இது என் 154வது பதிவு. 150இல் சொல்லி இருக்கலாம் மறந்து விட்டேன். நட்சத்திரப்பதிவரானது பதிவெழுதும் வேகத்தை அதிகரித்திருக்கின்றது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அனானி தாக்குதலும் ஆரம்பித்திருக்கின்றது. சந்தோசமாக இருக்கின்றது. தொடர் மசாலா பதிவுகள் வரும் நிலையில் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இதை தரலாம் என நம்புகின்றேன். என்னை தொடரும் பதிவர்கள்,வாசகர்கள்,பின்னூட்ட வாதிகள்,திரட்டிகள் எல்லோருக்கும் என் நன்றிகள்.
தட்டச்சு என்றவுடன் நமக்கு பல நினைவு . இந்த தட்டச்சின் பரிணாம வளர்ச்சியில் இப்போது மருத்துவத்திலும் நுழைந்து நோயை குணப்படுத்துகின்றது. பேசுவதன் மூலம் தட்டச்சு செய்வது பிரபலமாக இருக்கும் ஒரு முறை. இது தொழில் உலகம் சார்ந்தது. இந்த நிலையில் ஆபத்துக்காலத்தில் சிலருக்கு பேசவே முடியாமல் போய்விடும். நாக்கு குளறலாம், காகா வலிப்பு வரலாம், முடக்குவாதம் கோமா கூட வரலாம். அப்போது என செய்வது?
இதற்க்கு விடைதான் இப்போது கிடைத்துள்ளது. புதிய முறையில் தட்டச்சு முறை மூலம் நோயை தீர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது நோயாளிகளின் நினைவுகளை கணினியில் தட்டச்சு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவலை தட்டச்சு முறை மருத்துவ உலகின் முக்கிய சாதனை என தெரிவிக்கின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment