Sunday, February 28, 2010

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் விஜய்.?எம்.ஜி-ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் இந்த இணைக்கடுத்து எத்தனை பேர் வந்தாலும் பிரகாசித்தாலும் நாம் மறுக்கமுடியாமல் ஏற்கவேண்டிய இணை விஜய்-அஜித் இணைதான். இரண்டு திலகங்களும் ஒரு திரைப்படத்தில் மட்டும் இணைத்து நடித்தனர். அடுத்த இருவரும் பல படங்களில் நடித்தனர். திலகங்களை போல ஒரே படத்துடன் நிறுத்திவிட்டனர் தளபதியும் தலையும். இதற்கு காரணம் தான் எல்லோருக்கும் தெரியுமே. மீண்டும் இணையும் வாய்ப்பில்லை என இவர்கள் சொல்லியே விட்டனர். ஆனால் இப்போது மீண்டும் அதற்கு வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.(எல்லாம் ஆசைதான். இது நடக்காது என தெரியும்.)


இளையவர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் நால்வரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து நடிக்கதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் அஜித் சேர்ந்து நடித்தார் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது விஜயின் தந்தை என்பது மட்டுமில்லாமல் விஜயின் தாயார் தயாரித்த உணவை இருவரும் ஒரே தட்டில் உண்டகாலம் அது. அதன் பின் பார்த்தாலே பத்தும் நிலையில் இருந்தவர்கள் இப்போது தங்கள் மனைவியர் சமைத்த உணவுகளை (முன்பு தாயார்) பரிமாறிக்கொள்ளும் அளவு நட்பு இருக்கின்றது. படங்களிலும் ஒருவரை ஒருவர் சாடல் குறைந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் இணைவு. அதற்க்கு பிரமாண்டமாக தயாரிக்கும் இயக்குனர், நல்ல கதை, அள்ளிக்கொட்டும் தயாரிப்பாளர் ஜாம்பவான் கூட்டணி நிச்சயம் அமையவேண்டும். அது இப்போது அமைந்திருப்பது இவர்களை இணைக்காதா என்ற என் ஆசையை தூண்டி விட்டுள்ளது.


3இடியட்ஸ் எவ்வளவு பிரமாண்டமான வெற்றியை பெற்ற படம் என்பது உங்களுக்கு தெரியும்.அதேபோல அப்படி திரைப்படங்கள் வராதா என்ற ஆவலையும் தமிழர்களுக்கு தூண்டிய படம். ஏன் வராது இதோ தருகின்றோம் என விஜய் அதன் உரிமையை வாங்கியதாக ஒரு பேச்சு. இல்லை இல்லை ஜெமினி வாங்கி அதில் விஜயை நடிக்க வைக்க முயற்ச்சிபதாக கேள்வி. எதுவாய் இருப்பினும் இந்த முயற்சிக்கு பலன் வெகு தொலைவில் இல்லை. காரணம் விஜய்க்கும் இமாலய வெற்றி ஒன்று தேவைப்படுகின்றது.அப்படி இருக்கையில் அஜித்துடன் கூட்டு? பதில் கேள்விக்குறியாக இருந்தாலும் அஜித் இரண்டு கதாநாயகர்கள் உள்ள படங்களில் நடித்த இளம் நடிகர் என்பதை மறக்கக்கூடாது. விக்ரமுடன் உல்லாசம், பார்த்தீபனுடன் நீவருவாய் என,கார்த்திக்குடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரசாந்துடன் கல்லூரி வாசல், ரஞ்சிதோடு மைனர் மாப்பிள்ளை, சத்யராஜோடு பகைவன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் மம்முட்டி,அப்பாஸ், தீனாவில் சுரேஷ் கோபி,உன்னைக்கொடு என்னை தருவேனில் பார்த்தீபன்,சாம்ராட் அசோகாவில் ஷாருக்கான் என தொடர்ந்தவர் அண்மைக்காலமாக தான் கொஞ்சம் இந்த பாலிசியை விட்டிருக்கின்றார் சிலவேளை இந்த கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியமில்லை. நடக்குமா????


மூவரில் இருவர் ஏறக்குறைய உறுதியாகிவிடும் என நினைக்கின்றேன். அமீர்கான் வேடத்தில் விஜயும் மாதவன் நடித்த வேடத்தை தமிழிலும் அவரே செய்வார் என ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சாத்தியதுக்கான வாய்ப்புக்கள் உண்டு. காரணம் மாதவனுக்கு விஜய் மேல் அன்பும் அதே நேரம் மதிப்பும் அதிகம். ஒரு பெட்டியில் சொல்லி இருந்தார் விஜயை பார்க்க பொறாமையாக இருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு படம் நடிக்கின்றார் பெரிதாக மினக்கெடுவது இல்லை. அவரின் பெயரை வைத்தே படத்தி ஓட்டி விடுகின்றார். அவரை போல ஆடத்தெரிந்தால் நான் தமிழ் நாட்டின் நம்பர் வன் நாயகனாகிவிடுவேன் என்று. விஜய் பக்கம் பார்த்தால் மாதவனால் பிரச்சனை இல்லை. என்ற ரீதியில் இவர்கள் கூட்டணியில் விரிசல் சாத்தியமில்லை


அடுத்து சூர்யா. இப்போது தனி ஆவர்த்தனம் நடத்தினாலும் விஜயுடன் நேருக்கு நேரில் அறிமுகமானவர். அதன் பின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தது மட்டுமன்றி இருவரும் நல்ல நண்பர்கள் எனவே இந்த இணைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கின்றது. சூர்யாவை பொறுத்தவரை நடிப்பில் பின்னிவிடுவார் ஆனால் விஜய் தரப்பில் சூர்யாவேண்டாம் என்ற கதை எழும் வாய்ப்பு குறைவு காரணம் நட்பு. சூர்யாவும் காதலே நிம்மதியில் முரளி, பெரியன்னாவில் விஜயகாந்த், நந்தாவில் ராஜ்கிரண், மௌனம் பேசியதேயில் அறிமுகனாயகன் நந்தா, பிதாமகன் விக்ரம்,ஆயுத எழுத்தில் மாதவன் சித்தார்த் என கூட்டு சேர்ந்து கலக்கியவர் விஜயுடன் ஜோடி சேர்ந்தால் அமர்க்களம் தான். அனேகமாக இந்த ஜோடியின் வாய்ப்பே அதிகம்.

மறுபக்கம் விக்ரமும் விஜயும் எவ்வளவு நெருக்கம் என்பதும் ஊரறிந்ததே. இருவரும் ஒன்றாக ஜாலியாக பல விழாக்களில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் அரட்டைகளிலும் பங்குபற்றியவர்கள். அப்போதே சரியான வாய்ப்பமைந்தால் சேர்ந்து நடிக்க தயார் என சொன்னவர்கள் இப்போது வாய்ப்பமைந்திருக்கின்றது இணைவார்களா என எதிர்ப்பாக்கின்றேன்? விக்ரமை பொறுத்தவரை கூட யார் நடித்தாலும் பரவாயில்லை தூக்கிச் சாப்பிட்டு விடுவார்.
அவருக்கு ஒரு பலமான கதாபாத்திரம் போதும் வில்லனாக கூட நடிக்க தயார் என்றவர். இவரின் பயணத்தில் மீராவில் சரத்குமாருடனும், உல்லாசத்தில் அஜீத்துடனும்,கவுஸ் புல்லில் பார்த்தீபனோடும், விண்ணுக்கும் மண்ணுக்குமில் மீண்டும் சரத்துடனும், பிதாமகனாக சூர்யாவுடனும், பசுபதியுடன் மஜாவிலும், இப்போது ராவணாவில் பிரிதிவிராஜ்,பிரபு,கார்த்திக் என எல்லோரும் கலந்து கட்டி அடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் நடித்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளில் வாய்ப்பு குறைவு.

இந்த முன்னணிகளை தவிர்த்துவிட்டு பார்த்தலால், தனுஷ்,சிம்பு நடிக்கும் வாய்ப்பும் அறவே இல்லை என்பேன். சிலவேளைகளில் விஷால், ஆர்யா நடிப்பார் என்றால் அவர்களோ பாலாவிடம் அவர் சொன்னபடி ஆறுமாதத்தில் முடித்தல் ஆர்யாவுக்கு வாய்ப்பதிகம். காரணம் விஷாலை விஜய்க்கு பிடிக்கதேன்பது வேறு கதை. அடுத்து விஜய் புகழ் பாடும் பரத்,ஜீவா இவர்களுக்கும் வாய்ப்புண்டு. ஏன் ஜெயம் ரவி கூட நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு அடுத்து உண்டென நான் சொல்வேன்.ஆனால் இவர்களை தவிர்த்துவிட்டு இரண்டாம் நிலை நாயகர்களில் ஒருவர் நடித்தாலும் ஆச்சரியமில்லை.

இவர்களை விட மற்றவர்களுக்கு வாய்ப்புக்குறைவாக இருந்தாலும் இடையில் வேறு யாரும் முந்தும் வாய்ப்பும் உண்டு. இவை எல்லாவறையும் பார்த்தாயிற்று. விஜய் இரட்டைக் கதாநாயகர் உள்ள படங்களில் அதிகம் நடித்திருக்கின்றாரா என தேடினால். ஆச்சரியம். ஆரம்பகாலங்களில் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி, அஜித்துடன் ராஜாவின் பார்வையிலே, நடிகர் திலகத்துடன் ஒன்ஸ்மோர்,சூர்யாவுடன் நேருக்கு நேர்,பிரண்ட்ஸ் என சொற்ப படங்களில் மட்டுமே நடித்தவர் சிறப்புத் தோற்றத்தில் ரவிக்ரிஷ்ணாவுடன் சுக்ரன், நிதின் சத்யாவுடன் பந்தயம் போன்ற படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் விஜய்-மாதவனோடு இணைவதே பெரிய விடயமாக இருக்கையில் மூன்றாவதாக ஒரு பெரிய நடிகரும் சேர்ந்தால் தமிழிலும் 3இடியட்ஸ் பிச்சிக்கிட்டு ஓடும். முன்னணி நாயகர்களாக மாறிய பின் இளம் நாயகர்கள் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் புதிய பாதையை திறந்த பெருமையும் விஜய்க்கு வரும். இது நடக்குமா? அல்லது காத்தோடு போகுமா பார்ப்போம்?


நடிகைகளை பொறுத்தவரை பஞ்சம் நிலவும் காரணத்தால் மீண்டும் வந்த அசின், அலுத்துப்போன திரிஷா, முத்திப்போன நயன்தாரா, புதிய அக்கா அனுஷ்கா, இடையழகி இலியானா, அசல் நாயகி சமீரா ரெட்டி, புன்னகை அரசி(எத்தனை நாளைக்கு தான் இளவரசி வயசு போகுதெல்லா) சினேகா, நம்ம பாவனா இவர்களில் நான் சொன்ன வரிசையில் வாய்ப்பை அல்லும் சாத்தியம் உண்டு.

நான் சொன்னதெல்லாம் இருக்கட்டும் இந்த அதிசயம், ஆச்சரியம்.....நடந்தால் விஜய்-மாதவனுடன் இணையும் அந்த மூன்றாவது ஹீரோ யார்? மாற்றங்களை உண்டாக்கப்போகும் அந்த நிஜ நாயகன் யாராக இருக்கும் உங்கள் ஆருடங்களையும் சொல்லுங்கள். நடந்தால் எல்லோருமாக சேர்ந்து சந்தோசப்படுவோம்.
Share:

9 கருத்துரைகள்:

Anonymous said...

Hayyo... ameer khan role-a vijay parnaaraa... ippave kanna kettudhe.... venaandaa.. vitrunga plz

Bavan said...

ஆஹா... விஜய் நல்ல நடிகர் அவர் நல்ல படங்கள் தெரிவு செய்து நடித்தால் நல்லதுதான்,

3 இடியட்ஸ் அஜித்தும் சேர்ந்தா நல்லது, அவங்களுக்காகவே கூட்டம் போகும்,

நீங்க சொன்னமாதிரி மாதவன் வந்திடுவார், கடவுளே அஜித்தையும் தளபதியோட சேத்துவிடுப்பா..;)

Bavan said...

//அசின், அலுத்துப்போன திரிஷா, முத்திப்போன நயன்தாரா, புதிய அக்கா அனுஷ்கா, இடையழகி இலியானா, அசல் நாயகி சமீரா ரெட்டி, புன்னகை அரசி(எத்தனை நாளைக்கு தான் இளவரசி வயசு போகுதெல்லா) சினேகா, நம்ம பாவனா //

ஆஹா தலைவா... வர்ணனை சூப்பர்..:p

//அலுத்துப்போன திரிஷா//

இப்ப விண்ணைத்தாண்டி அலுக்காம வந்திட்டாவாம்..:p

//முத்திப்போன நயன்தாரா//

அதே அதே..:p

//புதிய அக்கா அனுஷ்கா//

ம்ம்..

//இடையழகி இலியானா//

இடிக்குதே..

//புன்னகை அரசி(எத்தனை நாளைக்கு தான் இளவரசி வயசு போகுதெல்லா) சினேகா//

ஹிஹி சினேகா ஆன்டி ரசிகர்களே திஸ்இஸ் ஓவர் டு யு..(பின்னூட்டத்தில் மாட்டிவிட்டு ஆப்பு வைப்போர் சங்கம்)

அ.ஜீவதர்ஷன் said...

இம்புட்டு சுயநலம் கூடாதுங்க, அதேங்க விஜய் அமீர்கான் வேடத்திலையும் மத்தவங்க சர்மான் ஜோசி வேடத்திலையும் நடிக்கணும்? அமீர்கான் வேடத்தில அஜித்தை நடிக்க விட்டு சர்மான் ஜோசி வேடத்தில விஜய் நடிக்க கூடாதா?

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.com
விஜயுடன் 3 இளம் நடிகர்கள் நடித்தால் நன்று, உங்களின் ஆராச்சி அதிலும் நன்று
இப்போதைய கால கட்டத்தில், அஜித்துடனும், சூர்யவுடனும் இணைய சாத்தியமே இல்ல என்பது எல்லோருக்கும் தெரியும், அப்படியேபோனாலும் விக்ரம்க்கு சான்சே இல்லை
பாப்போம்,

www.superstarvijay.blogspot.com இவ் வழைப்பூவிற்க்குள் நுழைந்து விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களில் சிறந்த, உங்களை கவர்ந்த திரைப்படத்திற்க்கு வாக்களியுங்கள்.
www.superstarvijay.blogspot.com

எழிழன் said...

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

Anonymous said...

என்னது த்ரீ இடியட்ஸ் படத்துல விஜய் நடிக்க போறாரா? கஷ்ட காலம் (எனக்கு சொன்னேன்)

//மாதவனுக்கு விஜய் மேல் அன்பும் அதே நேரம் மதிப்பும் அதிகம்.

இருக்காதா பின்ன, நம்மள மாதிரியே நடிக்க தெரியாத ஒரு ஆள பாத்தா அவருக்கு சந்தோசம்தான....

//சூர்யாவை பொறுத்தவரை நடிப்பில் பின்னிவிடுவார் ஆனால் விஜய்

இப்படி செம் சைடு கோல் போட்டுடீங்களே ....

//அடுத்து விஜய் புகழ் பாடும் பரத்,ஜீவா
சின்ன தளபதி எப்ப பெரிய தளபதிய புகழ்தாறு?

//தமிழிலும் 3இடியட்ஸ் பிச்சிக்கிட்டு ஓடும்

தியேட்டர விட்டா?

KANA VARO said...

niraiya kathaikkanum koncham late aa vaaran...

பாலா said...

நண்பா வீணாக கனவு காணாதீர்கள். இப்போது இருக்கும் நிலைமையில் விஜய் இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிறார் என்றால் ஒன்று அந்த ஹீரோவின் கேரக்டர் சப்பையாக இருக்கும், இல்லை அந்த நடிகர் சப்பையாக இருப்பார். என் கணக்குப்படி (ஒரு வேளை நடந்தால்) விஜய், சந்தானம் மற்றும் அப்பாஸ் தான் நடிப்பார்கள். அப்புறம் 3 இடியட்ஸ் படம் தமிழில் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive