அண்மையில் தான் இளைய தளபதியின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பாடல்களும் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களும் விஜயையும் வேட்டைக்காரனையும் வாழ்த்திப் பேசியதுடன் சில பழைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
விழாவிற்கு அழைக்கப்படிருந்த சிபிராஜ் சன் பிக்சர்சும் விஜயும் கைகோர்த்திருக்கின்றார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தினார். அடுத்து கருணாசும் மேடையில் அழைக்கப்பட்டு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது. பல தமிழ் நடிகைகளே தமிழில் பேச தள்ளாடும் நேரம் இந்த யோகா டீச்சர் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது.(விடுங்கப்பா நாலு வார்த்தை தமிழில் பேசினாங்க அதை தான் சொன்னேன்.) அதற்காகவே அவரின் தாராள மனதை சொல்லும் படம். இங்கே.
தொடர்ந்து வந்து பேசிய இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு, எந்திரன் படத்தை பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து நீண்டநாட்களாக இருந்து வந்த சந்தேகம் ஒன்றையும் போட்டு உடைத்தார். ஏற்கனவே தெரியும் முதல்வன் திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை அந்த நேர அரசியல் சூழ்நிலை காரணமாக ரஜினி நடிக்காமல் போக அர்ஜூன் நடித்து படம் பெற்ற வெற்றி. ஆனால் ரஜினிக்கு அடுத்து தன்னுடைய தெரிவு விஜய் தான் என இதுவரை மெளனம் காத்து வந்த ஷங்கர் வெளிப்படையாக சொல்லிவிட்டார். முன்பொருமுறை இதை விஜய் சொல்லி எள்ளி நகையாடிய அத்தனைபேரின் மூஞ்சியிலும் கரி பூசப்பட்டு விட்டது. தொடர்ந்து பேசிய ஷங்கர் தானும் விஜயும் ஒரே பள்ளியில் இருந்து அதாவது எஸ்.ஏ.சியின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் ஏழு வருடம் அவரிடம் உதவி இயக்குனராய் இருந்து இருக்கின்றேன். விரைவில் விஜயை வைத்து படம் செய்யும் திட்டம் உண்டு என் குருநாதர் மகன் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான நடிகர் அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது என சொல்ல அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து விஜயும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பேசினார். ஷங்கர் முதல்வன் பற்றி கூறிய உண்மை அடங்கிய வீடியோ இங்கே.
4 கருத்துரைகள்:
"தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது"
கொஞ்சுமா, கொச்சையா சதீஸ்...?
lol
நல்லாவே இருக்கு........... நல்ல சந்தோசமாக இருக்கிறீங்க போல..
ஐயோ. இந்த விஜய் விசரண்ட தொல்லை தாங்க முடியேல்லையே.
நல்ல வேளை. நினைத்ததோடு நிறுத்தி விட்டார். இல்லாவிடில் முதல்வன் ஹிந்தி-ல வெளிவந்திருக்காது. ஷங்கருக்கு செலவு மிச்சமாயிருக்கும். கொஞ்சம் எல்லாரும் (முக்கியமாக ஷங்கர் & மாண்புமிகு தயாரிப்பாளர் அவர்கள்). முதல்வன் படத்துல ஏதாவது ஒரு சீன்-ல இளைய தளபதியினை கற்பனை பண்ணி பாருங்க. தனியா உட்கார்ந்து கெக்கே பெக்கே - னு சிரிப்பீங்க…. கற்பனை பண்ணி பார்த்ததால் தான் நினைப்புடன் நிறுத்தி விட்டாரோ என்னவோ. மறக்காமல் யாரவது ஷங்கரை கேட்டு சொல்லுங்கப்பா
//நல்ல வேளை. நினைத்ததோடு நிறுத்தி விட்டார். இல்லாவிடில் முதல்வன் ஹிந்தி-ல வெளிவந்திருக்காது. //
EPPOODI சூப்பர்...
தம்பி வேட்டைக்காரன் வந்த பிறகு சரி திருந்தப்பாரும்....
Post a Comment