அவுஸ்திரேலிய அரசாங்கம் தான் இப்போது இந்த அரிய முயற்சியில் இறங்கி உள்ளது. களத்துக்கு நேரடியாக மனித இராணுவ வீரர்களை ஆப்பாது ரோபோக்களை அனுப்பி விட்டு ரிமோட் மூலம் ஓரிடத்தில் இருந்தவண்ணம் அவற்றை கட்டுப்படுத்தி போர் செய்ய வைக்கும் புதிய முயற்சியில் துணிந்து இறங்கி இருக்கின்றார்கள். அவுஸ்திரேலிய அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு இந்த விடயத்துக்கு தன அமோக ஆதரவை வழங்கி இருக்கின்றது.
இந்த முயற்சியில் ஈடுபடும் விதமாக பலரை தூண்ட ஒரு போட்டியையும் ஒழுங்கு செய்துள்ளது. அதில் வெற்றி பெறுபவருக்கு பத்து லட்சம் டாலர் பணத்தொகை வழங்கப்படவுள்ளது. அடுத்தவருடம் பிரிச்பெர்னில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கு முன் உங்கள் ஆலோசனைகளை நீங்கள் அனுப்பி வைத்தால் நீங்களும் வெற்றியாளராக மாறலாம். ஆனால் உங்கள் ஆலோசனை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு இராணுவ மையத்தில் வைத்து உங்கள் ஆலோசனையை நீங்களே செயற்ப்படுத்திக்காட்ட வேண்டும். அங்கே இருக்கும் குழுவினர் உங்களை பரீட்சித்து சிறந்த ஐந்து ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள இருக்கின்றனராம்.
மொத்தத்தில் போர் ஓயனும் என்னும் நிலைப்பாடு தீராது போல் இருக்கின்றது. இதுவரை காலமும் தனக்குள்ளேயே சண்டை இடு வந்த மனித இனம் இனிவரும் காலங்களில் இயந்திரத்தை வைத்தே தன்னை அளிக்கப்போகின்றது. ஒருவேளை ரோபோக்கள் அதிசக்தி வந்து தாமாகவே இயங்கும் நிலைக்கு வந்து மனிதரை அளித்தாலும் ஆச்சரியமில்லை.
4 கருத்துரைகள்:
ஐரோபோட் .. டமினேட்டர்.. மட்றிக்ஸ் போன்ற படங்கள் உந்தக்கருத்தை வைத்துத்தான் எடுத்தார்கள்.. இப்ப மனுசரிடமே இரக்கம் இல்லை.. பிறகெப்படி இயந்திரங்களிடம் எதிர்பார்க்கலாம்.. யூடியுப்பில் நிறைய கொலை வீடிுயோ பார்க்கலாம்.. :)
naa topcica parthaudan Japan yendru ninaithein........
மனிதர்களின் கொலைவெறி போதாமல் இது வேறையா. மனிதனை மனிதன் அழிப்பது போதாது என்று இப்போ ரோபோவும் அளிக்கப் போகுதா.
இதனை அமெரிக்காவும் ஆப்கான்,ஈராக் போர்களில் பயன்படுத்தி வருகின்றது. தற்போது பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் ரோபோ விமானங்கள் மூலம் குண்டுபோட்டுவருகின்றது.
www.aliaalif.tk
Post a Comment