கிரிக்கெட்டின் வடிவம் மாறி எங்கேயோ போக ஆரம்பித்து விட்டது. பரபரப்பான அனல் பறக்கும் ஆட்டங்களால் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தான் ஆபத்து இருந்து வந்தது. இப்போது அவை 50 ஓவர் போட்டிகளின் அஸ்தமனத்துக்கும் காரணமாக அமைந்து விட்டதுவோ என எண்ணத்தோன்றுகின்றது.
2011ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கிண்ண தொடரோடு ஓவர் போட்டிகளை தொடர்ந்து விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை ஐ.சி.சி முடிவு செய்யும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தனது 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் சீசனில் இருந்து 50 ஓவர் போட்டிகளை விலக்கியும் இருக்கிறது.
40 ஓவர்கள் கொண்ட புரோ 40- போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகள் மட்டுமே இப்போது இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அது எப்படி இருப்பினும் இங்கிலாந்து அணி ஓவர் போட்டிகளில் சர்வதேச அளவில் பங்கு பற்றும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் கிரிக்கெட்டின் மூன்று பிரதான வகைகளும் அழியாமல் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே ஆரோக்கியமாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா.?
5 கருத்துரைகள்:
காலத்துடன் கூர்ப்படைவதுதான் எல்லாவற்றுக்கும் பொதுவான விதி சதிஸ்! இப்போது மனிதர்களுக்கு நெரமின்மையால்தான் இந்த பிரச்சனை.. குறுகிய நேரமெடுக்கும் விளையாட்டுக்கள் மார்க்கெட்டை பிடிக்கிறன.. அதற்கு ஏவாக கிரிக்கட்டும் தன்னை மாற்றிக்கொள்கிறது.. நாமெல்லாம் ஒரு பத்து ஓவரே குந்தியிருந்து பார்ப்பது கடினம்.. இதற்குள் 50 ஓவர் டெஸ்ட் மச்செல்லாம் ஓவர்..
ஆனால் பெண்கள் விளையாடும் கிரிக்கட்டை 100 ஓவராயிருந்தாலும் அசையாமலிருந்து பார்க் நான் ரெடி.. ;)
ஷேன் வார்ன்னும் ஒரு நாள் க்ரிக்கெட் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட் அதன் வசீகரத்தை இழந்து வருகிறது 20-20 வருகைக்குப் பின்.
எனவே அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
yellam T20 vanthalala vanthA Vinaai..
கிரிக்கெட்டின்; துயரமே அதிக நேரம் தான் எனவே ஓவர் குறைக்கப்பட்டால் நன்று. வேகமான உலகில் வேகமான விளையாட்டுக்களுக்கு தான் வரவேற்பு இருக்கும்.
ஆனால் பெண்கள் விளையாடும் கிரிக்கட்டை 100 ஓவராயிருந்தாலும் அசையாமலிருந்து பார்க் நான் ரெடி.. ;)
புல்லட்டின் இந்த கருத்தை ஏற்று கொள்கிறேன்.
ஆனாலும் கிரிக்கட்டின் வசீகரம் இன்னும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில்தான் இருக்கிறது. 20-20 பொழுது போக்குக்கு சரி. ஆனாலும் ரசித்து பார்க்க இன்னும் சிறந்தது டெஸ்ட் போட்டிதான்
Post a Comment