Monday, September 21, 2009

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு- ஒரு அலசல்.



இலங்கை தொடர், அவுஸ்திரேலியா -இங்கிலாந்து தொடர்களை தொடர்ந்து இப்போது கிரிக்கெட் புயல் தென் ஆபிரிக்காவில் மையம் கொள்ளப்போகின்றது. இன்னும் சில நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் முழு வேலையும் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதுதானாக இருக்கும். எட்டு அணிகள் எப்படியாவது இம்முறை கிண்ணத்தை வெல்லவேண்டும் என்னும் நோக்கில் களம் கண்டிருக்கின்றன. இரண்டு குழுக்களிலும் இருக்கும் அணிகள் முட்டி மோதப்போகின்றன. கிண்ணத்தை வெல்லும் என கணிக்கப்படும் இந்திய, இலங்கை அணிகள் பயிற்சிப் போட்டிகளிலேயே பல்லு போய் இருக்கின்றன. அண்மையில் சறுக்கிய அவுஸ்திரேலியா அணியோ அசுர பலத்தோடு எழுந்து நிற்கிறது. இதுதான் கிரிக்கெட் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது. எட்டு அணிகளின் பலம் பலவீனத்தை கொஞ்சம் அலசலாமா

குழு A

அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்.

குழு B

தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து.

குழுவை பார்க்கும் போது எட்டும் எகிறி அடிக்கும் அணிகள் தான். எந்தெந்த அணிக்கு வாய்ப்புக்கள் குறைவோ அவற்றை பற்றி முதல் அலசி விட்டு இறுதிக்கு வரும் அணிகளை இறுதியாக அலசலாம்.

மேற்கிந்திய தீவுகள்.

நாங்கள் இல்லாமல் சாதிக்க முடியுமா?

உள்ளே இருக்கும் பிரச்சனையால் இரண்டாந்தர அணியாக வந்திருப்பவர்கள். பெரிதாக அறிமுகமான வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று யாரும் இல்லை. அதேநேரம் ஒரு போட்டியில் வென்றாலே அது இவர்களுக்கு பெரிய விடயம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாததே இவர்களின் மிகப்பெரிய பலம். இவர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கும் மூன்று அணிகளுமே கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்பதால் இவர்கள் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போவது உறுதி.

இங்கிலாந்து.

ஏதோ இம்முறையும் வாறம் பாத்து அடியுங்க அவுஸ்திரேலியா காரன் போல அடிக்காதிங்க வலிக்கிறது.

ஆஷசை வென்று பலமாக காட்டியவர்கள் தலை குப்பற விழுந்து நிற்கின்றார்கள். இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா என கேட்டுக்கேட்டு கொடுத்தது அவுஸ்திரேலியா. இருப்பினும் இறுதி போட்டியில் வென்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். பீட்டர்சன், பிளின்டோப் இல்லாத அணி பிரகாசிக்கும் வாய்ப்பு குறைவு. இலங்கை அல்லது நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால் சாதித்துவிடலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் அது கடினமே.

பாகிஸ்தான்.


சொல்லாமல் அடிக்கிறதுதான் எங்க ஸ்டைல். இந்த முறை இந்தியாவிற்கு சொல்லிட்டம் அடிப்பமா?

டுவன்டி டுவண்டி உலக கிண்ணத்தில் கணக்கெடுக்கப்படாமல் உலக சாம்பியன் ஆகி புருவங்களை உயர்த்தியவர்கள். இப்போதும் அதே எதிர்பார்ப்பு இல்லாமல் போகின்றார்கள். போப் வூல்மருக்கு சமர்ப்பணமாக கிண்ணத்தை வெல்வோம், காலகாலமாக முக்கியமான போட்டிகளில் இந்தியாவை வெல்வதில்லை என்ற வடுவை துடைப்போம் என்னும் சூளுரையோடு களம் கண்டிருக்கின்றார்கள். எப்போதும் அடிப்பார் எப்போது சுருள்வார் என தெரியாத அபிரிடி இம்முறையும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார். முழுதாக பார்த்தால் பலமான அணி ஆனால் வெளித்தோற்றத்துக்கு பலவீனமான அணி. மேற்கிந்திய தீவை இலகுவாக வென்று இந்திய அல்லது அவுஸ்திரேலியாவை தோற்கடித்தால் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் அடித்து நொறுக்கும் பலத்தோடு இருக்கும் இந்திய, அவுஸ்திரேலிய அணிகளிடம் இது பலிக்குமா என்பதே கேள்வி.

நியூசிலாந்து.


கறுப்பு உடையை போட்டு போட்டு கறுப்பு சரித்திரமே எங்களுக்கு பின்னால்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் படு தோல்வியோடு வந்தவர்கள் இந்தியாவை பயிற்சியில் பழிக்கு பழி தீர்த்தனர். தரமான வீரர்கள் இருந்தும் சொதப்பும் அணியாக இருக்கின்றது. அதிஷ்டம் இன்மை முக்கியமான நேரங்களில் சொதப்பல் மட்டுமன்றி இப்போது மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது பலவீனமான அணியாக இருக்கின்றது. ஆனால் முக்கியமான தொடர்களில் வீறு கொண்டெழுவது இவர்களின் பலம். இலங்கையை பழி தீர்த்துவிட்டால் அரை இறுதி கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இலங்கை.


எங்கள் ராசி நல்ல ராசி. அதுவும் இப்போ எல்லா விடயத்திலும் காற்று எங்க பக்கம்.

வழக்கம் போலவே வென்றாலும் வெல்வார்கள் என்னும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்ப்பு இல்லாமலும் களம் இறங்கி இருப்பதே பலமும் பலவீனமும். ஜெயசூரியாவின் தொடர்ச்சியற்ற துடுப்பாட்ட பார்ம், டில்சானின் வீழ்ச்சி, ஜெயவர்தேனவின் வீழ்சியை தொடர்ந்து வந்த எழுச்சி மற்றும் நடுவரிசை துடுப்பட்டவீரர்களின் பலம் முரளி உட்பட வேகப்பந்து வீச்சாளர்களின் சிறந்த பந்து வீச்சு என சகலதும் நிறைந்திருந்தாலும் இவர்களை விட மற்ற மூன்று அணிகளும் பலமாக தோன்றுகின்றன. ஆனால் இம்முறையும் அதிசயிக்க வைத்து கிண்ணத்துடன் வரும் வாய்ப்பு இருக்கின்றது. இந்தியாவிடம் பொல்லுக்கொடுத்து அடிவாங்கி வந்திருக்கும் இலங்கை சூடு கண்டு எழுந்தால் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம் தான்.

இந்தியா.


வெற்றி நிச்சயம்....ஆனால் எப்போது தோற்போம் என எங்களுக்கே தெரியாது...

ஷேவாக் என்னும் அதிரடி நாயகன் இல்லாதது பெரிய குறை. பந்து வீச்சாளர்களும் சோடை போய் இருந்தாலும் துடுப்பாட்டம் தான் மிகப்பெரிய பலம். ஆரம்ப துடுப்பாட்டத்த்டை சச்சினும் கம்பீரும் கவனித்தால் திராவிட்,ரெய்னா,யுவராஜ்,டோனி,யுஸுப் என தொடர்ந்து கொண்டு செல்ல துடுப்பாட்ட பிசாசுகள் நிறைய இருக்கின்றன. பந்து வீச்சுதான் கேள்வியாக இருந்தாலும் திடீரென பலமான பந்துவீச்சாக மாறி எதிரியை கலக்கும் திறமை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். களத்தடுப்பு வழமையை விட சிறப்பாக இருப்பது. அத்தனை அணிகளையும் அசைத்து பார்த்த வீரமும் இருப்பதால் இம்முறை கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றது. அரை இறுதிக்கு முன்னேறுவது நிச்சயமான நிலையில் இறுதியும் இன்னமும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டி உள்ளது அவுஸ்திரேலியாவின் திடீர் அசுர பலத்தினால்.

தென் ஆபிரிக்கா.


கனவெல்லாம் பலிக்குமா..?

சொந்த நாட்டில் போட்டிகள், சகலதுறை வீர்கள் தலைமைத்துவம் இருந்தும் இன்னும் பெரிய கிண்ணங்கள் எடுக்க அணி என்னும் பெயர் இப்போது இருக்கும் அணி. வழக்கம் போல இம்முறை அந்த துயரை துடைப்பார்கள் என்னும் நம்பிக்கையும் சாத்தியமும் உள்ள அணி. கலிஸ்,கிப்ஸ்,ஸ்மித் என அனுபவமும் திறமையும் கைகோர்க்க பந்து வீச்சிலும் வேதாளங்கள் கை கொடுத்தல் வெகுநாள் கனவு வெகு தொலைவில் இல்லை.

அவுஸ்திரேலியா.


நம்ம நடை வெற்றி நடை...

நேற்றுவரை சாத்தியமே இல்லை. இம்முறை எட்டில் ஒன்று என இருந்தவர்கள் எழுந்தார்கள் அடித்தார்கள் நாங்களும் இருக்கின்றோம் என பறை சாற்றி இருக்கின்றார்கள். இங்கிலாந்திடம் பலித்த இவர்களின் பாட்சா இந்தியாவிடமும் தென் ஆபிரிக்கவிடமும் பலிக்குமா என்பது சொல்லமுடியாது. இருப்பினும் தென் ஆபிரிக்காவின் துரதிஷ்டம் இந்தியாவின் வழக்கமான அவுஸ்திரேலியா பய மேனியா வந்து விட்டல் இம்முறையும் பொண்டிங்க் கையில் பூமாலை மன்னிக்கவும் கிண்ணம். ஆனால் பலமும் பலவீனமும் கலந்தே இருப்பதே இவர்களின் பலம். பலவீனம் இருப்பினும் பலமாக காட்டிக்கொண்டு ஒன்றாகி விளையாடும் அணி இம்முறை சாதித்தாலும் ஆச்சரியமில்லை.

போட்டிகளின் அடிப்படையில் என் கணிப்பு கிண்ணம் யாருக்கென.

தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை => தென் ஆபிரிக்கா.
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்திய தீவுகள் => பாகிஸ்தான்.
தென் ஆபிரிக்க எதிர் நியூசிலாந்து =>தென் ஆபிரிக்கா
இங்கிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் பாகிஸ்தான் => இந்தியா
நியூசிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து => தென் ஆபிரிக்கா
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா => இந்தியா/அவுஸ்திரேலியா ( ரொம்ப கஷ்டமுண்ணா நம்பி சொன்னா வைச்சிடுவாங்க நம்மாளுங்க ஆப்பு.)
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து => நியூசிலாந்து.
அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => இந்தியா

அரை இறுதி.
இந்தியா/அவுஸ்திரேலியா எதிர் இலங்கை => இந்தியா/ அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா/இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => இந்தியா/அவுஸ்திரேலியா/தென் ஆபிரிக்கா.(ரொம்ப குழப்பிறாங்க அண்ணே)

மொத்தத்தில் இறுதியில் மோதப்போவது.
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா => ??????
இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????
அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????

பொறுத்திருந்து பார்ப்போம் தோனியா? பொன்டிங்க? சிமித்தா?
Share:

7 கருத்துரைகள்:

Nimalesh said...

go with Aussie.... Proteas,,, these r the Hot fav....... sri lanka have also gt gud chance coz they r grouped n simple group....

Admin said...

போட்டி முடிவடைந்ததும் யாருக்கென்று சொல்லட்டுமா?.... போட்டி நிறைவு பெறும்வரை பொறுத்திருங்கள் சதிஸ் (ஹீ ஹீ ஹா ஹா)

வந்தியத்தேவன் said...

தென்னாபிரிக்கா கப் தூக்கும் பொறுத்திருந்து பாருங்கள்

Unknown said...

இந்திய அணியின் களத்தடுப்பு பற்றி சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணியின் களத்தடுப்பு மோசம்.
அவர்களின் வேகப்பந்து வீச்சும் பலவீனமாகவே உள்ளது.
தென்னாபிரிக்க ஆடுகளங்களில் சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசை இன்றி எப்படி வெல்ல முடியும் என்று தெரியவில்லை.
அத்தோடு அவர்களுக்காகவே பெளன்சர் பந்துகள் காத்துக் கொண்டிருக்கின்றன...

தென்னாபிரிக்க அணி சிறந்த அணியாக தெரிகிறது.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் they are a good team on paper என்று.
அரையிறுதியைத் தாண்டினால் வெல்ல வாய்ப்புண்டு...

அவுஸ்ரேலிய அணி ஒன்றில் முழுமையாக வெல்லும் அல்லது மோசமாகத் தோற்கும்...

என்னைப் பொறுத்தவரை தென்னாபிரிக்கா அல்லது இலங்கை அல்லது அவுஸ்ரேலியா...

இலங்கை அணி அணியாக விளையாடுவதால் அதன் பலலவீனங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
அத்தோடு மத்தியூஸ், கண்டம்பி ஆகியோர் இலங்கை ஏ அணியின் தென்னாபிரிக்க சுற்றுலாவில் ஏராளமான சதங்களைப் பெற்றது எமது மத்திய வரிசைக்கு ஓர் பலமே...

sanjeevan said...

pakistan also favour to go upto semifinal...........

யோ வொய்ஸ் (யோகா) said...

நம்ம இலங்கை வெல்லும் (சங்கக்கார என் வார்த்தையை காப்பாத்துப்பா?)

படத்துக்கு கீழே உள்ள கொமண்ட்ஸ் சூப்பர்

sanjeevan said...

இப்ப ஒத்துக்கிறீங்களா இலங்கையின் பலத்தை.உங்கட எதிர்பார்ப்பு முதல்
போட்டியிலேயே கவிண்டுட்டுது...இதுதான் கிரிகெட்..........

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive