இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போயகொண்டிருக்கையில் அதில் விளையாடும் சர்வதேச வீரர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் இடி தரும் செய்தி ஒன்றை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
சர்வதேச வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுவது மட்டுமன்றி பணம் பார்க்க தெரிந்தெடுத்தது ஐ.பி.எல்தான்(இங்கே நடக்கும் கூத்து பற்றி விரைவில் ஒரு பதிவிட எண்ணி உள்ளேன்.) இப்போது அதற்கே ஆப்பென்றால் யார்தான் நிம்மதியாய் இருக்க முடியும். அனால் ஐ.சி.சியை வளைத்துப்போட்டு விடு சர்வதேச அங்கீகாரம் உள்ள போட்டியாக இதை மாற்றலாம் என்பதே லலித் மோடியின் எண்ணமாக இருந்தது. பல சர்வதேச வீரர்கள் முழுமையாக இந்த தொடரில் பங்குபெற முடியாமல் இடை நடுவே வந்து சேர்ந்துள்ளனர். இது போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்தது மட்டுமன்றி, சில அணிகளை பாதித்தும் இருக்கின்றது.
இந்த நிலையில் ஐ.சி.சியின் தலைவர் லோகார்ட் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்லுக்கேன்று தனியான காலகட்டத்தை ஒதுக்கும் எண்ணம் இல்லை. அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கும் இப்படி செய்வது கடினமானது. எதிர்காலப் பயணத்திட்டம் என்பது சர்வதேச தொடர்களுக்கு மட்டுமே என்றும் மேலும் ஐ.பி.எல் நிர்வாக குழு கூட இது பற்றி தம்மிடம் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் T20போட்டிகள் கிரிக்கெட்டில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது உண்மைதான் அதற்காக டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளை கைவிட முடியாதென்று கூறிய அவர் ஒருநாள் அரங்கில் அண்மையில் தான் சச்சின் இரட்டை சதத்தை தொட்டு புதிய சரித்திரம் படைத்தார். போட்டிகளும் சுவாரஷ்யமாக உள்ளன. எனவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அழிவில்லை. ஆனால் இந்த வகைககளை எப்படி நிர்வகிப்பது முக்கியம் என்றே அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பல சர்வதேச வீரர்கள் ஐ.பி.எல்லில் பங்குபற்றுவதில் சிறு சிக்கல்கள் வந்தாலும் சர்வதேச நட்சத்திரங்கள் இங்கேயும் ஜொலிப்பது தவிர்க்க முடியாததே.
0 கருத்துரைகள்:
Post a Comment