உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Monday, June 7, 2010

சீறி வரும் சிங்கம் சிம்பாவே.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிம்பாவே-இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை எவை என தெரிவும் ஆகிவிட்டன. ஆனால் இந்த தொடர் தொடங்கும் போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தது வழக்கம் போல சிம்பாவேயை ஓரம் கட்டிவிட்டு இந்திய இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடந்தது என்ன. வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென நினைத்தார்களோ இல்லை சிம்பாவே தானே என இளக்காரமாய் நினைத்தார்களோ தெரியாது இரண்டாம் தர இந்திய அணியை தெரிவு செய்ததாக கூறி அனுப்பி வைத்தனர் இந்திய தெரிவுக்குழுவினர். கெளரவம் பார்த்து இலங்கையும் தன் வழக்கமான அணியை விடுத்து இரண்டாம் தர அணி ஒன்றை அனுப்பி வைத்தது.

போட்டிகளை பார்க்க முதல் அனுப்பி வைக்கப்பட்ட அணிகள் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் வழக்கமான மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. சச்சின் மகா போர்மில் இருக்கின்றார் இவர் இல்லாதது நட்டம் சேவாக்கும் இல்லை. இவர் காயம் காரணமாக இழந்த போர்மை மீட்க ஒரு வாய்ப்பு அதுவும் வழங்கவில்லை. அடுத்து கம்பீர் அண்மைக்காலமாக பெரிதாக இவர் பிரகாசிக்கவில்லை. அடுத்து தல தோணி இல்லை யுவராஜ் இல்லை பந்து வீச்சிலும் முக்கியமானவர்கள் இல்லைதான் ஆனால் இந்தியாவின் வருங்கால அணி என எதிர்பார்க்கப்படும் இளைய வீரர்களை கொண்ட ஒரு அணிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. வீரர்கள் அனைவரும் இளையவர்கள் ஆனால் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் தான். இப்படியான ஒரு அணியாக வந்த அவுஸ்திரேலியா தான் T20 இறுதி போட்டி வரை தோல்வி இல்லாமல் வீறு நடை போட்ட அணி. அப்படி இருக்கையில் ஐ.பி.எல்லால் வளர்க்கப்பட்ட வீரர்கள் என்னத்தை பெரிதாய் கிழித்தனர் இப்படி சொதப்ப தான் ஐ.பி.எல் என்னும் களியாட்டமா?


இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இதில் கார்த்திக்கின் விக்கெட் காப்பு படு மோசம் அப்படி இருந்தவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் விஜய் ஐ.பி.எல்லில் முதலில் பிரகாசித்தாலும் உலக கிண்ண போட்டியில் அவர் போட்ட மொக்கை எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் இது தேவையா? தினேஷ் கார்த்திக்கு பதில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ராபின் உத்தப்பாவை அனுப்பி இருக்கலாமே? நமன் ஒஜாவை எதற்காக பயன்படுத்தாமல் விட்டார்கள் என தெரியவில்லை. அந்த வீரருக்கு விஜயை தவிர்த்து வாய்ப்பு வழங்கி இருந்தால் சிலவேளை அவர் நம்பிக்கை அளித்திருக்கக்கூடும். கார்த்திக் சொதப்பிய நேரம் அவரை விட ஓஜா சிறப்பாகவே விக்கெட் காப்பும் செய்தார். விராத் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோர் ஓரளவு திருப்திப்படுத்தினர்.

அடுத்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சின்னப்பிள்ளை ஆட்டம் ஆடிய ரைனா. தன் பாட்டுக்கு துடுப்பாட்டத்தில் கலக்கிய அவருக்கு இந்த தொடர் எல்லாவகையிலும் கறுப்பாகிப்போனது. ஒரு தலைவருக்கு உரிய பண்புகள் இன்னும் அவருக்கு போதியளவு இல்லை என்பதுடன் கிரிக்கெட் விதிகளே தெரியாமல் ஒருவர் அணிக கப்டனாக ஆடிய அவமானமும் கிடைத்தது. அவ்வளவுக்கு அறிவில்லாமல் ஆடுகின்றாரா இவர்? ஆனால் இலங்கை தெரிவாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தெரிவாளர்கள் செய்தது ஒரு விதத்தில் நல்ல விடயம். இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு இப்போது ஓரளவுக்கு அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும். ரைனாவின் தலைமைப் பண்பின் வள்ளலும் விளங்கி இருக்கும். எனக்கென்னவோ இந்தியாவிற்கு பத்தொன்பது வயதுக்குட்பட்ட போட்டியில் உலக கிண்ணம் வென்று கொடுத்த கோலி பொருத்தமாக இருப்பார் என தோன்றுகின்றது. இப்போதைக்கு துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அவருக்கு தலைமைப் பொறுப்பு பெரிய சுமையாக இருக்காது என நம்புகின்றேன்.

அடுத்தவர் ஜடேயா, ஒருவேளை நம் இலங்கையில் சனத்தை வைத்திருப்பது போல இவரை வைத்திருக்க வேண்டும் என்ற மரியாதை இருக்கின்றதோ? கிரிக்கெட்டின் எல்லா துறையையும் மறந்து விட்டார். தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு முற்று முழுதாக அதை வீணாக்கி விட்டார். இனியும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரிவுக் குழுவும் தோனியும் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றார்கள் என்றே சொல்லலாம். கொஞ்ச காலத்துக்கு இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.

தன் பெயர் சொல்ல ஒரு வீரர் வேண்டும் என்பதற்காய் தோணி இவரை வளர்க்கின்றார் என நினைத்தாலும் இது அவர் பெயரை கெடுக்கும் பிள்ளையாய் இருக்கின்றது. இவரைவிட இன்னும் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சகலதுறை வீரர் தான் வேண்டும் என்கிறார் தோணி இந்த தொடரை பொருத்தவரை அஷ்வின் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை கொடுத்தால் அது பலனளிக்கும். மறு பக்கம் ரைனா,யூசுப்,யூவி என மற்ற வீரர்களையும் தோணி பயன்படுத்தலாமே. வரும் தொடர்களிலாவது சிந்திப்பாரா பார்ப்போம். ஐ.பி.எல்லில் சென்னைக்காய் அஷ்வினை நம்பியவர் நாட்டுக்காய் நம்பினால் எல்லோருக்கும் அது நல்லது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அஷ்வின் மட்டுமே ஆறுதல் ஆனால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பை வழங்கி அவர்களின் பலம் பலவீனத்தை தெரிவாளர்கள் அறிந்திருப்பர்.


கார்த்திக்,விஜய்,ரைனா,கோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான், ஜடேயா போன்றோர் சர்வதேசப்போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்களே. எனவே இந்தியாவின் இரண்டாம் தர அணி என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிம்பாவேயையும் இலங்கையையும் சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு நாடு சார்பாக அனுப்பப்பட்ட அணியே இது இதில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று சொல்ல முடியாது. அணி அணி தான் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்விதான். இது இலங்கைக்கும் பொருந்தும். தில்ஷான் தலைமையில் களம இறங்கிய இலங்கையும் இன்று சிம்பாவேயிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு காத்திருக்கின்றது. சங்கா,மகேல,முரளி,சனத் என முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவராக பிரகாசிக்காத தில்ஷான் தலைமையில் அணி அனுப்பப்பட்டது.

ஆரம்ப போட்டியில் தானே விக்கெட் காப்பாளராக ஆடிய தில்ஷான் தொடர்ந்து வந்த போட்டிகளில் சந்திமல் என்னும் அற்புதமான இளைய வீரர் ஒருவரை இனம்காண வைத்திருக்கின்றார். இலங்கையை பொறுத்தவரை தில்ஷான்,தரங்க, சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், கபுகேதர, குலசேகர,டில்ஹார போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர்கள் அப்படி இருக்கையில் இவர்களும் இரண்டாம் தர அணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இலங்கை தெரிவாளர்கள் ஒரு அற்புதமான தலைவரை தெரிவு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். தில்ஷான் ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்து டில்ஷானை தலைமைப்பொறுப்பில் வளர்க்க வேண்டிய எந்த ஒரு காரணமும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இல்லை. காரணம் சங்கா ஓய்வு பெற முன் தில்ஷான் போய்விடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைவர் என கருதப்பட்ட கபுகேதரவுக்கு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.


மொத்தத்தில் இரண்டாம் தர அணி என்ற பெயரில் சென்ற இரண்டு அணிகளுக்கும் உண்மையில் அனுபவம் குன்றிய சிம்பாவே நல்ல பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் கூட்டு முயற்சிக்கும்,விளையாட்டின் மேல் உள்ள ஈடுபாட்டுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இரண்டு கிரிக்கெட் வல்லரசுகள் பங்கு பற்றிய தொடரில் அவர்களை தோற்கடித்து அவர்கள் இருவரையும் விட அதிக போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது சீறிப்பாயும் சிம்பாவே. டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த சிம்பாவேக்கு இது நிச்சயம் மிகப்பெரிய மருந்து. முதல் போட்டியில் சிம்பாவே வென்றபோது ஏதோ வென்றுவிட்டார்கள் என நினைத்தாலும். அந்த போட்டியில் சிம்பாவேயின் பலம் அபாரமாக வெளிப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்றாலும் அபார துடுப்பாட்ட உதவியுடன் ஓட்ட எண்ணிக்கையை துரத்தி மலைக்க வைத்தது. தொடரை பொறுத்தவரை சிம்பாவேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மிகப்பெரிய அரணாக இருந்து சிம்பாவேயின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். இருவரும் விக்கெட் விழுவதை தவிர்த்ததுடன் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மற்றவர்கள் வெற்றிகரமாய் அதை முடித்து வைத்தனர். மசகட்சா,டெயிலர் என்ற அந்த இரண்டு வீரர்களும் எல்லா வீரர்களையும் விட சிறப்பாக ஆடினார் என்றால் அது மிகை இல்லை.

இப்படி துடுப்பாட்டத்தில் எல்லோரும் கை கொடுக்க மறு புறம பந்து வீச்சாளர்களும் சில போட்டிகளில் அசத்தினர். அனுபவம் மற்றும் இளம் ரத்தம் வெறி என்பன சேர்ந்து சிம்பாவே கிரிக்கெட்டில் ஒரு மணி மகுடத்தை கொடுத்திருக்கின்றது. மற்ற இரண்டு அணிகளையும் விட சிம்பாவேயின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது உண்மை. பெருமளவான ஓட்ட எண்ணிக்கையை கடுப்படுத்தியது இந்த படை. இது மற்ற இரண்டு அணி வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது.

கத்துக்குட்டி அணி, இரண்டாம் தர அணி என விமர்சிக்கப்பட்ட அணி இப்போது தங்கள் விளையாட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் மற்ற இரண்டு அணிகளையும் விட கிண்ணம் வெல்ல சகல தகுதியும் இந்த அணிக்கு உண்டு. சிம்பாவே, நட்சத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒரு கிரிக்கெட் அணியாக பார்த்தால் அசுர வளர்ச்சியைக் காட்டும் சிக்கும்புராவின் இந்த புத்துப்படைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சொல்கின்றேன். இலங்கை,இந்திய ரசிகர்கள் கோபிக்கபடாது. இந்த முறை கிண்ணத்தை சிம்பாவே வெல்ல வேண்டும் அதுதான் அவர்களின் கடுமையான உழைப்புக்கும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டுக்கும் கிடைக்கும் பரிசு. சிங்க சீற ஆரம்பித்திருக்கிறது. மிக விரைவில் பல ராஜ்ஜியங்கள் விழும் என நம்புகின்றேன். மீண்டும் ஒருதடவை சிம்பாவே கிரிக்கெட்டுக்கு என் வாழ்த்துக்கள்.
Share:

Saturday, June 5, 2010

லோஷன்:வேருக்கு ஒரு விழுதின் நன்றி.



பலர் பதிவு இட்டிட்டிங்க இதை பற்றி. இது என் நேரம். எதுக்கு என்று கேட்கிறிங்களா? நம் லோஷன் தாத்தாவுக்கு இன்று பிறந்த நாள் எனவே என் வாழ்த்தை சொல்ல வேண்டுமே. பொதுவாக யாராக இருப்பினும் நான் வாழ்த்து சொல்வது நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு. ஆனால் தாத்தாவை ஏன் குழப்புவான் என்று எண்ணியே மதியம் பன்னிரண்டு மணிக்கு அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்லிவிட்டு தான் இந்த பதிவை போடப்போகின்றேன். எல்லோரும் அவரை எப்படி ரசிக்கின்றனர் அவர் புகழ் என்ன எல்லாம் சொல்லிவிட்டார்கள். நான் ஒரு கவிதை(இதெல்லாமா என கேட்கப்படாது) மூலம் வாழ்த்து சொல்லலாமா என நினைத்து இதை படைகின்றேன்.

இந்த கவிதையில் பெரும்பாலான வரிகள் சாகித்திய விருது பெற்று அவர் வரும் போது வெற்றியில் நாங்கள் செய்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக எழுதியது. அப்படியே அந்தக்கவிதையை போடலாம் என்றால் என்னிடம் அது இல்லை. எனவே நினைவில் இருக்கும் வரிகளோடு இப்போது தோன்றும் வரிகளையும் கோர்த்து எழுதுகின்றேன்.

இணுவில் ஈன்றெடுத்த இனிய தமிழா- நேயர்
இதயங்களில் வாழும் வாம லோசா
வானலை வழியே வாசல்கள் வந்தீர்
வாழும் காலத்திலேயே வாய்ஸ்(குரல்)சால் சாதனை படைத்தீர்.

சக்தியுள்ள சூரியனாய் நீர் உதித்து - இன்று
வெற்றியோடு உலக வலம் வருகின்றீர்
விடியல் நாயகனே - இன்று
விருதுகளின் நாயகனும் நீரல்லோ

பதிவுலகம் பதிக்க வந்து - இன்று
பல உள்ளங்களை வென்று விட்டீர்
பஞ்சாமிர்தக் குரலோனே - இளம்
கன்னியரின் கனவானே(ம் இப்ப சந்தோசமா?)

தசாப்த நாயகனே - உங்கள்
சகாப்தத்தில் இருக்கின்றோம்
வாழ்த்தி மகிழ்கின்றோம் - உங்கள்
வரலாற்றில் இருக்கின்றோம் என்று.

வேருக்கு விழுது நன்றி சொன்னால் தானே வாழ்வில் பொருள் இருக்கும். வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துவதில் ஒரு மகிழ்ச்சி. வேலைக்காலத்தில் என் முகாமையாளர் சிர்ஷ்ட அறிவிப்பாளர் என்பதையும் மீறி (இதை நான் சொல்வதற்கு அண்ணா என்ன நினைக்கின்ராரோ தெரியாது என் மனதில் தோன்றுவதை சொல்கின்றேன்.) என் குருவாக ஒரு நல்ல வழிகாட்டியாக அண்ணாவா நண்பராக என்று வயது வேறுபாடின்றி வானொலித் துறையில் என்னை தட்டி வளர்த்த என் அருமை அண்ணாவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

ட்ரீட் கேட்கும் நண்பர்களே நான் ட்ரீட் கேட்கமாட்டேன். காரணம் நான் ட்ரீட் கேட்க அவர் என்னிடம் ஒரு சீரியஸ் விசயம் சொன்னார் ஒரு இரண்டு வருஷம் என்னோட இருந்திட்டு நீ என்ன கேட்கின்றாய் இப்ப என்றார்? ஏன் அண்ணா ட்ரீட் கேட்கின்றேன் என்றேன். வாழ்த்த எடுத்தால் அதுக்கு பிறகு வேற ஒன்றும் கதைக்கப்படாது தெரியுமா என்றார். அப்பிடியே விட்டாலும் பரவாயில்லை. நான் என்டைக்காவது யாருக்கும் ட்ரீட் கொடுத்திருக்கேனா இல்லையே எல்லோரிடமும் ட்ரீட் கேட்கிரதுதான் நம்ம வேலை இதை நீ என்னிடம் இருந்து படிக்கலையா என்றார். இதுக்கும் பிறகும் கேட்கணுமா? இல்லை ட்ரீட் தான் வருமா? தாத்தாவின் உடல் எடை கூடிய காரணம் இப்பதான் தெரிகின்றது. இப்பிடி எல்லார ட்ரீட்டும் வாங்கி சாப்பிட்டா என்ன ஆகும்......
Share:

Friday, June 4, 2010

பண்ணித் தமிழ்.


தமிழ் மற்ற எந்த மொழிகளையும் விட சிறப்பானது என்று நாம் சொல்கின்றோம். தமிழர்களாகிய எங்களுக்கு எம் தாய் மொழி சிறப்பாய் இருப்பதை சொல்வதில் தப்பில்லை. ஆனால் நாம் இன்று நடக்கும் நடையை பார்த்தால் இப்படி சொல்ல நாம் தகுதியானவர்களா? அண்மைக்காலமாக நம் தமிழ் மொழியில் பல வேற்று மொழிகள் கலந்து வருகின்றன. இது கூட பரவாயில்லை நம் தமிழ் பண்ணித் தமிழ் ஆகிறதுதான் கவலை. என்ன குழப்பமாய் இருக்கா. கொஞ்சம் கீழே படியுங்கள் படித்த பின் உங்கள் மனச்சாடிசியை தொட்டுச் சொல்லுங்கள் பண்ணித் தமிழை வளர்ப்பதில் நீங்களும் ஒருவர் இல்லையா என்பதை.

Early Morning wake up பண்ணி
எழுந்திரிச்சு போய் brush பண்ணி
அதுக்கு பிறகு wash பண்ணி
அதுக்கு பிறகு Dress பண்ணி
முடிஞ்ச பிறகு Pray பண்ணி
அடுத்ததாய் eat பண்ணி

இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவை இனி முதலில் ஒரு குடும்பத் தலைவனை பார்ப்போம்.

வந்த paper எல்லாம் read பண்ணி
officeக்கு போய் work பண்ணி
வேலை முடிஞ்சதும் sign out பண்ணி
வீட்டுக்கு வந்து மீண்டும் wash பண்ணி
பொண்டாட்டியோட நாலு வார்த்தை speak பண்ணி
முடிஞ்சால் பிள்ளைக்கு home work பண்ண help பண்ணி
அப்பிடியே போய் தூங்குவதில் முடிகின்றது ஒரு நாள்.

இனி ஒரு குடும்ப தலைவியின் செய்கை விட்ட இடத்தில் இருந்து.

பிள்ளைகளை ஒழுங்காய் வெளிக்கிடப் பண்ணி
அவர்களை பாடசாலைக்கு போகப்பண்ணி அல்லது drop பண்ணி
வீட்டு வேலைகளை சீக்கிரமே பண்ணி
பிள்ளைகள் வர முதல் lunch பண்ணி
drop பண்ணி இருந்தால் திருப்பி pick up பண்ணி
பிள்ளைகள் வந்தவுடன் சாப்பிட பண்ணி
மீண்டும் பிள்ளைகளை tution போகப் பண்ணி.
பக்கத்து வீட்டுக்கரரோட அலப்பறை பண்ணி
மீண்டும் கணவன் வர முன் மீதி வீட்டு வேலைகளை பண்ணி
கணவன் வந்தவுடன் tea பண்ணி
பிள்ளைகள் வந்தவுடன் அவர்களையும் welcome பண்ணி.
மீண்டும் dinner பண்ணி
பிள்ளைகளோடு time spend பண்ணி.
வெற்றிகரமாய் போய் தூங்குவாங்க

இதுவே ஒரு பாடசாலை போகும் பிள்ளையாக இருப்பின் விட்ட இடத்தில் இருந்து தொடருங்கள்.

schoolக்கு போய் classes attend பண்ணி
மீண்டும் வீடுவந்ததும் tution class attend பண்ணி
வீட்டுக்கு வந்து home work பண்ணி
பண்ணி பண்ணி களைச்சு போய் தூங்கிடுவாங்க.

இதுவே இப்படியென்றால் காதலர்களுக்கிடையில் எத்தனை பண்ணி இருக்கும் கற்பனை பண்ணி பாருங்கோ. கற்பனையில் பண்ணி போல பண்ணி வந்தால் நான் பொறுப்பில்லை.

இப்போ புரிந்திருக்குமே. நாம் ஒவ்வொருவரும் எப்படி தமிழை பண்ணி ஆக்கிக்கொண்டிருக்கின்றோம் என்று. என்ன செய்வது தன் மானம் மிக்க தமிழர்கள் பண்ணித்தமிழில் கட்டுண்டிருப்பது வேதனை தான். சிந்தித்து செயற்பட்டால் பண்பான தமிழ் பண்ணித்தமிழைக் கொன்றுவிடும்.

Share:

Wednesday, June 2, 2010

பதிவுலக ஆத்திசூடி.



எல்லோருக்கும் ஆத்திசூடியின் முதல் பன்னிரண்டு வரிகளும் தெரியும். அந்த பன்னிரு வரிகளையும் தற்கால பதிவுலகுக்கு ஏற்ப மாற்றினால் எப்படி இருக்கும். இதோ என் கற்பனை குதிரை. படியுங்கள் பிடிக்கும் என நம்பிறேன். படிப்பது மட்டுமன்றி கொஞ்சம் சிந்தித்து நடந்தால் பதிவுலகமும் சிறப்பாய் இருக்கும். பல நண்பர்கள் இப்போது பதிவெழுதுவதில்லை. எல்லோரும் எழுதினால் தான் பதிவுலகமும் ஆரோக்கியமாய் இருக்கும். நமக்குள்ளும் நல்ல பதிவு கொடுக்கணும் என்ற போட்டி வரும். செய்வீர்களா? முதல்ல இதை படியுங்க.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞசல்
தினம் பதிவெழுதுவது சாலவும் நன்று
கொப்பிப் பதிவு நல்லறம் அன்று
அனானியின் திட்டை பதிவர் கணக்கெடார்
மேக்கப் குறைத்தல் பெண்களுக்கழகு
போலிப்பதிவர்கள் வேருடன் கெடுவர்
கிடைக்கும் வாக்குகள் கண்ணெனத் தகும்
கணக்கெடுக்காமையே அனானிக்கு மருந்து
சொந்தச் சரக்கில் பதிவினை எழுது
ஒருவரையும் விடாமல் நண்பர்களாய் சேர்
பின்னூட்டம் தானே வாசகர் கொடுக்கும் பூஸ்ட்
பதிவெழுதாட்டில் பிளாக்குக்கே அழிவு
Share:

Tuesday, June 1, 2010

பாட்டி தலையில் கொம்பு.

சில மிருகங்களுக்கு கொம்பு இருப்பது சாதாரண விடயம். ஆனால் மனிதர் ஒருவருக்கு கொம்பு முளைத்தால் அது பரபரப்பான விஷயம் தானே. ஆச்சரியம் மட்டும் இல்லை இதில் அதிர்ச்சியும் இருக்கிறது. இதை நான் எழுதும் போது என்னால் கூட நம்பமுடியவில்லை. வாசிக்கும் போது உங்களால் நம்ப முடியவில்லையா. என்ன செய்வது நடந்ததை நம்ப தானே வேண்டும்.

இது நடந்தது இங்கே அல்ல ஏன் நம் அயல் நாடு இந்தியாவில் கூட அல்ல அனால் இன்னொரு ஆசிய நாட்டில். ஆமாம் சீனாவில். சீனாவில் இருக்கும் ஜான்க் ரூய்பாங் என்னும் 101 வயது பாட்டிக்கு தான் கொம்பு முளைத்துள்ளது. ஒருவேளை அவர் யாரோடும் முட்டிக்கிட்டாரோ தெரியாது. ஏனென்றால் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியா ஜெயம் ரவியிடம் சொல்வார் முட்டினால் திருப்பி முட்டனும் இல்லாவிட்டால் கொம்பு முளைக்கும் என்று. அப்பிடி இவர் முட்டிட்டு திருப்பி வாங்கலையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அடிக்க எல்லாம் வரப்படாது. சரி நேரே விசயத்துக்கு வாறன்.

கடந்த வருடம் இவருடைய நெற்றியில் ஒரு கொம்பு முளைத்துள்ளது. அதன் நீளமோ இப்போது ஆறு சென்டி மீட்டராம். அதை தொடர்ந்து நெற்றியின் இன்னொரு பக்கமும் கொம்பு முளைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த கொம்பு முளைத்தது அவருக்கு எந்த வித வலிகளையும் கொடுக்கவில்லை என்று சொல்கின்றார். ஏழு பிள்ளைகளின் தாயாக இருக்கும் இவர் ஆரம்பத்தில் சிறு கட்டியாக வந்த இந்த கொம்பு இப்போது வளர்ந்திருப்பதாக சொல்கின்றார். ஆனால் இதற்க்கு தகுந்த மருத்துவ உதவி பெற அவரிடம் பண வசதி இல்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

அதிசயங்களும் ஆச்சரியங்களும்அமானுசங்களும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இந்த அதிசய உலகில். இன்னும் என்ன என்ன எல்லாம் நடக்குமோ?

தன் அறிந்திருந்த இன்னொரு லிங்க் தந்து படங்கள் தந்துதவிய மது அண்ணாவிற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் கேட்டதால் இங்கே இணைக்கின்றேன். அந்த தளத்தில் எழுதும் நண்பருக்கும் நன்றி.
லிங்க் கீழே பின்னூட்டத்தில் உள்ளது.





Share:

Monday, May 31, 2010

பாட்டி வடை சுட்ட கதை ரீமேக்கில் விஜய்.

நம்ம சின்ன வயசில பாட்டி வடை சுட்ட கதையை பாட்டி சொல்லவும் அம்மா அக்கா சொல்லவும் கேட்டிருப்போம் இல்லை பாடசாலையிலாவது அறிந்திருப்போம். இந்தக்கதை இப்போது ஒரு சரித்திர படமாக வரப்போகின்றது. அண்மைக்காலமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களில் கதை இல்லை என்பது மிகப்பெரிய குற்றச் சாட்டு. ஒரே மாதிரிப்படங்களில் நடிக்கின்றார் என்று இன்னொரு வசைபாடல். அதை எல்லாம் விட ஒரு சரித்திரக் கதையில் நடிக்கவில்லையே என்று விஜய் ரசிகர்கள் எங்களுக்கும் ஏன் விஜய்க்கு கூட ஒரு கவலை இருக்கும். இதை எல்லாம் தீர்க்க விஜய் கையில் எடுத்திருக்கும் கதை தான் இந்த பாட்டி வடை சுட்ட கதை ரீமேக். முதலே சொல்லிவிட்டேன் இது ரீமேக் என எனவே கதையில் பல திருப்பங்கள் இருக்கும். அதேநேரம் விஜய் படங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வருகின்றது இந்தப்படம். வழக்கமாய் விஜய் படம் கிளைமாக்ஸ் சொதப்பலாய் இருக்கும் என்பர். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கு.

சரி இந்தப்படம் பற்றிய என் கற்பனை எப்படி உருவானது என்று சொல்லவேண்டாமா. நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் என் சிறுவயது முதல் அறிந்திருந்தும் அண்மையில் நண்பியான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்(தான் தான் இந்தக்கதையின் மூலம் என தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என சொன்னார். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்குத்தான்.) அப்போதுதான் ஏதாவது சொல்லு என கேட்டபோது பாட்டி வடை சுட்ட கதை ரீமேக் சொல்றன் என சொன்னார். அவர் சொன்ன கதையில் இன்னும் சில மெருகேற்றலோடு இங்கே தரப்போகின்றேன். படத்தை இயக்குவது வெறு யாரும் இல்லை. சாட்சாத் எஸ்.ஏ.சந்திரசேகர் ஐயா தான்.(மனசுக்குள்ள நல்ல கெட்ட வார்த்தைகள் வரித்து இந்த பாவிப்பயலை திட்ட.)

அப்பிடியே ஓபன் பண்ணினால் பிரான்ஸ்(எல்லாம் அஜித்தின் பில்லா பாதிப்பு தான்.) அதிகாலை வேளை எல்லோரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீதியில் பல வாகனங்கள் நெரிசலோடு இருக்க அப்பிடியே ஒரு சோடி காலுக்கு கமெரா சூம் போகிறது. அந்தக் கால்கள் ஓடிக்கொண்டிருக்க அப்பிடியே கமராவை மேலே கொண்டுவந்து முகத்தைக் காட்டினால் ஒரு சின்ன சிரிப்போடு அட நம்ம இளைய தளபதி.(எப்பிடி அறிமுகம் இதுவரை நீங்கள் எந்தப்படத்திலும் இதை பார்க்கமுடியாது.) ஓடிக்கொண்டிருக்கும் விஜயை ஒரு நபர் மறிக்கிறார் அவர் தான் இளவரசு.


இளவரசு: என்னப்பா ஈசா எங்கே இப்பிடி ஓடிக்கொண்டிருக்காய்?

விஜய்: என்ன சொன்னாய்? உலகத்திலேயே என்னை பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்கிறது நீயாய் தான் இருக்கும். ஓடிறதை பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவும் யாரை பாத்து ஓடிறதை பற்றி கேட்கின்றாய். நான் ரோட்டில ஓடிறது. என்னை பார்க்கும் தயாரிப்பாளர்கள் ஓடறது. என் படம் தியேட்டரை விட்டு ஓடிறது படத்தை பார்க்க வாரவங்க "தல"தெறிக்க ஓடிறது.(அப்பாட ஒரு மாதிரி தலைக்கு பன்ச் வைச்சாச்சு.) என்று ஆள் ஏரியாவிலும் ஓடவக்கிரவண்டா நான்.

இளவரசு: (மனசுக்குள்) பல்லு விளக்காமலே பன்ச் டயலாக் சொல்றானே. இவன்கிட இருந்து தப்பனும் என எண்ணிக்கொண்டு "சரிப்பா நீ போப்பா"

அப்படியே விஜய் ஓடிக்கொண்டிருக்கின்றார். உடனே பாட்டு வருது.......

இது .......(இதில் ஒரு சொல் வரும் இப்போ சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்) தேடிவந்த புழுகன் பெத்த பிள்ளை
ஓட்டம் என்ற ஒன்றை இவன் விட்டு வைத்ததில்லை.
கொடுப்பது தலைவலி இவன்பெயர் தளபதி என்றும் மொக்கை நாயகன்
இவனே எங்கள் வாழ்வில் இனிமேல் பிடித்த சனியன்.


பாடல் முடிய விஜய் அப்பிடியே ஒரு மிகப்பெரிய கட்டடத்துக்கு முன்னுக்கு நின்று அங்கேயும் இங்கேயும் பார்க்கிறார். வாசல் திறந்திருந்தும் உள்ளே போகல. அப்பிடியே வலது புறமாய் போய் ஒரு மதில மேல் ஏறி ஜம்ப் பண்ணி அந்தக்கட்டடத்துக்குள் போறார்(பிரான்சிலும் இப்பிடியா என கேட்கப்படாது இது விஜய் படம் இயக்குவது மிகப்பெரிய இயக்குனர் திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை மறக்கப்படாது.) அப்போ தான் எங்களுக்கு தெரியிது அது ஒரு சூப்பர் மாக்கட் என்று. அப்பிடியே அதிலே நிற்கும் தொழிலாளர் ஒருவருக்கு வணக்கம்னா என்ற போட்டிட்டு ஒரு இடத்தை நோக்கி போறார். அங்கே யாரையோ தேடிறார். அப்பிடியே தேடிக் கொண்டிருக்கும் போது வடிவேல் வாறார்.

வடிவேல்: என்னப்பா ஈசா வந்திட்டியா?

விஜய்:வாப்பா ரெயின் கோட்(அம்பிரல்லா என்று பெயர் வைப்பான்களாம் நாங்கள் ரெயின் கோட் என்று வைக்கக் கூடாதா.) எங்கேடா நம்ம பாட்டியை காணல.

வடிவேல்:ஆமா எல்லே. எங்கே போயட்டிது இந்த பாட்டி. ஒருவேளை ஒரேடியாய் போட்டிதோ? (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கணும் இப்போ இதுதான் வடிவேல் ஜோக்.)

விஜய்: உனக்கு எப்ப பார்த்தாலும் இப்பிடித்தான்.....எங்கே போய்ட்டிது..............நேரம் வேற ஆச்சே....

வடிவேல்: ஏப்பா அங்கே பார் பாட்டி வருது. அடேய் பாட்டியோட இன்னுமொரு பாட்டி வருதுப்பா பார்.

விஜய்: அடேய் பாட்டியோட பாட்டி தானேடா வரும்.....பின்ன என்ன குமாரனா வருவான்......

வடிவேல்: இல்லைப்பா.........பாட்டியோட பூட்டி இதுவேற பாட்டி வருதடா?

விஜய் அப்பிடியே திரும்பி பார்க்கிறார். அங்கே தமன்னா அறிமுகமாகின்றார். அழகாய் காட்டிறாங்க.(முதல் முறையாய் சொல்றன் தமன்னா அழகென்று) விஜய் வாய் மூடாமல் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க.

வடிவேல்: ஏம்பா ஏம்பா ஈசா .......ஈசா.....ஈசு அப்பிடியெல்லாம் பார்க்கப்படாது. நாங்களும் பார்க்கணும்.

விஜய் இதை கவனிக்காமல் வடிவேலுக்கு கையாலே ஒரு அடி விட்டிடு அப்பிடியே பாட்டியை நோக்கி போறார். அந்த நேரம் பார்த்து தமன்னாவும் விஜயை பார்க்க.

இந்த இடத்தில் ஒரு பாட்டு.

சிறகடிக்கும் நிலவு என்ற பாட்டு போல பாடவும்

ஆண்: பாட்டியோட பேத்தி பார்த்துவிட்டேன் உன்னை
பெண்: பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டு சனியன்
ஆண்: அப்படி நீ சொன்னால் வலிக்குமடி எனக்கு
பெண்: அவ்வே அவே அவ்வே நான் சிக்க மாட்டேன்

இப்படி ஆரம்பிச்சு ஒரு மாதிரி பாட்டு முடிகிறது.



அப்பிடியே இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து முடித்த பின்.

விஜய்: என்ன பாட்டி இண்டைக்கு லேட்.

பாட்டி: ஆமா ஈசா இண்டைக்கு என் பேத்தி பிறந்தநாள் அதுதான் கோவிலுக்கு போட்டு வாறம்.

விஜய்: (தமன்னாவை பாத்து) என்னது இண்டைக்கு உங்களுக்கு பிறந்தநாளா? (தமன்னா ஆம் என்பது போல தலை ஆட்ட) விஷ் யூ எ ஹாப்பி பெர்த் டே

தமன்னா: தாங்க்ஸ்.

விஜய்: என்ன பாட்டி நீங்க இப்பிடி ஒரு அழகான பேத்தி இருக்கிறதை சொல்லாமல் விட்டின்களே. (என்று சொல்லிக்கொண்டிருக்கவே பாட்டி மெதுவாய் வழக்கமாய் தான் பீசா வைத்து விற்கும் இடத்துக்கு போக விஜயும் தமன்னாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பாத்துக் கொள்கின்றனர்.)

என்னது பாட்டி வடை சுட்ட கதையில் பீசா என்று கேட்கப்படாது. இது ரீமேக் எனவே அங்கே வடை இங்கே பீசா. எப்பிடி நம்ம யோசனை.

இப்பிடியே ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்க. அங்கே வந்த திருடன் ஒருவன் பாட்டியின் பேர்ஸ்சை எடுத்துக் கொண்டு ஓட விஜய் அவனை திரத்திறார். அவன் மாடிப்படியால் ஏறி ஓட விஜய் கீழே இருந்து அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி அடுத்த தளத்துக்கு சென்று அந்த திருடனோட சண்டை போடிறார்.

விஜய்: நானே ஒரு கதை திருடன். எனக்கு முன்னாலேயே திருடிரியா என்று பன்ச் பேசி அவனை அடிக்க அவனோ பையைக் கொடுத்திட்டு ஓடிறான்.

பையை அப்பிடியே ஒரு லுக விட்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கே இருக்கும் வெள்ளைக் காரன் கூட தன் வேலையை விட்டிட்டு விஜயை சுத்தி நின்று கைதட்டிறான்.(விஜய் மாக்கட் உலக லெவலில் என சொல்லலாம் எல்லா.) கை தட்டினால் பரவாயில்லை.
பாட்டு தொடங்கிறது ஆரம்பிக்கிறது பிரான்சுக்காரன் தான்.....

திருடன் கதை திருடன் திருடனை வென்ற திருடன்
உலக லெவலில் வந்தும் கதையை திருடுவான்
திட்டம் போட்டு அடிப்பான் திருடித் திருடி ஜெயிப்பான்
இவனைப் போல திருடன் இனிமேல் யார் வருவான்

பாட்டு முடிய முதலில் பாட்டியின் பேர்ஸ் அடித்த திருடன் மீண்டும் வந்து விஜயின் பேர்ஸ்சை அடித்துக் கொண்டு ஓட. இந்த முறை ஹீரோ பாத்து சிரிச்சிட்டு நிற்கிறார்.(ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது இது விஜய் படம் நான் தொடர்ந்து சீன கொண்டு போகணும்) இதை பாத்தா தமன்னா விஜயிடம் வாறார்.

இதில் இடை வேளை


தமன்னா: அவன் உங்க பேர்ஸ்சை அடிச்சிட்டு போறான். பாத்திட்டு நிக்கிறியள்.

விஜய்: அட விடுங்க அவனும் என்னை போல தான் எத்தனை தோல்வி வந்தாலும் தன்னை மாத்திக் கொள்ளல. முதலில என்னிடம் பிடிபட்டு தன் தொழிலில் தோற்றாலும் என்னைப்போல அதை காட்டிக் கொள்ளாமல் அசட்டை செய்யாமல் அதே போல என் பேர்ஸ் அடிச்சேன் எனக்கு அது பிடிச்சிருந்தது அதுதான் விட்டிட்டன்.

தமன்னா: யூ ஆர் சோ ஸ்வீட். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இப்பிடி பட்ட ஒருவர் தான் எனக்கு வேணும்......ஐ.லவ்.யூ

வடிவேல்: இதென்ன சின்னப் பிள்ளை தனமாய் இஉக்கு. ஒரு ஹான்ட்சம்மான அழகான அறிவான ஒருத்தன் இங்கே இருக்கேக்கே இப்பிடி நான்சன்சா பேசப்படாது. வலிக்கிறது.

விஜய்:யாரடா அது?

வடிவேல்: கண்டிப்பாய் நீ இல்லை. உன்னை தான் எல்லா பதிவர்களும் போட்டு தாளிக்கிரான்களே. இன்னுமா நீ உன்னையை நம்பிறாய்.

தமன்னா: அப்போ யார் அது?

வடிவேல்: என்ன கேள்வி இது அவரை தெரியாதா.

தமன்னா: இல்லையே.

வடிவேல்: அது நான் தான்.....

தமன்னா: ஹீ ஹீ ஹீ. என்னது அது நீயா. எனக்கு அப்பிடிப்பட்டவரே வேணாம். இப்போ உன்னையை விட இவர்தான் அதிகம் மொக்கை போடிறார். இவரை பற்றி தான் அதிகம் பேசிறாங்க எனக்கு இவரே. போதும்.

தமன்னா: வேணாம் செல்லம வலிக்கிது.

விஜய்:போதும் போதும் நிறுத்து அடுத்த பாட்டு ஆடனும். எவ்வளவு நேரம் தான். நடிக்கிரமாதிரி நடிக்கிறது.

தமன்னா:அதுதானே இவ்வளவு நேரமாய் ஹீரோயின் நான் வரும் சீன் வருதே. வரக்கூடாதே. விஜய் படம் எண்டால ஹீரோயின் வந்தவுடன் பாட்டு வரும் என்றெல்லா எல்லோரும் காத்திருப்பாங்க. நானும் உடுப்பை அவுத்துப்போட்டிட்டு உள்ளுக்குள் போடும் உடுப்பு சைசில் துணியை சுத்திட்டு ஆடனும். இல்லாட்டில் இது விஜய் படம் இல்லையோ என்று சந்தேகம் வந்திடும்.

உடனே ஒரு பாட்டு வருது. அப்பிடியே ஒரு பிளைட் பிடிச்சு லண்டன் போய் ஆடிறாங்க

தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் போல படிக்கணும்

ஆண்: பீசாவை விற்க வந்த பிசாசே நைசா வாயேண்டி
பெண்: போக்கிரி பயலே எந்தன் டவுசரைக் கலட்டி போடாதே....
ஆண்: பொம்மாயி பொம்மாயி இது ரீமேக் ரீமேக் மறக்காதே பொம்மாயி
பெண்: சூ மந்திர காளி இவன்கிட்ட மாட்டிக்கிட்டா நான் காலி

என்று பாட்டு ஆரம்பித்து முடிகின்றது.


இந்த நேரம் பாத்து விஜய்க்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. அதற்கு விஜய் சொல்றார் இன்னும் ஐந்சே நிமிசத்தில அங்கே இருப்பேன்.. ஆமா கையோட கொண்டுவாறேன்......

உடனே விஜய் சுத்தும் முத்தும் பார்க்கிறார். தமன்னா வந்திருப்பதால் தமன்னாவின் பாட்டி கொண்டுவந்த பீசாவை சுட்டுக்(திருடிக்) கொண்டு தமன்னாவையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார்.(இதை தமன்னா கூட கவனிக்கல.) இதை பார்த்த அந்த பாட்டி கத்த முதல் வாசலுக்கு வரும் விஜயையும் தமன்னாவையும் அன்று புதிதாய் வேலைக்கு சேர்ந்த காவலாளி பிரகாஷ்ராஜ் மறிக்கிறார்.

பிரகாஷ்ராஜ்: நில்லுடா செல்லம். நில்லு அதெப்பிடி நீ ஓடுவாய். நீ ஒரு தங்க கட்டியை எடுத்திட்டு போ அந்த பாட்டி சம்பாதிச்சிடும். ஆனால் நீ அந்த கிழவி சாப்பிட்டு வைச்ச மிச்ச பீசாவையும் ஒரு சப்பை பிகரையும் கூட்டி ஓடிரியே. இது தாங்குமா செல்லம்.

விஜய்: இதோ பார் உனக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை. எவனுக்கும் எனக்கும் பிரச்சனை நடுவில நீ வந்து கத்தாத. இந்த சப்பை பிகரையும் சாப்பிட்டு போட்ட பீசாவையும் கொண்டு போறதுக்கா கத்திறாய்.

பிரகாஷ்ராஜ்: பின்னே என்னடா செல்லம். இதை மாதிரி ஒரு சப்பை பிகரை எங்கேடா போய் அந்த பாட்டி தேடும். எல்லோரும் அழகாய் எல்லா இருக்காளுகள். மவனே நான் அடிச்சன் நீ பீஸ் ஆகிடுவாய்.

விஜய்: நீ அடிச்சா பீஸ் நான் அடிச்சா(திருடினா) பீசா.

அப்பிடியே இரண்டு பேருக்கும் நடுவில ஒரு சண்டை. சண்டையில் விஜய் கடுமையாய் அடிவாங்கி நடக்க முடியாமல் போக அப்பிடியே சுருண்டு விழுகின்றார். முதல் முறையாக விஜய் படத்தில் வில்லன் ஜெயிக்கபோறார் என்று நீக்கள் கனவெல்லாம் காணப்படாது.

தமன்னா: (பிரகாஷ்ராஜிடம்) நீ வேணுமானால் அவரை அடிச்சு விழுத்தலாம். முடிஞ்சா அவரோட பாட்டை பாத்தா பின்னும் நீ உயிரோட இருந்தால் அவனென்ன நானே அவனோட போக மாட்டேன். இந்த பீசாவையும் உனக்கு ஊட்டி விடுறன். ஓகே வா?

பிரகாஷ்ராஜ்: எந்திரிச்சு பாடி ஆட சொல்லடி.

இப்போதான் கடைசி பாட்டு.
எழும்பிற விஜய்க்கு சும்மா அட்டகாசமாய் கோட் சூட எல்லாம் போட போட்டிருந்த டிறேசை குறைச்சுக்கொண்டு தமன்னா மறு பக்கம் நடந்து வந்து விஜய்க்கு ஒரு முத்தம் கொடுக்க.

நான் நடந்தால் அதிரடி பாடல் ஸ்டைலில் படிக்கணும் ஓகே.

ஆண்: நான் ஆடினால் கதகளி என் பேச்சு தலைவலி என்னை துரத்தும் சுண்டெலி நீ
பெண்: நீ நடிச்சால் வெறுப்படா நாளை சி.எம் நீயாடா அடிக்காதே என் கிட்ட ஜோக்கடா
ஆண்: நான் யார் அடுத்த பி.எம்மு
பெண்: நீ யார் இங்கே முழு லூசு
ஆண்: வேண்டாம் பேச்சு வெட்டிப் பேச்சு அவன் கதை இப்போ காலி ஆகிப்போச்சு.


இறுதிப் பாட்டும் முடிஞ்சிது. பாட்டு முடிஞ்சு பார்த்தால். பிரகாஷ்ராஜ் குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்க. இதை விஜய் ஒரு மாதிரி பார்க்க.
சாகப்போற அந்த நேரத்தில் கூட பிரகாஷ்ராஜ் வசனம் பேசிறார்.

பிரகாஷ்ராஜ்: என்னடா அப்பிடி பார்க்கிறாய். மவனே இது என்னோட போகட்டும். இனிமேலும் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி யாரையும் இப்பிடி கொல்லாதே. நல்ல காலம் தமன்னா அப்பிடி அரை குறையாய் ஆடினதால் கொஞ்சம் உயிர் இருக்கு. மவனே இங்கே இருந்து ஓடிடு.

விஜய் தமன்னாவை கூட்டிக்கொண்டு போக முற்பட தமன்னா விஜயை மறிக்கிறார்.

தமன்னா: ஒரு சப்பிய பீசாவையும் சப்பை பிகர் என்னையும் கூட்டிக்கொண்டு நீ ஓட என்ன காரணம் சொல்.

விஜய் உடனே தன் பிளாஷ் பக் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

விஜய்: நான் சின்ன வயசை இருக்கும் போதே என் பாட்டி இறந்திட்டா. இறக்கும் போது எனக்கு அவ சொன்ன ஒரு விஷயம். தனக்கு தன் திருமணத்தன்று சீதனமாய் வடைகள் பல செய்து கொடுத்தாங்களாம். உங்கம்மா ஓடிப்போய் கல்யாணம் செய்ததால அவளுக்கு என்னால இதை சீதனமாய் கொடுக்க முடியல. ஆனால் உன் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யும் போது நீ கட்டாயம் அவளுக்கு சீதனமாய் எங்கேயாவது இதை தேடிக்கொண்டுவந்து கொடுக்கணும் என்று சொன்னா. நானோ ஒரு வெட்டிப்பயல் வேலையும் இல்லை. அரசியலுக்கு வா என்று அப்பா சொல்லி சொல்லியே என் வாழ்க்கையை நாசமாக்கிறார். வேலை இல்லை அதை விட அரசியல் என்ற சாக்கடை என்று நான் இருக்கிறதால ஒருத்தனும் பொண்ணு குடுக்கிறானும் இல்லை.எவளும் பாக்கிறாளும் இல்லை. அப்பத்தான் இங்கே பாட்டியை ஏமாத்தி கொஞ்ச பீசா வாங்கிட்டு போகலாம் என வந்தான். பீசா வாங்க காரணம் இது ரீமேக் படம். வந்த இடத்தில நீ மடங்கிட்டாய். இந்த சப்பை பிகர் கூட கிடைக்காட்டில் இனி நம்ம வாழ்க்கை அப்படியே போய்டும் என்று உன்னையும் கூட்டிட்டு வந்திட்டன்.

தமன்னா: நீங்க தங்கச்சி மேல வச்சிருக்கிற பாசம் எனக்கு ரொம்ப புல்லரிக்கிது. ஐ.லவ்.யூ சோ மச்.......

அப்படியே சுபம்......

தங்கைக்கு கொடுத்தாரா இல்லையா என்று கேட்கப்படாது......நேரம் முடிஞ்சிது சோ படம் முடிஞ்சிது....அதுவா முக்கியம் நாலு பைட் ஐஞ்சு பாட்டு ஒரு துள்ளல் இரண்டு பறப்பு முடிஞ்சிது நேரமும் போய்ட்டு சரிதானே.

Share:

Saturday, May 29, 2010

திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான முன் அறிவித்தல்.




வணக்கம் மக்கள்ஸ்,

அண்மையில் சில நாட்கள் நீங்கள் சில வலைப்பூக்களில் திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் தொடர்பான பதிவினை படித்திருப்பீர்கள். சரி படிச்சாச்சு அப்பிடி என்னதான் நடக்கப்போகிறது என்ற ஆர்வம உங்களுக்கு இருக்கும். அதே நேரம் எனக்கு பிடித்தவர் இவர்கள் தெரிவில் இருப்பாரா? எங்கே வாக்களிக்கணும் எப்படி வாக்களிக்கணும் என்ற எண்ணங்கள் வந்து போகலாம்.

இன்னும் சிலருக்கோ இந்த சின்ன பசங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க பார்க்கலாம் என்ற ஆசையும் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் இன்னும் சில மணி நேரங்களில் விடை கிடைக்கப்போகின்றது. வலைப்பூ மட்டுமன்றி Face Book, Twitterஇலும ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாங்களும் தெரிவுகளை அறிவித்து வாக்கெடுப்பை ஆரம்பிக்கும் அந்த அரிய நேரத்துக்காக காத்திருக்கின்றோம்.எங்கள் முயற்சியின் வெற்றிக்காக காத்திருக்கின்றோம்.

ஒரு சில பேரோடு ஆரம்பித்து பின்னர் சக பதிவர்களிடம் வியாபித்து நாடு கடந்து இருக்கும் பதிவர்களின் அமோக ஆதரவிலும். இந்த வாக்களிப்புகள் இடம் பெற இருக்கின்றன. புதிய தளம் இதற்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகின்றது......இறுதி நேரத்தில் இருக்கின்றோம். மிக விரைவில் உங்கள் கைகளில் வாக்களிப்புகளோடு அந்த தளமும் வர காத்திருக்கின்றது..

தயாராகுங்கள். .......
Share:

Friday, May 28, 2010

தமிழிஷில் நடப்பது என்ன?



கொஞ்சம் இதையும் படிச்சிட்டு போங்க. பதிவுலகின் இன்னொரு முயற்சி.

தமிலிஷ் திரட்டி, உண்மையில் பதிவர்களுக்கு மிக்கப்பெரிய டானிக். நான் என் பதிவுகளை இணைக்கும் திரட்டிகளில் ஒன்று. அதிகமான வாசகர்களை கொண்டு வந்து தருவதுடன் பல வாக்குகளை அளித்து பிரபலமான இடுகை ஆக்கியும் அழகு பார்க்கின்றது. ஆனால் எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குள் எழுந்த சில கேள்விகள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிக் கூறவும்.

சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது?

அடுத்து சூடான இடுகைகள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றன? ஒரு சில சொற்குறியீடுகளை கொண்டா அல்லது குறித்த நாள் அதிகமாக இடப்படும் இடுகைகளைக் கொண்டா? இங்கிலாந்து உலக கிண்ணம் வென்ற நேரம் நான் இட்ட இடுகை இதற்குள் அடங்கவே இல்லை. ஆனால் அதிக வாக்குகள் பெற்றது. அப்படியாயின். இடுகையை இணைத்து குறைந்த நேரத்தில் இடும் வாக்குகளைக் கொண்டா? இது தீர்மானிக்கப்படுகின்றது.

அடுத்து பிரபல இடுகைகள் பற்றியது. சிலநேரங்களில் பதின்மூன்று பதின நான்கு வாக்குகள் கிடைத்தும் சில பதிவுகள் ஹிட ஆகாது போய் விடும். அதற்க்கு காரணம் என்னவென்று தெரியும் ஆனால் என் கேள்வி என்னவென்றால் நான் ஒரு பதிவினை போட்டு ஒன்று இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் கூட அந்த பதிவு ஹிட ஆகிறது. இது எப்படி? அப்படியாயின் தமிளிஷின் தொடரும் இடுகைகளை அதிகமான பக்கங்கள் சென்று வாசகர்கள் படிக்கின்றார்களா? அப்படி எனில் இது ஆரோக்கியமானதே. இதை தான் தமிளிஷும் முன்னர் எதிர் பார்த்து நடவடிக்கை மேற்கொண்டது என எண்ணுகின்றேன். சில நேரங்களில் நாங்கள் ஒரு இடுகையை தொடர்ந்து மூன்று இடுகைகளை இட்ட பின் கூட (அந்த பதிவுகள் ஹிட இல்லாவிடாலும்) அதற்க்கு முன் இட்ட பதிவு ஹிட அடித்துவிடும். இவை எல்லாம் எப்படி நடக்கிறது. உண்மையில் இது பதில் சொல்ல கடினமான சந்தோசமான உணர்வுதான்.

தமிளிஷிடம் ஒரு வேண்டுகோள்
சில இடுகைகள் இன்னும் ஒரு வாக்குக் கிடைத்தால் பிரபலமாகி விடும் என்ற நிலையில் தொடரும் இடுகைகள் பகுதியில் இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்கு கிடைக்கும் கிடைக்காது என்ற ரீதியில் அல்லாடிக் கொண்டிருக்க. அதனை தொடர்ந்து பல இடுகைகள் தொடரும் இடுகைகள் ஆகிவிட இந்த இடுகை பின்னுக்கு போய் விடும். இதனால் அதை காண்போர் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே அந்த ஒரு வாக்கு குதிரைக் கொம்பாக கூட போய் விடும். எனவே இப்படி போர்டரில் இருக்கும் பதிவுகள் என்று ஒரு பிரத்தியே பகுதியை நிறுவி. பதிவர்களை ஊக்கப்படுத்தினால் என்ன.

அண்மையில் இருநாட்கள் தமிலிஷில் ஏற்ப்பட்டிருந்த கோளாறு உண்மையில் பதிவுலகத்தை பாதித்திருந்தது. தட்டச்சி இருந்த இடுகைகளை கூட நாங்கள் இடாமல் தமிளிசுக்காக காத்திருந்தோம். அந்தளவிற்கு பதிவர்களின் இன்றியமையாத ஒன்றாக தமிலிஷ் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் உங்கள் பணி சிறப்பாக இருக்க.
Share:

Wednesday, May 26, 2010

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முன்னோட்டம்.



வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.
Share:

சிங்கம் விமர்சனத்துக்கு பதிவர்களுக்கான தலைப்புக்கள்.



விஜயின் படங்கள் வரும் போதுதான் இந்த மாதிரிப்பதிவுகள் பல வந்தன. பல பதிவர்களுக்கு அடி எடுத்துக்கொடுப்பது போல இதே போன்ற பதிவுகள் விளங்கின. இந்த முறை சூர்யாவின் முறை இந்த சிங்கத்தின் முறை நான் என்னை சொல்லவில்லை படத்தை தான் சொல்கின்றேன். நாளை மறுநாள் உலகம் முழுவதும் சூர்யா நடிப்பில் வெளிவரும் சிங்கம் வர இருக்கின்றது. பல பதிவர்கள் இப்போதே விமர்சனப்பதிவு எழுதி பிரசுரிக்க தயார் நிலையில் வைத்திருப்பர். டிறேயிலரை பார்க்கும் போது இன்னொரு விஜயாக சூர்யா முயற்சிக்கும் படம் இது என்பது ஓரளவு யூகிக்க கூடியதாக இருக்க அதற்கு ஏற்றால் போல சூர்யாவின் பேட்டியும் இருக்கின்றது. அதாவது இந்தப்படத்துக்கு பன்ச் டயலாக் தேவைப்பட்டது பேசினேன். இந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் பேசுவர் என்றதே எனக்கு இரண்டு சந்தேகங்களை கொண்டு வந்திருக்கின்றது. சமபோட்டி நடிகர்கள் மத்தியில் இருந்த ஒரு நல்ல நடிகனும் செத்து விட்டான் என்று. என்ன செய்வது சூர்யாவும் பன்ச் டயலாக் பேசப்போகின்றார். அடுத்தது யாராய் இருந்தாலும் இதில் பன்ச் டயலாக் பேசுவர் என்றது இந்த படத்தில் கதை என்று எதுவுமே பெரிதாக இருக்காதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இவை எல்லாம் இருக்கட்டும் படம் பார்க்காமல் நான் அதிகம் பேச முடியாது.ஆனால் படம் பார்த்து விட்டு நன்றாக இருக்கும் என்றும் நன்றாக இல்லை என்றும் பார்க்காமல் எழுதப்போபவர்களுக்கும் இன்னொருவர் எழுதிய விமர்சனத்தை எந்த கூச்சமும் இன்றி கொப்பி செய்து போடும் அசிங்கப்பிறவிகளுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

இதோ நீங்கள் எழுதப்போகும் விமர்சனப் பதிவுகளுக்கு தலைப்பாக வைக்க சில தலைப்புக்கள். பிடிச்சிருந்தா கண்டிப்பாய் வாக்குப் போடுங்க.

சிங்கம் - அசிங்கம் (படம் சொதப்பலாய் இருந்தால்)

சிங்கம் -சொக்க தங்கம்.( படம் அசத்தலாய் இருந்தால்)

சிங்கம் - செத்துப்போச்சு(படம் புட்டுக்கிட்டால்)

சீறிப்பாயும் சிங்கம்(படம் சூப்பராக இருந்தால்)

பாயமறுத்த சிங்கம்(படம் படுத்துக்கொண்டால்)

சிங்கம் ஒரு டான் அசிங்கம் (சூர்யாவின் சிங்கம் பட பன்ச் டயலாக் ஸ்டைலில்)(படம் பப்படம் ஆனால்)

சிங்கம்- ஒரு டான் தங்கம்(அதே பன்ச் டயலாக் ஸ்டைலில் படம் நன்றாக இருந்தால்)

சிங்கம்- பாக்கப்போறியா பயன்திடுவாய் (சூர்யாவின் பன்ச் டயலாக் ஸ்டைல் தான் இதுவும்)(படத்தை பார்த்து வெறுப்பில் இருந்தால்)

சிங்கம் - சீ (என்னத்த சொல்ல படம் அப்படி சொல்ல வைத்தால்)

சிங்கம் - Stole my Heart (படப்பாடலை ஒட்டியது) (இரண்டு அர்த்தத்திலும் எடுக்கலாம் நல்ல படமாக இருந்தாலும் சொல்லலாம் கேட்டதேன்றாலும் ஓகே )

சிங்கம் - கடித்துக்குதறியது என்னை (படம் பாடாய் படுத்தி இருந்தால்)

சிங்கம் - தமிழ் சினிமாவின் ராஜா (மிகப்பெரிய வெற்றியை பெறும் என எண்ணினால்)

சிங்கம் வயசு போயிடிச்சு(கதை அதர பழசாக இருந்தால்)

கர்ஜிக்கும் சிங்கம்(படம் சூப்பர் என்றால்)

கர்ஜிக்காத சிங்கம்(படம் மொக்கை என்றால்)

சிங்கம்=பபில்கம்=இழுவை(இதுக்கு மேல என்ன சொல்ல)

சிங்கம் - தனிக்காட்டு ராஜா (வேற படங்கள் இல்லாததால் தப்பித்து விடும் என்றால்)

சிங்கம் - He is நரை(த்த) சிங்கம்(படம் பழைய படங்கள் போல் இருந்தால்)

சிங்கம்- The real King of Kollywood(படம் சூப்பர் டூப்பர் ஹிட என்றால்)

சிங்கம்- தமிழ் சினிமாவின் ஒரு அங்கம்(படம் நன்றாக இருந்தால் முக்கியமான படம் என்ற கருத்திலும் சாதாரண ஒரு படம் என்றால் பத்தோடு பதினொன்று என்ற கணக்கிலும் இடலாம்)

சிங்கம்- தமிழ் சினிமாவுக்கே பங்கம்.(ஏண்டா இப்படி ஒரு படம் எடுத்தாங்க என திட்டணும் எண்டால.)

என்னால் முடிந்தவரை இரவு உறக்கத்திலும் நினைவில் வந்த தலைப்புக்கள் இவை. பதிவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பிறன். இல்லை வேற தலைப்பு சொல்லப் போறிங்களா சொல்லுங்க. இதுதான் தலைப்பா வைத்துக்கொள்ளுங்க. அப்புறம் இன்னொரு விஷயம் கடந்த இரண்டு நாட்களாக என் இணைய இணைப்பில் தேக்கம் காரணமாக பதிவிட முடியவில்லை. இது கூட நண்பனின் இணைய இணைப்பில் வரும் பதிவு. அதனால் தான் உங்கள் பதிவுக்கு பின்னூடம் போட முடியல அதுக்காக என்னை யாரும் பழிவாங்கிடாதீங்கோ. என் இணைய இணைப்பு சரி வந்தவுடன் என் கடமையை நிறைவேற்றுகின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox