அப்பாடா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கிரிக்கெட் பதிவு. ஏனோ தெரியல தொடர்ந்து கிரிக்கெட் பற்றி எழுத சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது. இப்போது எல்லாம் கைகூடி வந்திருக்கின்றது. அதேபோல இந்த பதிவிலுள்ள விடயமும் கனிந்தால் நல்லதே.
கிரிக்கெட்டில் பல புதிய பரிமாணங்கள் வந்துவிட்டது. T20யினால் உலகமே கட்டுப்பட்டு கிடக்கின்றது. ஆனால் அதற்கு கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்பாக நடக்கும் டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் இதைப் பற்றி பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். சிலர் டெஸ்ட் போட்டிகளை கைவிடலாம் என்று கூட சொன்னனர். ஆனால் கிரிக்கெட்டின் தாய் போல இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டினை அழிய விட எந்த கிரிக்கெட்டை நேசிக்கும் நபரும் தயாரில்லை. இந்திய அணியின் நட்சத்திரமும் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரருமான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளை காப்பாற்ற நல்ல ஒரு யோசனையை சொல்லி இருக்கின்றார். இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால் டெஸ்ட் போட்டிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாது.
ஐந்து வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். முதன் முதலாக ஒரு டெஸ்ட் கிரிகெட் போட்டியை நான் பார்க்கும் போது என் வயது பத்து. எனக்கு இன்றும் நினைவிருக்கின்றது அது இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி. இதிலிருந்து என்ன தெரிகின்றது? குழந்தைகள் மனதில் ஒரு விடயம் பதிந்து விட்டால் இலகுவில் அதை மறக்க முடியாது. அதேபோல நாங்கள் ஒரு விடயத்துக்கு குழந்தைகளை அழைத்தால் அது அவர்கள் மனதில் இலகுவாக படிந்து விடும். அதன் பின் யாராலும் அதை அளிக்க முடியாது. அந்த வகையில் பாடசாலை மாணவர்களை வார இறுதி நாட்களில் இலவச டிக்கெட் கொடுத்து போட்டிகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்படி பார்க்கும் நூறில் பத்துபேருக்காவது டெஸ்ட் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டால் அதுவே டெஸ்டின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகி விடும் என்கின்றார் அவர். பொறுத்து இருந்து பார்க்கலாம் இதை தொடர்ந்து மற்ற பிரபலங்கள் இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் அல்லது இது நடைமுறைக்கு வருமா என்பதை.
6 கருத்துரைகள்:
எப்படியோ டிக்கட் எடுப்பதற்கு நல்ல ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க சதீஷ்... (லொள்.....)
சச்சின் ஐடியா என்னமோ நல்லாத் தான் இருக்குது....
வாழ்த்துக்கள்....
இதுக்கு அவரு ஒரு விளம்பரத்தில நடிக்கிற காச கொடுத்தா பரவாயில்லை. ஆனா செய்ய மாட்டாரு இல்ல
சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
எப்படியோ டிக்கட் எடுப்பதற்கு நல்ல ஒரு விளம்பரம் கொடுத்துட்டீங்க சதீஷ்... (லொள்.....)
சச்சின் ஐடியா என்னமோ நல்லாத் தான் இருக்குது....
வாழ்த்துக்கள்...
கேட்டாவது செய்வாங்களா பார்ப்போம்....
யோ வாய்ஸ் கூறியது...
இதுக்கு அவரு ஒரு விளம்பரத்தில நடிக்கிற காச கொடுத்தா பரவாயில்லை. ஆனா செய்ய மாட்டாரு இல்
நீங்கள் கேட்டது சரியே ஆனால் பணத்தினால் செய்வதை விட இது நல்லதுதானே. நன்றி.
நடைமுறைக்கு வருமா???????????????????????????????????????????????????
Nimalesh கூறியது...
நடைமுறைக்கு வருமா???????????????????????????????????????????????????
வந்தால் நல்லமே??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????/
Post a Comment