கொல்லும் இந்த எமனை கொல்ல இதுவரை எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படாததால் எத்தனையோ மனித உயிர்கள் அழிந்து விட்டது. பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு அந்நிய படைகள் வரக்கூடாது என போடும் பாதுகாப்பை விட இந்தக் காய்ச்சலுக்கு போடும் பாதுகாப்பு அதிகம்.
இப்படி எத்தனையோ வகை வகையான காய்ச்சல்களை பார்த்து விட்ட மனித இனம் அதற்கான தடுப்புகளை கண்டுபிடித்து அவற்றை அழித்தும் இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு இப்போது ஸ்வைன் ப்ளூவிற்கும் சாவு மணி அடிக்க பல விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளும் சேர்ந்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தின் தேசிய உயிரியல் தரக்கட்டுபாடு நிறுவன விஞ்ஞானிகள் கோழியின் முட்டையில் துளையிட்டு அதனுள் ப்ளூ வைரசை வளர்க்க திட்டம் தீட்டிஇருக்கின்றனர். வைரஸ் வளர தேவையான அனைத்து வசதிகளும் முட்டைக்குள் இருக்கின்றது என இது தொடர்பான ஆராச்யில் ஈட்டுபட்டிருக்கும் ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்.
இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தடுப்பூசி தயாரிக்க உள்ளனர். இந்த தயாரிப்பு வேலைகள் முடிய மூன்று தொடக்கம் நான்கு வாரங்கள் ஆகலாமெனவும் பெரிய அளவில் தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் தேவைப்படும் என சொல்கின்றனர்.
எவ்வாறெனினும் இந்த கொலைகாரனுக்கும்(நோயிற்கும்) மருந்து கண்டு பிடிப்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் இவை எல்லாம் கண்டு பிடித்து பாவனைக்கு வந்து மனித உயிர்களை காப்பாற்ற எடுக்கும் காலத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றனவோ?
0 கருத்துரைகள்:
Post a Comment