பதிவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய சக்தியாக உருவாகி விட்டார்கள். அவர்கள் நினைத்தால் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்பதுக்கு அண்மையில் கந்தசாமியை நொந்தசாமியாகவும் நொண்டிச்சாமியாகவும் சூப்பர் சீரோவாகவும் வர்ணித்து எழுதி அந்த படத்தை தாறுமாறாக கிழித்ததே ஒரு நல்ல உதாரணம்.
என் விடயம் இதுதான். ஊடகம் என்பது மிக முக்கியமான ஒரு ஆயுதம். பதிவர்கள் நாங்களும் அந்த வகையில் பொறுப்பானவர்களே. எண்கள் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும் ஒருவரை பிடிக்காமல் போகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை பதிவர்கள் எல்லோருக்கும் பிடிக்காத இரண்டு விடயங்கள் ஒன்று இளைய தளபதி விஜய் இன்னொன்று கந்தசாமி திரைப்படம். இந்த இரண்டிலும் பதிவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனக்கு தெரியவில்லை.(அடப்பாவி எங்களுக்கும் தான் தெரியவில்லை என நீங்கள் முனு முணுப்பது எனக்கு கேட்கின்றது.)
வில்லு திரைப்படம் வந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் விஜய் டி.வி மதன் போல விமர்சம் எழுதினார்கள். படம் படுத்துக்கொண்டது. என் இதற்கு முன் வந்த விஜய் படம் பர்க்காதவர்களா நீங்கள்? விஜய் படம் என்றால் இதுதான். நாலு சண்டை, ஆறு பாட்டு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த மசாலா தான் என கடந்த பத்துவருடமாக தெரியும். அப்படி விஜய் கொடுத்த கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாவற்றையும் வெற்றி ஆக்கிய ரசிக பதிவர்கள் இப்போது மட்டும் விஜய் கெட்டப் மாற்றவில்லை நடிக்கதெரியாது என்பது எந்த வகையில் நியாயம்?.
விஜய் விஜயாக வருவது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கின்றது. அதேநேரம் தொடர்ந்து அவர் அப்படி நடித்த படங்கள் தானே வெற்றியும் பெற்றிருக்கின்றன. நீ என்ன விஜயின் கொள்கை பரப்புச் செயலாளரா என கேட்கலாம்.விஜய் மட்டுமல்ல விக்ரம் பற்றியும் பேசத்தான் போகின்றேன். எனக்கு தெரிந்த ஆரம்பத்தில் இருந்து வருகின்றேன். குருவி,வில்லு படங்களுக்கு பிறகு விஜய் என்பவர் ஒரு நடிக்கத்தெரியாதவர், என்னும் தோற்றப்பாடு மட்டுமில்லாமல் எள்ளிநகையாடும் ஒரு பொருளாக பதிவுலகில் பார்க்கப்படுகின்றார். விஜய் ரசிகர்கள் கூட எத்தனையோ பேர் இப்போது தங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமென விஜயை தாழ்த்தி பதிவிடுகின்றனர். பலரின் கேட்ட பழக்கத்தில் ஒன்று ஒரு பதிவர் ஒன்றை கெட்டதென்றால் அது எல்லோருக்கும் கெட்டது இல்லாவிட்டால் நல்லதென்றுவிட்டால் அது நல்லதுதான். ஒருவேளை கந்தசாமியை பற்றி நான் முதலில் பதிவிட்டிருந்தால் எல்லோரும் கந்தசாமியை போற்றிப்புகழ்ந்திருப்பீர்கள்.
இவ்வளவு சொல்கின்றாயே உனக்கு என்ன விஜய் மச்சானா அல்லது தாணு காசு கொடுத்தாரா என கேட்கலாம் கேட்டும் இருக்கின்றனர் சிலர். அவர்களிடம் கேட்கின்றேன் ஒருவரை தாழ்த்தி எழுதுவதால் உங்களுக்கு என்ன பயன். எழுத எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் இப்படியான வேலைகள் செய்யும் போது ஹிட், மற்றவர் இப்படி சொல்லிவிட்டாரே என எண்ணி செயற்படாதீர்கள்.
அடுத்து கந்தசாமி.
எவ்வளவுகால உழைப்பு. பிரமாண்டம். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் செலவழித்து படமெடுப்பார். அதை எல்லாம் யோசிப்பதுமில்லை சிலர் படத்தை பார்ப்பதுமில்லை. பார்த்து புளித்து போனதுபோல இன்னொரு பதிவரின் பதிவை பார்த்து விமர்சனம் போட்டு விடுவார். உண்மையில் சில பதிவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் மற்ற பதிவுகளை பார்த்து விட்டு அதேபோல தாங்கள் எழுதவில்லை என்று. இதில் என்ன கொடுமை என்றால் சிலர் வசன நடையை கூட மாற்றவில்லை. படம் வந்து ஒருவாரம் தாண்ட முதலே ஒரு படம் தோல்வி என சொல்ல நீங்கள் என்ன திரை உலக மேதாவிகளா?(நான் மேதாவி இல்லைங்கோ?)
ஷங்கரை பின்பற்றினார் என்கிறீர்கள் சுசி. ஏற்றுக்கொள்கிறேன். அதில் இரண்டு விடயம் இருக்கின்றது. சிவாஜி என்னும் அற்புத காவியம்(உங்கள் மொழியில்) தயாரான காலத்திலே தான் உங்கள் நொந்தசாமியும் கருப்பெற்றான். கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டான். சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. ஒருவேளை கந்தசாமி முதல் வந்து சிவாஜி பிந்தி வந்திருந்தால் சிவாஜியையும் இப்படி நாறடித்திருப்பீர்களா?
சிலரின் பதிவில் சுசி,இன்னொரு ஷங்கர் ஆக முயல்கின்றார் என போடப்பட்டிருந்தது. ஷங்கரை இன்று நல்ல இயக்குனர். பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடும் நீங்கள் அதேபோல பிரமாண்டத்தை தரும் இன்னொருவரை ஏன் ஏற்கமறுக்கின்றீர்கள்? பருத்தி வீரனை வெற்றி ஆக்கிய நீங்கள் பொக்கிஷத்தை சுருட்டினீர்கள். ஆனால் இதே பாணியில் தந்த ஆட்டோகிராப்பை வெல்ல வைத்தீர்கள்.கந்தசாமி விக்ரமின் காசி,சேது போன்ற படம் என யாரும் உங்களை சொல்லி ஏமாற்றினார்களா? முழுக்க முழுக்க வணிக ரீதியான படம் இது. அங்கே எங்களால் செய்ய முடியாத செய்ய நினைக்கும் விடயங்கள் தான் அதிகம் வரும். அதை ஏற்கும் பக்குவம் எம்மில் சிலரிடம் இல்லையே என்பதே என் கருத்து.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் என்ன மாதிரி படங்களை ரசிக்கின்றீர்கள்? வணிக ரீதியாக எடுப்பதும் தப்பு யதார்த்தம் தந்தாலும் தப்பு என்றால் உங்கள் ரசனை என்ன? எப்படி படம் எடுத்தால் அத்தனை பதிவரும் ஆகா ஓகோ என புகழ்வீர்கள்.? விமர்சனங்கள் எழுதி பழக்கப்பட்ட உங்கள் கைகளால் இன்றாவது எந்த மாதிரி படம் எப்படி உங்களுக்கு வேண்டுமென கருத்து சொல்லிவிட்டு போங்கள். இல்லையேல் வழக்கம் போல என்னை கும்மி விட்டு போங்கள்.
படங்கள் அனைத்தும் சூடனர்வர்களை குளிர்விக்கவும் சூடாகாவிட்டால் இன்னும் சூடாகவும்.
அடடா எல்லாம் முடிந்ததே தலைப்புக்கு பதிலா காணமே எனப்பார்க்கிறிங்களா? கந்தசாமி பாருங்க ஸ்ரேயா விக்ரமின் அலுவலகத்தில் வந்து செய்யும் சேட்டையின் விளைவு தான் தலைப்பு. அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க.