உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Saturday, February 20, 2010

ESPN-Cricinfo விருதுகள்-படங்களுடன் ஒரு பார்வை.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டுக்கான ESPN-Cricinfo விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளிலும் உள்ள சிறந்த வீரர்கள் இந்த களத்தில் மோதினர் சுவாரஸ்யமான இந்த போட்டியில் வெற்றியாளர்களை தீர்மானித்த நடுவர்கள் இவர்கள் தான்.

Jury

Sambit Bal Editor, Cricinfo

Harsha Bhogle Television presenter and writer

Geoff Boycott Former England batsman, commentator

Ian Chappell Former Australia captain, commentator, columnist

Daryll Cullinan Former South Africa batsman, commentator

Peter English Australasia editor, Cricinfo

Tony Greig Former England captain, commentator

David Lloyd Former England coach, commentator

Sanjay Manjrekar Former India batsman, commentator

Andrew Miller UK editor, Cricinfo

Dileep Premachandran Associate editor, Cricinfo

Ramiz Raja Former Pakistan batsman and captain, commentator

Peter Roebuck Former Somerset captain, writer

Osman Samiuddin Pakistan editor, Cricinfo


இந்த நடுவர்களினால் வீரர்களின் கடந்த ஆண்டு சாதனைகள் பெறுபேறுகள் கணக்கில் மகுடம் சூட்டப்பட்டுள்ளனர்.


வீரர்களின் செயற்பாட்டுக்கு அமைய நடுவர்களின் தெரிவுகள்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை இலங்கைக்கு எதிராக பெற்ற 293 ஓட்டங்களின் உதவியுடன் அன்று ஸ்டாஸ் மற்றும் கிரிஸ் கெயிலை வென்று இந்தியாவின் மினி சூறாவளி விரேந்தர் சேவாக் தனதாக்கிக்கொண்டார்.



மினி சூறாவளி கிளம்பியதே விரு தாண்டவம் தொடங்கியதே.....

ஜமைக்கா டெஸ்டில் பெற்ற எட்டு விக்கெட்டுக்கள் பெறுதியுடன் டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளருக்குரிய விருதை தட்டி இருக்கின்றார் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர்.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்.....

ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சந்தேகமே இன்றி சாதனை நாயகன் சச்சின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஓட ஓட விரட்டிய 175 ஓட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் இந்தியாவின் வசம் துடுப்பாட்ட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ நான் ராஜ துடுப்பாட்டத்தில் எப்பவும் ராஜா.....

ஆனால் பந்துவீச்சில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானின் சகித் அப்ரிடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தன் சிறந்த பெறுபேறான 6-38 இன் மூலம் இந்த விருதை தட்டிச்சென்றார்.

பந்தையும் கடிப்பேன் விக்கெட்டும் எடுப்பேன் எனக்குள்ளே ஏதோ நடந்துபோச்சு....

போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக T20உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியாவை துவைத்தெடுத்த மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கறுப்பு சிங்கமொன்று புறப்பட்டதே......


பந்துவீச்சில் ஆறு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த உமர் குல் தெரிவு செய்யப்பாட்டுள்ளார்.


தனியே தன்னந்தனியே நானும் சிலவேளை இப்படி எடுப்பேன்.....


டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த மேலும் சில விருதுகள்.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர். - கெளதம் கம்பீர்.

கம்பீரமான பல டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர்.

சிறந்த ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி.- அவுஸ்திரேலியாவின் சைமன் கடிச்-ஷேன் வட்சன்.

நாங்க புதுசா இணைந்து கொண்ட ஜோடிதானுங்க.


சிறந்த டெஸ்ட் இணை.-மஹேல-திலான் சமரவீர. (இலங்கை.)

நாங்கதான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு.


சிறந்த பந்துவீச்சாளர்.- மிட்சல் ஜான்சன்(அவுஸ்திரேலியா.)


எகிறி எறிந்தேன் விக்கெட் விழுந்தது.


ஒருநாள் போட்டி விருதுகள்.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்-விரேந்தர் சேவாக்(இந்தியா)


அங்கேயும் நானே இங்கேயும் நானே பந்தினை பஞ்சராய் தினம் அடிப்பேனே.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர்- ஜேம்ஸ் அன்டர்சன்(இங்கிலாந்து)

நான் போட்டா அடிக்கமாட்டாய்..

சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து.

ரொம்ப நல்லவங்கையா....

டெஸ்ட் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி-இந்தியா.


நம்பர் 1க்கு வந்தது பெரிய விசயமப்பா.


ஒருநாள் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி- இந்தியா.


ஏறு முன்னேறு இங்கும் நம்பர் வன் அடையும் நாள் தொலைவில் இல்லை.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர். - ஸ்டுவர்ட் பிரவுட்.(இங்கிலாந்து)


எல்லாம் அவன் செயல் அப்பாடா இந்த முறை யுவராஜிட சிக்கல.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்.-கெளதம் கம்பீர்.(இந்தியா.)



எங்கேயும் போதும் நான் தாண்ட நம்பர் வன்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Share:

Friday, February 19, 2010

சச்சின்+ தோணி = நொறுக்ஸ்.

இன்றைய தினம் எனக்கு எதிலும் மனது போகவில்லை. தொடர் சிக்கல்கள் வெறுப்புகள் என்னை நிலை குலைய வைக்கின்றன. என் தனிப்பட்ட வாழ்வு சிக்கலில் உதவிக்கொண்டிருக்கும் என் உறவினர்கள் நண்பர்களுக்கு நன்றிகள். என் கோபம், ஏமாற்றம், மனக்குழப்பங்களில் இருந்து வெளிவர ஏதாவது புதுசா செய்ய வேண்டுமே என தோன்றிக்கொண்டிருக்கையில் என் புகலிடம் பதிவுகள். அதனால் தான் நேற்றும் இன்றும் என் பதிவுகள் தொடர்கின்றன.....

என்ன எழுதலாம் புதிதாக யோசிக்க மனம் இல்லை.(மண்டைக்குள்ளும் ஒன்றும் இல்லை என நீங்கள் சொல்வது கேட்கின்றது.) இந்தியாவின் இரண்டு கதாநாயகர்கள் பற்றிய சில சுவாரஷ்யங்கள்.


ஒருமுறை நடிகர் அஜய்தேவ்கான் தன் மகனுடன்(சிறுவன்) காரிலே வீதியில் சென்றுகொண்டிருக்கையில் சச்சின் விளம்பர பலகையை பார்த்து விட்டு மகன் துள்ளிக்குதித்திருக்கின்றார். அஜய் மகனிடம் உனக்கு சச்சினை பிடிக்குமா என கேட்டதுக்கு ஆமா ரொம்ப பிடிக்குமே என அவன் பதில் சொல்லி இருக்கிறான். அஜய்யும் ஆவலுடன் ஏன் என விசாரிக்க அதுதான் நான் சாப்பிட்டும் பிஸ்கட்டை தினமும் கூவிக்கூவி விக்கிறாரே என்றானே பார்க்கலாம்.

பிஸ்கட் மாமா.

அடுத்தும் சச்சின் பற்றிய செய்தியை தந்துவிட்டு டோனியிடம் போகலாம் என நினைக்கின்றேன். ஒருமுறை சச்சினிடம் நிருபர்கள் லதா மங்கேஷ்கர் பற்றி கேட்டுள்ளனர் லிட்டில் மாஸ்டரோ கூலாக என் தாயை பற்றி நினைப்பதை எப்படி உங்களுடன் பகிர முடியும் என்றாரே பாருங்கள். அந்த இசை அரசியை தாயாக எண்ணி சச்சின் போற்ற அவரும் சச்சினுக்காக பூஜை செய்துள்ளார். பெற்றால் தான் பிள்ளையா? சச்சின் எத்தனை வீட்டின் செல்லப்பிள்ளை.

ஆசை நூறுவகை.

அடுத்து இப்போதைய நாயகன் தோனியை பற்றி நான் அறிந்த சில....

1. ராஞ்சியில் பாடசாலை கால்பந்தாட்ட அணி கோல் காப்பாளராக இருந்த இவரை கிரிக்கெட் பக்கம் திருப்பியவர் கே.ஆர்.பானர்ஜி.

2. விட்டுக்கொடுக்காதே இதுதான் தோனிக்கு பிடித்த வாசகமாம். ஆட்டோகிராப் கொடுக்கும் போது தவறாமல் இதை எழுதிவிடுவாராம்.

3. தலைவருக்கு ஊசி என்றால் பயமாம். மாத்திரை எத்தனை கொடுத்தாலும் எடுத்துக்கொள்வாராம்.

4. டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு சென்றபோது ரன்வேயில் அதிவேக ஜாக்குவார் போர் விமானத்தை தன் டுகாட்டி பைக்கில் துரத்த வேண்டும் என்ற ஆசையை கூறி அதற்க்கு இணையாக சில நொடிகள் செலுத்தியும் காட்டினார்.

5. மும்பையை சேர்ந்த சப்னா பாவ்னானி என்ற பெண்தான் தோனியின் அழகிய கூந்தலை வெட்டியவர். தல தலையை வெட்டுவது இங்கேதான்.

6. ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாமின் தீவிர ரசிகர். அவரை போலவே உடுத்தும் ஆர்வம் கொண்டவர் அதனாலேயே தனக்கு ஏதும் வாங்கினால் இப்போது தோனிக்கும் சேர்த்து வாங்கிவிடுகின்றார் இவர்.



என்ன பிரபலங்கள் என்றால் ஆசை இருக்காதா? தன் முன்னாள் ஆசை நாயகியுடன்

Share:

ரஜினி-விஜய்-அஜித்-குழப்பங்கள்.

கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் உள்ளதை உள்ளபடி பேசினார். விஜய் ரசிகனாக இருந்தாலும் அந்த இடத்தில் அஜித் என்னும் தைரியசாலிக்கும் உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கும் ஒருநிமிடம் நானும் அஜித் என்னும் வீரனுக்கு ரசிகனானேன். எழுந்து நின்று கைதட்டிய ரஜினியின் மனிதத்தன்மையை எண்ணி மனம் மகிழ்ந்தேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அசல் நாயகன் என தல நிரூபித்து விட்டார். அஜித்தின் பேச்சு சரியா தவறா என்ற விவாதத்தில் என் தீர்ப்பு சரியல்ல. மிக மிக சரி.ஆனால் இதற்க்கு பின் நடந்த கலைஞர் தொலைக்காட்சியில் அஜித்தின் காட்சி நீக்கம் எல்லாவற்றுக்கும் காரணம் விஜய் தரப்பு என்ற பேச்சு எழுந்தது. சிலவேளைகளில் இது உண்மையாக இருக்கலாம் யார் கண்டார். ஆனால் விஜய்க்கும்-கலைஞர்க்கும் இப்போது எட்டாப்பொருத்தமாக தோன்றும் நேரத்தில் இது எந்தளவிற்கு சாத்தியமானது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. வேண்டுமென்றே விஜய்-அஜித் எதிர்ப்பினை தூண்டுகின்றார்களா என்ற கேள்வியும் உண்டு? விஜய் தரப்பு அப்படி செய்ய காரணம் நான் அறியேன்? (கலைஞருக்கு விஜய் அம்புட்டு முக்கியமா ஐயா? அவர் தான் இப்போ டம்மி பீஸ் என்கிறார்களே.) மீறி செய்திருந்தால் அதை விட அசிங்கம் ஏதுமில்லை.



இது இப்படி இருக்க அஜித்தின் பேச்சுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வந்த ரஜினி இப்போது பின் வாங்கி இருக்கின்றார் என சொல்லவேண்டும். ரஜினி ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள் என் சந்தேகங்களே இவை? அத்தனை பேர் இருந்த மேடையில் மனதாரப் பாராட்டி மனிதனாக உயர்ந்து நின்ற ரஜினி இப்போது அஜித் தன் மனதில் உள்ளதை தான் பேசி இருக்கின்றார். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் வர வைக்கவில்லை என நேரெதிர் பல்டி அடித்த காரணம் யாதோ? அரசியல் அல்லது எந்திரன் வரும் நாள் நெருங்குதல் அல்லது தன் மகள் திருமணத்துக்கு பெரியவர் வந்து வாழ்த்தியது அல்லது மிரட்டல் இதில் ஏதோ ஒன்று இல்லாமல் இல்லை. இல்லையேல் ரஜினி என்ன சுயநலவாதியா? தன் பின் ரஜினி பலமாக இருக்கின்றார் என நம்பிய அஜித்துக்கு வைத்த ஆப்பா? அல்லது இதுவும் விஜயின் அரசியலா? (சும்மா தமாசுக்கு)



ரஜினி மறுத்தால் என்ன மறுக்காவிட்டால் என்ன அஜித் சொன்னது சரியே. அதற்காக சிலர் சொல்லலாம் அவர் தமிழின எதிரி எனவும் நான் அஜித்தின் கொள்கை பரப்புச் செயலாளர் எனவும். அவர்களுக்கு மீண்டும் சொல்கின்றேன் நான் விஜயின் பரமவிசிறி. கருணாநிதி அவர்களின் பாராட்டு விழாக்களில் பங்குபற்றி அதிகம் சலித்துப்போன ரஜினிக்கு இதுவும் சலித்ததால் அன்று கைதட்டி விட்டு இன்று மீண்டும் கலைஞரை சந்தித்த பின் கைகட்டுகின்றாரா? சரி அதையும் விடுவோம். அஜித் இன்று பெரியவரை சந்திக்க காரணம் ஏதோ? அன்று பேசியதற்கு மன்னிப்பா? அல்லது விளக்கமா? அல்லது மீண்டும் யாரும் மிரட்டுகின்றார்கள் என்ற தனிமையிலான கம்பிளையிண்டா அல்லது ரஜினியே அஜித்திடம் மன்னிப்புக்கேட்டு விடுங்கள் என சொன்னாரா? ரஜினியின் சொல்லை கேட்டு நடக்க அஜித் ஒன்றும் அவர் கைப்பிள்ளையும் இல்லை குழந்தையும் இல்லை என சொல்லலாம். ஆனால் இது அறிவுரையாக இருந்திருக்கலாம்.

உண்மைகள் ஏனோ உறங்கிக்கொண்டிருக்கின்றன. தெரிந்தவர்கள் என்ன நடக்கின்றது என சொல்லிவிடுங்கள். இல்லையேல் காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் அஜித் அசலா நசலா என்றும் ரஜினி நல்லவரா கெட்டவரா என்றும் விஜய் வேட்டைக்காரனா வேசக்காரனா என்றும்? காத்திருப்போம்.

ஜாக்குவார் பிரச்சனை போன்றவற்றை வைத்து பார்க்கும் பொது தல, நீங்க அல்டிமட் ஸ்டார் பட்டத்தை எடுத்த பின் கெட்டகாலம் கூடி இருக்கு ஏதோ பாத்து செய்யுங்க.
Share:

Thursday, February 18, 2010

ரஜினி-விஜய்-அஜித்துக்கிடையில் மோதல்- கலக்கத்தில் விஜய்.

மனவிரக்தியின் உச்சத்தில் இருக்கின்றேன் நான். என் தனிப்பட்ட சில முடிச்சுக்கள் எப்போது அவிழும் என தெரியாமல். இன்று அந்த முடிச்சுகளில் ஒரு முடிச்சை அவிழ்க்கும் தேடலில் நான் ஈடுபட்ட போது எனக்கு தட்டுப்பட்ட சுவாரஷ்யமான இரண்டு விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன். இவை கொஞ்சம் பழைய விடயங்கள் தான் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் தான் ஆனால் பலரின் பார்வையில் பட்ட ஒன்று இப்போது என்னால் மீண்டும்.இன்றைய நிலையில் பார்த்தல் சரியாக தான் தோன்றும். நீங்களும் வாசித்துப்பாருங்கள் கருத்தை சொல்லுங்கள். இவர்களை வைத்து இரண்டு பதிவுகள் இடவேண்டும் என எண்ணியுள்ளேன் நேரமும் மனமும் கிடைத்தால் விரைவில் வரும். இன்று தூக்கம் வரவே இல்லை. சிலவேளை எனக்குள் ஒரு வெறி (தப்பான வெறி என என்னிடாதிங்க.) வந்தால் அவை இரண்டும் இன்றே வந்தாலும் வரும்.....ஏதோ பாத்து நடந்துக்கோங்க.

படத்தில் சொடுக்கி பெரிதாக்கிப்பாருங்கள்.










Share:

Friday, February 5, 2010

தியேட்டருக்கு வருகின்றது கிரிக்கெட்.



ஆயிரம் சினிமா தியேட்டர்களில் ஐ.பி.எல் போட்டிகளை காட்ட ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் இருந்து போட்டியை காணும் பரவசத்தை தரும் வகையில் Digital வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை நடைபெறும் அத்தனை போட்டிகளும் இனி திரை அரங்குகளில் அமர்க்களம் பண்ண காத்திருக்கின்றன.

இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இறுதிப்போட்டி உட்பட ஒரு சில போட்டிகளை 3d மூலம் காட்டும் திட்டமும் உண்டாம். (சினிமாகாரர் கவனிக்க.) வீட்டில் பார்த்தால் ஆயிரம் தொல்லை என நினைப்பவர்களுக்கு இந்த வரப்பிரசாதம் கிடைத்துள்ளது. இடைநடுவே விளம்பரம் என்ற கழுத்தறுப்புகள் இல்லை. சூடேற்ற பெண்களின் ஆட்டமும் இடம்பெறுமாம்.(கண்டிப்பாய் கூட்டம் கூடும். நம் பதிவர்களில் சுடும் பதிவரும், கடல் ஏறுபரும், நமீதாவுடன் சம்பந்தப்பட்டவரும், அண்மையில் விடைபெற்றவரும் இன்னும் சில நல உள்ளங்களும் இப்போதே தயாராவதாக கேள்வி.)

இந்த காலகட்டத்தில் பெருமளவான படங்கள் வெளிவராது என்றாலும் ஏப்ரல் 14 அன்று சில முக்கிய படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வீட்டில் பெண்கள் மெகாத்தொடர் பார்க்க பெரியவர்களும் ஆண்களும் தியேட்டரில் பார்க்க என்னையும், யோ வாயிஸ்,சுபாங்கன் போன்ற பச்சிளம் பாலகர்கள் எங்கே சென்று பார்ப்பது சொல்லுங்கள். அடடா இப்பதான் தூக்கத்தில் இருந்து எழும்பினேன் இது இந்தியாவில் தான் இலங்கையில் இல்லை என்ன.?
Share:

சிம்பு மீண்டும் வம்பு- "கோ"விலிருந்து GO




அயன் படத்தை தொடர்ந்து கே.வி ஆனந்த இந்த கோ என்ற படத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அவர் Go சொன்ன ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. முதலில் பருத்தி வீரன் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி, கதையில் தனக்கேற்ப மாற்ற சொல்ல கே.வி மறுத்து விட்டார். அழைத்தார் சிம்புவை வம்பெல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு வந்து நல்ல பிள்ளையாக நின்றார். கதையே சொல்ல தேவை இல்லை. நடித்துக்கொடுத்து விட்டு போகின்றேன் என்றவர் பின்னர் தன பிறந்தநாள் அன்று தனக்கும் கே.விக்கும் இடையில் ஒத்துவரவில்லை எனவே பிரிந்து விடுவோம் என அறிவித்து விட்டார். இதன் உள் குத்து வெளிக்குத்துகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்போதான் ஏதோ வம்பெல்லாம் விட்டு அழகான பையனாக விண்ணை தாண்டிவர அழைத்த சிம்பு மீண்டும் தன் பெயரை காப்பாற்றி விட்டார்.(அதுதாங்க வம்பு பண்றது.) லிட்டில் சூப்பர் ஸ்டாரில் இருந்து யங் சூப்பர் ஸ்டார் ஆனவர் மேச்சுருட்டி வந்தது போல பேட்டியும் கொடுத்தார். அட சிம்பு திருந்தி விட்டார். இனி நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றால் மீண்டும் இப்படி ஒரு செய்தி.

அடுத்து என்னதான் நடக்கும்? யார்தான் ஹீரோ? என விசாரித்ததில். அண்மையில் பெரிய வெற்றிப்படம் எதையும் கொடுக்காத ஜீவாவை கே.வி ஆனந்த் அணுகியதாக சொல்லப்படுகின்றது. சிங்கம் புலி,கச்சேரி ஆரம்பம் படங்களில் நடிக்கும் ஜீவா அடுத்து இதில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்களாவது இந்த படத்தை முடிச்சு கொடுங்கப்பா.

இந்த படம் மூலம் ராதாவின் மகள் கார்த்திகா அறிமுகமாவாது குறிப்பிடத்தக்கது. முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்க, ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைக்கின்றார். ஜீவாவாது "கோ"வாவாரா அல்லது Goவா பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

Wednesday, February 3, 2010

அசல் விமர்சனம்.

Ultimate Star என்ற பட்டத்தை விட்டு அன்புமணியின் அநியாய எதிர்ப்பையும் மீறி வரும் தலயின் அசல் திரைப்படத்தின் விமர்சனம் தான் இது.


தல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்த படம் இந்த அசல். சரண்-அஜித்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணியின் இன்னொரு அற்புத படைப்பு. திருப்பாச்சியில் ரவுடியாக ஒரு அஜித்(இவரின் உடை எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.)ஆனால் எதிலும் வித்தியாசம் விரும்பும் அஜித் இங்கே போட்டிருப்பது பில்லா ஸ்டைலில் கோட் சூட். அவருக்கு ஜோடியாக நம் பாவனா. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அடுத்த அஜித் இளமையாக பெண்களை கவரும் இன்னொரு காதல் மன்னன். இவரின் ஜோடியாக என் கனவுக்கன்னி சமீரா ரெட்டி.வழக்கம் போல காதல் காட்சிகளில் அமர்க்களம் பண்ணுகின்றார் அஜித். சமீரா ரெட்டியின் அழகை மீண்டும் ஒரு தடவை கண்கொண்டு பார்க்கும் படி காட்டி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர். கதை என்ன வென சொன்னால் சுவாரஷ்யம் இருக்கதேன்பதாலும் முதலிலேயே விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவாவிலும் சுருக்கமான விமர்சனமாக தருகின்றேன். அஜித் இரண்டுவேடங்களில் வந்தாலும் இருவரும் ஒருவருடன் ஒருவர் மோதும் காட்சி வரவேண்டும் என்பதற்காக அஜித்-சமீரா ரெட்டி காதல் வானில் சிறகடிக்கப் போகும் போது தாதா அஜித்திடம் மாட்டி தப்பிப்பதே கதை. எதற்க்காக மாட்டினார்கள் எப்படி மாட்டினார்கள் இருவரும் யார் யார் என்பதே மீதிக்கதை.


இரண்டுவேடகளிலும் பிளந்து கட்டி இருக்கின்றார் அசல் நாயகன். கதாநாயகிகள் அழகோ அழகு. பிரபுவுக்கு இந்த இரண்டு அஜித்தின் அப்பா கதாபாத்திரம். மனிதர் சிவாஜியை நினைவூட்டுகின்றார். பரத்வாஜ் மீண்டும் ஒருதடவை தன் இசையால் கொள்ளை கொள்கின்றார். எங்கே எங்கே பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். சரணின் நேர்த்தியான திரைக்கதை சுவாரஷ்ய முடிச்சுக்கள் என்று அஜித்தின் அசல் தான் நிஜமான அசல் நாயகன் என்பதை நினைவூட்டி உள்ளது. Ultimate Star பட்டத்தை துறந்ததற்கு அஜித்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை பார்த்தாவது மற்ற நாயகர்கள் தளபதிகள், டாக்டர்கள் திருந்தி நல்ல படங்களை தருவார்களா பார்க்காலாம்


இதையும் படிங்க....

அஜித்-சரண் கூடனியில் இன்னொரு மொக்கைப்படம் அசல். பருந்தை பார்த்து ஊர்க்குருவி பறக்க நினைத்தது போல ஆகிவிட்டது அஜித் நிலைமை. பில்லாவை ரீமேக்கி ரஜினியாக நினைத்தவர் இதிலும் அதை தொடர்வதை ஏற்க முடியவில்லை. (தன் போட்டியாளருக்கு இந்த விடயத்திலும் தான் சளைத்தவர் இல்லை என நிரூபித்துள்ளார்.)

கதை?????அதை தேடவேண்டியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த படம் தொடர்பான ஸ்டில்ஸ்களை பார்க்கும் போதே இது இன்னொரு பில்லா என நினைத்தது சரியாயகிவிட்டது. ஆனால் வெற்றி பெறுமா என்பது கேள்வியே. அஜித்தின் உடல் தாங்கமுடியவில்லை. அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் நடனம் என்ற பெயரில் துள்ளிக்குதிப்பது என்ன கொடுமை சரவணா என பிறப்பு இருந்தும் சொல்லலையே என பார்ப்பவர்களை கடுப்பாக்குகின்றது. மற்றபடி அஜித்தின் வழக்கமான இரட்டை வேட படங்களில் என்ன செய்தாரோ அதே போல நடந்து (நடித்து அல்ல) விட்டு போகின்றார்.


பாவனா என்ற நடிகை இனி எங்கே என தேடவேண்டிவரும். இப்படி ஒரு படத்தில் நடித்து விட்டோமே என இனி சமீரா ரெட்டி தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார். பிரபு இன்னுமா நீங்கள் இந்த தறுதலைய நம்புகின்றீர்கள். பரத்வாஜ் இசை என்ற பெயரில் ஏதோ ரணகளம் பண்ணுகின்றார். சரண் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தன்னை காட்டியவர் இப்போது அப்படி என்றால் என்ன என கேட்கும் நிலை. அஜித்தின் நிலை மேலும் படுகுழியில். மொத்தத்தில் இந்த அசல் ஒரு நசல்.

என்ன பார்க்கிறிங்க இரண்டு மாதிரி விமர்சனம் இருக்கு என்றா? என்ன செய்வது. படத்தை பார்த்து விட்டு நம் பதிவர் குலம் இதில் இரண்டில் ஒன்றை எழுதும் அல்லது இரண்டையும் மிக்ஸ் பண்ணி எழுதும். இன்னும் சில புண்ணியவான்கள் என் இந்த பதிவையே விமர்சனம் என எண்ணி கொப்பி பண்ணி போட்டு விடுவர். இதை தான் கொஞ்சம் முதலே நான் செய்து பார்த்தேன். நம்ம தமிழ் பட ஸ்டைலில் ஒரு பதிவு. ரசித்தவர்கள் கருத்தை சொல்லுங்கள். சூடானவர்கள் திட்டிவிட்டுபபோங்கள். மற்றும் படி இது யாரையும் புண் படுத்த அல்ல.
Share:

Monday, February 1, 2010

ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை.



நடிகை கனிகா, அழகும் திறமையும் ஒருங்கே கொண்ட நடிகை. சுசி கணேசன் இயக்கிய இவரின் முதல் படம். அறிமுகமே அட்டகாசமாய் கனமான பாத்திரமாய் அமைந்தது. அதிலேயே அசத்தியவரை ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறில் கானம் உடிந்தாலும் ஏனோ அவரை முன்னணி நடிகையாக ஏற்கவில்லை தமிழ் சினிமாக்காரர்கள்.

நீங்கள் இல்லாவிட்டால் என்ன மலையாளம் இருக்கின்றது என அங்கெ ஒதுன்கியவரை செங்கம்பளம் விரித்து வரவேற்றது மலையாள திரை உலகம். அங்கிருந்து கொண்டே தெலுங்கு, கன்னடத்திலும் அசத்துகிறார். அவரின் நடிப்பின் மணி மகுடம் பாக்கிய தேவதை படம் மூலம் கிடைத்தது. திருமணம் அனால் ஒதுக்கும் கலாசாரம் தழிலில் இருக்க அதை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் மலையாளத்தில் அவர் நடிப்பில் வந்த இந்த திரைப்படத்துக்கு கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருதை எட்டுத்தடவை பெற்றுள்ளார் கனிகா.

கவர்ச்சி வேண்டும் முன்னணி கதாநாயகர்களை கட்டிப்பிடித்து நடிக்கவேண்டும் என ஏங்கிக்கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் தன் நடிப்பில் நம்பிக்கை வைத்து விருதை குவிக்கும் கணிகாவிற்கு வாழ்த்துக்கள். எப்போதுதான் திருந்தும் நம் தமிழ் திரை உலகம்??????????????????.
Share:

Thursday, January 28, 2010

தன்னை தானே அடித்து துவைத்த போப் பாண்டவர்.



இந்த உலகில் அடுத்தவர்களை துன்புறுத்தும் மனிதர்கள் இருக்கும் இந்த நிலையில் உன்னதமான இடத்தில் இருக்கும் ஒருவர், ஒரு மதத்தின் உன்னத குருவாக இருந்த ஒருவர் தன்னை தானே வதைத்ததை இன்று இணையத்தில் மேய்ந்தபோது அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான கிறிஸ்தவராக இந்த உலகில் தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காக போப் இப்படி நடந்தார் என்று Why He's a Saint என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நடக்கும் பாவங்களை எண்ணி வருந்தி அவர் இந்த தண்டனையை தனக்கு கொடுத்ததாக அதில் சொல்லப்பட்டுள்ளது.

இதை நம்பலாமா இல்லையா என்ற கேள்வி ஒருசிலருக்கு எல்லாம் ஆனால் இதை சொல்பவர் போப்க்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கிய இடம் பிடித்த மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதை பற்றி கருத்து தெரிவித்த நூலாசிரியர் போப் தன்னை வருத்தியத்தில் தவறில்லை என்றும் கிறிஸ்தவர்கள் சிலர் இயேசு சிலுவையில் அறைந்ததை நினைவு கூரும் முகமாக இப்படியாக தம்மை வருத்துவது வழக்கமான ஒரு விடயம் என சொல்கின்றார்.

இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.

போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.

உண்மையில் ஆச்சரியம் மட்டுமல்ல மரியாதையும் கவலையையும் தரும் ஒரு செயல் தான் இது. மதங்களை தாண்டி ஒரு மனிதனாக போப்க்கு தலை வணங்குகின்றேன்.

பி.கு: கிட்டத்தட்ட ஒரு மாதமாக எனக்கு பதிவெழுத ஏனோ தோன்றவில்லை. காரணங்கள் பல சொல்லலாம் மாத ஆரம்பத்தில் எங்கள் வானொலி சார்பாக யாழ் விஜயம், வந்திறங்கியவுடன் சுகவீனம், அதன் பின் என் தனிப்பட்ட சில ஆணி பிடுங்கல்கள் என போய்க்கொண்டிருக்க இன்று ஏனோ இந்த செய்தியை படித்தவுடன் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என முடிவெடுத்து எழுதிவிட்டேன். நாங்கள் தான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்சையே கேட்க மாட்டோமே. அடிக்கடி வருவேன் என்ற நம்பிக்கையில் வேட்டையை ஆரம்பிக்கின்றேன்.

அறுவை: நண்பர்களுக்கு பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி
Share:

Thursday, December 31, 2009

சினிமாலை-2009



வெற்றி எப். எம் வானொலியில் ஞாயிறு மாலை 3-5 மணிவரை சினிமா செய்திகள்,புதிய பட விமர்சனம், சிறப்புத்திரைப்படமாக ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா ஒரு திரைப்படத்தோடு திரைப்படங்களுக்கான தரப்படுத்தலையும் வழங்கி வருகின்றேன்.அந்த வகையில் இந்த வருடத்தின் நிறைவு சினிமாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலி பரப்பானது. சாதனைகள்,வேதனைகளோடு முற்று முழுதான இந்த அலசலில் சில முக்கியமான விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த வருட தமிழ் சினிமா இப்போது திரும்பி பார்க்கும் போது அதிக இழப்புக்களை சந்தித்த ஒரு வருடமென சொல்லலாம் அதேநேரம் ஒரு சில அளப்பரிய சாதனைகளை கொண்டு வந்ததும் இந்த வருடமே. இதில் என்ன கொடுமை என்றால் மொக்கையோ அல்லது சக்கை போடு போடும் படமோ இரண்டையும் இந்த வருடம் பார்க்கும் பாக்கியசாலி நான் தான். இதோ இந்த வருடத்தின் தமிழ் சினிமா.....

இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் சிலவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளேன்.
1.மிகப்பெரிய வெற்றி.
2.வெற்றி.
3.சராசரி.
4.எதிர்பார்த்து தோல்வி அடைந்தவை.



முதலில் எதிர்பார்த்து தோல்வி அடைந்தவற்றை பார்த்தால். விஜயின் வில்லு அந்த பெயரை முதலில் தட்டிக்கொள்கின்றது. அழகிய தமிழ் மகன்,குருவி சறுக்கல்களுக்கு பின் தன் முந்தைய வெற்றி இயக்குனர் பிரபுதேவாவுடன்(போக்கிரி) கைகோர்த்த இரண்டாவது திரைப்படம் ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுத்துக்கொண்டது. அடுத்து கே.பாலசந்தருக்கு பிறகு இரண்டு முன்னணி கதாநாயகர்களை உருவாக்கிய பாலா இயக்கிய நான் கடவுள் ஆர்யாவை பழிவாங்கிகொண்டது. விருதுகளை அள்ளிக்குவித்து பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சிவரமும் ஏனோ வசூலை குவிக்கவில்லை. கல்லூரி கலாட்டாக்களுடன் அழகிய அம்மா நதியா நடித்த பட்டாளம் பட்டையை கிளப்பவில்லை. பில்லா படத்தை பிரமாண்டமாக கொடுத்த விஷ்ணுவர்த்தன் நான் கடவுளில் சொதப்பினாலும் நடிப்பில் இன்னொரு பரிமாணம் காட்டிய ஆர்யா இணையும் படம் என்ற எதிர்பார்ப்பில் வந்த சர்வம் சந்தடி இன்றி போனது. தளபதி பட்டத்தை சொருகிக்கொண்டு விஷால் இளைய தளபதியை பின்பற்றி நடித்த தோரணை விஷாலுக்கு சத்தியத்தை தொடர்ந்து வந்த சோதனையாகிப்போனது. பத்து இயக்குனர்கள் ஒன்றாக நடிக்கும் படம் என்பது மட்டுமில்லாமல் சீமான் பாடி நடித்த பேசாமல் பேசாமல் இருந்து...என்ற பாட்டும் எதிர்பார்ப்பை கூட்டி நல்ல படமாக வெளி வந்தாலும் எமதருமை ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எடுக்க நினைக்கும் கதை ஆனால் தொட பயப்படும் கதை பிரசன்னா-சினேகா வாழ்ந்து காட்டிய அச்சமுண்டு அச்சமுண்டை வெளிநாட்டவர் ரசித்து விருது கொடுத்தளவிற்கு வசூலை கொடுக்கவில்லை. அஜித்தின் அசல் படத்தை இயக்கப்போபவர் முன்னைய சறுக்கலை துடைப்பார் என்னும் எதிர்பார்ப்பில் மோதி விளையாடுக்காக காத்திருக்க திரைக்கதையில் ஓட்டையை வைத்து எங்களுக்கு சாட்டை அடி கொடுத்தார் சரண். சேரனின் படங்கள் இழுவை அதிகமானாலும் தரம் இருக்கும் என்ற நம்பிக்கையை பொக்கிஷம் காப்பாற்றாமல் போனது. சிறுவர்களுக்கான படம் என்ற கவர்ச்சியுடன் வந்த வண்ணாத்திப்பூச்சி சிறகு விரிக்கவில்லை. சின்ன தளபதிக்கு சூப்பர் ஸ்டார் ஆசையில் மண்ணைப் போட்டது ஆறுமுகம். நான் அவனில்லை படம் கொடுத்த தைரியத்தில் செல்வாவும் ஜீவனும் கை கோர்த்து கொடுத்த நான் அவன் இல்லை இரண்டு நான் அவனில்லை ஒன்றைக் கொடுத்த அவன் நான் இல்லை என சொல்ல வைத்து விட்டது


அடுத்து வெற்றி என்ற இலக்கை அடைந்த படங்கள்.
ஜீவா ஒரு சராசரி கதாநாயகனாக நடித்த படம் சிவா மனசில சக்தி நகைச்சுவையால் வெற்றி பெற்றது. புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போனது. சண் டி.வி புண்ணியத்தில் நம்ம சுனைனா(இப்போ எனக்கு தலைவி இவதாங்க அதுதான் நம்ம அசின், திரிஷா எல்லாம் இல்லையே) நடித்த மாசிலாமணி மாசில்லாமல் ஓடி வெற்றியை தொட்டது. நகைச்சுவையை மையப்படுத்தி வந்த வெடிகுண்டு முருகேசன், குயிக் கண் முருகன் இரண்டும் எதிர்பாராத வெற்றியை ருசித்தன. தொடர்ந்து பல வருடங்களாக தன்னை நிலை நிறுத்த போராடிய அருண்குமார்-அருண் விஜய் என்ற பெயரில் நடித்த மசாலா திரைப்படம் அவர் திரை உலக வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை உண்டு பண்ணியது. மீண்டும் ஒரு கல்லூரிக்கதை நினைத்தாலே இனிக்கும் விஜய் ஆண்டனியின் அதிரடி இசையில் இனிக்கும் கரும்பானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மதுரை சம்பவம், நகைச்சுவையை தெளித்த திரு திரு துரு துருவும் தங்கள் வெற்றிய பதிவு செய்தன. அண்மையில் வெளிவந்த ரேணி குண்டாவும் இந்த வருடத்துக்கான வெற்றி படமாக தன்னையும் சேர்த்துக்கொண்டது.



இந்த வருடம் இப்படி சங்கடங்களை சந்தித்தாலும் சில படங்கள் புரட்சி செய்யத் தவறவில்லை. இவைதான் இந்த வருடம் மிகப்பெரிய வெற்றிக் கொடியை நாட்டிய படங்கள் இந்த வருடத்துக்கான பெரிய வெற்றிப்படங்களை ஆரம்பித்து வைத்தவர் தனுஷ் படிக்காதவன் மூலம் வழக்கமான சாதாரண கதை தான் என்றாலும் தனுஷ்-தமன்னா என்பதையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒடிவிட்டது. கிராமத்தையும் விளையாட்டையும் மையப்படுத்தி குழுவாக திட்டமிட்டு வந்த வெண்ணிலா கபடிக்குழு திரில்லர்,ஆவி என பயமுறுத்திய யாவரும் நலம், அழகிய அனுஷ்காவை மீள அழைத்து ஆனால் கொஞ்சம் பயப்படுத்திய(எங்களை மட்டுமல்ல அசின்,திரிஷா நயனங்களையும் தான்.) அருந்ததி என தங்கள் பங்குக்கு படங்கள் வெற்றியை பதிவு செய்து இந்த வருடத்தை காப்பாற்றின. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் வசூல் சாதனை படைத்த அயன் பாடல்களிலும் பட்டையை கிளப்பியது.சிறுவர்களையே நாயகர்களாக்கி வீட்டுக்குள் நடக்கும் சுவாரஷ்யத்தை திரையில் தந்த பசங்க சாதனையோ அளப்பரியது. அடுத்து நாடோடிகள் இந்த வருடம் வந்த சிறந்த படம் என மார்தட்டி சொல்லலாம். சசிகுமார் என்னும் இவ்வருட நட்சத்திரத்தை மின்ன வைத்த படம். இப்படி ஒரு படமா என ரசிகர்களை பாராட்டவைத்தது.

விக்ரமின் கடின உழைப்பில் பொழுது போக்குடன் சமூக கருத்தும் சொன்ன கந்தசாமியை நம் பதிவர்கள் நொந்தசாமி ஆக்கினாலும் அவர்களை வெந்தசாமி ஆக்கிவிட்டு வெற்றிக் கோட்டை சாமியானார் விக்ரம். இமாலய வெற்றியை சூர்யாவிற்கு பதிவு செய்த அயன் திரைப்படமும் படிக்காதவனும் கந்தசாமியும் தான் இந்த வருடம் வெற்றி பெற்ற மசாலா படங்கள். இது தமிழ் சினிமாவிற்கு ரசிகர்கள் அடித்த சாவு மணி என்றே சொல்லலாம். ரசனை மாற்றம் ஏற்ப்படத்தொடங்கிவிட்டது என்பதையும் காட்டிகின்றது. வழக்கம் போலவே புதுமையுடன் இருந்த இடத்தில் இருந்தே சிக்ஸர் அடித்தார் உன்னைப்போல் ஒருவன் கமல். அருந்ததி,யாவரும் நலம் வரிசையில் இன்னொரு த்ரில்லர் ஈரமும் ஒட்டிக்கொண்டது. இளைய நாயகர்களில் இவ்வருடம் வித்தியாசமாக சாதித்தது ஜெயம் ரவி தான் கோமணத்தோடு நடித்து வெற்றியும் கண்டார். எஸ்.பி.ஜனநாதன் என்ற அற்புத படைப்பாளியின் இன்னொரு குழந்தையாக வந்து அசர வைத்தது பேராண்மை . மொழிமாற்றப்பட்டு அளப்பரையற்று வந்த கண்டேன் காதலை வெற்றியை கண்டுகொண்டது. அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக தன் ஆரம்பத்தை கண்டிருக்கும் வேட்டைக்காரன்(நாம என்ன சொன்னலும் வசூலை தடுக்க முடியல) கந்த கோட்டை திரைப்படங்களை இந்த வருட கணக்கில் சேர்க்கவில்லை காரணம் சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் முழுதாக இவற்றின் வெற்றி தோல்வி பற்றி பேசமுடியாது.


அடுத்து இந்த வருடம் இசை அமைப்பாளர்களில் விஜய் அன்ரனியே அதிகம் ஜொலித்திருக்கின்றார். யுவன் ஷங்கர் ராஜாவும் விஜய் அண்டனியும் ஒரே அளவு படங்களுக்கு இசை அமைத்தாலும் விஜய் அண்டனியின் இசையில் வந்த பாடல்களும் படங்களும் பட்டையை கிளப்பியதை மறுக்கமுடியாது. அ ஆ இ ஈ ,தா ந 07அ ல 4777, நினைத்தாலே இனிக்கும்,வேட்டைக்காரன் என விஜய் அன்டனிக்கு இசை ரீதியான வெற்றியை இந்த பட பாடல்கள் பெற்றுக்கொடுத்தன. ஆனால் யுவன் இசை அமைத்த பெரிய படங்கள் சர்வம்,வாமணன்,யோகி கவித்துவிட சிவாமனசில சக்தி கொஞ்சம் பெயரை காப்பாற்றியது. பாடகர்களில் இந்தவருடம் பென்னி தயாளுக்கும் சுசித்ராவுக்கும் முக்கியமான ஆண்டாக முடியப்போகின்றது.



கடந்த வருடங்களில் அதிக படங்களில் நடித்த சத்யராஜின் ஒரு படமும் இந்த வருடம் வராமல் போக சுந்தர்.சி இம்முறை அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். தீ,பெருமாள்,ஐந்தாம்படை இந்த மூன்று படங்களும் சராசரியாக ஓடியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜெய்,அஜ்மல் இந்த இரண்டுபேருக்கும் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் முன்னிறுத்திக் கொள்ளவும் இந்த வருடம் உதவியாக அமைந்தது. நடிகைகளில் சந்தேகமே இல்லாமல் இது தமன்னா ஆண்டு. அசின்,திரிஷா இல்லாத இடத்தில் புகுந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். ஆனந்த தாண்டவத்தை தவிர அயன்,கண்டேன் காதலை,படிக்காதவன் மூன்றும் ஹிட் ஆகி இந்த வெண்ணிற அழகியை(சுடுதண்ணி ஊத்தின தோல் என என் நண்பன் நக்கலடிப்பான்.) முன்னணிக்கு கொண்டுவந்தது. யார் முன்னுக்கு வந்தால் என்ன நான் தான் அதிக படம் நடிப்பேன் என நடித்த கவர்ச்சி பாம் நமீதாவிற்கு தீ,பெருமாள் தவிர ௧௯௭௭,இந்திரவிழா,ஜெகன்மோகினி படங்கள் கைகொடுக்கவில்லை. அடுத்து கவனிக்கப்பட்டவர்கள் லக்ஷ்மிராயும் சரண்ஜா மோகனும்


எதிர்கால நபிக்கையை யார் கொடுத்தார்கள் என்றால் புதுமுகங்களில் யாருமே இல்லை என்று சொல்லலாம். குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போயும் ஹீரோ ராம கிரிஷ்ணனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே போல உன்னை போல் ஒருவனில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் கவனிக்கப்படாலும் பின்னர் படங்கள் அமையவில்லை. யோகி அமீர் நடிகராக ஓரளவு தன்னை காட்டிக்கொண்டாலும் இது தொடருமா என்பது கேள்வியே? பெண்கள் அணியில் நாடோடிகள் கதாநாயகியை தவிர யாருக்கும் தங்களை நிலை நிறுத்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த வகையில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகியும் பிரகாசமற்று போன ஒரு வருடம் கடந்து போகின்றது. நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு,விவேக்கை முந்தி சந்தானமும் கஞ்சாகருப்பும் வந்து கொண்டிருக்கின்றனர்.


இந்த வருடம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சாதனைகளும் வேதனைகளும்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருது.
நகைச்சுவைத்திலகம் நாகேஷ் எழுபத்தாறு வயதில் காலமானார்.
அசினின் உதவியாளர் மாயமான பிரச்சனை ஒரு கலக்கு கலக்கியது.
இலங்கைத் தமிழர்களுக்காக அஜித் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.
சண்டை கலைஞர் ராம்போ ராஜ்குமார் தன் ஐம்பத்து மூன்று வயதில் காலமானார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி எழுபத்து நானு வயதில் காலமானார்.
கஸ்தூரிமான் திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குனரும் மீரா ஜாஸ்மினுடன் கிசுகிசுக்கப்பட்டவருமான லோகிதாஸ் காலமானார்.
காவ்யாமாதவன் திருமணமும் விவகாரத்தும்
மலையாள நடிகர் முரளி காலமானார்.
உலகநாயகன் தன் ஐமபதாவதாண்டை திரை உலகில் பூர்த்தி செய்தார்.
ஜெயம் ரவி,மீனா,விக்ராந்த் போன்று இன்னும் சில நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைந்தன.
சோனியா அகர்வால்-செல்வராகவன்-ஆண்ட்ரியா பிரச்சனை.
நயன்தாரா-பிரபுதேவா கள்ளக்காதல்.(அம்பலக்காதல்)
நடிகர் விஜயின் அரசியல் நாடகம்.
காஞ்சிவரம் படத்துக்கும் பிரகாஷ்ராஜுக்கும் தேசிய விருது.
சி.என்.என் ஐ.பி.என் டி.வியின் சிறந்த இந்தியருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

இதோ இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் இந்த வருடம் விடைபெற்றுக்கொள்ளப்போகின்றது. அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம் பலரின் வாழ்கையில் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் உதயமாக போகின்றது. என் பிரியமானவர்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox