Wednesday, September 2, 2009

காங்கிரசுடன் அரசியல் சாத்தியமில்லை-விஜயின் அரசியல் நாடகம்.



இளைய தளபதி, இந்த பெயரை எத்தனை பேர் என்ன மட்டம் தட்டினாலும். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டு அரசியலை மட்டுமல்ல இன்று பல நாடுகளில் வாழும் தமிழர்களின் நாடித்துடிப்பை தூண்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றார் விஜய். இந்த சந்திப்புக்களும் அரசியல் நகர்வுகளும் சாத்தியாமா? ராகுலுடனான சந்திப்பு, அதன் பின்னரான கருத்துக்களை வைத்துப் பார்த்தால் இது சாத்தியாமா? இல்லை.



விஜய்க்கும் ராகுலுக்கும் இடையான சந்திப்பு சாதாரணமானதாக அமைந்ததா இல்லையா தெரியாது. ஆனால் அங்கே பேசப்பட்ட விடயங்களை வைத்துப்பார்த்தால் விஜய் அரசியலுக்கு வரமுதலே அரசியல் செய்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது. விஜயின் தந்தை விஜயை சினிமாவிற்கு கொண்டுவந்ததே அரசியலில் சினிமா மாயையில் இறக்கி பார்க்கத்தானோ என்பது இப்போது வெளிப்படையான கேள்வி. விஜயை பற்றி ராகுலிடம் கொடுக்கப்பட்டதில் மிக முக்கியமான விடயம் ரஜினியை அடுத்து தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஒரே நடிகர் விஜய் என்பதே. அதை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டின் இளைஞர்களை தம் வசம் ஈர்த்துவிடலாம் என எண்ணுகின்றது காங்கிரஸ். இது சாத்தியமற்ற ஒரு விடயம்.



அதேபோல எடுத்த எடுப்பிலேயே விஜய் காங்கிரசின் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான இளைஞர் அணி பொறுப்பை கேட்டிருக்கின்றார். இது நிச்சயமாக சாத்தியமற்ற ஒரு விடயம், காரணம் தமிழ் நாட்டு காங்கிரஸ் எப்படி கோஷ்டிகளால் பிளவுபட்டு நிற்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படி இருக்கையில் விஜய்க்கு இந்த பதவியை கொடுக்க உள்ளுக்குள் இருக்கும் பெரிய தலைகளே இடமளிக்கப்போவதில்லை. பதவிக்கு ஆமாம் என தலை ஆட்டி விட்டு இப்போது
மறுத்தால் விஜய் காங்கிரசில் இணையப்போவது சாத்தியமுமில்லை.


அதேநேரத்தில் இந்த சந்திப்பின் பொது ராகுல் அதிகமாக விஜயகாந்தை பற்றி பேசியதாகவும் அப்போது விஜயின் முகம்
கறுத்ததாகவும் செய்திகள் வருகின்றன. காங்கிரசை பொறுத்தவரை தமிழ் நாட்டில் ஓரளவிற்கு தன பலத்தை நிரூபித்து விட்ட விஜயகாந்துடன் எப்பிடியாவது கூட்டு சேரவேண்டும் என்ற கனவில் காய் நகர்த்தி வருகின்றது. அப்படி ஒரு எண்ணத்தில் காய் நகர்த்தப்படும் போது அங்கே விஜயை விட விஜயகாந்த் முன் நிலை பெறுவார், இதை விஜயோ அவரின் ரசிகர்களோ ஏறுக்கொள்ள தயாரில்லை. எனவே விஜய் அரசியல் அனாதையாகும் நிலை ஏற்படலாம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,ஜி.கே.வாசன் போன்ற காங்கிரசின் முக்கிய தலைகள் தளபதியை விட கேப்டனை அதிகம் விரும்புகின்றனர்.விஜய் காங்கிரசுக்குள் வரும் போது நிச்சயமாக பெருந்தலைகளிடம் இருந்து எதிர்ப்பு வரும் என இந்த தலைகள் சொல்லி இருக்கின்றன. இது ராகுலின் காதுகளுக்கும் போயிருக்கின்றது. விஜய் என்னும் ஒருவருக்காக என்னதான் வெட்டிக்கொத்தினாலும் கூடவே இருந்து கட்சியை வளர்த்தவர்களை இழக்க ராகுலும் தயாராகமாட்டார்.(விஜய் இப்போது தன் ரசிகர்களை இழக்க துணிந்தது போல) விஜயை வைத்து விஜயகாந்தை இழுக்கும் முயற்சியை தான் காங்கிரஸ் செய்திருகின்றதோ என்னும் சந்தேகம் எழாமல் இல்லை. அப்படி இருப்பினும் அது விஜயை பொறுத்தவரை அவமானமான ஒரு செயலே.



தமிழக காங்கிரசை பொறுத்தவரை இளைஞர்களை திரட்ட விஜயை விட்டால் யாரும் இல்லை என்னும் நிலை உண்டு என்பதை நாராயணசாமி சொல்லி வருகின்றார்.அதேநேரம் தனது மகனை தளபதியாக்கும் கனவில் இருக்கும் ப.சிதம்பரம் இளைய தளபதியின் வருகை உதவாது என ராகுலிடம் சொல்லி வருகின்றார். இப்படி காங்கிரசிலேயே விஜயை சேர்ப்பதா வேண்டாமா என இரண்டு குழுக்களாக பிரிந்து கருத்து சொல்வதை பார்த்தால் விஜயை சேர்த்தால் நிச்சயம் காங்கிரஸ் இரண்டு
படும் என்பது உண்மையே. இதை ஏற்க ராகுல் தயாரில்லை எனவே அனேகமாக இந்த அரசியல் நாடகம் இத்துடன் முடிவுக்கு வரவே வாய்ப்புள்ளது. அதேநேரம் விஜய் காங்கிரசுடன் சேர்வதற்கு இலங்கை,புலம்பெயர் தமிழர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியில் இருந்துவரும் இந்த எதிர்ப்பு விஜயின் தமிழ் நாட்டு ரசிகனின் மனதிலும் இருக்காது என்பது சொல்லமுடியாது. எனவே விஜய் தமிழ் நாட்டில் இருக்கும் தன் ரசிகன் ஒருவரை கூட இழக்கலாம்.



அதேநேரம் சினிமா கவர்ச்சியை வைத்துக்கொண்டே
விஜயால் அரசியல் செய்ய முடியும் அப்படி இருக்கும் போது அவர் படங்களை எதிர்ப்போம் என பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில் விஜயும் சிந்திக்காமல் முடிவெடுக்கமாட்டார். இவ்வளவு காலமும் ஆறிலிருந்து அறுபதுவரை சேர்த்த ரசிகர்களை இழந்து யாரை வைத்து அவரால் அரசியல் செய்யமுடியும். இறுதியில் அரசியலிலும் நடுக்கடலில் மாலுமி இன்றி தவிக்கும் கப்பலின் நிலை தான் விஜய்க்கு வரும் என்பதை அவரும் உணரமாட்டாரா என்ன? இவை எல்லாவற்றையும் மீறி இரண்டு பேரும் ஒன்றாவது என்னை பொறுத்தவரை பகல் கனவே.


வேட்டைக்காரனை வெற்றிக்காரன் ஆக்கவேண்டும் என்பதற்காக அரசியலில் ஆழம் பார்க்கும் விஜய் விளையாட்டு வேட்டைக்காரனை வெந்தகாரன் ஆக்கினாலும் ஆச்சரியமில்லை. எனவே விஜய் சிந்திப்பார். அதையும் மீறி அவர் துணிந்தாலும் காங்கிரஸ் அவரை உள்ளீர்க்குமா என்பது கேள்வியே.
Share:

4 கருத்துரைகள்:

ILA (a) இளா said...

கண்டிப்பா, இந்தச் சந்திப்புல அரசியல் நோக்கமில்லை. எனக்கும் தெரியுது. ஆனா வேற என்னதான் பேசியிருப்பாங்க?

maruthamooran said...

சதீஸ்.....

தங்களின் இந்தப் பதிவுக்கு கருத்துரைக்க முனைந்தால் நான் புதிய பதிவொன்றை எழுதவேண்டி வரும். அதனால் இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டதற்கு என்னுடைய கருத்து..... ‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். சன் செய்திகளின் தலைப்புக்களிலேயே அனேக தடவைகள் அவைதானே இடம்பிடிக்கின்றன) தங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்.... தாங்கள் தளபதியின் பரம விசிறி என்று நண்பர் வந்தி சொன்னார்.

யோ வொய்ஸ் (யோகா) said...

மருதமூரான். கூறியது...

சதீஸ்.....

தங்களின் இந்தப் பதிவுக்கு கருத்துரைக்க முனைந்தால் நான் புதிய பதிவொன்றை எழுதவேண்டி வரும். அதனால் இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டதற்கு என்னுடைய கருத்து..... ‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். சன் செய்திகளின் தலைப்புக்களிலேயே அனேக தடவைகள் அவைதானே இடம்பிடிக்கின்றன) தங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்.... தாங்கள் தளபதியின் பரம விசிறி என்று நண்பர் வந்தி சொன்னார்.//

ரிப்பீட்டு

Unknown said...

//‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். //

ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.

எனக்குத் தெரிந்தவரை வேட்டைக்காரனை வேட்டையயாடுபவனாக மாற்றுவதற்காகத் தான் அரசியல் பிரவேசம் பற்றிய கருத்துக்களைச் சொல்லி உசுப்பேற்றப் பார்க்கிறார்கள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive