நான் பிறந்தது வடமராட்சி , (யாழ்ப்பாணத்தில தாங்க இருக்கு) ஆனால் அங்கே என்னால் என் ஆரம்பகால கல்வியைக் கூட கற்கமுடியவில்லை.(காரணங்கள் ஆயிரம் அத்தனையும் நீங்கள் நினைப்பதுதான்) வரணி என்னும் இடத்தில் தான் என் முன்பள்ளி பருவம் ஆரம்பமானது. வீட்டிலேயே ஒருபகுதியில் முன்பள்ளி இருந்ததால் எனக்கு இலகுவாகி விட்டது.ஆனால் நான் பாடசாலை போன அனுபவம் வித்தியாசமானது. முன்பள்ளியில் என் கையை ஒரு சக மாணவன் கடித்து விட அதன் பின் நான் முன்பள்ளி போகமாட்டேன் என அடம்பிடிக்க அம்மா தான் கல்வி கற்பித்த பாடசாலையில் என் ஐந்து வயதிலேயே முதலாம் தரத்தில் சேர்த்துவிட்டார்.வரணி சைவப்பிரகாச வித்தியாலயம் தான் என் முதல் பாடசாலை.
பிறகென்ன வீடு போலவே என் பாடசாலையும் அமைந்துவிட்டது. அதிபர் முதல் ஆசிரியர் வரை நான் செல்லப்பிள்ளை ஆகிவிட்டேன். என்னைவிட வயது கூடியவர்களுடன் என் கல்விப்பயணம் ஆரம்பமானது. அங்கே போயும் என் விளையாட்டு குறையவில்லை. நவநீதா என்னும் ஒரு அக்கா தான் என் புத்தகங்களை எடுத்து பையில் போட்டு அக்கறையாக அனுப்பி வைக்கும் அவர் இப்போது எங்கே எனத்தெரியாது. ஆனால் பல்கலைக்கழத்தில் படிப்பதாக ஒரு கேள்வி. என் அம்மாக்கு அடுத்து நான் அழகென்ற முதன் முறையாக காதலித்த பெண் என் முதல் ஆசிரியர்தான்.இப்போ அவங்க எங்கே இருக்கிறாங்க என்று தெரியாது. இப்போது அவர்மேல் மரியாதை தான் வருகின்றது.
இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பள்ளி பருவத்தில் இன்னுமொரு அனுபவம். என் அம்மாவே எனக்கு படிப்பித்தது. ஆங்கில ஆசிரியையாக அங்கே கடமை ஆற்றிய என் அம்மா எனக்கு ஆங்கிலம் படிப்பிப்பார். பரீட்சை நேரங்களில் பரீட்சை முடிந்தபின் என் விடைத்தாளை அப்படியே இன்னுமொரு ஆசிரியரிடம் கொடுத்து தான் திருத்துவார். காரணாம் யாரும் குறை சொல்லக்கூடாதே. அப்போது நான் எடுப்பத்து என்னவோ 100அல்லது 98 தான். (அட நம்புங்கப்பா அப்போ கொஞ்சம் கெட்டிக்காரன்தான்.)
அதன் பின் நாட்டு சூழ்நிலைகள் காரணமாக மீண்டுமொரு மாற்றம். பாரதி வித்தியாலயம் என்னை அரவணைத்தது. இங்கேயும் அம்மா. அத்துடன் என் மச்சானும் இணைந்து கொண்டார் ஆசிரியராக. ஆனால் இங்கே அம்மா தானாகவே எனக்கு படிப்பிக்க மாட்டேன் என ஒதுங்கிவிட்டார்.(அம்மா தப்பிச்சிட்டாங்க.) இந்த முறை என்னிடம் மாட்டியது என் மச்சான். உடற்கல்வி ஆசிரியராக எங்கள் வகுப்புக்கு வந்தவரை என் நண்பர்கள் என்னை வைத்தே மைதானத்துக்கு கூட்டிசென்று விடுவர் விளையாட. ஐந்தாம் ஆண்டிலேயே கால்பந்து விளையாடியவன் தாங்க நானும்.(இதை சொன்னா யார் நம்பப்போறாங்க.)
இந்தக்காலத்தில் நான் சந்தித்த இன்னுமொரு மறக்க முடியாத சம்பவம் என் வலக் கண்ணின் பார்வை பறிபோக்கும் சந்தர்ப்பம். அந்த வயதிலேயே ஏதோ என்னால் முடிந்தவரை பாட்டு,பேச்சு,கவிதை,நடனம்(நிஜமாவே நடனம் ஆடி இருக்கேனும்கோ, அதுவும் தனியா இல்லை ஜோடியாக இப்போ அந்த பொண்ணு எங்கே இருக்கோ?) நாடகம் வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு வந்தேன். ஒரு முறை வில்லுப்பாட்டு பழகிக்கொண்டிருந்தேன் நண்பர்களோடு மைதானத்தில் இருந்த ஒரு மரத்துக்கு கீழ் இருந்து.(எத்தனை மாடி வகுப்பில் இருந்து படித்தாலும் இது மறக்கமுடியாத இனிமையான காலம்.)அப்போது அங்கே வந்த என் நண்பன் ஒருவன் எனக்கு ஒரு தடியால் தூர இருந்து எரிய அது நேரே என் வலது கண்ணின் இமையை தாக்க என் கண்ணை மூடினேன்.(யாராவது ஒரு கிரிக்கெட் டீமுக்கு அவனை எடுங்கப்பா)அவன் எறியக்காரணம் பிறகுதான் தெரிந்தது என்னை சுற்றி நிறைய பெண்கள் இருந்த எரிச்சல் என்று.(ஆஹா சொல்லக்கூடாததை சொல்லிட்டமோ. விடுங்கப்பா விடுங்கப்பா பையன்கள் என்றால் பொண்ணுகளோட இருக்கிறதும் பொண்ணுங்கன்ன பையன்களோட இருக்கிறதும் சகயமப்பா! எஸ்கேப்) ஆனால் அதன் பின் அவனுக்கு நிறைய பூசை புனர்க்காரங்கள் நடக்க அதை என் அம்மா தடுத்ததையும் நான் அறிவேன்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களின் பின் தான் நான் கண் திறந்தேன். அதுவரை என்னை பார்க்க வந்தவர்கள் கிட்டத்தட்ட பாடசாலையே வந்தது எனலாம்.(ஆசிரியரின் பிள்ளைகளாய் இருப்பது இந்த விடயத்தில் நல்லது.) நான் கண்திறக்க காரணம் மாசு மறுவற்ற ஒரு தாயின் தாய்ப்பாலே. அதை கண்ணுக்குள் விட்டால் கண் திறப்பார் என யாரோ ஒரு பெரியவர் சொல்ல இறுதி ஆயுதமாக அந்த தாய் மனமுவந்து என் கண்ணை திறந்தார். என் கண்ணை கொடுத்த அவருக்கு நன்றிகள் சொல்ல என்னால் முடியாது. என்றுமே கடமைப்பட்டவன் நான். கண்முளியை அதுதாக்கியதாக சொல்லி என் கண் பார்வை பறிபோய்விடும் என ஒரு சில வைத்தியர்கள் கை விரித்த பின் நான் மீண்டும் வந்தேன்.(இதேபோல நாங்கள் வளர்த்த ஆடு ஒன்று என் இடக்கண்ணை பறிக்கப்பார்த்து அதிலிருந்து நான் தப்பியது வேறு கதை.)
அதன் பின் மீண்டும் ஒரு இடப்பெயர்வு. வந்தேன் வவுனியா, படிக்க போனேன் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்துக்கு. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அரவணைத்த அந்த கோவில் என்னையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டது. ஆனால் இங்கே எனக்கு முதல் நாளே ஒரு வித்தியாசமான அனுபவம். முச்சக்கர வண்டியில் பாடசாலை போன நான் பாடசாலை முடிந்து வீடு போக அந்த முச்சக்கரவண்டி வராமல் போக பாதை தெரியாமல் தடுமாறி மீண்டும் என் பெற்றோர் வந்து என்னை அழைத்துச் செல்ல. அன்றிலிருந்து பாடசாலை போகமாட்டேன் என நான் அடம்பிடித்து அழுதழுது போகத்தொடன்கினேன். காரணம் இங்கே அம்மா இல்லையே என்னும் இன்னுமொரு குறை.
ஒரே வகுப்பில் அதாவது தரம் நன்கு, ஐந்தில் இரண்டு வருடங்கள் இரண்டு பாடசாலையில் ஒரு வித்தியாசமான காரணத்துக்காக படித்தவன் நானாக தான் இருக்கும். சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஒருதரம் (என் வயதை மீறி) நான் படித்தாலும் என்னை என் வயதுக்கேற்ற தரத்தில் தான் பதிவேட்டில் இட்டிருந்தனர். இதே கதை பாரதியிலும் தொடர்ந்தது. ஆனால் வவுனியாவில் அப்படி விடுவதாக இருந்தால் புலமைப்பரிசிலில் தொடருவது சிக்கல் வரும் அப்படி அந்த பரீட்சையில் தோற்றாமல் விடுவதென்றால் நாங்கள் தொடர்ந்து என்னை அனுமதிப்பதாக கூறினர். என் பெற்றோரோ அதற்கு மறுத்து விட்டனர். எனவே மீண்டும் நான்காம் தரகத்தில் படிக்கத்தொடங்கினேன். ஆனால் என் பெற்றோரின் கனவு பொய்க்கவில்லை.புலமைப்பரிசிலில் மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சித்தி பெற்றேன். இந்த சந்தோசத்தோடு நான் அப்பாவிடம் போக அப்பா கேட்டதோ நீ ஏன் முதலாவதாக வரவில்லை என்று.(எனக்கு வில்லனாக வந்தது நம் நாட்டின் தேசிய கீதம். இடைவெளி நிரப்புகவில் அதனை போட்டு பாடமில்லாத என்னை திக்கு முக்காட வைத்து விட்டனர்.)
படத்தை பெரிதாக்க்கிபோட வழி தெரியவில்லை இருந்தால் சொல்லுங்கள். தற்போது முகப்புத்தகத்தில் இருக்கும் படமும் உடனடியா உங்களுடன் பகிரக்கூடிய படமும் இதுதான் ஆனால் இது ஆயிரம் கதைகள் சொல்லும். ஐந்தாம் ஆண்டில் எங்கள் வெற்றிக் கூட்டணி.
இங்கே நான் சந்தித்த நண்பர்கள் ஏராளம்.(ஒரு சிலரின் பெயரை மட்டும் சொல்லி மற்றவர்களை தவிர்த்து அவர்களிடம் வாங்கிக்கட்ட நான் தயாரில்லை.) அதேநேரம் அம்மாவின் எந்த பக்கபலமும் இல்லாமல் அந்த பாடசாலையில் என்னை ஒரு நல்ல இடத்தில் நான் வைக்க எதிர்கொண்ட சவால்கள் எத்தனையோ? சில ஆசிரியர்களின் சூழ்ச்சிக்குள் கூட அந்த சிறுவயதில் நான் அகப்பட்டேன். இதை எல்லாம் உடைத்தெறிந்தது தான் என் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை. என் வெற்றி என் அம்மாவை மீண்டும் பாடசாலைக்குள் அழைத்தது. அம்மா எங்கள் பாடசாலையில் படிப்பிக்க மீண்டும் வந்தார். இம்முறையும் என் வகுப்பை தவிர்த்து வேறு ஒரு வகுப்பை எடுத்து விட்டார்.
தரம் ஆறு வந்தாச்சு அதற்கு பின் அம்மா பாடசாலையில் இருந்தால் என்னால் என்ன செய்யமுடியும். அதுவும் பக்கத்து வகுப்பில் எண்டால். இப்படியே போக நான் தரம் ஏழு வர அம்மாவும் தன் கல்விப்பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். என் பாடசாலை வாழ்க்கை நண்பர்களோடும் பல்வேறு போட்டிகளில் பெற்ற வெற்றிகளோடும்(நூறு சான்றிதழ்களை தொட்டு விட்டேன் எல்லா போட்டிகளிலும் பங்கு பற்றி.) போய்க்கொண்டிருந்தது. பாடசாலையில் நானும் ஒரு தவிர்க்க முடியாதவன் ஆனேன். எனக்கு படிப்பித்த படிப்பிக்கத ஆசிரியர்கள் என அத்தனை பேரும் என்னுடன் அன்பாக இருக்கும் ஒரு இடத்தில் நான் இருந்தேன்.(இதை பெருமைக்காக சொல்லவில்லை. எங்கள் பாடசாலையை பொறுத்தவரை அது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பது படித்த எல்லோருக்கும் தெரியும்.
அதன்பின் பல சம்பவங்களோடு கா.பொ.த சாதாரண தரத்திலும் என் பெறுபேறுகள் சிறப்பாக தொடர்ந்தது. இப்படியே உயர்தரம் வர பல்வேறு சவால்கள். மீண்டும் பல புதியவர்கள். நன்றாக ஆரம்பித்த என் உயர்தரம் சில சில காரணங்களால் வெற்றிகரமாக முடியாமல் போனது இன்றுவரை என் வாழ்வின் மிகப்பெரிய வடு. பள்ளிக்காதல் எனக்கும் வந்தது. அதனாலேயே பல பின்னடைவுகளை சந்தித்தேன். இறுதியில் சுவையான பல நண்பர்களின் நினைவுகளோடும் என்னை உருவாகிய ஆசிரியர்களின் இனிமையான ஸ்பரிசங்களோடும் வாழவேண்டியவன் என் பாடசாலை கால இறுதிக்காலங்களை ஏனோ நினைக்க விரும்பவில்லை. ஆனால் அந்த தோல்விதான் இன்று என்னை ஒரு அறிவிப்பாளனாக உங்களிடம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.(ஒன்றை இழந்தால் இன்னொன்று கிடைக்கும் என்பதை ஆண்டவன் எனக்கும் படிப்பித்துவிட்டார்.)
எங்கள் பாடசாலையில் பான்ட் இசைக்குழுவின் தலைவனாக இன்னும் ஒரு சில மன்றங்களின் தலைவன்.உறுப்பினர் என என் இன்னொரு முகத்தையும் என்னால் வளர்க்க உதவிய இடம் இது. இறுதி ஆண்டில் மாணவர்தளைவர்களை தெரிவு செய்யும் போது அதற்கான விண்ணப்ப பத்திரத்தை நான் நிரப்பி(இதிலும் ஒரு துணைக்கதை உண்டு) சமர்ப்பிக்க போகும் போது அப்பா வேண்டாமென கவலையோடு நான் அந்த பத்திரத்தை கிழித்தெறிந்து விட்டு இருந்து விட்டேன்.அதன் பின் எல்லோரையும் தெரிவு செய்யும் இறுதித்தருணத்தில் என்னையும் என்னைப்போல ஒரு சில நண்பர்களையும் அழைத்து நாங்கள் விண்ணப்பம் கொடுக்காததற்கு காரணம் கேட்ட தெரிவுக் குழுவினரிடம் நான் என் விருப்பமின்மையை சொன்னேன். அதன் பின் அவர்கள் கூடி ஆராய்ந்து பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக என்னையும் வாசனையும் தாங்கள் கண்டிப்பாக மாணவர்தளைவராக்க வேண்டுமென கூறி அதற்குரிய வேலைகளை செய்து அந்த மணி மகுடத்தை எனக்கும் தந்தனர். இந்த நேரத்தில் என்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்த ஆசிரியர்களுக்கு என் நன்றிகள்.
என் பசுமையும் கவலையும் நிறைந்த பள்ளிக் காலத்தை மீட்டிப்பார்க்க வைத்த சிந்துவிற்கு நன்றிகள். அதேநேரம் மன பாரம் ஏனோ குறைந்தது போல இருக்கின்றது. என்னை தட்டி தட்டி மெருகூட்டிய என் ஆசிரியர்களுக்கும் தடிக்கொடுத்த நண்பர்களுக்கும் தட்டி விட்ட எதிரிகளுக்கும் குழிபறித்த துரோகிகளுக்கும் என் நன்றிகள். நான் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டேன்...... தொடர் பதிவிற்கு நானும் சிலரை அழைக்க வேண்டுமே இதோ என் கையில் சிக்கி தங்கள் உண்மைகளை உடைக்கப்போகும் நண்பர்கள்....
2.அடைத்து வைக்காமல் எல்லாவற்றையும் சொல்லும் கிடுகுவேலி.
3.பதுங்கிக்கொண்டே பதுக்காமல் சொல்லும் டொன் லீ.(சிவபாதசுந்தரம் தயாளன்)
என் வாழ்கையின் நினைவுகளையும் பொறுமையாக படித்த உங்களுக்கு நன்றிகள்.
25 கருத்துரைகள்:
ம்ம்! பாடசாலை அனுபவங்களை நன்றாக எழுதியுள்ளீர்கள்..அதிலும் அந்த ஸ்கொலசிப் எக்சாமில் இரண்டாமிடம் வந்தபோது கண்டித்த தந்தை டிபிகல் யாழ்ப்பாணத் தந்தை... அவர்களை சொல்லிக் குற்றமில்லை :) இன்னொரு இலங்கைப்பதிவரை சந்தித்ததில் மகிழ்ச்சி... கடலேறிதான் அறிமுகப்படுத்தினார்.. தொடருங்கள்...
நன்றி சதீஸ்.
கிட்டத்தட்ட என் பள்ளிக்காலமும் யாழில் தொடங்கி கொழும்பில் முடிந்திருக்கின்றது. ஆறுதலாக பதிவுடுகிறேன் :-)
உங்கள் கண்ணுக்கு ஏற்பட்ட விபத்தை நினைக்கும் போது கலங்குகின்றது..
ungal pallikala anupavam nalla iruku pa
//முதன் முறையாக காதலித்த பெண் என் முதல் ஆசிரியர்தான்//
I Like this
நாங்களும் இதே றூட்தானுங்கோ
ஆனால் கொஞ்சம் வித்தியாசம் 9 தரத்தில்..
தேசிய கீதம் தெரியாத ஆக்களையெல்லாம் சிரச்சேதம் செய்யணும்..
ஆணாயினும், பெண்ணாயினும் முதல் காதல் தம் ஆசிரியையோடு தானோ?! இது காதல் என்பதை விட, ஒரு விதமான தெய்வீக நிலை!
//பரீட்சை நேரங்களில் பரீட்சை முடிந்தபின் என் விடைத்தாளை அப்படியே இன்னுமொரு ஆசிரியரிடம் கொடுத்து தான் திருத்துவார்.//
உங்கள் தாயிடம் நேர்மையை காண்கிறேன்.
என்னுடைய பாடசாலை அனுபங்களையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது உங்கள் ப்திவு.
@பெயரில்லா
//தேசிய கீதம் தெரியாத ஆக்களையெல்லாம் சிரச்சேதம் செய்யணும்..
பலருக்கு சொந்தப் பெயரே தெரியாமல் இருக்கும் போது..... :D
அப்பவே கடும் கில்லாடிதான் போல இருக்கு....
வாசிக்கும் போது என் பாடசாலை நாட்களுக்கு கொண்டு சென்று விட்டிஇர்கள். எனது பழைய நினைவுகளை மீட்ககூடியதாக இருந்தது.
ம்ம்ம் எல்லாம் பசுமையான நினைவுகள். எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரு காலங்கள். நல்ல பதிவு...! விரைவில் உங்கள் அழைப்பை ஏற்று எமது பால்ய நினைவுப்பதிவுகளையும் வலையேற்றம் செய்கிறேன். இப்படி ஒரு பதிவு நண்பர் அருண்மொழிவர்மன் அவர்களின் அழகான மொழிநடையில் உள்ளது.
http://solvathellamunmai.blogspot.com/2009/07/blog-post_31.html
enna satheesh anna ungalukkum iththanai kaathal kathaiyaa..
mmm en ninaivugalum meendathu nanba... un palli vazhkkaiyin anthaththil naanum irunthirukkirene santhosam...!!
நான் அனுப்பிய பின்னூட்டத்தில் ஏதூம் தவறா அதனை என் வெளியிடவில்லை
புல்லட் கூறியது...
ம்ம்! பாடசாலை அனுபவங்களை நன்றாக எழுதியுள்ளீர்கள்..அதிலும் அந்த ஸ்கொலசிப் எக்சாமில் இரண்டாமிடம் வந்தபோது கண்டித்த தந்தை டிபிகல் யாழ்ப்பாணத் தந்தை... அவர்களை சொல்லிக் குற்றமில்லை :) இன்னொரு இலங்கைப்பதிவரை சந்தித்ததில் மகிழ்ச்சி... கடலேறிதான் அறிமுகப்படுத்தினார்.. தொடருங்கள்...
உங்கள் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன். அறிமுகப்படுத்திய கடலேறி ஆதிரைக்கு நன்றிகள்.
டொன்’ லீ கூறியது...
நன்றி சதீஸ்.
கிட்டத்தட்ட என் பள்ளிக்காலமும் யாழில் தொடங்கி கொழும்பில் முடிந்திருக்கின்றது. ஆறுதலாக பதிவுடுகிறேன் :-)
உங்கள் கண்ணுக்கு ஏற்பட்ட விபத்தை
நினைக்கும் போது கலங்குகின்றது..
உங்கள் வருகைக்கு நன்றிகள். அதேநேரம் என் விபத்தை எண்ணி வருந்திய உங்கள் அன்பான மனதுக்கு நான் தலை வணங்குகின்றேன். தொடர்ந்தும் வந்தீர்கள் என்றால் இன்னும் சந்தோசமே.
gayathri கூறியது...
ungal pallikala anupavam nalla iruku pa
உங்கள் வருகை சந்தோசமா இருக்கப்பா. நன்றிகள்.
வதீஸ்வருணன் கூறியது...
//முதன் முறையாக காதலித்த பெண் என் முதல் ஆசிரியர்தான்//
I Like this
நாங்களும் இதே றூட்தானுங்கோ
ஆனால் கொஞ்சம் வித்தியாசம் 9 தரத்தில்.
ஒன்பதாம் தரத்திலா. நல்ல இருக்கப்பா உங்க டிரென்ட் அப்பிடியே அந்த அனுபவங்களை எழுதிறது.
பெயரில்லா கூறியது...
தேசிய கீதம் தெரியாத ஆக்களையெல்லாம் சிரச்சேதம் செய்யணும்..
பெயரே தெரியாதவர்களை என்ன செய்வது......
SUMAZLA/சுமஜ்லா கூறியது...
ஆணாயினும், பெண்ணாயினும் முதல் காதல் தம் ஆசிரியையோடு தானோ?! இது காதல் என்பதை விட, ஒரு விதமான தெய்வீக நிலை!
//பரீட்சை நேரங்களில் பரீட்சை முடிந்தபின் என் விடைத்தாளை அப்படியே இன்னுமொரு ஆசிரியரிடம் கொடுத்து தான் திருத்துவார்.//
உங்கள் தாயிடம் நேர்மையை காண்கிறேன்
நிச்சயமாக் அது ஒரு தெய்வீக நிலைதான். என் தாயை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
ஆதிரை கூறியது...
என்னுடைய பாடசாலை அனுபங்களையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது உங்கள் ப்திவு.
@பெயரில்லா
//தேசிய கீதம் தெரியாத ஆக்களையெல்லாம் சிரச்சேதம் செய்யணும்..
பலருக்கு சொந்தப் பெயரே தெரியாமல் இருக்கும் போது..... :D
தம் சந்தோசமே உங்களையும் அங்கே கூட்டிச் சென்றதுக்கு. மற்றைய கருத்துக்கும் நன்றிகள்.
சந்ரு கூறியது...
அப்பவே கடும் கில்லாடிதான் போல இருக்கு....
வாசிக்கும் போது என் பாடசாலை நாட்களுக்கு கொண்டு சென்று விட்டிஇர்கள். எனது பழைய நினைவுகளை மீட்ககூடியதாக இருந்தது
நான் அப்படி கில்லாடி எல்லாம் இல்லைப்பா. அப்பாவி நம்புங்க. சந்தோசம் நீங்களும் பள்ளிப்பருவத்துக்கு மீன்டத்தில்.
கதியால் கூறியது...
ம்ம்ம் எல்லாம் பசுமையான நினைவுகள். எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரு காலங்கள். நல்ல பதிவு...! விரைவில் உங்கள் அழைப்பை ஏற்று எமது பால்ய நினைவுப்பதிவுகளையும் வலையேற்றம் செய்கிறேன். இப்படி ஒரு பதிவு நண்பர் அருண்மொழிவர்மன் அவர்களின் அழகான மொழிநடையில் உள்ளது.
http://solvathellamunmai.blogspot.com/2009/07/blog-post_31.html
உங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றிகள். நீங்கள் சொன்ன தளம் சென்றேன் படித்தேன் சுவைத்தேன் நன்றிகள்.
sanjeevan கூறியது...
enna satheesh anna ungalukkum iththanai kaathal kathaiyaa..
என்னப்பா இத்தனையா எனக்கேட்கிறிங்க. என்ன செய்வது எல்லாம் ஒரு அனுபவ பாடம்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Sindujan கூறியது...
mmm en ninaivugalum meendathu nanba... un palli vazhkkaiyin anthaththil naanum irunthirukkirene santhosam...!!
என் பள்ளி வாழ்வில் நான் தேடிய நல்ல நண்பன் நீயும் தான். உன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.
வந்தியத்தேவன் கூறியது...
நான் அனுப்பிய பின்னூட்டத்தில் ஏதூம் தவறா அதனை என் வெளியிடவில்லை
நீங்கள் தெரிவித்ததில் எந்த தவறுமல்ல. ஆனால் அந்த கருத்துரை ஏனோ பதிவாக மறுக்கின்றது தயவுசெய்து மீண்டும் அதனை உங்களால் தெரிவ்க்க முடியுமா. பதிவாகததற்கு காரணம் தெரியவில்லை.
அவர் தெரிவித்த கருத்து இதுதான்.
ஆஹா இவ்வளவு அனுபவங்களா? பாடசாலை வயதில் காதல் வந்தால் சகலதும் போகும் பலரின் அனுபவங்களைப் பார்த்தேன்
"நன்றியுங்கோ நன்றி, ஆனால் மனசுக்குள் திட்டி திட்டி தான் எழுதிறனுங்கோ?) "
Thanks a lot..
Interesting and womdering..
Post a Comment