பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html
கிரிக்கெட் உலகில் இந்த காலகட்டம் பரபரப்புக்கு குறைவில்லை.ஆஷசின் முதல் போட்டியில் இங்கிலாந்து வேண்டுமென தாமதப்படுத்தியதாக பாண்டிங் குற்றம் சுமத்த நாங்கள் அப்படி வேண்டுமென செய்யவில்லை என இங்கிலாந்து கப்டன் மறுபக்கம். அதன் பின் பிளிண்டோபின் ஓய்வு என தேவையற்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் இதெல்லாம் தேவையா என கேட்கவைத்த நிகழ்வு தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி உலகக்கிரிக்கெட்டின் இன்றைய கடவுளாக போற்றப்படும் சச்சினை பற்றி கூறிய சில கருத்துக்கள்.
அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை) எல்லா பிரபலங்களையும் போட்டு வாட்டுவதோடு ஒரு சில பிரபலமில்லாதவர்களையும் பிரபலமாக்கி விட்டிருக்கின்றது. இப்படிப்பட நிகழ்ச்சிகள் தேவையா? அந்தரங்கங்களை போட்டு உடைக்கும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கின்றார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? (அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததை சொல் அதுக்கெதுக்கு இவ்வளவு என்கிறது புரிது. என்ன செய்றது பழகிப்போச்சு..)
சச்சின்-வினோத் காம்ப்ளி பாடசாலை காலத்தில் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் அத்துப்படி. அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டுபேர் செய்த சேவையும்(காம்ப்ளி என்னதான் குழப்படி செய்தாலும் டெஸ்டில் ஆயிரம் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்தியர் என்ற சாதனை இன்னும் அவர் வசமே.) வரலாறுகளே. இந்த நேரத்தில் சச்சின் என்ற நாமம் ஒரு தசாப்தத்தை கடந்து பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்க இரண்டாயிரமாம் ஆண்டோடு கிரிக்கெட்டில் அஸ்தமனமாகிப் போய், பலரால் மறந்து போன வினோத் காம்ப்ளி இப்போது தானும் இருக்கின்றேன் என சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.
அந்த showவில் காம்ப்ளி சச்சினை பற்றி சொன்னதை எப்படி ஏற்க முடியும். எத்தனை தடவை காம்ப்ளி இந்திய அணிக்குள் மீள வர சச்சின் காரணமாக இருந்தார் என்பது கிரிக்கெட்டை தெரிந்த அனைவருக்கிம் தெரியும்.(இதேபோலத்தான் தினேஷ் மொங்கியா, அஜித் அகார்கர் போன்றவர்களுக்கும் சச்சின் ஆதரவு வழங்கி இருக்கின்றார்.) அப்படி இருக்கும் போது கேவலம் ஒரு கோடி ரூபாவிற்காக (அந்த நிகழ்ச்சியில் உண்மையை பேசி வெற்றி பெற்றால் வழங்கும் பரிசுத்தொகையாம் அது.) தன் உயிர் நண்பனாக பள்ளிக்காலம் முதல் இருந்து வந்தவரை பற்றி எதுவெல்லாம் சொல்லக்கூடாதா அதை எல்லாம் சொல்லி முடித்து விட்டார்.
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான்.
5 கருத்துரைகள்:
ஒரு + குத்து குத்தி இருக்கேன்!
//அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை)//
இல்லை, இதைவிட கேவலமாக திட்டலாம், உங்களுக்கு தெரிய வில்லை என்று சொல்லுங்கள்
~ஜோசப்
நாமக்கல் சிபி கூறியது...
ஒரு + குத்து குத்தி இருக்கேன்
நன்றி நண்பரே.
JesusJoseph கூறியது...
//அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை)//
இல்லை, இதைவிட கேவலமாக திட்டலாம், உங்களுக்கு தெரிய வில்லை என்று சொல்லுங்கள்
இப்படி சொன்ன நண்பரே எனக்கு அதைவிட வேறு வார்த்தை தெரியவில்லை என்றுதானே சொன்னேன்.
நீங்கள் சொன்னது சரித்தான், இங்கு அமெரிக்காவில் சிறுவர்கள் கேடுவதுற்கு இந்த ஷோ தான் காரணம், அப்படி தான் இங்கு ஒரு சர்வே சொல்லுகிறது, அதனால் தான் அப்படி சொன்னேன்
~ஜோசப்
Post a Comment