Sunday, February 21, 2010

நடிப்பை விட்டு விலக தயார்-அஜித் பேட்டிஎந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் தல.

முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார்.அந்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்."முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.வெளிப்படையாக சொல்கின்றார் தல.

நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.

ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?

இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.

யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், (
தளபதியை சொல்கின்றாரோ.)தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?

பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?

அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?

கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.

ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…

உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.

பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.

நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.

பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."

இவ்வாறு தல கூறினார்.
இம்புட்டு நாளா நான் வெறுத்த ஒருவர் மேல் இப்போது என்னை அறியாமல் ஒரு அன்பு. தல நீங்கள் பார்க்காத பிரச்சனைகளா தோல்விகளா? இந்தக்கலக்கம் எதற்கு. ஆனால் மன்னிப்பு கேட்டால் தான் நடிக்கலாம் என்ற போது உங்கள் இந்த பதில் சூப்பர். தன மானத்தை இழந்து வாழும் நிலை யாருக்கும் வரக்கூடாது. நீங்கள் இப்போது சொன்ன இந்த வசனத்தை கூட திரிவுபடுத்தி மன்னிப்பு கேட்கமாட்டேன் என தல இறுமாப்பு என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை. நீங்கள் இந்த சினிமாவை விட்டு போனால் இழப்பு உங்களுக்கல்ல சினிமாவுக்குத்தான். அப்போது தெரியும் தலையின் அருமை.

இது ஏனோ உங்களுக்கு கஷ்டகாலம் உங்களை இன்னும் பண்படுத்த இன்னொரு வாய்ப்பு. உங்கள் கூட இப்போது இரண்டு பெரிய நடிகர்கள். ரஜினியின் ஆலோசனை இப்போது நிச்சயம் உங்களுக்கு உதவும் காரணம் அவரும் அடிபட்டவர். அடுத்தவர் உங்களில் இப்போதைய நெருங்கிய நண்பன் விஜய். அவரின் ஆறுதலு, அருகாமையும் நிச்சயம் உங்களை ஆறுதல் படுத்தியிருக்கும்.
ஒரு விஜய் ரசிகனாக சொல்கின்றேன் நீ தமிழனாக பிறக்காவிட்டாலும் தப்பு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொன்னபோதே முழுத் தமிழனாகிவிட்டாய் . தமிழன் தன்மானம் இழக்கமாட்டான். போதும் இனியாவது இனம் மதம் களைந்து கலையை கலையாகவும் மைதரை மனிதராகவும் மதிப்போம். அஜித் பிறப்பில் தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதன் தானே. அந்த மனிதனை நினைத்து பெருமைப்படுவோம். அவர் செய்த கடந்த கால தவறை மன்னிப்போம். தமிழன் தமிழன் என சொல்லும் நம் பண்பு அதுதானே. இல்லாவிட்டால் நாம் தமிழரா?
Share:

16 கருத்துரைகள்:

Raj said...

இது கெத்து .. ' தல ' னா ' தல ' தான் . MGR அப்பறம் யாருக்கும் பயப்படாத ஒரே நடிகர் இவர்தான் . சினிமாவே வேணாம் . உண்மைய சொல்றதுக்கு உருமையில்லாத இந்த சமூகத்துல இருக்குறதுக்கு ஒவ்வொருத்தரும் வெட்கப் படனும் .

ramalingam said...

அருமை. எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

Unknown said...

சதீஷ் கலக்கிட்டிங்க
தல தலைதான் மன்னிப்பு என் அகராதியில் இல்லாத ஒரே சொல்

Anonymous said...

மாபெரும் நடிகரை இழந்து தமிழ்த்திரையுலகம் பரிதவிக்கப்போகிறது!

Sasi said...

salute to you thala....
u are the real hero!!!

EKSAAR said...

தல கலக்குறீங்க.. ஒழித்து மறைத்து சொல்வதைவிட தல பாணியில் இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் எல்லாத்தையும் ஊதிப்பெருப்பிப்பது ஊடகம்தான். சற்று முன் ஒரு பதிவு பார்த்தேன். "மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் - அஜித்" என்று தலைப்பு. உள்ளே இருக்கும் விடயத்துக்கும் தலைப்புக்குமிடையில் காத தூரம்.

Subankan said...

:((

வேறு என்ன சொல்வது சதீஷ்

Jawahar said...

indha varyaid padikum pothu unmaiyeleya kannu kalaingirichu, we should all support to ajith irrespective of fans community

இது ஏனோ உங்களுக்கு கஷ்டகாலம் உங்களை இன்னும் பண்படுத்த இன்னொரு வாய்ப்பு. உங்கள் கூட இப்போது இரண்டு பெரிய நடிகர்கள். ரஜினியின் ஆலோசனை இப்போது நிச்சயம் உங்களுக்கு உதவும் காரணம் அவரும் அடிபட்டவர். அடுத்தவர் உங்களில் இப்போதைய நெருங்கிய நண்பன் விஜய். அவரின் ஆறுதலு, அருகாமையும் நிச்சயம் உங்களை ஆறுதல் படுத்தியிருக்கும். ஒரு விஜய் ரசிகனாக சொல்கின்றேன் நீ தமிழனாக பிறக்காவிட்டாலும் தப்பு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொன்னபோதே முழுத் தமிழனாகிவிட்டாய் . தமிழன் தன்மானம் இழக்கமாட்டான். போதும் இனியாவது இனம் மதம் களைந்து கலையை கலையாகவும் மைதரை மனிதராகவும் மதிப்போம். அஜித் பிறப்பில் தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதன் தானே. அந்த மனிதனை நினைத்து பெருமைப்படுவோம். அவர் செய்த கடந்த கால தவறை மன்னிப்போம். தமிழன் தமிழன் என சொல்லும் நம் பண்பு அதுதானே. இல்லாவிட்டால் நாம் தமிழரா

Anonymous said...

சந்தோசம்! இன்னும் ஒரிரு வருடங்களுக்கு கார் ரேஸ் ஓட வேண்டித் தேவையான பணத்தை தமிழ் சினிமாவில் தேத்தியாச்சு! இனி சினிமாவுக்கு குட்பை! கார் ரேஸ் புட்டுக் கிட்டா மீண்டும் சினிமா! ஏற்கனவே பார்த்தது தானே.. தமிழ்ப் படம் முதலில் தமிழர்களை குறிவச்சு தான் எடுக்கப் படுது. ஆந்திர, கேரள, வடநாட்டு ரைட்ஸ் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். தமிழ் நாடு மற்றும் ஓவர் சீஸ் தான் முதற் குறி. அவங்க தான் பார்த்துக் கைதட்டுறாங்க. வெற்றிப் படமாக்கிறாங்க. அந்த மக்கள அவங்க பேசும் மொழி, அவங்க வாழ்வாதாரங்கள் அடிபடும் போது தங்கள் மொண்ணை படங்கள டிக்கட்டு கொடுத்துப் பார்த்து ஹிட்டாக்கினானே அந்த தமிழ் நாட்டானுக்கு இவனுங்க குறைஞ்ச பட்சம் குரல் கொடுக்கணும்னு எதிர்ப்பார்க்கிறதுல ஒண்ணும் தப்பில்ல. இவங்களுக்கு பிரதான தளமா இருக்கற மொழி, அந்த இனம், அவ்வினத்தின் வாழ்வாதாரம் எல்லாம் அழிஞ்சப்புறம் யாருக்குப் படம் எடுக்கப் போறாங்க?
எப்படி நன்றியோட இருக்கணும்னு ஒரு வேளை இவர் ரஜினி, பிரகாஷ்ராஜ் போன்றோர் கிட்ட கேட்டுக் கத்துக்கிட்டிருக்கலாம்!

80 000 ஈழத் தமிழர் கொடுரமா செத்தப்போ, தன் தேசியவாத, பார்ப்பனியக் கருத்தியல்கள் மூலம் ஏகன் படத்துக்கு முன்னாடி பரபரப்பு தேடிக் கொண்டவர் இந்நடிகர். அதனால் ஐங்கரன் வெளிநாடுகளில் இப்படத்தை ஓட்டி ஆதரவின்றிக் கையைச் சுட்டுக் கொண்டது தெரிந்ததே!
இவரின் ஈழக் கருத்த மனசுல வச்சு கறுவிட்டு இருந்தவங்க தான் இப்போ நல்லா இவர் ஏடாகூடமா வாயத் தொறக்க நல்ல ஆப்பிழுத்திருக்காங்க. குகநாதன், கலைப்புலி சேகரன் போன்றோர். அந்த நேரமே இவருக்குச் சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டும். அதைவிடுத்து இப்போது மிகை கொந்தளிப்பு காட்டுவது செயற்கை என்றாலும், அதற்கும் இந்நடிகர் பாத்யதை உடையவரே!

இவர் ஒன்றும் தமிழ் சினிமாவை மாற்றக் கிளம்பியவர் இல்ல. மொக்கையா நாலு படம், கூட்டம் சேர்த்து கொஞ்சம் விசிலடிச்சான் குஞ்சுகள் இதற்கு ஏன் இம்புட்டு ஆர்பரிப்பு விட்டுத் தள்ளுங்க! இவர விட சிறந்த நடிகரான, இவரப் போல இரு தோணிகளில் கால் வைத்து இதுவா அதுவா என்றிருந்த அரவிந்தசாமியே சத்தமில்லாமப் போயிட்டார். இவர் போன இன்னொரு குமார் வருவார். இவர் ஒண்ணும் தமிழ் சினிமாவ மாற்ற வந்த ஆபாத்பாந்தன் இல்ல. அமராவதி, ஆசை, முகவரி, அமர்க்களம், அசோகா இது போல நான்கைந்து நல்ல படங்களும் மிச்சம் எல்லாம் மொக்கையுமா காலத்த ஓட்டிருனவரு.

தல தலன்னு தலை தலையா அடிச்சுக்க இவரு என்ன காரல் மார்க்சா, செகுவேராவா, லெனினா

எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு. மாமியார் தலைல கையும், அடுப்பங்கரையில கண்ணும்ன்னு, அது போல சினிமா, ரேஸ்னு ஊடாடிட்டு இருந்தவர் இப்போ ஏதோ ஒண்ணயாச்சு உருப்படியாப் பண்ண போறாருன்னு உட்டுட்டுப் போங்க.

போறப்ப தமிழ் சினிமாவில் மொக்கை போட்டிட்டு இருக்கும் விஜய் மற்றும் சிம்புவக் கூடவே கூட்டிடு போனா நல்லா இருக்கும்!

Anonymous said...

<< அதனால் மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொன்னபோதே முழுத் தமிழனாகிவிட்டாய் <<

ஹிஹி.. முதல்ல பொறந்து வளர்ந்து படிச்ச ஊரோட மொழிய, எந்த மக்கள் அவர கொண்டாடனாங்களோ அவங்க மொழிய எழுத, படிக்க கத்துக்க சொல்லுங்க! அப்பறம் மிச்சத பார்க்கலாம்

Anonymous said...

//எப்படி நன்றியோட இருக்கணும்னு ஒரு வேளை இவர் ரஜினி, பிரகாஷ்ராஜ் போன்றோர் கிட்ட கேட்டுக் கத்துக்கிட்டிருக்கலாம்!//

மன்னிக்க! இந்த வசன அமைப்பு சரியாக இல்லை. தவறாகப் பொருள்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் திருத்தம்> நன்றியோடு இருப்பது எப்படி என இவர் ரஜினி, பிரகாஷ்ராஜ் போன்றோரிடம் கேட்டுக் கற்றறிந்திருக்கலாம்!

subra said...

மிரடினார்கள் என்று சொல்கிற அஜீத் யாரு எப்படி
மிரடினர்கள் என்று இதுவரைக்கும் சொல்லாமல்
இருக்கும் பயம் .......இல்ல மர்மம் ஏனோ .............
சரி எப்போ கிளம்புரிங்க்கோ .முகிலன்

Anonymous said...

ஐயகோ... ! தல நடிக்கிறத நிறுத்தப்போகின்றதா? இனி தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? தல இல்லாத தமிழ்நாடா? என்ன கொடும சரவணன் இது?

தல ஒரு மலயாளி சூப்பர் ஸ்டார் ஒரு கன்னடர். இரண்டுபேரையும் தமிழ்நாட்டுக்கு தண்ணி கொண்டுவார போராட்டத்துக்கு அழைக்கிறச்சே அவங்களுக்கு பிரச்சனை வரத்தான் செய்யும் சோ தல பேசினதிலயும் தப்பில்ல அவரு கை தட்டினதிலேயும் தப்பில்ல இவங்கள வச்சி நஞ்சைக்கும் புஞ்சைக்கும் தண்ணி பாய்ச்ச நெனச்சவங்க மேலதான் தப்பு. இப்டியாச்சும் அக்கப்போர் பட்டு நடிக்கிறத நிறுத்துங்கட ஏழைங்களுக்கு நாலு காசு மிச்சமாகட்டும். தல தல என்னு வெறிபிடிச்சு அலயிறவங்க வேலவெட்டிய பாக்கட்டும்.

இல்யாஸ் said...

கார் பந்தயத்தில் பல பல வெற்றிகள் பெற்றிட வாழ்த்துக்கள்

Sri said...

Clap for u thala......

SShathiesh-சதீஷ். said...

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தது மட்டுமல்ல ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து சென்றதுக்கும் எல்லோருக்கும் நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive