புத்தாக நண்பர்கள், மின் அஞ்சல நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், வானொலி நண்பர்கள், வானொலி சக அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் என அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்து என்றைக்கும் நமக்கு பூஸ்டு.
அதெல்லாம் இருக்கட்டும் என்னது டிரீட் கேட்கிறியளா? என்னது டிரீட்டா
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
யாரபாத்து டிரீட் கேட்கிரிய? நம்மளை பத்தி இவங்களுக்கு தெரியல நாம அடுத்தவங்க கிட்ட தான் டிரீட் கேட்பம் நாம யாருக்கும் கொடுத்ததில்லை. கொடுக்கப்போவதும் இல்லை. (என்னது டயலாக்கை வேற சுட்டு போடுறான் என திடப்படாது ஐ ஆம் பாவம். ஓகே டீல்.
சரி பதிவு போட்டா ஒரு படம் போடணும் தானே. சோ கஷ்டப்பட்டு ஒரு படம் போட்டிருக்கேன் நீங்களும் கஷ்டப்பட்டு தான் இந்த மூஞ்சியலை பார்க்கணும். ஆனால் கடைசியில் இந்த மூவரை பற்றியும் ஒரு விஷயம் சொல்லப்போறேன் கவனமாய் கேளுங்கோ.
இந்த படம் எடுக்கப்பட்டது இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது. அதில் வெள்ளையும் கருப்பும் சேர்த்து அழகான டி சேர்டில் முதலாவதாய் இருக்கானே ஒரு பையன் அவன் தான் கிரேட் சதீஷ்(நான் தானுங்கோ) அடுத்தது கிரிக்கெட் அனலிஸ்ட் பிரபல பின்னூட்ட வாதி(பதிவர் இல்லை இதை கவனிக்க ) கான்கொன் அல்லது கிரீஸ் அல்லது கோபி அடுத்தவர் ஏரியாத சுவடுகள் வைத்து எல்லோரையும் கொமென்ட் போட்டு எரிய வைக்கும் பவன்.
சரி இவங்க மூன்று பேரும் தான் 3 இடியட்ஸ்சாம் ஷங்கர் இவர்கள் மூவரையும் தான் நடிக்க வைக்க முயற்சி எடுக்கிராராம். அப்போ படம் எப்பிடி இருக்கும்.....சும்மா பிச்சிக்கிட்டு ஓடும். எதை எண்டு கேட்கப்படாது.
7 கருத்துரைகள்:
அவ்வ்வ்வ்வ்வ்....
ஏனய்யா இந்தக் கொலைவெறி?
இணையமில்லாம இருக்கேலாது இருக்கேலாது.
சும்மா பொய் சொல்ல வேண்டாம்.
கீழ இருக்கிற 3 பேரில், நடுவில் இருப்பவர் 3 முட்டாள்களில் நடிக்க மறுப்பு.
தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு. ;)
அது எல்லாம் சரி அண்ணே,கன காலம் எழுதாம விட்டு டச்சு விட்டு போச்சு போல...வழமையிலும் மாறாக எழுத்துப்பிழைகள் இம்முறை..
என்றாலும் மீள் வருகைக்கு நன்றி!!இனி அளந்து பாவியுங்கோ நெட்'a அப்பா தான் கிக் குறையாம இருக்கும்..
@கன்கொன் || Kangon
நீயும் இணையம் இல்லாமல் இருக்கலாம். முயன்று பார் முடியும்
என்னது நடிக்க மாட்டாயா? அப்போ நீ தான் சிம்புவா? ஓ அவருக்கு நடிக்கத் தெரியாது தானே அவர் தானே சொன்னார். அதுசரி அந்த புரோபெசர் வேடம் நடிக்கப்போவதாய் ஒரு பேச்சு ஓகே சொல்லிட்டாயா?
@mynthan
எழுத்துப் பிழைகள் திருத்திவிட்டேன். நன்றி நண்பா. கிக் கிக்கோ கிக்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........
மீள் வருகைக்கு நன்றி!!!
தொடர்ந்து எழுதவும்!!!
3 இடியட்ஸ் இவங்கதானா, அது எல்லாத்துக்கும் தெரியுமே, படமெடுத்து காட்ட வேண்டுமா?
Post a Comment