விருதுகளால் பல பதிவர்கள் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் யோ வாய்ஸ் சார்பாக எனக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்தது. அதன் தொடரை நான் தொடர காலம் எடுத்துக்கொண்டிருக்க இப்போது சற்று நாட்களுக்கு முன் மீண்டும் சந்ருவினால் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. விருதுகளை கொடுப்பதும் பெறுவதும் பற்றி பலர் பல்வேறு விதமாக கூறினாலும் எனக்கு விருது கிடைத்தது சந்தோசமே. இப்போது நான் கொடுக்கப்போவாதும் மகிழ்ச்சியே.
இம்முறை விருது வழங்கும் போது எனக்கு நிறைய பதிவர்களை படிக்க முடிந்தது. அதற்கு காரணம் பதிவர் சந்திப்பு. நிறைய பதிவுகளை படித்தேன் அப்படிப்படிக்கும் போது எல்லோரும் என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து விட்டனர். அதில் பத்துபேரை தெரிந்து இந்த விருதை வழங்கப்போகின்றேன். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்.
1. ௧.கனக கோபி.
தன்னைப்பற்றி என்ன சொல்வதென்பதற்கே யோசிக்கும் இவர் பதிவுகளில் சொல்லவேண்டியவற்றை சொல்லி விடுவார். பல்சுவை கலந்த எழுத்தில் நான் இவரை ரசிக்கின்றேன்.
2. பால்குடியின் தாய்மடி.
உங்கள் எண்ணங்களை மீட்டு அரவணைப்புடன் ஆறுதல் தேட நீங்கள் தாரளமாக இவர் தளம் செல்லலாம். தன் வாழ்வில் இருக்கும் யதார்த்தங்கள் அதிகம் பிரதிபலிக்கப்படும்.
3. கவ்பாய் மது.
நாவினால் நாட்டையே அசையவைக்கும் அசகாய சூரன். பதிவுகளோ பாரினை சுற்றிவரும். பேருந்தில் பயணித்து பேயறைந்து போய் நிற்கின்றார்.
4. த கிரேட் புல்லட்.
பெயரிலேயே வில்லங்கம் என்றால் முதலில், தலைப்பிலும் புல்லட்டின் டுமீல். ஏதோ சீரியஸ் பதிவர் என பார்த்தால் சுண்டக்காயையும் சூத்தைக்கத்தரிக்கயையும் கூட சுவையாக சமைக்கும் வல்லமை பொருந்திய சுவாரஸ்ய பதிவர். இப்படி சொல்ல காரணாம் சின்ன விடயங்களையும் எதிர்மறையான விடயங்களை கூட நகைச்சுவையாக தரக்கூடியவர். பதிவர் சந்திப்பின் பின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார். என்ன செய்வது வந்தி அண்ணருக்கு போட்டியாக இப்பவே தனக்கு பொண்ணு பார்க்க தொடங்கி விட்டார்.
5. டயானா
அறிந்ததும் அறியாததும் என எல்லாவற்றையும் எழுதும் இவர் அடிக்கடி காணாமல் போய்விடுவார். தனக்கு தானே காணவில்லை என எழுதி பரபரப்பூட்டும் பதிவாயினி.(எல்லாம் கவிதாயினி என்னும் பெண்பாலில் இருந்து செட்டது.)அப்பப்போ எழுதினாலும் அறிவாக எழுதும் கெமிஸ்ட்ரி (இவரின் ரொம்பநாள் பிரச்சனை ) தெரிந்தவர்.
6. ஹரன்.
சாமானியன் என சொல்லிக்கொண்டே சகலதும் எழுதும் சகலகலாவல்லவர். கவிதை முதல் காரசாரம் வரை கலந்து கலக்குபவர்.7.மருதமூரான்.
பதிவர் சந்திப்பில் நாயகன். கடலையும் வானத்தையும் கூட உடைத்தெறிந்து எல்லை வகுத்தவர். சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி. 8.சுபானு.
சொல்வதற்கு ஏதும் இல்லை என்று விட்டு சொல்லவேண்டிய எல்லாவற்றையும் ஊஞ்சல் ஆட்டியே சொல்லிவிடுவார். சுயமும் சுவாரஸ்யமும் தான் இவரின் ஊஞ்சலின் இரண்டு கயிறுகள். 9.பனையூறான்.
ஏதேனும் எழுதவேண்டும் என்பதற்காக எழுவது என சொல்லி விட்டு எல்லாவற்றையும் எழுதிவிடுவார். தேடியதும் தெரிந்ததும் தொட்டதும் தொடாததும் வடலிக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களும் இந்த பனையூரானின் உச்சத்திலே பளிச்சென தெரிந்து விடும். பட்டத்தை பட்டென சொல்லும் பனையூரான். 10. வந்தியத்தேவன்.
என் உளறல்கள் என உள்வீட்டு ரகசியங்களை உளறித்தள்ளும் ஒரு உளறல் நாயகன். சக பதிவர்களை காளியாக்கியே பதிவிடும் அன்பு நெஞ்சன். மூத்த பிரபல பலம் தின்று கொட்டை போட்ட பதிவர் என தன்னை தானே சொல்லல் சொல்லும் உண்மையிலேயே மூத்த பதிவர்.(பூட்டனை காணும் வயதில் இருக்கும் உங்கள் வயதை சொன்னேன்.) எல்லாவற்றுக்கும் மேலாக பதிவர் சந்திப்பில் அறிமுகமாகி இன்று என் பதிவுகளிலும் தளத்திலும் மாறா அக்கறை உடைய யானைப்பலம் கொண்ட புண்ணியவான். கண்டதும் கேட்டதும் நக்கலும் நையாண்டியும் கலந்து வரும் கள்ளம் கபடமற்று. அதுவே இவரின் பெரிய வெற்றி. அப்பாடா நீண்டகாலமாக என் மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு உணர்வை இப்போது பதிந்து விட்டேன். பெற்றவர்கள் தொடர்வார்கள் என்றும். மற்றவர்கள் வாழ்த்துவார்கள் எனவும் எண்ணி எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மீண்டும் சந்திப்போம். வரட்டா...........
23 கருத்துரைகள்:
உங்கள் விருதுக்கு நன்றிகள். என்னைப் பற்றி நிறைய அறிந்திருக்கின்றீர்கள். என்னை ஒருவர் தொடர்பதிவு ஒன்றிற்கு அழைத்தார் யார் யாரை அழைக்கலாம் என நினைக்க மவனே வந்து மாட்டினாய்.
தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை என் எழுத்து கவர்ந்துள்ளதை நினைக்க பெருமையாகவுள்ளது... ஆனால் விருதை கொடுப்பதற்கு ஆள் இல்லாமையால் வாங்கி ஷோ கேசினுள் வைப்பதை தவிர வேறு வழியில்லை..மீண்டும் நன்றிகள்..
விருதுக்கு நன்றிகள்...
உண்மையிலேயே என்னைப் பற்றி எனக்கத் தெரியாது..
மீண்டும் நன்றிகள்...
அத்தோடு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்...
வாருங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.html
////சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.////
சதீஷ்…….
என்னுடைய பதிவுகளில் இவ்வளவு விடயம் இருக்கிறதா? துங்களின் பரிசுக்கும் நன்றிகள். தங்களைப் பற்றி அண்மையில் வந்தியிடமும், லோஷனிடமும் பேசும் பொழுது கதைந்திருந்தேன். தங்களின் தொழில் துறையில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்ரேயாவின் பிறந்த நாளுக்கு சென்றதால் தான் தாங்கள் நெடு நாட்களாக பதிவு எதுவும் இடவில்லை என்று வந்தி அண்மையில் அலைபேசினார்.
மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர்ந்து ஏற்றுக்கொள்கின்றேன்.. விரைவில் பதிவிடுகின்றேன்.
விருதுகளை பெற்றவர்களுக்கும் விருது வழங்கிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சதீஷ்..
ஆமா விஜய் அரசியலுக்கு வரலையாமே?
சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ…….
http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_16.html
விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!!!
விருது பெற்ற உங்களுக்கும். உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் வழங்கியுள்ள விருதினை மன மகிழ்வுடன் ஏற்கிறேன். நன்றிகள்.
நன்றிகள் அண்ணா உங்கள் விருதுகளுக்கு. சந்தோசமாக இருக்கிறது.
வந்தியத்தேவன் கூறியது...
உங்கள் விருதுக்கு நன்றிகள். என்னைப் பற்றி நிறைய அறிந்திருக்கின்றீர்கள். என்னை ஒருவர் தொடர்பதிவு ஒன்றிற்கு அழைத்தார் யார் யாரை அழைக்கலாம் என நினைக்க மவனே வந்து மாட்டினாய்
=>>
வந்தியத்தேவனா எனக்கு அவரை தெரியாது. எஸ்கேப் தொடர்பதிவில் இருந்து.
புல்லட் கூறியது...
தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை என் எழுத்து கவர்ந்துள்ளதை நினைக்க பெருமையாகவுள்ளது... ஆனால் விருதை கொடுப்பதற்கு ஆள் இல்லாமையால் வாங்கி ஷோ கேசினுள் வைப்பதை தவிர வேறு வழியில்லை..மீண்டும் நன்றிகள்.
=>>
உங்களிடம் ஷோ கேஸ் இருக்கு வைக்கிறீர்கள் இல்லை என்பதால் நாங்கள் கொடுக்கின்றோமா? நல்லா இருக்கியா போலோ பண்ணுங்க
கனககோபி கூறியது...
விருதுக்கு நன்றிகள்...
உண்மையிலேயே என்னைப் பற்றி எனக்கத் தெரியாது..
மீண்டும் நன்றிகள்...
அத்தோடு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்...
வாருங்கள்..
=>>
உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் அழைத்த தொடர்பதிவை விரைவில் எழுதுகின்றேன்.
மருதமூரான். கூறியது...
////சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.////
சதீஷ்…….
என்னுடைய பதிவுகளில் இவ்வளவு விடயம் இருக்கிறதா? துங்களின் பரிசுக்கும் நன்றிகள். தங்களைப் பற்றி அண்மையில் வந்தியிடமும், லோஷனிடமும் பேசும் பொழுது கதைந்திருந்தேன். தங்களின் தொழில் துறையில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்ரேயாவின் பிறந்த நாளுக்கு சென்றதால் தான் தாங்கள் நெடு நாட்களாக பதிவு எதுவும் இடவில்லை என்று வந்தி அண்மையில் அலைபேசினார்
=>>
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். ஸ்ரேயாவின் பிறந்தநாள் வேலைகள் எவ்வளவு இருந்திருக்கும் அப்படி இருக்கும் போது எனக்கு நேரம் கிடைக்கதேன்பது உண்மைதானே.
சுபானு கூறியது...
மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர்ந்து ஏற்றுக்கொள்கின்றேன்.. விரைவில் பதிவிடுகின்றேன்
=>>
உங்கள் வருகைக்கு நன்றிகள் .
யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
விருதுகளை பெற்றவர்களுக்கும் விருது வழங்கிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சதீஷ்..
ஆமா விஜய் அரசியலுக்கு வரலையாமே
=>>
தெரியாதா உங்களுக்கு நான் ஏற்க்கனவே அதை காங்கிரசுடன் அரசியல் இல்லை- அரசியலுக்கு முன் அரசியல் செய்யும் விஜய் என பதிவிட்டேன் அதன படி நடந்ததை கவனிக்கவில்லையா?
மருதமூரான். கூறியது...
சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ……
=>>
நன்றிகள் எழுதி விட்டேன்.
கார்த்தி கூறியது...
விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!!
=>>
வருகைக்கு நன்றிகள் .
சந்ரு கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும். உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்
=>>
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.
பால்குடி கூறியது...
நீங்கள் வழங்கியுள்ள விருதினை மன மகிழ்வுடன் ஏற்கிறேன். நன்றிகள்
=>>
வருகைக்கு நன்றிகள்.
பனையூரான் கூறியது...
நன்றிகள் அண்ணா உங்கள் விருதுகளுக்கு. சந்தோசமாக இருக்கிறது
=>>
நன்றிகள்.
மிக்க நன்றி சதீஸ்... கவ்பாய்மது இல்லையுங்கோ... கௌபாய்மது...
கொஞ்ச நாளாப் பதிவிடவில்லை... இப்படியான ஊக்கங்கள்தான் பதிவிடத் தூண்டுகின்றன...
Post a Comment