தொடர் விளையாட்டின் அடுத்த திடலுக்கு நண்பர் க.கோபிகிரிஷ்னா என்னை அழைத்திருக்கின்றார்(http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.html). தேவதையை கண்டால் நீங்கள் கேட்கும் பத்து வரங்கள் என்ன என சொல்ல சொல்லி விட்டீர்கள் பலர். எல்லோரும் தங்களுக்கு தேவையான பல வரங்களை கேட்கின்றனர்.
அன்றும் இதேபோலத்தான் நான் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். இரவு ஒருமணி இருக்கும் மல்லிகைப்பூ வாசனை, சலங்கை ஒலி, ஜன்னல் எல்லாம் படபடக்க ஒரு உருவம் மேலே இருந்து என்னை நோக்கி வருகிறது. ஐயோ அம்மா என பயந்தபடி அதையே பார்த்துகொண்டிருந்தேன். அந்த உருவம் என்னை நோக்கித்தான் வருகிறது என தெரிந்து கையால் கண்களை மூடிவிட்டேன்.
கிட்ட வந்த உருவமும் என்னை பெயர் சொல்லி அழைத்தது. நான் கண்களை திறக்கவில்லை. பதிலும் பேசவில்லை. ஆனால் நல்லா வாசனை மாத்திரம் வந்தது. ஒருவேளை பேய்கள் எல்லாம் இப்போ வாசனை திரவியம் பாவிக்கின்றனவோ என நினைத்து விட்டேன். (இது நான் எந்த பெண்களையும் சொல்லவில்லை மேக் அப போடும் பெண்கள் பேய்களுக்கும் மேல்.....) மெதுவாக என் கையை ஒரு மெல்லிய கரம் பற்றி என் கண்ணில் இருந்த கையை எடுத்தது. அந்த கரம் என்னை பற்றும் போது என ஒரு புத்துணர்ச்சி என்ன ஒரு ஆனந்தம். ஆனால் ஏற்கனவே இந்த உருவம் வானில் இருந்து வந்ததை நினைத்து பயந்து போய் இருந்த நான் சட்டென அந்த உருவத்தை பார்த்துவிட்டு ஓட ஆரம்பித்து ஒருகால் வைத்திருப்பேன். அங்காலே என்னால் ஓடமுடியவில்லை. காரணாம் நான் பார்த்தது பேய் அல்ல அப்படி ஒரு அழகிய தேவதையை.
அதற்கு பிறகுதான் எனக்கு நிம்மதி. வந்த தேவதையோ நான் உன்னை அழைத்தபோது நீ பதிலளித்திருந்தால் உனக்கு பத்து வரங்கள் தந்திருப்பேன். அல்லது நான் உன் கரங்களை பற்றியபோதே என்னை பார்த்திருந்தால் உனக்கு ஐந்து வரங்கள் தந்திருப்பேன். கேவலம் பூலோகத்தில் உள்ள மேக் அப போடும் சில பெண்களை பார்த்து ஆண்கள் அலறி அடித்து ஓடுவதுபோல என்னை பார்த்து ஓடியதால் உனக்கு ஒரே ஒரு வரம் மாத்திரமே கிடைக்கும் என குண்டை தூக்கி போட்டது. அப்போ தான் உங்கள் எல்லோரையும் திட்டினேன். அடப்பாவிகளா இந்த தேவதை இப்படிதான் வரும் என யாராவது சொல்லி இருக்கலாமே. நீங்கெல்லாம் பத்து வரம் வாங்குவிங்க எனக்கு ஒன்றா என திட்டினேன்.
ஆனால் நான் என்ன முட்டாளா?(ஆமாம் என பதில் சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.) தேவைதையே எனக்கு மற்றவர்கள் போல பத்துவரங்கள் வேண்டாம் ஒன்றே போதும். உன் தண்டனைக்கு கட்டு படுகின்றேன் என நானும் கூற தேவதையும் என்னை ஆச்சரியமாக பார்த்தது. சரி உனக்கு ஒருவரம் போதுமா என்ன வேண்டும் என கேட்க பெரிதாக ஒன்றுமில்லை நான் எப்போது என்ன நினைத்தாலும் அவை எல்லாம் நடக்கவேண்டும் அதுவே எனக்கு போதும் என கேட்க தேவதையும் தட்ட முடியாமல் எனக்கு அந்த வரத்தை கொடுத்து விட்டு பறந்து போய்விட்டது.
இப்போது நான் இவர்களும் இந்த தேவதையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றேன்.
லோஷன் அண்ணா -லோஷனின் களம். loshan-loshan.blogspot.com/
அருண்பிரசாத் http://aprasadh.blogspot.com
sumaazla-என் எழுத்து இகழேல். http://sumazla.blogspot.com
பி.கு: மன்னிக்கவும். இதே தலைப்பில் சுபானுவும் என்னை அழைத்திருந்தார். அதை நான் கவனிக்கவில்லை. என்னை தேவதையை சந்திக்க வைத்த சுபானுவிர்க்கும் நன்றிகள்.
6 கருத்துரைகள்:
//நான் எப்போது என்ன நினைத்தாலும் அவை எல்லாம் நடக்கவேண்டும் அதுவே எனக்கு போதும் //
நீங்கள் நினைத்தது எல்லாம் நடந்துச்சா?
முடியல எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.
உங்க தலைவர் பாட்டு வந்துருக்கு கேட்டீங்களா?
தெய்வமே...
நீங்க எங்கயோ போய்ற்றீங்க...
//கேவலம் பூலோகத்தில் உள்ள மேக் அப போடும் சில பெண்களை பார்த்து ஆண்கள் அலறி அடித்து ஓடுவதுபோல என்னை பார்த்து ஓடியதால் உனக்கு ஒரே ஒரு வரம் மாத்திரமே கிடைக்கும் என குண்டை தூக்கி போட்டது //
பூலோகப் பெண்களை இழிவாகப் பேசிய தேவதையை அகில உலக ஆண்கள் சங்கத்தின் பெண்கள் பிரிவு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்...
இப்படி எல்லாமா வரம் கேட்ப்பாங்க. நீனக் கில்லாடி தான் சதீஸ்.....
எனக்கொரு வரம் தருவாளாயின், முந்திய சதீஸின் பதிவில் நானிட்ட பின்னூட்டத்தை வெளியிடுமாறு கேட்கத் தவற மாட்டேன்
// நான் எப்போது என்ன நினைத்தாலும் அவை எல்லாம் நடக்கவேண்டும் அதுவே எனக்கு போதும் //
அர்ரா சக்க.. வைச்சான் பாரு ஆப்பு தேவதைக்கே.. பலேபுத்திசாலிதான் என்னடா.. பாவம் தேவதை.. ( நல்லகாலம் தேவதைமேல் ஆசைப்படாமல் விட்டீங்களே... )
நல்லாயிருக்கு..
Post a Comment