இன்றைய உலகில் பல்வேறு காரணங்களுக்காக தனிமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இது அந்த நபர்களின் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன் நடைமுறைசிக்கல்களையும் உருவாக்குகின்றது. தனியாக வாழ்பவர்களுக்கும் மன வாழ்க்கையில் நிம்மதி இன்றி தவிப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் மாரடைப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது.
1963ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வினை நடத்தி வரும் இஸ்ரேலின் அமைப்பொன்று இதற்காக அதிகாரிகளிடமும் நகராட்சி ஊழியர்களையும் இதற்குள் உட்படுத்தி இருக்கின்றது. 1963ஆம் ஆண்டிலிருந்து தனிமையில் வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாளில் 49வயதுக்கு மேற்பட்ட காலத்தில் நீரிழிவு,மற்றும் இதய நோய்களினால் உயிரிழந்துள்ளனர். இப்படி தனியாக வாழ்பவர்களில் மாரடைப்பால் இறந்தவர்கள் சதவீதமாக உள்ள நிலையில் மணவாழ்வு முறிவடைந்த பின்னர் இறந்தவர்கள் சதவீதம் தான். இரத்த அழுத்தம், உடல் பருமன்,புகைப்பிடித்தல்,நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பு சாதாரண வாழ்வை மனிதர்களை விட தனிமையில் வாழ்பவர்களுக்கு அதிகம்.
நண்பர்களே, இந்த உலகம் போகும் போக்கில் நம்மில் பலர் தனிமையில் வாழவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. தொழில்,படிப்பு,கடந்தகால நாட்டு சூழல் என்பன....அதேநேரம் இன்று கூட்டுக்குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது நாம் நம் சொந்த கிராமத்துக்கு செல்லும் போது அந்த நினைவுகள் மலருகின்றன. ஆனால் சில நேரங்களில் அதுவும் வெறுப்பாகி விடும். சிலருக்கிடையிலான மனக்கசப்பு அந்த சுகத்தையும் கெடுத்துவிடும். பாட்டன் பாட்டி முதல் அவர்கள் பேரன் பேத்தி மாமன் மாமி சித்தப்பன் பெரியப்பன் என்று எல்லோரும் எந்த பிரச்சனையும் இன்றி ஒரே இடத்தில் சந்தோசமாக வாழ்ந்தால் அந்த வாழ்வு கசக்குமா? நோய்கள் தான் வருமா? இல்லை ஆய்வு தான் நடக்குமா? நான் இப்படி பதிவிடுவேனா? நீங்களும் தான் இதை படிப்பீர்களா?
அடுத்து மண வாழ்க்கை. இன்று காதலே விலைபேசப்படுவது சாதாரணமாகிவிட்டது. அண்மையில் எனக்கு படிப்பித்த ஒரு ஆசிரியரை சந்தித்தேன். அப்போது அவர் சொன்ன ஒருவிடயம் என்னவெனில் அன்று கண்ணதாசன் மலருக்கு மலர் தாவும் பல வண்டுகள் அந்த வண்டுகளுக்கு உதாரணம் இன்றைய சில ஆண்கள் என்று அன்று சொன்னதாக சொல்லிவிட்டு அதை இன்று மாற்ற வேண்டும் அந்த உதாரணம் இன்று ஆண்கள் இல்லை சில பெண்கள் என சொன்னார்(கவனிக்க சில பெண்கள் தான் நான் சொல்லப்போவதும் ஒட்டுமொத்த பெண்களை அல்ல சிலரைத்தான்.) இன்று சிலருக்கு காதல் என்னும் போர்வையில் காமம் தேவைப்படுகின்றது. அந்த மோகம் முடிந்த பின்னர் வாழ்க்கை வெறுத்துப்போகின்றது. இதனால் சில காதல் திருமணங்கள் முறிந்து விடுகின்றன. இன்னும் சிலவோ ஒன்றல்ல இரண்டல்ல ஒரே நேரத்தில் பத்தை காதலித்து பாயாசமும் கொடுக்கின்றன. (எப்பிடித்தான் மெயின்டெயின் செய்றாங்களோ? நான் சொன்னது நேரத்தை.) இவர்களின் வாழ்வு எப்படி முடியும் என நான் சொல்லத்தேவை இல்லை. இதை விட காதல் என்ற கடவுளால் இணையும் சில மனங்களும் மணமான பின் முறிவது வேதனையே.
அடுத்து பேசிச் செய்யும் திருமணங்கள். இதில் எனக்கு பெரும்பாலும் உடன்பாடு இல்லை. ஆனால் சில காதல் திருமணங்கள் தோற்கும் போது இது அதை விட மேல் என தோன்றும். ஆனால் பெரியோர் பார்த்து நல்ல நேரத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களும் திசை மாறிப்போகும் காலமிது. இந்த மண முறிவுகள் எதற்கு? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் தமிழர் பண்பாடு. காதலிக்கின்றீர்கள் என்றால் கடைசிவரை இவனுடன் அல்லது இவளுடன் தான் வாழ்வேன் என காதலியுங்கள். காதலில் காமம் இருக்கலாம் காமத்துக்காக காதல் வேண்டாம் அது நிலைக்காது. அதேபோல திருமணவாழ்வில் இணைய முன் சிந்தியுங்கள் அதன் பின் சேருங்கள் கடைசிவரை உங்கள் முடிவை மாற்றாது வாழுங்கள். இந்த நோய் என்ன எதுவுமே உங்கள் வாழ்வை அழிக்காது.
8 கருத்துரைகள்:
மகனுக்கு கலியாண ஆசை வந்தது சத்தியமூர்த்தி அங்கிளுக்குத் தெரியுமா? :P
//காதலிக்கின்றீர்கள் என்றால் கடைசிவரை இவனுடன் அல்லது இவளுடன் தான் வாழ்வேன் என காதலியுங்கள். காதலில் காமம் இருக்கலாம் காமத்துக்காக காதல் வேண்டாம் அது நிலைக்காது. //
தல... கலக்கீற்றிங்க....
நட்சத்திரப் பதிவரா தெரிவுசெய்து உங்களிற்ற இருந்து நிறைய நல்ல பதிவுகளை பெறக் கூடியதா இருக்கு....
நல்ல பதிவு கட்டாயம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம் நன்றி சதீஸ்
நீங்களும் யோசிக்கிறீங்களா???:)))
@கன்கொன் || Kangon
//மகனுக்கு கலியாண ஆசை வந்தது சத்தியமூர்த்தி அங்கிளுக்குத் தெரியுமா?//
அட நீங்களாது சொல்லுங்கப்பா? எல்லூம் சின்ன பிள்ளை என்கிறார்கள் ஒருத்தியும் பார்க்கிறாள் இல்லை.
////காதலிக்கின்றீர்கள் என்றால் கடைசிவரை இவனுடன் அல்லது இவளுடன் தான் வாழ்வேன் என காதலியுங்கள். காதலில் காமம் இருக்கலாம் காமத்துக்காக காதல் வேண்டாம் அது நிலைக்காது. //
தல... கலக்கீற்றிங்க...//
மறுபடியும் சொல்றன் நான் தல இல்லை.
//நட்சத்திரப் பதிவரா தெரிவுசெய்து உங்களிற்ற இருந்து நிறைய நல்ல பதிவுகளை பெறக் கூடியதா இருக்கு...//
என்ன செய்றது பொறுப்பு கூடிவிட்டதே....ஆனால் ஒரு சந்தேகம் இவ்வளவுநாளை அப்போ நான் போட்டதெல்லாம் மொக்கையா?
@றமேஸ்-Ramesh
நான் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறன்.....வருகைக்கு நன்றி.
//அட நீங்களாது சொல்லுங்கப்பா? எல்லூம் சின்ன பிள்ளை என்கிறார்கள் ஒருத்தியும் பார்க்கிறாள் இல்லை. //
அதுக்கெல்லாம் ஒரு 'இது' வேணும் தளபதி...
கவனமெடுங்கோ.... :P
//மறுபடியும் சொல்றன் நான் தல இல்லை. //
சரி தளபதி... :D
//ஆனால் ஒரு சந்தேகம் இவ்வளவுநாளை அப்போ நான் போட்டதெல்லாம் மொக்கையா?//
ha ha.... அப்பிடியில்ல அண்ணே! முந்தி நிறைய சினிமா பதிவு தான் போடுறனியள்... அதுக்காகத்தான் சொன்னன்.... :P
@கன்கொன் || Kangon
//அட நீங்களாது சொல்லுங்கப்பா? எல்லூம் சின்ன பிள்ளை என்கிறார்கள் ஒருத்தியும் பார்க்கிறாள் இல்லை. //
அதுக்கெல்லாம் ஒரு 'இது' வேணும் தளபதி...
கவனமெடுங்கோ.... :P
//மறுபடியும் சொல்றன் நான் தல இல்லை. //
சரி தளபதி... :D
எதுங்க வேணும்....அனுபவஸ்தர் சொல்லிக்கொடுங்கள். மறுபடியும் சொல்றன் தளபதியும் இல்லை. தளபதிகளுக்கு நடந்த நிலை தெரியும் தானே அப்புறமும் நான் மாட்டுப்படனுமா? என்ன ஒரு நல்லெண்ணம்.
//ha ha.... அப்பிடியில்ல அண்ணே! முந்தி நிறைய சினிமா பதிவு தான் போடுறனியள்... அதுக்காகத்தான் சொன்னன்.... :P//
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
@SShathiesh-சதீஷ்.
//திருமணம் முடிக்கப்போறிங்களா ஆபத்து காத்திருக்கின்றது//
அதுவும் இந்தியாவல் திருமணம் செய்தால் பேராபத்து காத்திருக்கின்றது... ஆம் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டங்களை சிறு பிரச்சனைக்கெல்லாம் பயன்படுத்தி மணமகன் வீட்டாரையும் அவர்தம் குடும்பத்தையும் கூண்டொடு ஜெயிலில் அடைக்கலாம் விசாரனை கைதிகளாக... இதற்கு அடுத்த கட்டம் பண பெரம் அல்லது பெண்உருவில் இருக்கும் மிருகத்தொடு சேர்ந்து வாழச்சொல்லி கட்டாயப்படுத்துதல்... இதில் மனிதநேயம் மிக்க காவல் துறை குறுக்கிடுகள்
இந்த சட்டத்தால் இதுவரைக்கும் சுமார் 1,50,000 க்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் "விசாரனை கைதிகளா" சிறையில் அடைப்பட்டுள்ளர் மற்றும் இது போல் பதியப்படும் வழக்குகள் 90 சதவீதம் பொய்வழக்குகள் என்று உச்சநீதிமன்றும் தெருவித்துள்ளது... இதுபோல் பொய்வழக்கு பதிவு செய்யும் பெண் உருவில் உள்ள மிருகங்களை "சட்டப்பூர்வ தீவிரவாதிகள்" என்று உச்சநீதிமன்றும் முத்திரை குத்தியுள்ளது..
//இன்று சிலருக்கு காதல் என்னும் போர்வையில் காமம் தேவைப்படுகின்றது. அந்த மோகம் முடிந்த பின்னர் வாழ்க்கை வெறுத்துப்போகின்றது. இதனால் சில காதல் திருமணங்கள் முறிந்து விடுகின்றன//
ஆம் தற்பொழுது நம் நாட்டில் இது போல் பெண்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் உள்ளன... கள்ளக்காதலை கண்டித்தால் 498ஏ வரதட்சணை சட்டம் பாயப்பட்டு மணமகன் வீட்டார் அனைவரும் உள்ளே தள்ளப்படுவார்கள்.. இதுபோல் மண முறிவுகளால் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன மற்றும் வருங்காலத்தில் தந்தை பெயர் அறியா தந்தை அரவணைப்பறியா குழந்தைகள் (எனது குழந்தைபோல்) பெருகும்...
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே,
வரதட்சணை கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி..
@498ஏ அப்பாவி
நீங்கள் சொன்னவை சிந்திக்க வேண்டியவை. பல ரோசம் கேட்டவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் சொந்தக்காலில் நிர்க்கத்தெரியாதவர்களின் செயல்கள். எப்போது மாறுமோ? கருத்துக்கு நன்றி.
Post a Comment