பலர் பதிவு இட்டிட்டிங்க இதை பற்றி. இது என் நேரம். எதுக்கு என்று கேட்கிறிங்களா? நம் லோஷன் தாத்தாவுக்கு இன்று பிறந்த நாள் எனவே என் வாழ்த்தை சொல்ல வேண்டுமே. பொதுவாக யாராக இருப்பினும் நான் வாழ்த்து சொல்வது நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு. ஆனால் தாத்தாவை ஏன் குழப்புவான் என்று எண்ணியே மதியம் பன்னிரண்டு மணிக்கு அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்லிவிட்டு தான் இந்த பதிவை போடப்போகின்றேன். எல்லோரும் அவரை எப்படி ரசிக்கின்றனர் அவர் புகழ் என்ன எல்லாம் சொல்லிவிட்டார்கள். நான் ஒரு கவிதை(இதெல்லாமா என கேட்கப்படாது) மூலம் வாழ்த்து சொல்லலாமா என நினைத்து இதை படைகின்றேன்.
இந்த கவிதையில் பெரும்பாலான வரிகள் சாகித்திய விருது பெற்று அவர் வரும் போது வெற்றியில் நாங்கள் செய்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக எழுதியது. அப்படியே அந்தக்கவிதையை போடலாம் என்றால் என்னிடம் அது இல்லை. எனவே நினைவில் இருக்கும் வரிகளோடு இப்போது தோன்றும் வரிகளையும் கோர்த்து எழுதுகின்றேன்.
இணுவில் ஈன்றெடுத்த இனிய தமிழா- நேயர்
இதயங்களில் வாழும் வாம லோசா
வானலை வழியே வாசல்கள் வந்தீர்
வாழும் காலத்திலேயே வாய்ஸ்(குரல்)சால் சாதனை படைத்தீர்.
சக்தியுள்ள சூரியனாய் நீர் உதித்து - இன்று
வெற்றியோடு உலக வலம் வருகின்றீர்
விடியல் நாயகனே - இன்று
விருதுகளின் நாயகனும் நீரல்லோ
பதிவுலகம் பதிக்க வந்து - இன்று
பல உள்ளங்களை வென்று விட்டீர்
பஞ்சாமிர்தக் குரலோனே - இளம்
கன்னியரின் கனவானே(ம் இப்ப சந்தோசமா?)
தசாப்த நாயகனே - உங்கள்
சகாப்தத்தில் இருக்கின்றோம்
வாழ்த்தி மகிழ்கின்றோம் - உங்கள்
வரலாற்றில் இருக்கின்றோம் என்று.
வேருக்கு விழுது நன்றி சொன்னால் தானே வாழ்வில் பொருள் இருக்கும். வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துவதில் ஒரு மகிழ்ச்சி. வேலைக்காலத்தில் என் முகாமையாளர் சிர்ஷ்ட அறிவிப்பாளர் என்பதையும் மீறி (இதை நான் சொல்வதற்கு அண்ணா என்ன நினைக்கின்ராரோ தெரியாது என் மனதில் தோன்றுவதை சொல்கின்றேன்.) என் குருவாக ஒரு நல்ல வழிகாட்டியாக அண்ணாவா நண்பராக என்று வயது வேறுபாடின்றி வானொலித் துறையில் என்னை தட்டி வளர்த்த என் அருமை அண்ணாவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.
ட்ரீட் கேட்கும் நண்பர்களே நான் ட்ரீட் கேட்கமாட்டேன். காரணம் நான் ட்ரீட் கேட்க அவர் என்னிடம் ஒரு சீரியஸ் விசயம் சொன்னார் ஒரு இரண்டு வருஷம் என்னோட இருந்திட்டு நீ என்ன கேட்கின்றாய் இப்ப என்றார்? ஏன் அண்ணா ட்ரீட் கேட்கின்றேன் என்றேன். வாழ்த்த எடுத்தால் அதுக்கு பிறகு வேற ஒன்றும் கதைக்கப்படாது தெரியுமா என்றார். அப்பிடியே விட்டாலும் பரவாயில்லை. நான் என்டைக்காவது யாருக்கும் ட்ரீட் கொடுத்திருக்கேனா இல்லையே எல்லோரிடமும் ட்ரீட் கேட்கிரதுதான் நம்ம வேலை இதை நீ என்னிடம் இருந்து படிக்கலையா என்றார். இதுக்கும் பிறகும் கேட்கணுமா? இல்லை ட்ரீட் தான் வருமா? தாத்தாவின் உடல் எடை கூடிய காரணம் இப்பதான் தெரிகின்றது. இப்பிடி எல்லார ட்ரீட்டும் வாங்கி சாப்பிட்டா என்ன ஆகும்......
22 கருத்துரைகள்:
HAPPY BIRTH DAY LOSHAN
வாழ்த்துக்கள் லோஷனுக்கு ஆனாலும் ட்ரீட் ஹாஹாஹா இனி நாமளும் கடைப்பிடிக்கணும் எடை காட்டுவதற்கு மறுக்குது தராசு 60 KG க்கு மேல தானாம் காட்டுமாம்...
லோஷன் அண்ணாவை தாத்தா என்றழைத்த சதீஷ் அங்கிள் ஒழிக....
லோஷன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
ட்ரீட் விளக்கம்?
$%@%&$*@^#@^*
///லோஷன் அண்ணாவை தாத்தா என்றழைத்த சதீஷ் அங்கிள் ஒழிக....//
நானும் ஆமோதிக்கிறேன்..
சதீஷ் அங்கிள் ஒழிக...
இதையும் போய் பாருங்க
http://vatheesvarunan.blogspot.com/2010/06/blog-post.html
பொறாமையில் குழந்தை லோஷன் அவர்களை தாத்தா என்று அழைப்பதை கண்டிக்கிறேன்!
இறுதியாக சொன்ன விடயம் நான் ஆரம்பம் முதலே கடைப்பிடிப்பதுதான்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் வெற்றியின் நாயகன், தங்க குரலோன் Ragupathy Balasridharan Loshan Vaamalosanan அண்ணா அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
லோஷன் அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
லோஷன் அங்கிளை தாத்தா என்று அழைக்கும் சதீஷ் அங்கிளை கண்டிக்கிறேன்
லோஷனுக்கு வாழ்த்துக்கள் சதீஸ் கவிதை எல்லாம் எழுதுகின்றாய் பாராட்டுக்கள் ஹீஹீ
பஞ்சாமிர்தக் குரலோனே - இளம்
கன்னியரின் கனவானே(ம் இப்ப சந்தோசமா?)//
சதீஸ் கவிதை கலக்கல்! இந்த வரிகளைக் கேட்டதும் தாத்தா முறைப்பாரே..!
லோசனுக்கு வாழ்த்துக்கள். முழுக் கவிதையினையும் போட்டால் நன்றாக இருக்கும்.
உந்த தாத்தா அங்கிள் சர்ச்சைகளில் எல்லாம் நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.
இளைஞர்கள் இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
நன்றி சதீஷ் வாழ்த்துக்களுக்கு.
கலைஞர் எழுதும் கவிதை மாதிரி இருக்குடா.. ;)
அதுசரி தனியாக நாம் பேசிய தொலைபேசி உரையாடலை, அதுவும் ஏன் ராஜதந்திரத்தை வெளியே போட்டுடைததுக்காக உன்னை என்ன செய்யலாம் என யோசிக்கிறேன்.
@அத்திரி
வருகைக்கு நன்றி
@றமேஸ்-Ramesh
60 KG நீங்களா அல்லது ?????
@கன்கொன் || Kangon
உங்கள் எல்லோருக்கும் அவர் அண்ணாவாக இருக்கும் போது பச்சிளம் பாலகாணன் எனக்கு அவர் தாத்தா என்பதில் என்ன தப்பு.
@வதீஸ்
பார்த்தேன் கான்கொனுக்கு கொடுத்த பதில் தான் உங்களுக்கும்..அப்போ நீங்களும் எனக்கு அங்கில?
@Anuthinan
ஹீ ஹீ ஹீ வாழ்த்துக்கள்
@sivatharisan
வருகைக்கு நன்றி
@Subankan
வாழ்த்தியமைக்கு நன்றி
@யோ வொய்ஸ் (யோகா)
யோ அங்கிள் கான்கொனுக்கு கொடுத்த பதில் தான் தங்களுக்கும்...
@வந்தியத்தேவன்
கவிதை எழுதுகின்றேன் என்பதற்காய் காதலிக்கிறேன் என சொல்ல வாரியளா? ஹீ ஹீ நம்ம கிட்ட நடக்காது..ஏதோ மாமா நினைச்சார் நான் செய்தேன்..
@தமிழ் மதுரம்
முளுக்கவிதையும் போட்டுத்தான் இருக்கேன்..ஹீ ஹீ நீங்கள் முழுசாய் படிக்கலையா?
@LOSHAN
பிறந்தநாளில் போய் சொல்லக்கூடாது என்பார்கள் நீங்கள் சொல்லீட்டின்களே தாத்தா....
கலைஞரா? அவ்வ்வ்வ்வ்வ்வ் ஏதோ குத்து இருக்கிற மாதிரி இருக்கே...
அண்ணே ங்களுக்கு வாழ்த்து சொன்னதுக்கு கலைஞர் போல் கவிதை எழுதியதர்க்காய் பாராட்டு விழா இல்லையா?
Post a Comment