ராவணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் எனக்கு ஒரு சந்தேகம் இந்த ரவாணன் மேலே. இது படத்தை பற்றியோ படத்தின் மையக்கருத்து பற்றியோ அல்லது இசை பற்றியோ இல்லை நடிப்பு பற்றியோ நான் பேசப்போவதும் இல்லை. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே.
படம் எப்படியும் இருக்கட்டும். நல்ல படம் என பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு சந்தோசம். ஆனாலும் எனக்கொரு சந்தேகம். சரி அதுவும் இருக்கட்டும். விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்குமா தெரியாது ஆனால் எனக்கொரு சந்தேகம் இருக்கு.
பீடிகை எல்லாம் போதும் விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வாறன் வாறன். ஆனால் எனக்கொரு சந்தேகம் அண்ணே. அதுவும் தமிழில் அண்ணே. அதுவும் நம் ஊடகத்துறையில் இருக்கும் ஒரு சில செய்தி வாசிப்பவர்கள் மீதும் இந்தியாவில் இருக்கும் சில தமிழ் அறிஞர்கள் மீதும் அண்ணே. அதாவது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் நம் பாடசாலை புத்தகத்திலும் சரி இன்றைய தினசரி பத்திரிகையிலும் சரி “ர” எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் முன் “இ” போட்டு எழுதுவது மரபு. ஆனால் வாசிக்கும் போது அந்த “இ” காணாமல் போய்விடும். “இ” ஐ தவிர்த்து வாசிக்க வேண்டும் என்பதே எங்களுக்கு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணம் என்ன என எனக்கு தெரியவில்லை. யாரும் அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
ஆனால் இன்று சில செய்தி வாசிப்பாளர்கள் இதை கணக்கெடுப்பதாய் இல்லை. இது ஏன்? அவர்களுக்கு யாரும் சொல்லவில்லையா? இல்லை அதுதான் சரியா? ஆனால் எனக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் அதை தவிர்த்து வாசிக்கவே சொல்லிக்கொடுத்துள்ளனர். ஏன் நம் உறவினர்கள் பெயர் கூட “இ” யினால் அலங்கரிக்கப்படுகின்றது.இப்போது என் கேள்வி என்ன? திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டது. அதுவும் மணிரத்னம் போன்ற ஜாம்பவாங்களினால் பாரிய புரட்சியே செய்யமுடியும். அப்படி இருக்கையில் அவரின் திரைப்பட பெயர் “ராவணன்” என எழுதப்படுகின்றது. இது சரியா? அல்லது இதை அவர் கணக்கெடுக்கவில்லையா? தமிழ் தமிழ் என சாகும் மூத்த முத்திய தலைவர்கள் கலைஞர்கள் கண்ணில் இது படவில்லையா? அல்லது கண்டும் காணாமல் விடபட்டுள்ளதா? வரிச்சலுகை கொடுக்கும் கலைஞர் ஐயா அவர்களுக்குமா இது தெரியவில்லை?
இதை நான் பரபரப்புக்காகவோ அல்லது பிரபலத்துக்காகவோ எழுதவில்லை. காரணம் படம் நான் இன்னும் பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் படத்தை பற்றி சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்லை. ஆனால் இந்த பட பெயர் தான் நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த கேள்வியை மேலும் தூண்டியது. எனவே பதிவாக்கியுள்ளேன். படித்தவர்கள் கொஞ்சம் என் சந்தேகத்தை பூர்த்தி செய்து விடுங்கள்.
20 கருத்துரைகள்:
அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்க்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html
ராவணன் போட்டு இருக்குற பான்ட் எனக்கு பிடிக்கவில்லை
நியாயமான கேள்வி
:)))
ராஜா என்பதை இராஜா என்று யாராவது எழுதுகிறார்களா.. எல்லாம் இப்ப ஒரு ஸ்டைல் அண்ணே...:)
நண்பரே வாசிக்கும் போது இ காணாமல் போய் விடுகிறது என்று யார் சொன்னது? ர என்ற எழுத்தை இ இல்லாமல் தொடங்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். மேலும் எழுதும்போது கட்டாயம் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. ர மட்டுமல்ல ல கூடத்தான். உண்மையில் லங்கை தானே பெயர். இ சேர்த்தபின் தானே முழுமை கிடைக்கிறது.
//“இ” ஐ தவிர்த்து வாசிக்க வேண்டும் என்பதே எங்களுக்கு பதிப்பிக்கப்பட்டுள்ளது.//
உங்களுக்கு பதிப்பிக்கப்பட்டமாதிரி இதுவும் இருக்குமோ..
இராவணன் என்பதே சரி. படிக்கும் போதும் இ என்ற எழுத்தை சேரதே படிக்க வேண்டும். இலிங்கம், இயமன் , இயமம் , என்று பல தமிழ் சொற்கள், இந்த தமிழ் சொற்கள் யாவும் வடமொழி படுத்தப்பட்ட பின்பு இ நீக்கம் பெற்றன.பல சொற்கள் இந்து->ஹிந்து, வேதம்->வேதா, இது எவ்வாறு நடந்தது என்ற விளக்கம் நீண்டு கொண்டே செல்லும்
தமிழிலே முதலெழுத்துக்கள் என்று குறிப்பிட்ட எழுத்துக்கள்தான் உள்ளன(எவை என்று சரியாக நினைவில்லை பார்த்துவிட்டு இடுகிறேன்) அதாவது ஒரு சொல்லிலே முதலாவதாக பயன்படுத்தக்கூடிய எழுத்துக்கள். தமிழ்ச்சொற்களும் அந்த ஒழுங்கில் தான் அமையும் ஆனால் திசைச்சொற்களின்(ஏனைய மொழிகளில் இருந்து வந்து தமிழில் பயன்படுத்தப்படும் சொற்கள்) பயன்பாடு அதிகரித்த பின்பு மொழிமுதலில் வர முடியாத எழுத்துக்கள் வரும் இடங்களில் உச்சரிப்பு நலன் கருதி இப்படி எழுத்துக்கள் இடப்பட்டோ அல்லது மாற்றம் செய்தோ பயன்படுத்தப்பட்டன. உதாரணம் - லட்டு - இலட்டு
ராமன் - இராமன்
ஸ்ரீகரன் - சிறீகரன்
இது போல மொழி இடையிலும் வட எழுத்துக்களுக்கு பதில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன
ஈஸ்வரன் - ஈசுவரன்
லக்ஷ்மி - இலட்சுமி அல்லது இலக்குமி
ஆனால் உடற்றொழிலியல் அடிப்பதில் பார்க்கும் போது 'இ' என்ற சப்தம் இல்லாது 'ரா' என்ற சப்தம் உருவாக முடியாது, அது போலதான் ஏனைய இடங்களிலும்...
Raavanan review @ saaralhal.blogspot.com
உங்க சந்தேகம் எனக்கு புடிச்சுருக்கு.. ஆனாலும் சரியான சந்தேகமானு தான் எனக்கு தெரியல ... இதையும் பாத்தேன், அதான் அண்ணன் இதை பத்தி என்ன சொல்றேங்கனு கேக்க்கலாமேன்னு கமெண்ட் பண்றேன்,
http://tamilindru.blogspot.com/2010/06/blog-post_12.html#more
@rk guru
உங்கள் வரோகிக்கு நன்றி. மாறி மாறி ஓட்டுப்போட்டால் பயனில்லை. பதிவு நன்றாக இருந்தால் உங்களுக்கு ஓட்டு கண்டிப்பாய் விழும். கவலை வேண்டாம் சகோதரா.
@soundar
அதற்க்கு நான் என்ன செய்ய மணியிடம் சொல்லவா
@ராசராசசோழன்
நன்றி
@கன்கொன் || Kangon
:)))))
@Bavan
எழுதுபவர்கள் இருக்கின்றார்கள் சகோதரா ஸ்டைலுக்காக இலக்கணத்தை மாற்றமுடியுமா
@Bala
//நண்பரே வாசிக்கும் போது இ காணாமல் போய் விடுகிறது என்று யார் சொன்னது? ர என்ற எழுத்தை இ இல்லாமல் தொடங்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். மேலும் எழுதும்போது கட்டாயம் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. ர மட்டுமல்ல ல கூடத்தான். உண்மையில் லங்கை தானே பெயர். இ சேர்த்தபின் தானே முழுமை கிடைக்கிறது//
லங்கை என்று நான் இன்று தான் கேள்விப்படுகின்றேன். என் பாடசாலை புத்தகம் யாவற்றிலும் நான் இலங்கை என்றுதான் படித்துள்ளேன்.
@EKSAAR
கேள்விக்கு பதில் நீங்களும் சொல்லவில்லையே
@Karthik S
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
@செல்வராஜா மதுரகன்
உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி அண்ணே
@தாஜுதீன்
இலக்கணம் எப்போதும் மாறாத ஒன்று ஆனால் கால சக்கரத்தில் சில சில புதுமைகள் நம் மொழியோடு சேர்வதும் இயல்பே. ஆனால் இதுவரை பள்ளியில் படிப்பிக்கும் பாடத்தில் எழுதும் பொது இ செர்க்கின்றோம். நீங்களும் தேடிப்பாருங்கள்
Post a Comment