Saturday, August 22, 2009

கந்தசாமி-காப்பாற்ற வந்த சாமி.

முக்கிய குறிப்பு: நான் ஒரு விக்ரம் ரசிகன் அல்ல. அதேநேரத்தில் விக்ரமின் அநேக படங்களை பாராட்டாதவன். இங்கே என் மனதில் தோன்றிய நடுநிலை கருத்தை விமர்சனமாக தருகின்றேன்.

நீண்ட காலமாக சாக்கு போக்கு காட்டி வரும் ஆனால் வராது என இழுத்தடித்த கந்தசாமி திரைப்படம் ஒருவாறு வந்து விட்டது. முதல் நாளே முதல் ஷோ பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேற்று இந்த நேரம் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அதேநேரம் என் தொழில் நிமித்தம் வரும் புதுப்படங்களை பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு.(என்ன தான் மொக்கை என்றாலும் பார்த்து தான் தீரணும். என் தலை விதி அது.) இந்தப்படமும் தலை விதி தான் என்ற எண்ணத்தில் திரை அரங்குக்கு போயிருந்தேன்.

படமும் ஆரம்பம். டைட்டிலே சூப்பர் ஹீரோ சீயான் விக்ரம் என போட்டது, விக்ரம் சிறுவர்களுக்கான படம் என்றது, கிரிஷ் படத்தின் தழுவல் என படம் வர முதலே வந்த எறிகணைகளை தாண்டி இந்த படத்துக்கான எதிர்பார்ப்பில் நானும் அடங்கிப்போனேன்.

கண்ணீரை துடைப்பவன் கடவுள் என்று போடும் போதே இந்த படத்தில் லாஜிக் பார்க்க தேவை இல்லை என்பதோடு கடவுளையும் சம்பந்தப்படுத்தி தான் திரைக்கதை செல்லும் என்பது தெரிந்துவிடுகின்றது. அதற்கு ஏற்றால்போல உயிருக்காக போராடும் ஒருவரின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து வள்ளல் சாமியாக படத்தை தொடங்குகின்றார். அதற்கு பின் மன்சூர் அலிகானுடன் மோத விக்ரம் அறிமுகமாகும் காட்சியே அருமையாக இருக்கின்றது. சேவல் வேடமிட்டு மன்சூரை பந்தாட விக்ரம் செய்யும் சின்ன சின்ன அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கட்டிப்போடுகின்றது.

அதற்கு அடுத்த காட்சியில் ஒரு சி.பி.ஐ அதிகாரி வேடம் விக்ரமுக்கு.(இரட்டை வேடமல்ல). கந்தசாமி என்னும் பெயரில் அவர் அறிமுகமாகும் போதே இவர் தான் சேவல் என்பதும் தெரிந்துவிடுகின்றது. அவரின் மேலதிகாரியாக பிரபல தெலுங்கு நடிகர் கிரிஷ்ணா. விக்ரமின் சி.பி.ஐ அதிகாரி வேடத்துக்கு பெரிய பில்ட் அப்புகள் இல்லாதது நல்லது. மனிதர் பார்க்க அழகாக இருக்கின்றார். சின்ன சின்ன அசைவுகளிலும் நடிக்கின்றார். அதேநேரம் கடைமை தவறாத ஒரு நல்ல அதிகாரியாக இருந்து கொண்டே கந்தசாமி சேவல் அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவதை முதலே சொல்லாமல் இறுதியில் சொல்லி படம் பார்க்கும் ரசிகனை முட்டாளாக்காமல் எப்படி எல்லாம் பறக்கின்றார், பாய்கின்றார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருப்பதே படத்தின் பெரிய பலம்.

பெண் வேடமிட்டு அசத்துவது வயோதிபர் வேடம் சேவல் கலக்கல் தவிர(இவை திரையில் வரும் நேரம் குறைவு) விக்ரமின் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரமில்லை இது. விக்ரமிடம் நடிப்புடன் கூடிய படத்தை எதிர்பார்க்காமல் போனால் நல்ல படமிது. படம் வெளிவர இவ்வளவு தாமதம் ஏன் என்று படம் ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடுகின்றது. பிரமாண்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஷங்கருக்கு அடுத்து இன்னொரு இயக்குனர் வந்திருக்கின்றார். படத்தின் கதை எல்லோரும் சொல்லவதுபோல சிவாஜி+அந்நியன்+சாமுராய்+ரமணா=கந்தசாமி. இதில் கோட்டை விட்ட இயக்குனர் சுசி கணேஷன் திரைக்கதையில் கோட்டை கட்டி இருக்கின்றார். நாங்கள் பார்த்த படங்களின் காட்சிகள், ஆனால் அலுப்பு தட்டவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதற்கு காரணம் சுசியின் making style என்றால் பொய்யல்ல. அதேநேரம் படம் பெரிதாக இருப்பது ஒரு குறை என்றாலும் திரைக்கதை ஓட்டத்தின் வேகம் அதை சரி செய்து விடுகின்றது.

விக்ரமுக்கு அடுத்து கிருஷ்ணாவின் கதாபாத்திரம் வழக்கமான விஜயகாந்தின் போலீஸ் படங்களில் வந்த மேலாதிகாரி வேடம். ஆனால் அதுவும் இவருக்கு பொருந்தி இருக்கின்றது.(ரகுவரன் நடிக்க இருந்த வேடம் இதுதானோ) பிரபு.(கொஞ்சம் உடம்பை குறையுங்க சார் நீங்கள் திரையில் வந்தால் உங்களுக்கு பின்னுக்கு நிற்பவர்களை தெரியவில்லை.) அண்மையில் பில்லா படத்தில் பார்த்த அதே பிரபு. இங்கும் அதே வேலை வேறு ஒன்றும் இல்லை சொல்ல. ஆனால் அதுவும் ரசிக்கும்படி செய்திருக்கின்றார்.

கதாநாயகி+வில்லி ஸ்ரேயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும் வில்லத்தனமான பாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆடைக்குறைப்பு(கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம்) என வந்திருந்தாலும் கவர்ச்சியை தேட வேண்டி இருக்கின்றது. அதேநேரம் பாடல் கட்சிகளில் வளைந்து நெளிந்து இடுப்பை கூட ஆட்டோ ஆட்டென ஆட்டி கலக்கி இருக்கின்றார். பாடல்காட்சிகளில் என்னவோ விக்ரமை விட நடனத்தில் கலக்குவது ஸ்ரேயாதான். அம்மா சுசித்ரா தாயே நீங்கள் பாடுவதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. உங்கள் குரலை அதுவும் அழகான நடிகைககளிடம் கேட்க பயமா இருக்கிறது. தந்தைக்காக விக்ரமை காதலிப்பதாக நடிக்க வந்து பின் வழக்கம் போல விக்ரமிடம் சரணடையும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என சுருக்கமாக சொன்னாலும் மோதல்,காதல் விறுவிறுப்பு, பழி வாங்கல்கள் என சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லை.

இருவரும் தத்தமது வேலைகளுக்காக காதலை பாவித்து இறுதியில் அந்த ஆயுதத்துக்கே பலியாகிப்போகின்றார்கள்.ஸ்ரேயாவின் அப்பாவாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி என்ன நடிப்பது. வழக்கமான வில்லன் என்றாலும் சிறப்பாக செய்திருக்கின்றார். போடி போடா என ஒரு திரைப்படம் பற்றி பேச்சு வந்தது நினைவிருக்கலாம் அதற்க்கு விளம்பரத்துக்காகவோ என்னவோ பாடலிலும் வசனத்திலும் பிரபலமான வார்த்தைகளாக இவை. ஆஷிஷ் வித்யாராத்தியின் கையாளாக வரும் வை.ஜி.மகேந்திரன் கதாபாத்திரம் சிறப்பானது.
விவேக்கின் இடத்தில் வந்த வடிவேல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். வயிறு குலுங்க சிரிக்க வைக்க அவர் உத்தரவாதம். அதுவும் பிரபுவிடம் மாட்டி விசாரணையில் அவர் செய்யும் அலப்பறை இன்னொரு குஷி.புதிய சரக்கோடு மீண்டும் சிரிக்க வைக்கும் வடிவேலு அன்மைப்படங்களில் தெரிகின்றார்.இதை விட விக்ரம் தன் நண்பர்களோடு இரந்து ஏன் இந்த மாதிரி காரியத்தில் ஈடுபடுகின்றார்? என்ன நடந்தது என்னும் சொல்லும் சின்ன கிளைமாக்ஸ் வரும் போதே பிரதான வில்லன் யார் என தெரிந்து விடுகின்றது. என்ன ஆட்டமையா அது.தமிழ் நாட்டின் அடையாளம் என்றுகொண்டே ஒரு வாகனத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் முடிப்பது அமர்க்களம். அதே நேரம் இன்னும் கொஞ்சம் அவருக்கு அழுத்தமாக குடுத்திருக்கலாமோ என தோன்றி இருந்தாலும் அது கூட ஆபத்தாக அமைந்து விடும்.

மேக்ஸ்சிகோ காட்சிகள் படத்தில் கொஞ்சம் நீளம் என்றாலும் அந்த Locationsகளுக்காக பார்க்கலாம். சண்டைக்காட்சிகளில் லாஜிக்கை தவிர்த்து பார்த்தால் ரசிக்க முடிகின்றது. பின்னணி இசை பாடல்கள் என தேவி ஸ்ரீ பிரசாத் தன பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். தாணு காசை தண்ணி போல செலவு செய்திருக்கின்றார் என்பது படத்துக்கு பெரிய பலம். அதேநேரம் பிரபுவுடன் மட்டுமன்றி மற்ற முக்கியமான தலைகளுடன் எல்லாம் விக்ரமின் நண்பர்கள் இருந்து அவருக்கு உதவி செய்வது தெரிய வரும் இடங்கள் நல்ல திருப்பங்கள். அடுத்தது என்ன என்கின்ற எதிர்பார்ப்போடு வேகமாக நகரும் திரைக்கதை தான் படத்தை காப்பாற்றி இருக்கின்றது. மொத்தத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பல பதிவுலக நண்பர்கள் எழுதிய விமர்சனகள் இந்த படத்தை பொறுத்தவரை ஏன் என தெரியவில்லை. ஆனால் உண்மையில் இப்படியான வித்தியாசமான படங்களில் சில லாஜிக் பார்க்காதீர்கள் அதேபோல படத்தின் கதை பழையதாக இருந்தாலும் அதை கொடுத்திருக்கும் விதம் புதிசாக இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கின்றது. விக்ரம் சொன்னது போல நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளையும் பெண்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் நம்மிடம் இல்லாத ஒரு அதிசய சக்தியை தான் குழந்தைகள் ரசிக்கின்றார்கள். அதேபோல பெரியவர்களை ஏமாற்றாமல் எப்படி இப்படி எல்லாம் நடக்கின்றது என விளக்காமாக சொல்லி இருப்பது பாராட்டக்கூடியதுடன் புரிந்து ரசிக்க கூடியதே.
மொத்தத்தில் படம் பார்க்கும் நேரம் முழுவதும் சோர்வை தராமல் ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் வெற்றியே. அதை கந்தசாமி கொடுக்கின்றார். பக்தி செண்டிமெட் இருப்பது அடிமட்ட மக்களை சென்றடையும் அதேநேரம் கதையும் அவர்களிடமிருந்து ஆரம்பித்து பெரிதாக சொல்லப்படிருப்பது வர்க்க வித்தியாசங்களை உடைத்து ரசிகர்களை கூட்டும். அதேபோல ஒரு படத்தை பார்த்தால் குறைந்தது மூன்று மணி நேரம் ஆவது அந்தப் படத்தின் பாதிப்பு எங்களை ஆட்டுவித்தால் அதுதான் படத்தின் வெற்றி. உண்மையை சொல்லுங்கள் கந்தசாமி உங்களை பாதிக்கவில்லையா?.

சிலர் சொல்வதுபோல கந்தசாமி நொந்தசாமி இல்லை தாணுவை விக்ரமை சுசியை என எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.

கந்த கந்த கந்த கந்த கந்தசாமி எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.
Share:

12 கருத்துரைகள்:

யோ வொய்ஸ் (யோகா) said...

நானும் உங்கள் கட்சிதான் நண்பரே! எனக்கும் படம் பிடித்து இருந்தது, நான் கண்டியில் மாபெரும் சனக்கூட்டத்திற்கு மத்தியில் பார்த்தேன், அநேகமாக எல்லாரும் இரசித்து பார்த்தனர். எனக்கும் ஏன் இதை எல்லாரும் சரியில்லை என கூறுகின்றனர் என தெரியவில்லை. ஸ்பைடர்மேன் போன்ற படங்களை ரசிக்கும் நம்மட ஆட்கள் இந்த மாதிரி படங்களை சரியில்லை என ஒரே வார்த்தையில் கூறி பிரசாரம் செய்வார்கள், படங்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.

எனககும் கந்தசாமி நல்ல ஒரு எண்டர்டெயின்மன்ட் சாமி தான்.

Manoj (Statistics) said...

hello யோ வாய்ஸ் .. நானும் கண்டியில் மாபெரும் சனக்கூட்டத்திற்கு மத்தியில் தான் படம் பார்த்தேன்.(6.30 show miss பண்ணி 10.30 show பார்த்தேன் )... அது இன்று நோன்பு பெருநாள் என்பதால் ஒரு மாததிற்குள் படத்தை தூக்கமுன் பார்க்க வேண்டும் என்று வந்த முஸ்லிம் நண்பர்களின் கூட்டம்.... இன்று பாய் பாருங்கள் ஈ விரட்ட கூட ஆள் இல்லை.... எனக்கு கந்தசாமி சரியான மொக்கைசாமி.....

sungunam said...

hello mr..

cover-la evlo pottu koduthaanga? puriyalaiya.. vaanguna kaasukku vanjanai illama ezhuthi irukeer!

vazhga umathu thondu.

(i know u never apporove this comment. thanks)

எழில் said...

அருமை அருமை தாணுவின் கண்ணீரை துடைக்கிறீர்..

அமர பாரதி said...

சரியாச் சொன்னீங்க. எனக்கு படம் பிடித்திருந்தது. நான் 15 டாலர் கொடுத்துப் பார்த்தேன். எனக்கு கொடுத்த காசுக்கு கிடைத்த என்டெர்டெயின்மென்ட் நன்றாக இருந்தது. ஜெட் லீ யும் ஜாக்கி சானும் பறந்தால் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பவர்கள் விக்ரம் பறந்தால் கான்டாகி விடுகிறார்கள். குறைந்த பட்சம் படத்தப் பழிப்பவர்கள் எதை எதிர்பார்த்து ஏமாந்தார்கள் என்றாவது சொன்னால் நல்லது.

Srinivas said...

//sungunam கூறியது...

(i know u never apporove this comment. thanks)
//

Comment Approve pannittaanga....ippa enna solreenga????

Sondha selavula Sooniyama???

--

Naan innum padam Paakala...Dis weekend kandippa paappen....But, Yenakku indha padam kandippa pidikum....dis one is the 1st good review for Kandasaamy:)

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் கூறியது...
நானும் உங்கள் கட்சிதான் நண்பரே! எனக்கும் படம் பிடித்து இருந்தது, நான் கண்டியில் மாபெரும் சனக்கூட்டத்திற்கு மத்தியில் பார்த்தேன், அநேகமாக எல்லாரும் இரசித்து பார்த்தனர். எனக்கும் ஏன் இதை எல்லாரும் சரியில்லை என கூறுகின்றனர் என தெரியவில்லை. ஸ்பைடர்மேன் போன்ற படங்களை ரசிக்கும் நம்மட ஆட்கள் இந்த மாதிரி படங்களை சரியில்லை என ஒரே வார்த்தையில் கூறி பிரசாரம் செய்வார்கள், படங்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.

எனககும் கந்தசாமி நல்ல ஒரு எண்டர்டெயின்மன்ட் சாமி தான்

;=))உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.

SShathiesh-சதீஷ். said...

Statistics கூறியது...
hello யோ வாய்ஸ் .. நானும் கண்டியில் மாபெரும் சனக்கூட்டத்திற்கு மத்தியில் தான் படம் பார்த்தேன்.(6.30 show miss பண்ணி 10.30 show பார்த்தேன் )... அது இன்று நோன்பு பெருநாள் என்பதால் ஒரு மாததிற்குள் படத்தை தூக்கமுன் பார்க்க வேண்டும் என்று வந்த முஸ்லிம் நண்பர்களின் கூட்டம்.... இன்று பாய் பாருங்கள் ஈ விரட்ட கூட ஆள் இல்லை.... எனக்கு கந்தசாமி சரியான மொக்கைசாமி....

:==))உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.

SShathiesh-சதீஷ். said...

sungunam கூறியது...
hello mr..

cover-la evlo pottu koduthaanga? puriyalaiya.. vaanguna kaasukku vanjanai illama ezhuthi irukeer!

vazhga umathu thondu.

(i know u never apporove this comment. thanks)

:==))உண்மையை சொன்னால் எவ்வளவு கொடுத்தார்கள் என கேட்பது சகயம். நான் என் மனதுக்கு பட்டத்தை சொன்னேன். அதுசரி கந்தசாமியை நோன்டியாக்க யார் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார். உங்கள் கருத்தி வெளியிட மாட்டேன் என்ர்றேர்கள் வெளியிட்டு விட்டேன் இப்போ என்ன செய்யப்போகின்றீர்கள்.

SShathiesh-சதீஷ். said...

எழில் கூறியது...
அருமை அருமை தாணுவின் கண்ணீரை துடைக்கிறீர்.

:=))கண்ணா நான் உண்மையை சொன்னேன்.

SShathiesh-சதீஷ். said...

அமர பாரதி கூறியது...
சரியாச் சொன்னீங்க. எனக்கு படம் பிடித்திருந்தது. நான் 15 டாலர் கொடுத்துப் பார்த்தேன். எனக்கு கொடுத்த காசுக்கு கிடைத்த என்டெர்டெயின்மென்ட் நன்றாக இருந்தது. ஜெட் லீ யும் ஜாக்கி சானும் பறந்தால் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பவர்கள் விக்ரம் பறந்தால் கான்டாகி விடுகிறார்கள். குறைந்த பட்சம் படத்தப் பழிப்பவர்கள் எதை எதிர்பார்த்து ஏமாந்தார்கள் என்றாவது சொன்னால் நல்லது

;=))எம்மவருக்கு நம்மவர் செய்தால் தப்பு அடுத்தவர் செய்தால் பிரமிப்பு என்ன செய்வது. வருகைக்கு நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

Srinivas கூறியது...
//sungunam கூறியது...

(i know u never apporove this comment. thanks)
//

Comment Approve pannittaanga....ippa enna solreenga????

Sondha selavula Sooniyama???

--

Naan innum padam Paakala...Dis weekend kandippa paappen....But, Yenakku indha padam kandippa pidikum....dis one is the 1st good review for Kandasaamy:)

;=))
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive