Thursday, July 2, 2009

சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்குள் நுழைந்த சூப்பர் ஸ்டார்.


நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவது தான் இப்போ Fashion. அந்த வகையில் இனி வரும் காலங்களில் சினிமாவை விட்டுவிட்டு முழுமூச்சாக அரசியலில் மட்டும் ஈடுபடப்போவதாக தெரிவித்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார்.
ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் நம் ரஜினி அல்ல, சிரஞ்சீவி.
பிரஜா ராஜ்ஜிய கட்சி தலைவராக அரசியலில் காலடி எடுத்து வைத்து பல சோதனைகளை சந்தித்தவர் இன்று முற்றுமுழுதாக இனி அரசியல் தான் என ஒரு முடிவேடுத்திருக்கின்றார்.இரண்டு குதிரைகளில் எப்படி ஒருவரால் பயணம் செய்யமுடியாதோ அதேபோல இனி என்னால் சினிமா,அரசியல் என இரட்டை சவாரி செய்யமுடியாது அதனால் சினிமாவை விட்டு ஒதுங்குகின்றேன் என அறிவித்திருக்கின்றார்.இது அவரின் ரசிகர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கின்றது.

ஹைதராபாத்தில் இதுபற்றி நிருபர்களிடம் விளக்கம் கொடுத்திருக்கும் சிரஞ்சீவி,சினிமா நான் பிறந்தவீடு, அரசியல் நான் புகுந்தவீடு. பிறந்தவீடு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த பின் எப்படி பிறந்தவீட்டுக்கு கணவனை பிரிந்து பெண்ணால் செல்லமுடியாதோ அப்படிதான் என் நிலையும் எனக்குறிப்பிட்டிருக்கின்றார்.(நம் நடிக அரசியல் வாதிகளுக்கு இது தெரியலையே, ஒருவேளை தாங்கள் ஆண்கள் தங்களுக்கு புகுந்தவீடு பிறந்தவீடு எல்லாம் ஒன்று என நினைக்கின்றார்களோ? அப்படி என்றால் சிரஞ்சீவி பெண்ணா?)

கட்சியைக் கட்டி எழுப்புவதே இப்போது தன் முதல் கடமை எனக்குறிப்பிட்ட அவர், கடந்தமுறை கட்சிக்கு கிடைத்த சின்னமே தோல்விக்கு காரணமென்பதால் இம்முறை உதய சூரியன் சின்னத்தில் உதித்தெளுவோம் என உறுதியளித்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார்.

என்னதான் அரசியலில் சென்று அவர் கலக்கினாலும் சினிமாத்துறையைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய இழப்பே. ஒரு சூப்பர் ஸ்டார் நுழைந்துவிட்டார் மற்றவர்?
Share:

2 கருத்துரைகள்:

SUMAZLA/சுமஜ்லா said...

என் பிரியமானவர்கள் பட்டியலில் என் வலைப்பூவை இணைத்தமைக்கு நன்றி! இதை என் கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

SShathiesh-சதீஷ். said...

SUMAZLA/சுமஜ்லா கூறியது...
என் பிரியமானவர்கள் பட்டியலில் என் வலைப்பூவை இணைத்தமைக்கு நன்றி! இதை என் கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

நண்பரே, உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வந்துள்ளேன் அவை என்னை மிகவும் கவர்ந்து விட்டன அதனால் உங்களையும் என் பிரியமானவர்கள் பட்டியலில் இணைத்தேன். உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். கூகிள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் அறிந்ததாக சொன்னீர்கள் அந்த வசதியை எப்படி பெறுவது. என்ன செய்யவேண்டும் என்ற விடயங்களை எனக்கும் சொல்லமுடியுமா?

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive