Monday, July 20, 2009

விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா?

பதிவுலகில் அண்மையில் விருது வழங்கும் ஒரு கலாசாரம் பரபரப்பாக பேசப்படுகின்றது. சிலர் தமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றார்கள் தகுதியானவர்களை தவறவிடுகின்றார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டே. உண்மையில் எல்லா பதிவர்களுக்கும் எல்லா பதிவர்களையும் தெரிவதில்லையே.(என்னை எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க.) அப்படி இருக்கும் போது இந்த பெரிய காலத்தில் அவரவர் தாம் ரசித்து படிக்கும் பதிவர்களுக்கு விருது வழங்குவது என்னைப்பொறுத்தவரை தப்பில்லை.

என்னடா நமக்கு யாரும் விருது கொடுக்கலையே, ஒருவேளை ரொம்ப மட்டமா எழுதுகிறோமோ, அல்லது நான் எழுதிறது பதிவுகள் இல்லையா? என சந்தேகத்தோடு இருக்கும் நேரம் தான் நம்ம பதிவர்களை திசை திருப்பலாம் என நினைத்து திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்காக எல்லோரையும் என் தளத்திற்கு அழைத்தேன். ஓரளவிற்கு சிறப்பாக அது சென்றுகொண்டிருக்கின்றது. இப்படிப் போய்க்கொண்டிருந்த என்னுடைய பதிவுலகவாழ்வில் ஒரு தென்புதருவதாக அண்மையில் பதிவர் சந்ரு எனக்கு வழங்கிய பட்டாம்பூச்சி விருது அமைந்தது. பதிவுலகில்அவருக்கு கிடைத்த அந்த விருதை என்னைப்போன்ற ஐந்து பதிவர்களுக்கு வழங்கி உரமூட்டிய அவருக்கு என்றென்றும் என் நன்றிகள். அதுமட்டுமில்லாமல் அவர் இந்த பதிவுலகில் என் தளத்திற்கு வானொலி கட்ஜெட் தந்துதவியமைக்கும் நன்றிகள்.

அதேநேரம் இந்த விருதினை பெற்றுக்கொண்ட என் நண்பர்கள் அத்தனைபேருக்கும் என் வாழ்த்துக்கள். நானும் ஒரு பதிவர் என்ற அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்கின்றது என்பது இப்போது எனக்கு ஒரு திருப்தி. ஆனால் இந்த பரந்த பதிவுலகில் நான் ஒரு கடைக்கோடி பதிவர். என்னை விட எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கின்றார்கள்.(நான் பதிவுலகில் கால் பதிக்க காரணமாக் இருந்த லோஷன் அண்ணா எதை எழுதினாலும் ஹிட் ஆக எனக்கு எப்போது அப்படி அமையும் என இன்று வரை ஏங்கும் ஒரு சாதாரணமானவன்.) ஏதோ அப்பப்போ மனதில் தோன்றும் எண்ணங்களை உளரித்தள்ளும் நான் பல தரமான பதிவுகளையும் தொடர் ஹிட்களையும் தந்து பதிவுலகில் சாதனை படித்துக்கொண்டிருக்கும் என் சக நண்பர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் அளவிற்கு தகுதி அற்றவன்.

இந்த விருது வழங்கினால் அதை இன்னும்சில பதிவர்களுக்கு வழங்கிவந்துகொண்டிருப்பது எனக்கும் தெரியும். ஆனால் குழந்தையாக தவழ்ந்து பதிவுலகில் படித்துக்கொண்டிருக்கும் நான், அதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவிற்கு சிறப்பான பதிவை தருபவர்களுக்கு எப்படி விருது வழங்க முடியும் . எனவே சகல பதிவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பணம் ஆக்குவதோடு என் வாழ்த்துக்களையும் பகிருகின்றேன். எனக்கு இந்தவிருதை வழங்கி சிறப்பித்த நண்பர் சந்ரு, நீங்கள் வழங்கிய விருதை நான் பெரிய கௌரவமாக கருதுவதோடு, அதற்கு மரியாதை செய்கின்றேன். அதேநேரம் என்னால் தொடர்ந்து இந்த விருதினை வழங்கி சிறப்பிக்கமுடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கின்றேன்.

மிக விரைவில் ஐம்பதாவது பதிவை சந்திக்கப்போகின்றேன். எனவே எனக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து தருவதோடு , தமிழகத்தின் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி மற்றும் அடுத்த பிரபுதேவா என பட்டம் சூடிய SHERIF மற்றும் கலக்கப்போவது யாரு, ஜோடி புகழ் சிவகார்த்திகேயனோடு இரண்டு நாட்கள் நடைபெற்ற சுவையான சம்பவங்களை தொடர்பதிவுகளாக தரப்போகின்றேன். அதுமட்டுமன்றி பிரபல அறிவிப்பாளர்,பதிவர் லோஷன் அண்ணா அவர்களிடம் எல்லோரும் கேட்க நினைக்கின்ற கேள்விகளை கனியாக நான் தொடுக்க அதற்கு அவரே பதிலளிக்கப்போகின்றார். எனவே அந்த சுவையான பதிவையும் எதிர்பார்த்திருங்கள்.

ஐம்பதாவது பதிவை தொட்டபின் ஒரு அதிரடி வேண்டும் தானே........
Share:

29 கருத்துரைகள்:

ரவி said...

நல்லாத்தாம்யா எழுதற...!!!

50 க்கு வாழ்த்துக்கள்......

sshathiesh said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி செந்தழல் ரவி. உங்களைப்போன்றவர்களின் வருகை என்னை மென்மேலும் வளப்படுத்தும்.

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

50க்கு அட்வான்ஸ் வாழ்த்து!

வோர்ட்வெரிஃபிகேசனை எடுத்துட்டா நிறைய பேர் சிரமம் பார்க்காம கருத்து சொல்லுவாய்ங்க!

rapp said...

வாழ்த்துக்கள் SShathiesh

நாமக்கல் சிபி said...

//உங்களைப்போன்றவர்களின் வருகை என்னை மென்மேலும் வளப்படுத்தும்.//

செந்தழல் ரவி மாதிரியே இன்னும் 6 பேர்தான் இருக்காங்களாம்! ஆனா அவங்களெல்லாம் பிளாக் படிப்பாங்களான்னு தெரியலை!

அது சரி! இங்க வந்திருக்குறது உண்மையான செந்தழல் ரவிதான் மாமூ! அவரைப்போன்றவர் இல்லை!

நிகழ்காலத்தில்... said...

\\ஏதோ அப்பப்போ மனதில் தோன்றும் எண்ணங்களை உளரித்தள்ளும் நான் பல தரமான பதிவுகளையும் தொடர் ஹிட்களையும் தந்து பதிவுலகில் சாதனை படித்துக்கொண்டிருக்கும் என் சக நண்பர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் அளவிற்கு தகுதி அற்றவன். \\

இந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்

பதிவுலகத்தில் எல்லோரும் சமமே

நட்பும், கருத்துப் பகிர்வுமே இங்கு முக்கியம்.

வாழ்த்துக்கள்

kindy remove word verification

Admin said...

உங்கள் நன்றிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள். உங்களை நான் அண்மையில்தான் அறியக்கிடைத்தது என்றாலும் உங்கள் பதிவுகளை பார்த்தேன். நான் கூட உங்களைப்போல் வளர்ந்து வரும் ஒரு பதிவர்தான். எனக்கு கிடைத்த இந்த விருதினை வளர்ந்து வரும் பதிவர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமும்.

50 வது பதிவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்...

எனக்கு பிடித்த அறிவிப்பாளர், அதையும் விட எனக்குப்பிடித்த, நான் மதிக்கும் ஒரு நல்ல மனிதரைப்பற்றி நீங்கள் எழுதப்போகும் தொடர் சிறப்படைய வாழ்த்துக்கள். விரைவில் எதிர் பார்க்கிறேன்..

Admin said...

//வோர்ட்வெரிஃபிகேசனை எடுத்துட்டா நிறைய பேர் சிரமம் பார்க்காம கருத்து சொல்லுவாய்ங்க!//

உண்மைதான் சதீஸ் பலர் இந்தத் தொல்லயினால்தான் கருத்துரை இடுவதில்லை...

ஆதிரை said...

வாழ்த்துக்கள் நண்பா.

உங்களின் தொடர்பதிவுகளுக்காக காத்திருக்கின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி கூறியது...
வாழ்த்துக்கள்!

50க்கு அட்வான்ஸ் வாழ்த்து!

வோர்ட்வெரிஃபிகேசனை எடுத்துட்டா நிறைய பேர் சிரமம் பார்க்காம கருத்து சொல்லுவாய்ங்க
//உங்களைப்போன்றவர்களின் வருகை என்னை மென்மேலும் வளப்படுத்தும்.//

செந்தழல் ரவி மாதிரியே இன்னும் 6 பேர்தான் இருக்காங்களாம்! ஆனா அவங்களெல்லாம் பிளாக் படிப்பாங்களான்னு தெரியலை!

அது சரி! இங்க வந்திருக்குறது உண்மையான செந்தழல் ரவிதான் மாமூ! அவரைப்போன்றவர் இல்லை!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நான் நீங்கள்சொன்னது போல இப்போ வோர்ட் வ்ரிபிகேசனை தூக்கி விட்டேன்.இனி நீங்கள் அடிக்கடி உங்கள் கருத்தை பரிமாறலாம். அதேநேரம் செந்தழல் ரவி பற்றி தெளிவா குழப்பிரின்களே. ஒண்ணுமே புரியல.

sshathiesh said...

rapp கூறியது.

வாழ்த்துக்கள் SShathiesh

RAPPவருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.

sshathiesh said...

நிகழ்காலத்தில்... கூறியது...
\\ஏதோ அப்பப்போ மனதில் தோன்றும் எண்ணங்களை உளரித்தள்ளும் நான் பல தரமான பதிவுகளையும் தொடர் ஹிட்களையும் தந்து பதிவுலகில் சாதனை படித்துக்கொண்டிருக்கும் என் சக நண்பர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் அளவிற்கு தகுதி அற்றவன். \\

இந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்

பதிவுலகத்தில் எல்லோரும் சமமே

நட்பும், கருத்துப் பகிர்வுமே இங்கு முக்கியம்.

வாழ்த்துக்கள்

kindy remove word verification

நிகழ்காலத்தில் உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரம் உங்களைப் போன்றவர்களின் பலரின் ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. நீங்கள் சொன்னதை செய்து விட்டேன்.நன்றிகள்.

sshathiesh said...

சந்ரு கூறியது...
உங்கள் நன்றிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள். உங்களை நான் அண்மையில்தான் அறியக்கிடைத்தது என்றாலும் உங்கள் பதிவுகளை பார்த்தேன். நான் கூட உங்களைப்போல் வளர்ந்து வரும் ஒரு பதிவர்தான். எனக்கு கிடைத்த இந்த விருதினை வளர்ந்து வரும் பதிவர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமும்.

50 வது பதிவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்...

எனக்கு பிடித்த அறிவிப்பாளர், அதையும் விட எனக்குப்பிடித்த, நான் மதிக்கும் ஒரு நல்ல மனிதரைப்பற்றி நீங்கள் எழுதப்போகும் தொடர் சிறப்படைய வாழ்த்துக்கள். விரைவில் எதிர் பார்க்கிறேன்....

சந்ரு கூறியது...
//வோர்ட்வெரிஃபிகேசனை எடுத்துட்டா நிறைய பேர் சிரமம் பார்க்காம கருத்து சொல்லுவாய்ங்க!//

உண்மைதான் சதீஸ் பலர் இந்தத் தொல்லயினால்தான் கருத்துரை இடுவதில்லை...

விருதை வழங்கி சிறப்பித்தது உங்கள் பெருந்தன்மை.வாழ்த்துக்களுக்கு நன்றிகள். லோஷன் அண்ணா உங்களுக்கு மட்டுமல்ல நான் உட்பட பலரின் அபிமான அறிவிப்பாளர். அதுமட்டுமில்லாமல் அவருக்கும் எனக்கும் இருக்கும் உறவுகளோடு அந்தப்பதிவு வரும். இப்போ உங்கள் பிரச்சனையை தீர்த்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல வளர்ந்து வரும் பதிவர் தான் நான் அதனால் தான் நான் யாருக்கும் அந்த விருதைக் கொடுக்கவில்லை. நீங்கள் வளர்ந்து வரும் பதிவர் என உங்களை குறிப்பிட்டாலும் உண்மை மற்றவர்களுக்கு தெரியுமே. தயவு செய்து இந்த பதிவை தப்பாக என்ன வேண்டாம்.

முதன் முறையாக வந்திருக்கும் ஆதிரைக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சுபானு said...

நல்வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. 50 ஆவது பதிவிற்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்..

butterfly Surya said...

வாழ்த்துக்கள் நண்பா

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

உங்கள் தொடர் ஹிட்ஸை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.....

SShathiesh-சதீஷ். said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபானு.

SShathiesh-சதீஷ். said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

SShathiesh-சதீஷ். said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

உங்கள் தொடர் ஹிட்ஸை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்....

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். நிச்சயமாக தரமான படைப்புகளை தர நான் காத்திருக்கின்றேன்.

Anonymous said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Prapa said...

தம்பி சதீஷ் கவல படாதையும் , நமக்கிட்ட நிறைய விருது பெண்டிங் இருக்கு, அதெல்லாம் யாருக்கு வச்சிருக்கம் உமக்குத்தான் , வெளியில யாரிடமும் சொல்லி போடாத , ......
விரைவில் விருது தேடிவரும்.

SShathiesh-சதீஷ். said...

சின்ன அம்மிணி கூறியது...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

SShathiesh-சதீஷ். said...

பிரபா கூறியது...
தம்பி சதீஷ் கவல படாதையும் , நமக்கிட்ட நிறைய விருது பெண்டிங் இருக்கு, அதெல்லாம் யாருக்கு வச்சிருக்கம் உமக்குத்தான் , வெளியில யாரிடமும் சொல்லி போடாத , ......
விரைவில் விருது தேடிவரும்.

உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா. ஏதோ பாத்து இந்த சின்னப்பையனுக்கும் கொடுக்கிறது. ஆனால் இதை நான் யாரிட்டையும் சொல்லமாட்டன் பிறகு உங்களை தனியா கவனிக்கிறன்.

Nimalesh said...

u won... congrats....

Feros said...

வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் நண்பா

பூச்சர வெற்றியாளரே...

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
u won... congrats....

நன்றி நண்பா.

SShathiesh-சதீஷ். said...

Mohamed Feros கூறியது...
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் நண்பா

பூச்சர வெற்றியாளரே...

நன்றி நண்பா.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive