ரஜினியின் மகள் சவுந்தரியாவுக்கு இது போதாத காலம். சொந்த காலில் தான் நிற்பேன் என்று தம் கட்டியவர் இப்போது தள்ளாடிப்போய் நிற்கின்றார். கோவா திரைப்படத்தை தயாரித்தவருக்கு இப்போது அந்த படத்தின் வாயிலாகவே பிரச்சனை வந்திருக்கின்றது. அப்போதும் தளராமல் இருக்கின்றார். அத்துடன் அடுத்து வந்திருக்கும் செய்தியும் அவருக்கு பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான்.
ஏறத்தாள அறுபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ரஜினியின் என விளம்பரப்படுத்தப்படும் சுல்தான் தி வாரியார் திரைப்படமும் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மிகப்பெரிய பரபரப்பு, பஞ்ச் வசனங்கள்,ரஜினியின் நேரடி ஆலோசனைகள் என வளர்ந்த படம் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இது தொடர்பாக சவுந்தர்யாவை தொடர்புகொள்ள முற்பட்டும் முடியாமல் போக ஆக்கர் ஸ்டுடியோவின் தலைவர் கார்த்திக் இது வெறும் பொய் மாத்திரமே என்று கூறி இருக்கின்றார். இது தொடர்பாக மேலும் துருவி கேட்டவர்களிடம் இந்த படம் 2007இல் தொடங்கப்பட்டது வார்னர் பிறதேர்ஸ் 2008இல் தான் தமிழ் படங்கள் மேல் கண் செலுத்த ஆரம்பித்தன. இப்படி இருக்கையில் வார்னர் பிரதேர்சுக்கும் இந்த படத்துக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என திருப்பிக் கேட்டிருக்கின்றார்.
கேள்விக்கு கேள்வி வந்திருந்தாலும் படம் வருமா என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கின்றது? பொறுத்திருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
3 கருத்துரைகள்:
//ரஜினியின் சுல்தான் தி வாரியார் வருமா?//
வரும்ம்ம்ம.... ஆனா வராராராது......
வரும் ஆனா வராது...........
வரும் ... வேட்டைக்காரன் மாதிரி தான் .. கொஞ்சம் பிந்தி... பிந்தி....
Post a Comment