Saturday, August 1, 2009

விஜய் அஜித்தை முந்திய சதீஷ்.-ஐம்பதாவது பதிவு.

என்னுடைய பெயர் சத்தியமூர்த்தி சதீஷன். வயதில் ரொம்ப சின்னவனுங்கோ. வாழ்க்கையில சில நேரங்களில் சில தடுமாற்றங்கள் சிலருக்கு. அப்படி தடுமாறிய பொழுது சுபாஷ் என்னும் என் உடன் பிறவா சகோதரன்(இதை அவரே வானொலியில் சொல்லி இருக்கின்றார் அதனால் நான் துணிந்து சொல்கின்றேன்.) மூலம் வெற்றி வானொலியில் இணையும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

ஆரம்பகால பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின் எங்கள் வானொலியின் வலைப்பதிவை எழுதும் பொறுப்பை லோஷன் அண்ணாவும்,ஹிஷாம் அண்ணாவும் சேர்ந்து என்னிடம் கொடுத்தனர். அதன் பின்னர் என் வலை உலகில் பதிவெழுதும் பயிற்சியை அங்கேயே நான் பெற்றுக்கொண்டேன். அந்த தளத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே எனக்கு தேவையான் ஆலோசனைகள் வழங்குவது இந்த இரண்டுபேருமே.

அதன் பின்னர் ஆசை யாரைத்தான் விட்டது. எனக்கு நானும் சொந்தமாக ஒரு தளம் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் எங்கள் செய்திப்பிரிவில் இருக்கும் நண்பன் அருண் பிரசாத் மூலம் வலை உலகில் நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். அந்த முயற்சியில் வேறு ஒரு பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் கிளறிக் கிண்டிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் லோஷன் அண்ணா பார்த்து விட்டு நீயும் பதிவு எழுதப்போகின்றாயா எனக்கேட்க நானும் ஆமாம் போட, அவரின் துணையுடன் திடீரென ஒரு புதிய தளம் தொடக்கி ஒரு புதிய பதிவையும் இட்ட நாள் மார்ச் மாதம் முதல் நாள்.

அன்று முதல் லோஷன் அண்ணா,அருண்,ஹிஷாம் அண்ணா, சந்துரு அண்ணா விஜய் என அத்தனை போரையும் துளைத்து துளைத்தது கேட்டு பதிவுலகம் பற்றி அறிந்து கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு துணை நின்று வழிகாட்டிய அவர்களுக்கு என் நன்றிகள் கோடி. என் பிரியமானவர்களுக்கு நான் இட்ட முதல் அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டமிட்டு என்னை வரவேற்ற பங்களாதேஷில் இருக்கும் சிந்துவை இந்த நேரம் நினைவு கூர வேண்டும். தொடர்ந்து லோஷன் அண்ணா. துஷா, ராகலை கலை என நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களோடு நானும் காலடி வைத்தேன். அதன் பின்னர் பல சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் என் சந்தேகங்களை தீர்த்து வைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

என் அடுத்த பதிவின் தலைப்பு என்ன வைக்கலாம் என நான் குழம்பி ஏழு, எட்டு தலைப்புகளோடு லோஷன் அண்ணாவிடம் போய் நிற்க முட்கிரீடம் யாருக்கு என அவர் தெரிந்த தலைப்பில் எழுதினேன், தமிலிஷில் எனக்கு கிரீடம் சூட்டினர் சக நண்பர்கள். அந்த வெற்றி தந்த உற்சாகம் என்னையும் மேலும் எழுதத் தூண்ட எல்லாவற்றையும் எழுதினேன். வெற்றியும் தோல்வியும் என்னை மாறி மாறி அரவணைத்தன.

இப்படியே போய்க்கொண்டிருந்த என் பதிவுலக பயணத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நான் ரசித்தவர்கள் என்னை ரசித்தவர்கள் என பலர். அதன் பின் என் தளத்தை முற்றாக அழகுபடுத்த நான் துடித்த போது ஆரம்பத்தில் எனக்கு அத்திவாரம் இட்ட கைகள் இப்போது தோள் கொடுத்தன. உங்கள் ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். இடையில் பதிவர் சந்ரு வானொலி கட்ஜெட்டை தந்துதவியது மடுமில்லாமல் பட்டாம் பூச்சி விருதையும் அளித்து என்னை கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் நானிட்ட பதிவிற்கு வந்து பல பிரபல பதிவர்கள் பின்னூட்டமிட்டது என் இனிய நினைவுகள்.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பதிவுலக வாழ்க்கையில் ஒரு வெற்றியாக என்னை மீண்டும் புத்துணர்ச்சி தந்தது பூச்சரம் நடத்திய போட்டியில் நான் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் அந்த போட்டியில் பங்குபற்றிய மற்றைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அதனைத்தொடர்ந்து கடலேறி ஆதிரையின் சுவாரஷ்ய பதிவர் விருதென விருதுகளும் வரத்தொடங்கி இருக்கின்றன. ஏதோ ஒரு சந்தோசம், நானும் ஓரளவிற்கு எழுத்துகின்றேன் என்று. இப்போது ஐம்பதை தொட்டுவிட்டதால் இன்னும் பொறுப்புக் கூடி இருக்கின்றது. எனவே தரமான நல்ல படைப்புகளை எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

அதேநேரம் இதுவரை வந்த பின்னூட்டங்களில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே என்னை சீண்டிப்பார்த்தவை என்பதில் ஒரு சந்தோசம். (இப்போது நான் இந்த பதிவை இடும் நிலையில் பெயரில்லாமல் ஒருவர் தன் கருத்துகளை விட்டுச் சென்றிருக்கின்றார் என் கடந்த பதிவில் அதற்கு என் சக பதிவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் நான் மிக விரைவில் அவருக்கு பதில் சொல்லி பதிவிட பெயர் தெரியா அந்த நண்பர் என்னை தூண்டி விட்டிருக்கின்றார்.)நமக்கும் கல்லடி கொடுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று.

என் தளம் இப்போது முன்னேறி வருவது சந்தோசம். அதேநேரம் தொடர்ந்து நீங்கள் விரும்பும் பதிவுகளை கொடுக்காமல் இருப்பது கவலை. என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எனக்கு பிடித்தவற்றையும் நான் படித்ததில் என்னை கவர்ந்தவையையும் என் சொந்த ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதப்போகின்றேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த பின்னூட்ட நண்பர்கள் சக பதிவர்கள், வாக்களித்த வாசகர்கள், இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் என்னை வளர்த்துவிட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

என்னடா இவ்வளவும் தன்னை பற்றியே சொல்றான் விஜய் அஜித்துக்கும் தனக்கும் இடையான தொடர்ப்பை சொல்லலையே எனப்பார்க்கிறிங்களா.பெரிசா என்னங்க இருக்கப்போகிறது அவங்களைப் போல என் பதிவுலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. இன்னுமொன்று அவர்கள் இரண்டு பெயரையும் விட நான் முந்திக்கொண்டு அரைசதத்தை கடந்து விட்டேன். அவர்கள் இன்னும் காத்திருக்கின்றார்கள். இப்போ சொல்லுங்க தலைப்புக்கும் நான் இட்ட பதிவிற்கும் தொடர்பு இருக்கு தானே.

வரட்டா....

பி.கு:நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க என்னை வளப்படுத்திய அத்தனை பேருக்கும் நன்றிகளை சொல்லி இருக்கின்றேன். யாரையும் தவற விட்டிருந்தால் இந்த சிறியவனின் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

24 கருத்துரைகள்:

Nimalesh said...

congrats.............. thola nice to see that.. 50 up......... innum poga vendiyaa thuranm neraya thola.........

Admin said...

உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும் உங்கள் பதிவுலக பயணத்துக்கும் என் இனிய வாழ்த்துக்கள்... இன்னும் பல நல்ல பதிவுகளோடு வலம் வாருங்கள் நண்பரே...

ஆதிரை said...

வாழ்த்துக்கள் சதீஷன்...

தொடர்ந்து வலையுலகத்தில் தரமான பதிவுகளை தரவேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

Jana said...

தங்களின் வலைப்பதிவுகள் ஐம்பதை தொட்டுவிட்டதன் உமது ஸ்பரிஸ சிலிர்ப்பில் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றேன் நண்பரே.
வாழ்துக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களுடைய வலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள். கட்டாயம் நாம் உங்கள் கூட இருப்போம்... தயக்கமில்லாமல் தொடருங்கள் உங்கள் பயணத்தை....

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... (எப்படியோ எனக்கு முதல்ல அரைச் சதம் அடிச்சிட்டீங்க இல்லையா?.....)

Anonymous said...

radio gadget is being a nuisence. Atleast stop it playing automatically. If we want we play it. And its consume more space in our limited data bundle internet connection.

No FAMOUS blogger attach radio gadget. It make your blog amaeturish

துபாய் ராஜா said...

சீக்கிரம் 'செஞ்சுரி' அடிக்க வாழ்த்துக்கள்.

நண்பர்கள் தின வாழ்த்துக்களும்.

kuma36 said...

வாழ்த்துகள்!
தொடர்ந்து எழுதுங்கள்

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
congrats.............. thola nice to see that.. 50 up......... innum poga vendiyaa thuranm neraya thola.........

கண்டிப்பா தோழா எழுதுவோம் எழுதுவோம் எழுதிக்கிட்டே இருப்போம்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
உங்கள் ஐம்பதாவது பதிவிற்கும் உங்கள் பதிவுலக பயணத்துக்கும் என் இனிய வாழ்த்துக்கள்... இன்னும் பல நல்ல பதிவுகளோடு வலம் வாருங்கள் நண்பரே..

ஆதிரை கூறியது...
வாழ்த்துக்கள் சதீஷன்...

தொடர்ந்து வலையுலகத்தில் தரமான பதிவுகளை தரவேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

Jana கூறியது...
தங்களின் வலைப்பதிவுகள் ஐம்பதை தொட்டுவிட்டதன் உமது ஸ்பரிஸ சிலிர்ப்பில் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றேன் நண்பரே.
வாழ்துக்கள்

என் சந்தோசத்திலே பங்கெடுத்த உங்களுக்கு நன்றிகள். வருகைக்கு நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
உங்களுடைய வலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள். கட்டாயம் நாம் உங்கள் கூட இருப்போம்... தயக்கமில்லாமல் தொடருங்கள் உங்கள் பயணத்தை....

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... (எப்படியோ எனக்கு முதல்ல அரைச் சதம் அடிச்சிட்டீங்க இல்லையா?.....)

என்ன செய்வது இதெல்லாம் விடுங்க மிக விரைவில் நீங்கள் அரைசதம் கடந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
radio gadget is being a nuisence. Atleast stop it playing automatically. If we want we play it. And its consume more space in our limited data bundle internet connection.

No FAMOUS blogger attach radio gadget. It make your blog amaeturish


உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நீங்கள் நினைப்பதுபோல என் தளம் திறந்தவுடன் வானொலிகள் ஒலிப்பதில்லை. நீங்கள் இயக்கும்போதுதான் ஒலிக்கும். நான் வளர்ந்து வரும் ஒரு பதிவர் தவிர பிரபல பதிவர் அல்ல. என் ஆசை வானொலி கட்ஜெட் போட்டிருக்கேன். போகப்போக பார்க்கலாம். வருகைக்கு நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

துபாய் ராஜா கூறியது...
சீக்கிரம் 'செஞ்சுரி' அடிக்க வாழ்த்துக்கள்.

நண்பர்கள் தின வாழ்த்துக்களும்.

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே. மிக விரைவில் சதமடிப்பேன் அப்போதும் நீங்கள் வாருங்கள்.

SShathiesh-சதீஷ். said...

கலை - இராகலை கூறியது...
வாழ்த்துகள்!
தொடர்ந்து எழுதுங்கள்

நன்றிகள் கலை.

Anonymous said...

நீங்க சொன்ன மாதிரியே சொல்றன்,எனக்கு விஜய் பிடிக்கும் ஆனால் உங்கள் வலைப்பூவில் விஜய் இமேஜ் பார்த்தேன்,ஒரு வலை பூ எழுதுவதென்றால் விருப்பு வெறுப்பு அப்பாற்பட்டு செயல் பட வேண்டும்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
//என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே//

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

விஜயின் படம் எனக்கு பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது. இனிமேல் உங்க பக்கம் வருவதில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். பொதுவில் இது தேவையான்னு யோசிங்க..

SShathiesh-சதீஷ். said...

பெயரில்லா கூறியது...
நீங்க சொன்ன மாதிரியே சொல்றன்,எனக்கு விஜய் பிடிக்கும் ஆனால் உங்கள் வலைப்பூவில் விஜய் இமேஜ் பார்த்தேன்,ஒரு வலை பூ எழுதுவதென்றால் விருப்பு வெறுப்பு அப்பாற்பட்டு செயல் பட வேண்டும்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
//என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே//

பெயரில்லா கூறியது...
விஜயின் படம் எனக்கு பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது. இனிமேல் உங்க பக்கம் வருவதில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். பொதுவில் இது தேவையான்னு யோசிங்க..

நான் விஜயின் பரம ரசிகர் நண்பரே. வலைப்போவில் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு எழுதவேண்டும் என்பது கடினமானது. காரணம் தங்கள் மனங்களில் இருப்பதை எழுதத்தான் பலர் வலைப்பதிவை பயன்படுத்துகின்றனர். அதேநேரம் நான் யாரையும் தாங்கி எழுத விரும்பவில்லை. உங்களை அது காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்த்துக்கொள்ள பார்க்கின்றேன்.

Anonymous said...

best wishes
from:-sangeethan

SShathiesh-சதீஷ். said...

நன்றிகள் சங்கீதன்.

ARV Loshan said...

வாழ்த்துக்கள் சதீஷ்.. தொடர்ந்து வெற்றி நடை போடுக..
சர்ச்சைகள், தாக்குதல்கள், வம்பு சண்டைகள், அநாமதேயப் பின்னூட்டங்கள் வருவதெல்லாம் நீங்கள் பிரபல்யம் ஆகின்றீர்கள் என்பதற்கான சான்றுகள்.. ;)

SShathiesh-சதீஷ். said...

LOSHAN சொன்னது…

வாழ்த்துக்கள் சதீஷ்.. தொடர்ந்து வெற்றி நடை போடுக..
சர்ச்சைகள், தாக்குதல்கள், வம்பு சண்டைகள், அநாமதேயப் பின்னூட்டங்கள் வருவதெல்லாம் நீங்கள் பிரபல்யம் ஆகின்றீர்கள் என்பதற்கான சான்றுகள்.. ;)

நிச்காயமாக அண்ணா உங்கள் கருத்து எனக்கு மகிழ்வையும் உற்சாகத்தையும் தந்துள்ளது எல்லாவற்றிலும் இருந்து தொடர் வெற்றிகளுக்காக உழைப்பேன்.

Anonymous said...

//பெயரில்லா கூறியது...
விஜயின் படம் எனக்கு பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது. இனிமேல் உங்க பக்கம் வருவதில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். பொதுவில் இது தேவையான்னு யோசிங்க..

நான் விஜயின் பரம ரசிகர் நண்பரே. வலைப்போவில் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு எழுதவேண்டும் என்பது கடினமானது. காரணம் தங்கள் மனங்களில் இருப்பதை எழுதத்தான் பலர் வலைப்பதிவை பயன்படுத்துகின்றனர். அதேநேரம் நான் யாரையும் தாங்கி எழுத விரும்பவில்லை. உங்களை அது காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்த்துக்கொள்ள பார்க்கின்றேன்//

நானும் விஜய் ரசிகன் தான். நீங்கள் விஜய் ரசிகர் என்றால் அவரை கிண்டலடிக்கும் படத்தை ஏன் வச்சிருக்கிங்க? எனக்கு இவரைப் பிடிக்கும்ன்னு யார் படத்தையும் வைக்கலாம். ஆனால் சீண்டும் விதமாக வைத்ததுதான் பிடிக்கவில்லை. எடுத்துவிட்டால் மகிழ்வேன்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive