Sunday, September 13, 2009

விஜய் மனசு யாருக்கு வரும்?- வறுத்தெடுத்த பிரபலம்.



தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிக்க வரக்காரணமே நடிகர்கள் தான் என்பதை இயக்குனர்கள் சாட்டாக சொல்லி வந்தாலும் உண்மையும் அதுவே. அப்படி வரும் இயக்குனர்களில் ஒரு சிலர் நடிகர்களையே மிரள வைப்பதும் சிலர் மிரண்டு போவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

திமிரு என்னும் பிரமாண்டமான வெற்றித் திரைப்படத்தை கொடுத்த திமிரான இயக்குனர் தருண்கோபி இந்த வகையில் நடிகராக அவதாரம் எடுத்தார். விஷால், சிம்புவுடன் அடிதடி என அக்சன் ஹீரோவிற்கு உரிய அந்தஸ்து தனக்கு இருக்கின்றது என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்தவர். பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் முக்கியமானவர் இவர். நடிகராக தன் முதல் படத்திலேயே அசத்தி விட்டார். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றாலும் பெரிதாக யாரும் அந்த படத்தை கண்டு கொள்ளவில்லை என்பது என்னவோ உண்மைதான்.

இந்த நிலையில் நந்தி பட விழாவில் பேசிய தருண்கோபி, நடிகர்களை தாளித்து எடுத்து விட்டார். நடிகர்கள் சிலரின் நடவடிக்கையால் தான் நான் நடிக்க வந்தேன் என வழக்கமான புராணம் பாடியவர், மாயாண்டி குடும்பத்தை எந்த ஒரு நடிகரும் பாராட்டவில்லையே என்ற ஆதங்கத்தை கொட்டினார். அதேபோல பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை ஒரு சில நடிகர்கள் செய்த வேலையை சொல்ல எனக்கே பிடிக்கவில்லை என சொல்லி, விட்டார் பாருங்கள் ஒரு இடைவேளை. தொடர்ந்து பேசியவர், அண்மையில் தான் வேட்டைக்காரன் படப்பிடிப்பிற்கு சென்றதாகவும் அங்கே விஜயை சந்தித்ததாகவும் சொன்னவர், விஜய் தன்னை பார்த்ததுமே கலக்கிறிண்ணா உங்க படம்தான் இப்போ டாப் போல என பாராட்டினார் அவரோட நல்ல மனசு யாருக்கு வரும் அவரைப்போல மற்ற கதாநாயகர்களின் மனமும் இருந்து விட்டால் நாங்கள் ஏன் நடிக்க வருகின்றோம்? வரவே மாடோம் என கொட்டித் தீர்த்து விட்டார்.




தருண்கோபி சொன்னதில் உண்மை இல்லாமலும் இல்லை. இது தனியே நடிகர்களுக்குள் மட்டுமன்றி சினிமாவின் பல துறைகளிலும் ஊடுருவி இருப்பது வேதனையே. சாதித்தவர்கள் புதிதாக சாதித்தவர்களை ஊக்கப்படுத்தினால் தானே புதியவர்கள் பலர் வருவார்கள் என்பதை தெரியாதவர்களா என்ன?
Share:

10 கருத்துரைகள்:

manjoorraja said...

கதைக்கு பொருத்தமாக இருந்தால் யாரும் நடிக்கலாம் தவறேயில்லை. ஆனால் அதே நேரத்தில் சில பொருத்தமில்லாத பாத்திரங்களில் (சேரனை போல) நடித்து கையை சுட்டுக்கொள்ளவும் வேண்டாம். பாரதிராஜா தன் மகனை வைத்து எடுத்ததும் இப்படியே.

புல்லட் said...

வெகுளி நெஞ்சன் விஜய் வாழ்க.. இவருடைய இந்த செயலுகடகாகவே வேட்டைக்காரன் பார்க்கும் தியாகத்தை செய்யவுள்ளேன்..

Admin said...

என்ன சதீஸ் நீங்களும் சினிமாத்துறையில நுளையப்போறதா நம்ம அசின் சொன்னவங்க இது உண்மையா

Nimalesh said...

nalla vishayam pa vijay seithirukaru......

கார்த்தி said...

I know you are one of Vijay's fans..
That's why you are posting this kind of Post!!!! :D

SShathiesh-சதீஷ். said...

மஞ்சூர் ராசா கூறியது...
கதைக்கு பொருத்தமாக இருந்தால் யாரும் நடிக்கலாம் தவறேயில்லை. ஆனால் அதே நேரத்தில் சில பொருத்தமில்லாத பாத்திரங்களில் (சேரனை போல) நடித்து கையை சுட்டுக்கொள்ளவும் வேண்டாம். பாரதிராஜா தன் மகனை வைத்து எடுத்ததும் இப்படியே

=>>
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

புல்லட் கூறியது...
வெகுளி நெஞ்சன் விஜய் வாழ்க.. இவருடைய இந்த செயலுகடகாகவே வேட்டைக்காரன் பார்க்கும் தியாகத்தை செய்யவுள்ளேன்.

=>>
உங்கள் தியாகம் தேவை இல்லை. இளைய தலைவலியை மன்னிக்கவும் தளபதியை வெகுளி நெஞ்சம் என்னும் உங்கள் நெஞ்சு கல்நெஞ்சு....

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
என்ன சதீஸ் நீங்களும் சினிமாத்துறையில நுளையப்போறதா நம்ம அசின் சொன்னவங்க இது உண்மையா

=>>

ஸ்ரேயா சமீராவை தொடர்ந்தது அசினும் இப்போ என்னை பற்றி தானா பேசிறாங்க முடியல... எத்தனி பேரைத்தான் ஒரே நேரம் சமாளிக்கிறது..

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
nalla vishayam pa vijay seithirukaru......

=>>
ம வாழ்த்துக்கள் அவருக்கு நன்றிகள் உங்களுக்கு

SShathiesh-சதீஷ். said...

கார்த்தி கூறியது...
I know you are one of Vijay's fans..
That's why you are posting this kind of Post!!!! :D

=>>

நான் விஜய் ரசிகர் என்பது உண்மைதான் அதற்காக யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். அதுதானே அழகு.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive