Sunday, July 12, 2009

ஒதுக்கப்படுகின்றாரா சமிந்த வாஸ்?

பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான், அதேநேரம் தேவைப்படும் நேரங்களில் சகலதுறையிலும் பிரகாசித்து வெற்றி பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவரும் இவரே. அவர் தான் இலங்கையின் மதுமாகல பிரதேசத்தில் ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்தேழாம் திகதி பிறந்து கிரிக்கெட்டை கலக்கிய வர்ணகுலசூரிய பட்டபெண்டிகே உஷாந்த ஜோசெப் சமிந்த வாஸ். (அப்பாடா பேர முழுசா சொல்லவே களைக்கிதே இவர் சாதனை........)
இடதுகை துடுப்பாட்ட வீரரும் இடது கை மித வேகப்பந்து வீச்சாளருமான இவர் 15.02.1994 அன்று இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது தனது களப்பிரவேசம் செய்தார். அந்தப்போட்டியிலேயே தன் முதல் விக்கெட்டாக இந்தியாவின் முக்கிய ஆட்டக்காரராக இருந்த சித்துவை ஆட்டமிழக்க செய்து தன் பயணத்தை ஆரம்பித்தார். இந்த போட்டியில் எட்டு ஓவர்கள் பந்து வீசி இரண்டு ஓட்டம் அற்ற ஓவர்கள் அடங்கலாக நாற்பது ஓட்டங்களை கொடுத்த வாஸ் இந்த போட்டியில் துடுப்பாடவில்லை.ஆனால் அந்தப் போட்டி இலங்கைக்கு எட்டு விக்கெட்டுகளால் தோல்வியைகொடுத்தது. இதுவரை 322 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ் 320 முறை களமிறங்கி 2025 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் ஐம்பது ஓட்டங்களை குவித்துள்ள வாஸ் பந்து வீச்சில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரின் சிறந்த பந்து வீச்சு பெறுமதி கேட்பவர்களை மலைக்க வைக்கும் காரணம் பத்தொன்பது ஓட்டங்களை கொடுத்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பதே அது. என்ன செய்வது இந்த சாதனை சிம்பாவே அணியுடன் என்னும்போது ஏனோ பெரிதாக தோணவில்லை.
ஒரே போட்டியில் ஐந்து விகேட்டுகளை நான்கு தடவைகள் கைப்பற்றி பெருமை சேர்த்திருக்கின்றார். 2003 ஆண்டு உலகக்கிண்ண தொடரின் போது பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் முதலாவது ஓவரை வீசிய வாஸ் ஒரு அதிசயம் நிகழ்த்தினார். முதல் மூன்று பந்துகளிலும் மூன்று விக்கெட்டுகள் அரங்கமே அதிர நம்பமுடியா சாதனை அது.
ஒருநாள் போட்டியின் வாழ்க்கையை எப்படி இந்தியாவுடன் ஆரம்பித்தாரோ அதேபோல அவர் இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டியும் இந்தியாவுடன் அமைந்தது வேடிக்கையான உண்மையே. இந்தப்போட்டிக்கும் வாசின் முதலாவது போட்டிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு அதேநேரம் மறக்க முடிய சில சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

தன் முதல் போட்டியில் எப்படி நாற்பது ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினாரோ அதேபோல இந்தப்போட்டியிலும் நாற்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட். அதுவே அவரின் நானூறாவது விக்கெட் கூட. இதில் என்ன கொடுமை என்றால் யுவராஜின் விக்கெட்டை வாஸ் கைப்பற்ற யுவ்ராஜோ வாசின் விக்கெட்டினை கைப்பற்ற பதினேழு ஓட்டங்களோடு வாஸ் நடையைக்கட்டியத்தை எப்போதும் மறக்க முடியாது. அதேநேரம் வாசின் முதல் போட்டியை எப்படி தோல்வியோடு ஆரம்பித்தாரோ அதை மீண்டும் ஒருமுறை இந்தப்போட்டி நினைவூட்டியது.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடன் ஆரம்பமானது இவரின் டெஸ்ட் பயணம். இந்தப்போட்டியிலும் தோல்விமுகக்த்தோடு தான் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழலுக்கு பாகிஸ்தானின் இரண்டு வேகப்பந்து சூரர்கள் செய்துவிட்டனர். வசீம் அக்ரம் முப்பத்திரண்டு ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டை வீழ்த்த மறுமுனையில் அவரின் சகா வக்கார் யூனிஸ் முப்பத்திநான்கு ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை ஆடிப்போனது. துடுப்பாட்டத்தில் எந்தவித ஓட்டமும் பெறாமல் வெளியேறினார் வாஸ். பந்துவீச்சிலாவது அசத்துவார் என பார்த்தால் அங்கேயும் ஏமாற்றம். முதல் போட்டியிலேயே விக்கெட் இல்லை, இலங்கை அணியின் இரண்டாவது இன்னின்சின் போது வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க படு தோல்வியோடு முடிந்தது அந்தப் போட்டி.

ஆனால் அதன் பின் நூற்றிப்பத்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வாஸ் ஒரு மிகச்சிறந்த சகலதுறை வீரராக பரிணமித்து இலங்கை அணிக்கு எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஓட்டங்களை குவித்துள்ள வாஸ் பதின் மூன்று முறை ஐம்பது ஓட்டங்களை கடந்திருப்பதே அவரின் துடுப்பாட்ட திறமைக்கு சான்று. ஆனால் அதை விடவும் தன்னால் முடியும் என தன் 97வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் நூறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அதிசயிக்க வைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சில் 354 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள வாஸ், ஒரு இன்னிங்சில் எழுபத்தொரு ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டினை கைப்பற்றியதோடு ஒரு போட்டியில் அதிக பட்சமாக பதின்நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பன்னிரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டு முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருப்பது அவரின் திறமைக்கு இன்னொரு சான்று. இப்படி சாதனைகளோடு இலங்கையின் வெற்றிகளில் தன் பங்கை பெருமளவு பதித்த வாஸ் இறுதியாக பாகிஸ்தானுடன் ஆடிய டெஸ்ட் போட்டிதான் அவரின் இறுதி டெஸ்ட் போட்டியாக மாறி விடுமோ என்பதே என் கவலை மட்டுமல்ல பல ரசிகர்களின் கவலையாக இருக்கின்றது.(ஒருநாள் போட்டிகளில் இந்தியாவோடு ஆரம்பித்து இந்தியாவோடு முடிந்தது போல இது பாகிஸ்தானோடு ஆரம்பமாகி இப்போ பாகிஸ்தானுடனேயே முடியும்?........) இறுதியாக அவர் ஆடிய டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் ஒருமுறை ஆட்டமிழக்காமல் பன்னிரண்டு ஓட்டங்களையும் மறுமுறை பதினேழு ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தவர் பந்து வீச்சில் எந்த வித விக்கெட்டையும் கைப்பற்றாது மீண்டுமொருமுறை இதுதான் இவரின் இறுதிப்போட்டியா என கிலி கொள்ள வைக்கின்றது.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் தன் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாஸ் அதன் பின்னர் நடை பெறும் டெஸ்ட் தொடர்களில் புறக்கநிக்கப்படுவதே இப்போது அவரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.அதற்கு முன் கிரிகெட்டின் அடுத்த பரிமாணமான போட்டிகளில் வாஸின் பங்களிப்பும் கணிசமானதே. 2006ம் ஆண்டு சர்வதேச ரீதியில் நியூசிலாந்துடனான போட்டியில் களம் புகுந்த வாஸ் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். மழை காரணாமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி பதினெட்டு ஓட்டங்களால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல்வேறு வகையான போட்டிகளில் வாஸ் விளையாடி வருகின்றார். இவை எல்லாம் வாஸ் இலங்கை கிரிக்கெட்டுக்காக தான் விளையாடிய காலத்தில் செய்த சாதனைகளும் சொதப்பல்களுமே.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்று வரை வாசைப் போல ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை இலங்கை பெறவில்லை என்பதே உண்மை. இவரின் பந்தை எதிர்கொள்ள எத்தனையோ துடுப்பாட்டக்காரர்கள் அஞ்சி நடுங்குவர். இப்படி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னிய வாஸ், இன்று கேட்பாரற்று போயிருக்கின்றாரோ என்பதுதான் தெரியவில்லை. புதியவர்களின் வருகை புத்துணர்ச்சி தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட தொடக்கி இருக்கின்றார் வாஸ். ஆனால் அவரின் இடம் இன்னும் காலியாகத்தான் இருக்கின்றது. வாஸின் திறமை கடைசி நேரத்தில் சற்று தளம்பி இருப்பது என்னவோ உண்மைதான், அதேநேரம் புதியவர்கள் பட்டையைக் கிளப்பும் போது யாரை நிறுத்தி இவரை உள்ளே கொண்டுவருவது என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியே?

இந்த பாகிஸ்தானுடனான தொடரை பார்க்கும் போது நிரந்தரமாக வாஸ் ஒதுக்கப்படுவாரோ என்னும் அச்சம் எழாமல் இல்லை. காரணம், பாகிஸ்தானை எப்படி சுருட்டினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியுமே. என்ன தான் இருப்பினும் ஒரு சகலதுறை வீரராக பல வெற்றிகளின் பங்காளியான வாஸுக்கு தலைமைப் பதவி கொடுக்காததும் ஒரு மிகப்பெரிய குறையே. இப்படிப்பட்ட பல வீரர்களை இலங்கை அணி ஏனோ கண்டு கொள்வதில்லை.(நமக்கெதுக்கப்பா வம்பு).
புதியன புகுதலும் பழயன கழிதலும் இயல்பே, ஆனால் இப்படிப்பட்ட வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு போக முன்னர் அதற்க்கு ஏற்ற மரியாதையை கொடுக்க வேண்டியது எந்த அணியினரின், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் கடமையே. எனவே கவலையோடு முகவரி இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியோடு அவரை வழி அனுப்பாமல், மறைமுகமாக ஒப்பந்தம் செய்தாலும் பரவாயில்லை வெளி உலகிற்கு கௌரவமாக அவரை இன்னும் ஒருசில போட்டிகளில் விளையாட விட்டு மனமார(வெளி உலகிற்கு) வாஸாகவே விடைபெறுவது போல அவரை வழி அனுப்புவதே அவருக்கு கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல அவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்.
Share:

0 கருத்துரைகள்:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive