Thursday, April 15, 2010

பதிவர்களே! கட்டாயம் படியுங்கள் தவறு நடந்துவிடக் கூடாதென்பதற்காக!



கடந்த ஒரு சில நாட்களாக சில வலைப்பூக்களிலும் பிரபல இணையத்தளம் ஒன்றிலும் விஜயின் தொடர் தோல்விகளும் அஜித்தின் சுமாரான வெற்றியும் திரை உலகையும் தாண்டி இப்போது ஐ.பி.எல்லிலும் வியாபித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அதாவது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட விஜய் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் மைதானத்துக்கு சென்று வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தாததால் அவரை நீக்கிவிட்டு அஜித்தை நியமிக்க இருப்பதாக அந்த செய்தியை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனே விலகிய ஒருவரை எப்படி விலக்கமுடியும் என்பதே என் கேள்வி?

இந்த விடயம் நேற்று இன்று தான் இணையத்தில் நான் கண்டேன். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்கட்சியிலேயே இந்த செய்தியை நான் பார்த்து விட்டேன். உடனடியாக லோஷன் அண்ணாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தரித்ததுடன் அதை நானும் தேடி உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த உறுதிப்பாடு என்னவென்றால் கடந்த முதலாவது ஐ.பி.எல் தொடருடனே விஜயுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. இதில் இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால் விஜய் மைதானம் வரவில்லை என்பது. முதல் தொடரை பார்த்தவர்களுக்கு தெரியும் தொடக்க விழா முதல் தன் மகனுடன் வந்து சென்னையில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொண்டவர் விஜய். அதேநேரம் ஒப்பந்தம் செய்யும் போது அவர் போட்ட நிபந்தனைகளில் தனக்கு படப்பிடிப்பு உள்ளநாட்களில் கலந்து கொள்ள முடியாதென்றும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மாத்திரமே கலந்து கொள்வேன் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். இதையும் இதே இணையத்தில் தான் படித்து தெரிந்தேன். இரண்டாவது தொடருக்கே வராத விஜய் இப்போது வரவில்லை என்று குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

மூன்றாண்டுகளுடன் ஒப்பந்தம் முடிந்து வீர்கள் முதல் முழு அணியும் மாறும் நேரத்தில் சென்னையும் தன் தூதராக அஜித்தை நியமிக்கலாம் அதில் தப்பில்லை. அதற்க்கு காரணம் வேறாக இருக்கலாம். சிலவேளை விஜய் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம். அல்லது அஜித்தின் அண்மைய பிரபலமாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு தப்பான செய்தியை சொல்லி அஜித்தை கொண்டுவருவது என்று செய்தியை வெளியிடுவது ஏன் என தெரியவில்லை. சாதாரண விழாக்களுக்கு வரவே களைத்துப்போகும் அஜித் விழாக்களில் பங்குபற்றாத அஜித் மைதானத்துக்கு வந்தா உற்சாகப்படுத்தப்போகின்றார் என்பது என் தனிப்பட்ட கேள்வி? ஒருவேளை இங்கே அதிக பணம் கிடைக்கின்றதென்று வருவாரோ தெரியாது? (விழாக்களில் கலந்து கொள்ள சிலருக்கு பணம் வழங்கினாலும் ரஜினி கமல் விஜய் அஜித் போன்ற நட்சத்திரங்கள் மரியாதை நிமித்தமே கலந்து கொண்டுவருகின்றனர்.)

அன்பார்ந்த என் சகோதர பதிவர்களே! ஒரு செய்தியை நாம் இடுகையாக இடும் முன்னர் அந்த செய்தி பற்றி கொஞ்சம் அலசி ஆராய்ந்து இடுவதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் நம்மூலம் தவறான செய்திகள் வந்துவிடுமென்பது உங்கள் நன்பனில் ஒருவனாக என் கருத்து. கோபமின்றி ஏற்பீர்கள் என நம்புகின்றேன். இந்த இடுகையில் தவறிருந்தால் சொல்லுங்கள் நான் திருத்திக்கொள்கின்றேன்.

இன்று இன்னும் ஒரு விஜய் பற்றிய இடுகையும் ஒரு சில இடுகைகளும் இடலாம் என எண்ணியிருந்த நிலையில் இந்த செய்திகளை பார்த்தவுடன் இந்த இடுகையை நான் இடவேண்டும் என்ற அவசரத்தில் இடுகின்றேன். நேரம் கிடைப்பின் இன்றே அந்த இடுகைகளும் வரும்....
Share:

22 கருத்துரைகள்:

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

SShathiesh-சதீஷ். said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
மீண்டும் வந்தால் சந்தோசம்.

Anonymous said...

இலங்கைமக்களுக்கு ரொம்ப முக்கிய பிரச்னை இது

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா
நீங்கள் இதை முக்கியம் என்றுதானே படித்தீர்கள். நாடு முக்கியமில்லை. நான் சொன்ன விடயம் தான் முக்கியம் எத்தனையோ விடயங்கள் இருக்க உங்களைப்போன்ற ஒருசில கீழ்த்தர அரசியல் செய்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்....

Anonymous said...

பணத்திற்காக அஜித் வருவார் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு, அப்படி தல நினைத்தால் வெற்றி பெறுவோமா என்று தெரியாத கார் ரேஸ்சிற்கு 7 கோடி தன்னுடைய காசை போட்டு கலந்துகொள்ளவேண்டியதில்லை ,விழாக்களிலும் , ரசிகர் மன்றங்களிலும் கலந்துகொள்வது தங்கள் ரசிகர்களை தொடர்ந்தும் தன் வசம் வைதிருப்பதட்கே
தவிர ரசிகர்மாரில் உள்ள பாசத்தில் அல்ல ,இது அவர்களை நம்பும் ரசிகர்களை மேலும் முட்டாலாக்குவதட்கு சமம் .
அஜித்தை நியமிக்க காரணம் தற்போதைய நடிகர்கள் மத்தியில் விளையடிலும் சம ஆர்வம் கொண்டவர் தலையை தவிர வேறு யார் இருக்க முடியும் .

SShathiesh-சதீஷ். said...

@Menan
உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன். அஜித் என்னும் நடிகனுக்குத்தான் ரசிகன் இல்லையே ஒழிய அஜித் என்னும் நல்ல மனிதனுக்கு நான் ரசிகன். நீங்கள் சொல்வதை ஏற்றாலும் ஒரு வாதத்துக்கு என் கருத்தை சொல்கின்றேன். அஜித் கார் ரேசில் கலந்து கொள்வது கார் ரேஸ் பால் அவருக்கு இயல்பாக இருக்கும் ஆர்வம் ஒரு தல ரசிகராக மனதை தொட்டுச் சொல்லுங்கள் அவருக்கு சினிமா முக்கியமா அல்லது கார் ரேசா என்றால் அவர் எதை சொல்வார் என்று? அப்படிப்பட்ட ஒருவர் கார் ரேசுக்காக தான் உழைத்த பணத்தை செலவிடுவதை தப்பென்று சொல்ல மாட்டேன். அதேநேரம் இம்முறை அவருக்கு யாரோ ஸ்பான்சர் செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் சினிமாவில் உழைப்பதே கார் ரேசுக்காகத்தன் என சொல்பவர்களும் உண்டு. அது உண்மையாக இருந்தாலும் அது தப்பில்லை என்பதே என் கருத்து.
அடுத்து ரசிகரை சந்திப்பதற்கு காரணம் நீங்கள் சொனதுதான் அதை மறுக்கவில்லை. அஜித்தை இன்னும் நியமிக்கவில்லை நியமிக்கலாம் என்ற பேச்சே இருக்கின்றது. விளையாட்டிலும் ஈடுபாடு என்கிறீர்கள் என்ன விளையாட்டு என்று சொல்வீர்களா? கார் ரேஸ் மட்டும் தான் எனக்குத் தெரிந்து கார் ரேசுக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லையே உங்கள் வழியில் வந்தால். அதேநேரம் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள சிம்பு போன்றவர்கள் இருக்கின்றார்களே என்பதை மறக்கக்கூடாது.
நீங்களும் இது தொடர்பாக இடுகை இட்டீர்கள் என நினைக்க்ன்றேன் எனவே இந்த செய்தி சரியா என உறுதிப்படுத்துங்கள் இது என் அன்பான வேண்டுகோள்.

Sree said...

vijaykkum cricket'kkum enna sambantham irukku...??? sari sari... nee vijay fan thaane... avana thaane thalamela vachi aaduva....

SShathiesh-சதீஷ். said...

@Sree
அன்பின் ஸ்ரீ அவர்களே உங்கள் அறியாமையை நான் என்ன சொல்வது. நான் மேனனுக்கு சொன்ன பதிலை பார்க்க முதல் நீங்கள் மேனன் சொன்னதை பார்த்திருக்க வேண்டும். அவர் தற்போதைய நடிகர் மத்தியில் விளையாட்டில் சம ஆர்வம் கொண்டவர் அஜித் என சொன்னார் அதற்க்கு தான் நான் அப்படி பதிலளித்தேன். அதை நீங்கள் விளங்காமல் போய்விட்டேர்களே. விஜய்க்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லை இதை விஜயே சொல்லிவிட்டார். உங்கள் பிரச்சனை என்ன? முதலில் ஒன்றை புரிந்து கொண்டு நாகரிகமாக கருத்து சொல்ல பலகிக்கொள்ளுங்க. எவர் கருத்தாக இருப்பினும் நாகரிகமாக சொன்னால் நான் ஏற்பேன்.

Anonymous said...

ada nasama ponavaneeee ..... nattula evalavo matter la poi solli vathanthiyaa parapuranga , unakku ithu oru perachanaiyaa ??? itha eallma oru pathivaa poduriyee , nee eanna MOKKAI PATHIVAR aa???
nee srilanka private tamil radio Rj thanee ????? athuthaan anga Mic aa pudichu Mokka kadi kadikera maathiri inga unda Blog laiyum MOKKA kadi kadikera , ithula LOSHAN anna da vera nee kettu atha uruthi paduthti irukaa ,,,,, mmmm velikku oonan satchiyaa ?????

கன்கொன் || Kangon said...

அடப் போங்கப்பா...

விஜய எவ்வளவுக்குத்தான் அடிக்கப் போறீங்க?
மனுசன் பாவமில்லயா?

நம்மவர்களுக்கு விஜய்க்கெதிராக எழுதுவதென்றால் அல்வா சாப்பிடுவது போல....

கண்டுக்காதீர்கள் சதீஷ் அண்ணா...

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா
நான் மொக்கை பதிவர் தானுங்கோ? உங்கள் லூசுத்தனமான கருத்துக்களுக்கு எப்படி பதில் சொல்வது. வானொலி அறிவிப்பாளர் என்றாள் உங்களுக்கெல்லாம் இளக்காரமாய் போய்விட்டது. நாங்கள் எவ்வளவு கச்டப்படுகின்றோம் எங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கின்றது. இதுவும் டாக்டர் ஆசிரியர் போல கடினமான பணி என உங்களைப் போன்றவர்கள் உணரமாட்டார்கள்.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நம்மவர்கள் எப்போஹும் அப்படிதான் அன்று போன்றினார்கள் இன்று தூற்றுகின்ரர்கள் நாளை....?

கண்டுக்காமல் விட்டு விடலாம். ஆனால் இவர்களை போன்ற அறிவிப்பாளர் என்றாள் சும்மா வந்து நிகழ்ச்சி செய்பவர்கள் மொக்கையாக கதைப்பவர்கள் என என்னத்தை மாற்ற வேண்டும். தினமும் கண்விழித்து ஒரு நிகழ்ச்சிக்காக தயார் படுத்துவதும் தேடுவதும் எங்களுக்குத்தான் தெரியும். நேசித்த தொழிலை இளக்காரமாக பேசினால் எவனும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். பெயர் சொல்லாத இவனெல்லாம் என்னத்த கிழிக்கிரானோ.

Unknown said...

சரி விடுங்க சதீஷ் இதெல்லாம் விஜய்க்கு சகஜம்

ARV Loshan said...

இதுல போய் விளக்கமும் விபரமும் தேவையா இல்லையா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.


ஆனால் வானொலித் துறை,அதன் பெருமை,சிறப்பு,பொறுப்பு அறியாத யாரோ சில பெயரில்லா ஜென்மங்களின் கருத்துக்களைப் பிரசுரித்திருக்க வேண்டாமே..

KANA VARO said...

சதீஸ் தேவையட்ட்ற கருத்துக்களுக்கு பதிலளிக்கவும் தேவையில்லை.
ஆசிரியர் வேலை என்றால் வருடத்தின் நாட்களில் நாட்கள் மட்டும் தான் வேலைக்கு போக வேண்டும். பல தொழில்களிலும் லீவு அதிகம் இருக்கின்றது. ஊடகம் அவ்வாறல்ல. ஒரு நாள் பேப்பர் வராட்டியும், பேப்பர் தம்பி வராட்டியும் கஷ்ட படுறது மக்கள் தான். இது பலருக்கும் தெரியும்... (வருசத்தில் உணர்ந்திருப்பார்கள்)

விஜய் பற்றி குறிப்பிடுவதானால் "விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களை ஏற்றுக்கொள்வார்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜயை ஏற்கமாட்டார்கள்." இது வளர்சி மீதுள்ள பொறாமை மட்டுமே!

SShathiesh-சதீஷ். said...

@A.சிவசங்கர்

நீங்க சொன்னா சரிதாங்க....

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

அந்தக்கருத்துக்களை நான் பிரசுரித்தது இப்படி காழ்ப்புணர்ச்சி உலா சில ஜென்மங்களும் இருக்கின்றார்கள் என காட்டவே. இனி கவனத்தில் எடுக்கின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@AKAM

எல்லாத் தொழிலும் உயர்ந்தது தான் நீங்கள் குறிப்பிடுவது போல வருடம் முழுவதும் லீவின்ரி செய்யும் சேவையில் இதுவும் ஒன்று. அது உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சில ஜடங்களுக்கு புரியாது.....

விஜய் பற்றி உங்கள் கருத்து சூப்பர். நாங்கள் மற்ற நடிகர்களை வாழ்த்தவும் செய்வோம் என்பதை காட்டிவிட்டீர்கள்.

கிருஷ்ணா said...

வணக்கம் சதீஷ் நான் கிருஷ்ணா என்னை உங்களுக்கு நன்றாக தெரியும் நீண்டகாலம் உங்கள் வலைப்பதிவின் வாசகனாக இருக்கும் நான் இந்த பதிவைகண்டு கொஞ்சம் வருத்தப்பட்டேன் இது முழுக்க முழுக்க விஜய் மீது இருக்கும் ஈடுபாட்டை மட்டுமே வைத்து எழ்தப்பட்டிருப்பது வேதனைபடவைக்கிறது அஜித் என்ற ஆளுமை தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஒரு ஷக்தி பணத்துக்காக மேடைகளில் ஏறுகிறார் என்ற கருத்து எந்த வகையிலும் ஏற்க முடியாது

SShathiesh-சதீஷ். said...

@MEERAVIN NATCHATHRA VEEDHIYIL

வாங்க கிருஷ்ணா! என்னுடைய இந்த பதவின் நோக்கம் தவறான செய்தி வரக்கூடாதென்று. பணத்துக்காக அஜித் செயற்ப்படுகின்றார் என்பது என் கருத்தே. காரணம் அவரின் கடந்தகால செயற்ப்பாடுகள். அவருக்கு கார் ரேஸ் முக்கியமானது. அதைவிட எந்த தனிப்பட்ட தாக்குதலான பதிவுமில்லை.

தமிழ் மதுரம் said...

நாங்கள் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து பதிவெழுதுகிறோம். பதிவினைப் புரிந்து கொள்ளாத ஒரு சில அப்பாவிகள் இன்னும் 15ம் நூற்றாண்டிலிருந்து பதிவினைப் படிக்கிறார்கள் என்பது புரிகிறது. உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனால் ஒரு சில அதிமேதாவிகள் மட்டும் பதிவின் விடயத்தினைப் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்ய காத்திருக்கிறார்கள். அறியாமை உள்ள, சித்த சுவாதீனமற்றவர்களை மன்னிப்பது தானே எமது இயல்பு. சதீஷ் அவர்களைக் கண்டுக்க வேண்டாம்.

தமிழ் மதுரம் said...

வானொலி என்றால் என்ன சும்மா பாட்டைப் போட்டிட்டு நித்திரை கொள்ளுறது என்று நினைச்சிருக்கீனமோ? யோ தெம்பிருந்தால் நேரவாங்கோ. சொந்தப் பெயரோடை விவாதத்திற்கு. வானொலி அறிவிப்புப் பற்றியும், இதர பல விடயங்கள் பற்றியும் விவாதம் செய்யலாம். அட என்னது வேலிக்கு ஓணாண் சாட்சி என்று அதுக்கை ஒரு பழமொழி வேறு. பெயரில்லாமல் பின்னூட்டமிட்டாலும், ஐபி முகவரியும், இணையவழங்கியும் சாட்சி. இதை எல்லாவற்றையும் (ip address) வைத்து வேணுமெண்டால் பெயரையும், ஊரையும், தொலைபேசி இலக்கத்தையும் எடுக்கலாம். அட பெயரில்லாப் பின்னூட்டத்துக்கு ஐபி ஐடியும் இணையவழங்கியும் சாட்சி.


இதைத் தான் சொல்லுறது தவளையும் தன் வாயால் கெடும் என்று.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive