அமெரிக்காவில் இருக்கும் வைரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று மைக்கல் ஜாக்சனின் முடியிலிருந்து பத்து வைரங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதில் இன்னுமொரு சுவாரஷ்யம் மூன்று வைரங்களை ஜாக்சனின் பிள்ளைகளுக்கு கொடுக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.(காசு வாங்கிக்கொண்டா இல்லையா என யோசிக்காதிங்க இலவசமாத்தானாம்.) லைப் ஜெம் என்னும் இந்த நிறுவனத்தின் முக்கியமான ஒரு தொழிலே பிரபலங்களின் முடிகளிலிருந்து வைரங்களை தயாரிப்பது என்பது அதிசயமான உண்மை.
1984ஆம் ஆண்டில் பெப்சி விளம்பரம் ஒன்றில் மைக்கல் ஜாக்சன் நடித்தபோதே தலைமுடியில் தீ பற்றிக்கொண்டது. அதில் ஒரு தொகுதியை ஜன் ரேஷ்னிக்கொப் என்பவர் எடுத்து வைத்திருக்கின்றார்.(பாருங்கப்பா முடியைகூட விட்டு வைக்கல.) இப்போது அந்த முடியை வைத்துதான் இந்த முயற்சியில் தாம் ஈடுபடப்போவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்திருக்கின்றார்.
பூகம்பம் மற்றும் இதர காரணங்களால் பூமிக்குள் போகும் மரங்கள் பல நூற்றாண்டுகள் கழித்து எப்படி அழுத்தத்தின் காரணமாக நிலக்கரியாகவோ அல்லது வைரப்படிகங்களாகவோ மாறுகின்றனவோ அதிலும் நிலக்கரி மற்றும் வைரங்கள் கரிப்படிமானங்கள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். அந்த வகையில் மனிதரின் தலைமுடியைக்கூட டிகிரி வெப்பநிலையில் கருக்கி காற்பனாக்கி வைரமாக்கலாம் என்கின்றார்கள் இவர்கள். இசை உலகின் வைரம், இப்போது அவரின் முடியின் வைரமாக அவரின் குழந்தைகளோடு உரசிக்கொண்டிருந்தாள் அது அவருக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமல்ல அந்த இசை மன்னனை மனதார நேசித்த அத்தனை பேருக்கும் சந்தோசமே.
இன்னும் ஒரு சில நாட்களே விருதை யார் வெல்லப் போகின்றார் என்னும் முடிவை அறிவிக்க. உங்களுக்கு பிடித்தவர்கள் தோற்கலாமா` நீங்களே வாக்களியுங்கள் உங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி மகிழுங்கள்.
2 கருத்துரைகள்:
நம்ம முடியையும் ஏதாவது செய்யலாமா என்று யோசித்தன். ....... என்ன செய்யலாம்........
நல்ல தகவல் நன்றி சதிஸ்...
சந்ரு சொன்னது…
நம்ம முடியையும் ஏதாவது செய்யலாமா என்று யோசித்தன். ....... என்ன செய்யலாம்........
நல்ல தகவல் நன்றி சதிஸ்..
உங்க முடியை ஏதாவது செய்யனுமா முதல்ல அதற்க்கு நல்ல சம்போ போட்டு முழுகனும் ஹீ ஹீ ஹீ .........உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment