{தமிழ் நாட்டு மன்மதனே(சாரி மக்கள் தளபதியே) வாராய் நீ வெற்றி மாலைக்கென்று பிறந்தவனோ?}
நடிகர் இளயதளபதி விஜய் நடிக்கவந்து ஐம்பதாவது படத்தை தொடப்போகின்றார். யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் விஜய். வெற்றிகளை கொடுக்கும் போது தூக்கிவைத்து கொண்டாடிவிட்டு இன்று தோல்விகள் பார்த்தவுடன் இப்படி அவரைப் பற்றி கிண்டலடிப்பது தப்பே. இருந்தாலும் அது இயற்கையே.(ரஜினி கூட தப்பவில்லையே)
வேட்டைக்காரன் விஜயின் 49வது படம். விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் ஒரு பாடல் அறிமுகமாகி விட்டது என எல்லோரும் பெரிதாக கூவினார்கள். ஆனால் அது இன்னொரு திரைப்படபாடல் என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. அதேபோலத்தான் சிம்புவின் விண்ணைத்தாண்டிவருவாயா, அஜித்தின் அசல் பாடல்களும் வந்திருப்பதாக சொல்கின்றார்கள். நிச்சயமாக இவை எல்லாம் பொய்யாகவே இருக்கப்போகின்றன.
இந்த நிலையில் தான் இப்போது விஜயின் ஐம்பதாவது பட விபரங்கள் அடுத்தடுத்து வந்து தீனி போடுகின்றது. தேர்தல் பரபரப்புக்குள் இதுவும் தமிழ் சினிமாவின் பரபரப்பே. காரணம் விஜயும் அஜித்தும் ஒரே நேரத்தில் ஐம்பதாவது படத்தை கொடுக்கப்போகின்றனர். எனவே இந்த போட்டியாளர்களில் யார் ஜெயிக்கப்போகின்றார் என அவரவர் ரசிகர் மட்டுமல்ல தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருக்கின்றது.
இரண்டுபேரின் கடைசியாக வந்த படங்களும் சரியாகப்போகாவிட்டலும் அடுத்து இருவரும் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு குறையவே இல்லை. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த பாடல்கள் லீக் என்னும் விடயம். அதேபோல் இவர்கள் படங்கள் வெளிவரும்போது பரபரப்பும் வரும் வசூலும் வரும்.(முதலுக்கு மோசமில்லாமல்)
விஜயின் ஐம்பதாவது படத்துக்கு சித்திக் முதல் ஜெயம் ராஜா வரை பல இயக்குனர்கள் பேசப்பட்டு இப்போது திருப்பாச்சி, சிவாகாசி எனும் இரு சரவெடிகளை விஜய்க்கு கொடுத்து உயர்த்திய ஊர் பெயர் பிரபலம், மசாலா நாயகன் பேரரசு இந்த படத்தை இயக்கப்போகின்றார். இருந்தாலும் இம்முறை கதை அவர்கதை இல்லை. கதை, திரைக்கதை, வசனம் பொன்மனம் என்ற நல்ல படத்தை கொடுத்து இன்று அழகர்மலை என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் எஸ்.பி.ராஜ்குமார்தான் திருமலைக்காக(அதுதாங்க விஜய்) எழுதுகின்றார்.
நகைச்சுவை, மசாலா இந்த இரண்டுமே விஜயை ஏற்றிவிட்டுள்ள நிலையில் இந்தப்படத்திலும் அதே கைங்கரியத்தில் களம் இறங்கப்போகின்றார். (குருவி, வில்லு போல நல்ல படமா இல்லாட்டி சரி!)
விஜயின் ஆரம்பகால தோல்விகளில் எல்லாம் தோள்கொடுத்து தூக்கிவிட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப்படத்தை தயாரிக்கவில்லை.(அப்பாடா நிம்மதி இயக்குனருக்கு) சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப்போகின்றது. ஏற்கனவே விஜயின் திரையுலக மைல்கல் காதலுக்கு மரியாதையை தந்தது இதுதான்.(படம் பப்படமானால் காதலுக்கு மரியாதை செய்த வசூலை இதற்காக கழிக்கசொல்வார்களோ தயாரிப்பாளர் கவனம்.)
இசை யார்? தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாதான்.(இசைஞானியும் விஜய்க்காக குத்து தான் போடுவாரோ? எப்பிடியோ பாட்டு சூப்பர் ஹிட் ஆவது உறுதி)
எல்லாம் சொன்னாச்சு, நாயகி யார்? வேறு யார் இப்போ தமிழ்சினிமாவின் ஆப்பிள் கன்ன அழகி தமன்னா தான். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி ஆகிவிட்ட தமன்னா இப்போ விஜயுடன். எங்கோ ஆரம்பித்து தனுஷ், சூர்யா என வளர்ந்து இன்று ஒரு தலைமுறையின் முன்னணி நாயகனுடன் ஜோடி போடப்போகின்றார்.(சூர்யா என்னதான் ஹிட் கொடுத்தாலும் விஜய் எத்தனை தோல்விகொடுத்தாலும் இன்னும் விஜயின் அந்தஸ்து குறையவில்லை.)மொத்தத்தில் இந்த அழகிக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலம் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கும். விஜயுடன் நடித்தால் கண்டிப்பாக பலதரப்பட்ட மக்களிடம் சென்றடையும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் மேலும் முன்னணி நடிகையாக வலம்வர தமன்னாவிற்கு வாய்ப்புண்டு.
(அப்பாடா ஒருமாதிரி சரியான ஆளைத்தான் பார்த்து பிடிச்சிருக்கேன்போல! ?)
ஒருவாறாக முக்கியமான கலைஞர்கள் தேர்வு முடிவிற்கு வந்திருக்கின்றது. அதேபோல் கதையிலும் புதுமையுடன் சிறப்பாக செய்தால் ஐம்பதாவது பட தேர்தலில் விஜயின் வெற்றி உறுதி. தன் கடந்தகால படங்களில் இருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொண்டு இந்தப்படத்துக்கு கஷ்டப்பட்டு உழைத்து நல்ல கதை திரைக்கதையுடன் கொடுத்தால் பல முன்னணி கலைஞர்கள் ஒன்று சேரும் இந்தப்படமும் விஜய்க்கு ஐம்பதல்ல 200 not out ஐ கொடுக்கும்.
3 கருத்துரைகள்:
சரி, இனிமே தமன்னா மார்க்கெட் குறைய உங்க இந்த ஒரு பதிவு போதும். அய்யோ தமன்னா...
வான்முகிலனே, பழசை மறக்கக்கூடாது. விஜயின் அந்தஸ்து இன்னும் குறையவில்லை அதுமட்டுமல்ல. குழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. போக்கிரிக்கு பின் அசின் எங்கேயோ போய்விட்டார்.
சைலன்ஸ்!......
Post a Comment