பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html
என்னுடைய கடந்த பதிவுகளில் ஒன்றில் சமிந்த வாஸ் என்னும் ஒரு அற்புதமான வீரரை இலங்கை தெரிவாளர்கள் அண்மைக்காலங்களில் புறக்கணித்து வருகின்றனர் என இட்டிருந்தேன். இது நம்ம தெரிவாளர்களின் காதுக்கு கேட்டு விட்டதோ என்னவோ?(அவர்களுக்கு தமிழ் தெரியுமா என கேட்கக்கூடாது) இப்போது வாசினை மீண்டும் அழைத்திருக்கின்றார்கள்.
பாகிஸ்தான் அணியுடன் மிக அபாரமான ஆட்டத்தால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வீறுகொண்டு எழுந்திருக்கும். இலங்கை அணியில் பந்து வீச்சு ஜாம்பவான்கள் முரளி மற்றும் வாஸ் இல்லாமலே வெற்றி தேடி வந்தது. இப்போது பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரண்டு பெரும் விளையாடும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. முரளியின் இடம் நிரந்தரமாகி இருக்கும் நிலையில் வாஸ் இப்போது பதினாறாவது வீரராக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கும் இலங்கை அணி இந்த இருவர் கூட்டணி நீண்ட காலத்துக்கு பிறகு மிரட்டினால் பாகிஸ்தானை இலகுவில் சுருட்டி சரித்திர வெற்றியை பதிவு செய்யும். வாசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. பல இளைய வீரர்கள் சாதித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் வாஸ் தனக்கு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அவருக்கு இன்னுமொரு முறை சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும்.
அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் சோபிப்பதோடு தொடர்ந்து வரும் போட்டிகளில் அசத்தினாலே தொடர்ந்து விளையாடும் விருப்பம் இருந்தால் வாஸ் தன்னை நிலை நிறுத்த முடியும். அப்படி இல்லாவிட்டால் இந்த போட்டியில் அபாரமாக செயற்பட்டு அணியை வெற்றிபெற வைப்பதோடு தன் கிரிக்கெட் பயணத்தையும் வெற்றியோடு நிறைவு செய்வதே வாஸ் என்னும் சாதனை வீரனுக்கு அழகு.
4 கருத்துரைகள்:
அன்பின் சதிஸ்...
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html
பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் சதீஸ்.எமது “நிலாமுற்றம்” திரட்டியினை உங்கள் நண்பர்கள்,இலங்கை பதிவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவையுங்கள்.
நன்றி.
“நிலாமுற்றம்”
http://www.nilamuttram.com
உங்கள் விருதுக்கு மிக மிக நன்றிகள். பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது இதுவே. அதேநேரம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் நன்றிகள்.
Post a Comment