வாழும் போதும் சர்ச்சை, மறைந்தாலும் சர்ச்சை இப்போது அவர் உடல் அடக்கம் செய்யப்படப்போகும் இந்த இறுதி நேரத்திலும் சர்ச்சை என சர்ச்சைகளின் நாயகனாக செத்தும் வாழ்கின்றார் மைக்கல் ஜாக்சன். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் கூட மறையப்போகும் நேரத்தில் அவருக்கு சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி உலவுவதாக இப்போது ஒரு கதை பரவ ஆரம்பித்திருக்கின்றது.
மைக்கல் ஜாக்சனின் அந்த பண்ணை வீட்டின் சுவரில் அவரின் நிழல் உருவம் தோன்றி பின்னர் மீண்டும் மறைந்து விட்டதாக CNN தொலைக்காட்சியின் இன்சைட் நெவெர்லந்த் என்ற நிகழ்ச்சியில் ஒரு சில ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். அந்த உருவம் பண்ணை வீட்டின் கொரிடோர் வழியாக சென்று மறைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஜாக்சனின் பல ரசிகர்கள் இதனால் குழப்பமடைந்திருக்கின்றார்கள். எதுவாக இருப்பினும் மரணித்தும் ஒரு சகாப்தமாக வாழும் மைக்கல் ஜாக்சனின் பெயரை சொல்லி யாரும் தவறுகள் செய்யாமல் இருப்பதே அந்த அற்புத கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகும். இன்னும் சற்று நேரத்தில் அடங்கப்போகும் அவரின் உடலோடு சர்ச்சைகளும் அடங்கி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
9 கருத்துரைகள்:
You are absolutely correct, Sathiesh. Pray for him..
"இருப்பினும் மரணித்தும் ஒரு சகாப்தமாக வாழும் மைக்கல் ஜாக்சனின் பெயரை சொல்லி யாரும் தவறுகள் செய்யாமல் இருப்பதே அந்த அற்புத கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகும்."
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
:-) Right..
//என்றும் ரசிகர்கள் மனதில் மறையாமல் இருப்பார் என்பதுதான் உண்மை.....//
உங்கள் ப்ளாக்கிலே followers இல்லையே என்ற குறையை விடுங்க நான் குறிப்பிட்டதுபோல் Google Friend Connect க்கு சென்று நான் குறிப்பிட்ட படிமுறைகளின் படி சென்று அங்கே கிடைக்கும் HTML ஐ உங்கள் வலை பக்கத்தில் add widget இல் சேர்த்து விடுங்கள்
சதீஸ்... நீங்கள் ரேடியோ gadget தொடர்பாக கேட்டு இருந்தீங்க. அது தொடர்பான விபரங்களை உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்...
Sinthu கூறியது...
You are absolutely correct, Sathiesh. Pray for him.
thanks sinthu
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
"இருப்பினும் மரணித்தும் ஒரு சகாப்தமாக வாழும் மைக்கல் ஜாக்சனின் பெயரை சொல்லி யாரும் தவறுகள் செய்யாமல் இருப்பதே அந்த அற்புத கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகும்."
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
டாக்டர் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவை படித்து வருகின்றேன் நன்றாக உள்ளது. என்னையும் ஊக்கப்படுத்தியதுக்கு நன்றி.
சோம்பேறி உங்களுக்கு என் நன்றிகள். சந்த்ரு நீங்கள் எனக்கு செய்த அத்தனை உதவிகளுக்கும் நன்றி என்னும் வார்த்தையை மட்டுமே என்னால் உதிர்க்கமுடியும் நன்றிகள் நண்பரே.
Post a Comment