உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Thursday, September 2, 2010

வெளிநாட்டு வாழ்க்கை.



ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்

உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட

உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்

உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.

பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்

பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.

கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி

ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்

ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்

இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.

காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை

விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்

ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று

விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.

தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று

தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்

மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்

பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.

கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்

கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்

கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்

கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.

கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்

சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை

இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி

இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.

Share:

Sunday, August 22, 2010

விஜய் படத்தில் அஜித் பாட்டு.- ஒரு வில்லங்கம்



தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் விஜய்- அஜித் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த இந்த இரண்டுபேரும் அதன் பின் பிரிந்து பின்னர் பகை மூண்டு அது திரையிலும் எதிரொலித்து அஜித்தின் மகள் பிறப்புடன் எல்லாம் ஓய்ந்து இந்த மானும் புலியும் ஒன்றாய் தேநீர் குடித்து அதுதாங்க விஜய் நேரடியாய் வைத்தியசாலைக்கு சென்று ஷாலினியும் அவர் பேபியையும் பார்த்து அஜித்தை குடும்ப சமேதரராய் அழைத்து விருந்து கொடுத்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். ரஜினி கமல் போல தாங்களும் நல்ல நண்பர்கள் என காட்டிக்கொண்டதுடன் அன்புடன் நடந்ததோடு ஒருவரை ஒருவர் பாராட்டினர். இதற்க்கு கண்ணு பட்டது போல குருவியில் அஜித்தை வாரும் வேலையை விஜய் செய்தாலும் அதன் பின் பெரிதாக எந்த எதிர்ப்பும் இருபுறமும் இருந்து கிளம்பாததால் அப்படியே அடங்கிப்போனது. இந்த நிலையில் தான் அஜித், கருணாநிதியிடம் எங்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கின்றார்கள் என முறையிட அதற்க்கு எதிர்ப்புக்கிளம்ப விஜய், அஜித்துக்கு ஆதரவாக வி.சி.குகநாதனிடம் பேசியதாகவும் ஒரு கதை உண்டு.

இப்படி இவர்களுக்குள் நட்பு இருக்கின்றதா இல்லையா என்பதையும் தாண்டி ஒரு போட்டி இருக்கும் நிலையில். ரசிகர்கள் நாங்கள் நினைக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உண்மையில் நடிகர்களுக்கிடையில் எந்த பிணக்கும் இருக்காது. அதேபோல விஜய் ரசிகர்கள் அஜித்தை எதிரியாய் பார்ப்பதும் இல்லை அதேபோல அஜித் ரசிகர்கள் விஜயை எதிரியாய் பார்ப்பதும் இல்லை(ஒரு சில வக்கிர எண்ணம் கொண்டவர்களை தவிர்த்தால்) இடையில் இருந்து கொண்டு சில சுண்டைக்காய் பயலுகள் தான் உந்த உசுப்பேத்தும் வேலையை செய்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு வைக்கணும் ஒரு பெரிய ஆப்பு. சரி இவர்கள் தான் இப்படி செய்கின்றார்களே நடிகர்கள் ஆவது இதை கண்டிக்கலாமே என்று பார்த்தால் வரலாறு இதற்க்கு பதில் சொல்லும். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் காலம் தொட்டு சிம்பு-தனுஷ் வரை போட்டி நடிகர்கள் தங்கள் விளம்பரம் படம் ஓடனும் மற்றும் ஊடக பார்வையை கருத்தில் கொண்டு இந்த மாயையை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ரசிகர்கள் நாங்கள் தான் உசுப்பிக்கொண்டு திரிகின்றோம்.

இந்த பதிவை நான் எழுத முக்கிய காரணம். நான் இப்போது இருப்பது இங்கிலாந்தில். என் படிப்புக்காய் வந்த இடத்தில் ஒரு சந்தோஷ செய்தியும் உண்டு அதை ஆறுதலாக ஒரு பதிவில் சொல்கின்றேன். அதை விடுத்து இங்கே இருக்கும் சுட்டிப்பிளைகளை பார்த்தால் அவர்கள் விஜய் ரசிகர்களாக தான் இருக்கின்றார்கள். போடும் உடையில் இருந்து அவர்களை விஜய் ஆக்கிரமித்திருக்கின்றார். அந்த வகையில் வில்லு படத்தை பார்க்கும் நிலை எனக்கு ஏற்ப்பட்டது. அந்த மரண மொக்கையை கூட அந்த சின்ன பிள்ளைகள் ரசித்து பார்த்தது விஜய் என்னும் பெயருக்கு. இந்த படத்தை முன்னர் ஒரு தடவை நான் பார்த்திருந்தாலும் இன்று தான் இன்னொரு விடயத்தை கவனித்தேன். விஜய் தான் குளிக்கப்போகும் நேரம் அவர் வாயில் முணு முணுத்த பாடலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அது வேறு ஒரு பாடலும் அல்ல. அஜித்தின் வாலி பட ஓ சோனா ஓ சோனா பாடல்.........தன சக போட்டி நடிகர் ஒருவரின் பாடலை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற வைத்தாரோ அல்லது எதேர்ச்சையாய் வந்ததோ தெரியாது. ஆனால் நடிகர்கள் ஒரு போதும் ஒருவருக்கு ஒருவர் எதிரி இல்லை. எனவே ரசிகர்களே ஏமாறாதீர்கள் என்று தான் தோணியது.

அப்புறம் லண்டன், வந்து சிரித்து அழுது கொஞ்சம் சுத்திப்பார்த்து நாட்கள் போகிறது. ...போக போகத்தான் தெரியும் என பயப்படுத்திரான்கள் போக போக நானும் சொல்லுறன். நேரம் கிடைக்கும் போது வாறன்...இப்போ வரட்டா ......
Share:

Tuesday, August 10, 2010

இணையம் இல்லாமல் வாழ முடியாதெண்டு எவன் சொன்னது?

வணக்கம் நண்பர்களே!

என்னடா நிறைய நாளைக்கு பிறகு இவன் எழுதிறான் என பார்க்கின்றீர்களா? ஓ ஒருவேளை புதுசா ஏதும் வேலைக்கு போயட்டானோ இல்லை ஒரு சில பதிவர்கள் போல கா_ல் இல் மாட்டி விட்டாரோ என்று எல்லாம் கற்பனை பண்ணப்படாது. நாங்கள் எப்போதும் வீட்டிலேயே பிசியாய் இருக்கும் பிரபலங்கள்.(நாங்கள் தான் அப்படி சொல்லணும்) அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு பதிவு எழுதவில்லை? ஏன் நீ குடியிருக்கும் மூஞ்சி புத்தகப்பக்கமும் வரவில்லை இப்போ இங்கே வந்து என்ன பெரிசா அலம்பிறாய் என கேட்கலாம். பதில் சொல்லவா? சொல்லத்தானே வேணும்.

கடந்த மாதம் எனக்கு டயலாக் வழங்கி இருந்த இணையப்பாவனைகான எல்லையை நான் தாண்டி விட்டேன் என என் இணையம் மெதுவாகி விட்டது. நமக்கு எதுவும் பாஸ்டா இருந்தா தானே கிக். சிலோ ஆனதில் ஒரு சில நாள் அதை பாவிச்சு அலுத்துப்போய் அப்பிடியே இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன். அந்த நேரம் எனக்கு அது உதவியாய் இருந்தது. கரணம் பல ஆய்வுகள் புண்ணாக்குகள் எல்லாம் இணையத்தை அதிகம் பாவிக்கும் நபர்கள் அந்த இணையம் இன்றி இருப்பது கடினம் என்றார்கள் அந்த இணையம் இல்லாமல் ஒரு அமைதியான வாழ்க்கை எப்படி இருக்கும் டென்சன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்க்க எனக்கும் ஒரு ஆசை தான். காரணம் நான் அதிக நேரம் இங்கே குந்தி இருப்பவன் ஆனால் இதை விட்டு இருக்கும் போது எனக்கு நிறைய நேரம் வேறு இடத்தில் செலவழிக்க கிடைத்தது. சோ நோ கவலை. இணையத்துக்கு அடிமையானவன் போல இருந்த நான் இணையம் இன்றி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருந்தேன் இணையத்தோடு இருந்த நாளை விட இணையம் இல்லாத நாள் உண்மையில் மன அமைதியோடு இருந்தது.

இணையம் கூடவே இருப்பதும், நாம் விலகி இருப்பது, இருந்தும் மன கட்டுப்பாடோடு இருப்பது என எல்லாமே நம் கையில் தான் இருக்கின்றது. ரஜினி பட பாடல்போல கையில் கொஞ்சம் காசு இருந்தால் அதற்க்கு நீதான் எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன் என்பது போல நம் மன கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இணையம் என்ன எதுவுமே நம்மை ஒன்றும் செய்யாது. அடிமையாவதும் அதில் இருந்து வெளியே வருவதும் நம் கையில் தான்.

அடுத்து இன்னொரு விஷயம். கடந்த எட்டாம் திகதி எனது இருபத்திரண்டாவது பிறந்தநாள்(வயசை சொன்னால் நம்பணும் நான் பிறந்தது 8.8.88 ங்கோ). வெற்றியில் கடந்த வருடம் வேலை செய்யும் போது ஏராளமான நேயர்கள் வாழ்த்தி இருந்தார்கள். இந்த வருடமும் அந்த நண்பர்கள் எனக்கு வாழ்த்தியது அதிர்ச்சி கலந்த சந்தோசம். என்னை அவர்கள் எல்லோரும் மறந்திருப்பர் என நினைத்தேன். ஆனால் என்னை மறக்காமல் வாழ்த்தி திக்கு முக்காட வைத்துவிட்டனர். சிலர் என் தொலைபேசிக்கு அழைப்பெடுத்தி வாழ்த்தியதும் சந்தோசம். பாடசாலை நண்பர்கள், முகப்புத்தாக நண்பர்கள், மின் அஞ்சல நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், வானொலி நண்பர்கள், வானொலி சக அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் என அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்கள் அன்பான வாழ்த்து என்றைக்கும் நமக்கு பூஸ்டு.

அதெல்லாம் இருக்கட்டும் என்னது டிரீட் கேட்கிறியளா? என்னது டிரீட்டா

ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ
ஹா ஹா
ஹீ ஹீ
ஹா ஹீ
ஹா ஹீ

யாரபாத்து டிரீட் கேட்கிரிய? நம்மளை பத்தி இவங்களுக்கு தெரியல நாம அடுத்தவங்க கிட்ட தான் டிரீட் கேட்பம் நாம யாருக்கும் கொடுத்ததில்லை. கொடுக்கப்போவதும் இல்லை. (என்னது டயலாக்கை வேற சுட்டு போடுறான் என திடப்படாது ஐ ஆம் பாவம். ஓகே டீல்.



சரி பதிவு போட்டா ஒரு படம் போடணும் தானே. சோ கஷ்டப்பட்டு ஒரு படம் போட்டிருக்கேன் நீங்களும் கஷ்டப்பட்டு தான் இந்த மூஞ்சியலை பார்க்கணும். ஆனால் கடைசியில் இந்த மூவரை பற்றியும் ஒரு விஷயம் சொல்லப்போறேன் கவனமாய் கேளுங்கோ.

இந்த படம் எடுக்கப்பட்டது இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது. அதில் வெள்ளையும் கருப்பும் சேர்த்து அழகான டி சேர்டில் முதலாவதாய் இருக்கானே ஒரு பையன் அவன் தான் கிரேட் சதீஷ்(நான் தானுங்கோ) அடுத்தது கிரிக்கெட் அனலிஸ்ட் பிரபல பின்னூட்ட வாதி(பதிவர் இல்லை இதை கவனிக்க ) கான்கொன் அல்லது கிரீஸ் அல்லது கோபி அடுத்தவர் ஏரியாத சுவடுகள் வைத்து எல்லோரையும் கொமென்ட் போட்டு எரிய வைக்கும் பவன்.

சரி இவங்க மூன்று பேரும் தான் 3 இடியட்ஸ்சாம் ஷங்கர் இவர்கள் மூவரையும் தான் நடிக்க வைக்க முயற்சி எடுக்கிராராம். அப்போ படம் எப்பிடி இருக்கும்.....சும்மா பிச்சிக்கிட்டு ஓடும். எதை எண்டு கேட்கப்படாது.
Share:

Friday, July 23, 2010

முரளி - போட்டோ கொமன்ஸ்








































இந்த பதிவிட படங்களை தந்துதவிய பவன்,கான்கொன்,மற்றும் யோ வாய்ஸ் யோகா அண்ணாவிற்கு என் நன்றிகள்.

Share:

Thursday, July 22, 2010

முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!



முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.

உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.

நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.

உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்


Share:

Sunday, July 18, 2010

ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.

நடிகர் விஜய்க்கு இது போதாத காலம். இவனெல்லாம் இனி சினிமாவுக்கு தேவையா என்ற ரீதியில் இன்று விஜய் நிலை. நடிக்கத்தேரியாது. கெட் அப் மாற்றுவதில்லை. பத்து படத்தில் ஒரே மாதிரி நடிப்பது என்ற விமர்சனங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும் நிலையில் இப்போது சித்திக், ராஜா என்று நம்பிக்கை தரும் இயக்குனர்களுடன் விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு சென்று தன்னையும் கேவலப்படுத்தி அவர் ரசிகர் எம்மையும் அவமானப்படுத்துவாரா தெரியவில்லை.

ஒரு விஜய் ரசிகர் என்றாலும் விஜயின் இந்த பெட்டியில் இருக்கும் பல்டி எனக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தன் குரு ரஜினி என்றவர் அதன் பின் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து விட்டு. மீண்டும் இப்போது தன் குரு ரஜினி என்கிறார். வேண்டாம் விஜய் இந்த பல்டி. இது உங்களை மட்டுமல்லா உங்கள் ரசிகர் என சொல்லும் எமக்கும் கேவலம். உங்கள் முடிவில் நீங்கள் தான் தெளிவாய் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்பது சரியானது ஆனால் முடிவை சரியாய் தெளிவாய் நீங்கள் எடுங்கள் அதுவே நல்லது. இன்னும் நம்புகின்றோம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என்று.





பி.கு: இந்த பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பிளாக்கர் என்ற விருதை லோஷன் அண்ணா வென்று இருக்கின்றார். ரொம்ப சந்தோசம் எங்களுக்கும். அண்ணே ட்ரீட் வேணும். முக்கியமான விஷயம். மீண்டும் ஒருதடவை விருதை வென்ற அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு விஷயம் இந்த பதிவுக்கு நான் அவரிடம் திட்டு வாங்குவது உறுதி ஏன் தெரியுமா? முடிந்தால் யாரும் சொல்லுங்கள்.
=>


=>


=>


=>


=>


=>


=>


=>


=>


வேற ஒன்றும் இல்லை விஜய் பற்றிய பதிவுடன் தன்னையும் போட்டிட்டாயே என்று கோபப்படுவார். ஏனென்றால் விஜய் மீது அவருக்கு ரொம்ப பாசம். அப்பிடி கொபிச்சால் உங்களுக்கு தனி பதிவு போட்டு கும்மிடமாட்டோம். எவ்வளவோ பண்றம் இதை பண்ண மாட்டமா?


Share:

Saturday, July 17, 2010

3 இடியட்ஸ்சில் ஷங்கரின் தெரிவு சித்தார்த்,ஜீவா,விஜய்?



அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் 3 இடியட்ஸ் திரைப்படம் தான். என் முன்னைய பதிவில் கூட இதை பற்றி இட்டு உங்கள் கருத்தை கேட்டிருந்தேன். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பு பற்றி இன்னுமொரு பரபரப்பு செய்தி வெளிவந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு இணையதளத்தில் ஷங்கர் இந்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் இன்றைய தினம் பிஹைண்ட்ஸ் வூட்ஸ் தளத்தில் இன்னொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பொதுவாக தன் சொந்த படங்களை சீரியஸ் ஜோலி என கலந்து கட்டிக் கொடுத்து வந்த ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையே என் முன்னைய பதிவில் ஷங்கர் ரீமேக்கும் படம் படுத்தாலும் படுக்கலாம் என சொல்லி இருந்தேன். அதேபோல அஜித் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்லி இருந்தேன். இந்த நிலையில் ஷங்கர் தான் இந்த திரைப்படத்தை இயக்கப்போகின்றார் என்றால் அவர் தெரிவு யார் என்பதற்கு இப்போது ஓரளவு விடை கிடைத்துள்ளது.

விஜய் அமீர்கான் வேடத்தில் நடிக்கும் அதேநேரம் பாய்ஸ் திரைப்படத்தில் (இதுவும் ஷங்கர் இயக்கிய படம்) நடித்த சித்தார்த் மூன்றாவது நபராக நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இவர்கள் மூவரும் தான் என்னும் பட்சத்தில் ஜீவா, மாதவன் நடித்த வேடத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்தாகும். எது எப்படியோ இந்த படம் பற்றிய செய்திகள் இன்னும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஷங்கரோ அல்லது விஜயோ அல்லது ஜெமினி பிலிமா தம வாய் திறந்து இந்த படம் பற்றி சொன்னால் தான் எந்த செய்தியையும் உறுதிப்படுத்த முடியும்.
Share:

ஆடிக்கூழ் குடிக்கலாம் வாங்க!.



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று கவிஞன் பாடினாலும் பெரும்பாலான நாட்கள் விடுமுறை இன்றி கழிந்ததும் உண்டு. நம்மில் சிலர் ஆடிக்கூழ் குடித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னதான் இருந்தாலும் நம் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருந்து கூழ் குடிக்கும் சுகமே தனிதான். இன்னும் என் வாழ்வில் என் சொந்த வீட்டில் இருந்து நான் கூழ் குடிக்கவில்லை என்பது கவலை தான்.

கடந்த நாட்களில் ஆடிப்பிறப்பு வரும் நாளில் காலை எழுந்து அம்மா காய்ச்சும் கூழை குடித்து விட்டு அப்பா வேலைக்கு போக நானும் அம்மாவும் பாடசாலை போனது இன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் யாழில் ஒரு சிலவருடமும் பின் வவுனியாவில் பல வருடங்களும் கழிந்து இப்போது கொழும்பிலும் கூழ் குடிக்கின்றேன்.

நினைவுகள் நினைக்கும் போது சுகமாக இருக்கும். இன்றும் காலையில் அம்மா கூழ் காய்ச்சிவிட்டு எழுந்து குடி என சொன்னபோதும் என் இலட்சியப்பாதையில் இருந்து மீளக்கூடாது என்பதற்காய் பத்து மணிக்கு எழுந்து அதன் பின் கூழ் குடித்து என் பிறவிப்பயனை அடைந்தேன். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலில் விடுதலை வந்தாலும் இன்னும் இந்த தினத்துக்கு அரச விடுமுறை இல்லை. இதனால் பலருக்கு கூழ் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
அம்மா கொடுக்கும் கூழை பாத்திரத்தில் எடுத்து சுட சுட குடிக்கும் போது அதற்குள் இட்டிருக்கும் பொருட்கள் நமக்கு கடிபடும் போது அப்பப்பா என்ன சுவை அது. ஆனால் பாருங்கோ இனிப்பு கூழாக இருப்பதால் நிறைய குடிக்க முடியாது தானே.

கூழானாலும் குளித்து குடி என்பர். சமய முறைப்படி ஆறுமாத காலம் கடந்து புது மாதம் ஒன்று பிறந்திருக்கின்றது பல சிறப்புக்கள் வாய்ந்த மாதம் பிறந்திருக்கிறது. ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்து இன்றைய நாளை பலர் ஆரம்பித்திருப்பீர்கள். உங்கள் ஆடிக்கூழ் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.
Share:

Friday, July 16, 2010

3 இடியட்ஸ்சில் விஜயுடன் இணைவாரா அஜித்?



3 இடியட்ஸ் திரைப்படம் அமீர்கான், மாதவனுடன் இன்னுமொரு வளர்ந்து வரும் ஹீரோ நடித்து வெளிவந்து சக்கை கட்டு கட்டிய திரைப்படம். இதில் அமீர்கான் எவ்வளவு பெரிய ஹீரோ என்று சொல்லதேவையில்லை. அதேநேரம் தமிழ், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மாதவனுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் அமீர்கானுடன் ஒப்பிட்டால் மாதவன் கீழே தான். அடுத்து ஜோஷி, இவர் ஒரு வளர்ந்து வரும் நாயகன் தான். இவர்கள் இணையில் வந்து தான் வசூல் சாதனை படைத்தது இந்த படம். இப்போது இதை தமிழில் கொண்டுவரும் முயற்சி.

தமிழில் இந்த படத்தை கொண்டுவர ஜெமினி பிலிம்ஸ் உரிமையை வாங்கியது முதல் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்ற பேச்சு இருந்து வருகின்றது. இதை விஜய் உறுதி செய்யாதவிடத்தும் அவருக்கு தேவைப்படும் மிகப்பெரிய ஒரு வெற்றி அவரை நடிக்க வைக்கும் என்றே சொல்ல தோன்றுகின்றது. இந்த நிலையில் தான் விஜயுடன் யார் யார் நடிக்க வாய்ப்பு உண்டு என்ற கேள்வியை கேட்டு நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். வாசிக்க இங்கே சொடுக்குங்கள். அடுத்து இந்த படத்தில் நடிக்க தன் ஆசையை வெளியிட்டார் ஜீவா. ஆனால் இதற்க்கு பச்சை சிவப்பு என எந்த விளக்கும் எந்த பக்கமும் இருந்தும் இன்னும் ஒளிரவில்லை.

இந்த நிலையில் தான் தமிழ் படத்தை இயக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது ஜெமினி. ஷங்கர் என்றால் எப்படி பிரமாண்டமாய் இருக்கும் என சொல்ல தேவையில்லை. ஆனால் முதல் முறையாக ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்கப்போகின்றார். எனவே அந்த படம் எப்படி வரும் என்பது எனக்கு சொல்ல தெரியாது. தன் சொந்த படங்களில் அசத்திய ஷங்கர் ரீமேக்கில் சொதப்பினாலும் ஆச்சரியம் இல்லை.

இயக்கம் இப்படி இருக்கையில் விஜய் இந்த படத்தில் நடிப்பது நல்லது என கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரடியாகவே தெரிவித்திருக்கும் நிலையில் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்க இருக்கின்றார் என்ற செய்தி வந்திருப்பது அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க தூண்டும். இதேநேரம் முன்னர் ஒருமுறை விஜய் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் இயக்குனர் கதாநாயகி உள்ளிட்டோரை நீங்களே முடிவு செய்யுங்கள் என விஜயிடம் ஜெமினி நிறுவனம் சொன்னபோது எனக்காக இந்த படத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் இயக்குனர் ஹீரோயின் எல்லாவற்றையும் நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஜெமினியிடம் விஜய் சொன்னதாகவும் செய்தி வந்தது. எனவே தான் இப்போது ஷங்கர் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் உண்டு?


ஏற்கனவே விஜயும் ஷங்கரும் இணைய தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது வாய்ப்பும் வந்திருக்கும் நிலையில் இருவரும் அதை தவிர்க்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். விஜய் நடிப்பது ஓரளவு உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த இருவர் யார் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. மாதவன் வேடத்தில் நடிக்க மாதவன் மறுத்த பின்(ஒரே வேடத்தை திருப்பி செய்ய விருப்பம் இல்லை என காரணம் சொன்னார்.) அந்த இடத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது சாத்தியமா? என்றால் எனக்கு இல்லை என்று பதில் வருகின்றது. காரணம் அஜித் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவர் அமீர்கான் வேடத்தை செய்யவே ஆசைப்படுவார். அவர் ரசிகர்களும் அதையே விரும்புவர். அதேநேரம் விஜயும் விட்டுக்கொடுக்க தயாராக மாட்டார். அப்படி இருக்கையில் இந்த பேச்சில் வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை. சிலவேளை விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனால் அஜித் நடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏகன் படத்தில் தன்னை தானே கொலிஜ் மாணவனா என அஜித் நக்கலடித்த பின்னும் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.

விஜய்-அஜித் கூட்டு நடந்தால் சந்தோசம். ஆனால் இருவருமே இதை செயற்படுத்துவர்களா? படம் இமாலய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றிக்கு காரணம் விஜயா அல்லது அஜித்தா என்ற கேள்வி வரும். இருவருக்குள்ளும் இருவர் ரசிகர்களுக்குள்ளும் ஈகோ மோதல் வரும். இதை இருவரும் விரும்பமாட்டார்கள். இவை எல்லாம் தாண்டி விஜயை விட அடுத்த இடத்தில் அஜித்தோ அஜித்தை விட முக்கியம் குறைந்த பாத்திரத்தில் விஜயோ நடிக்க வாய்ப்பு இல்லை என்று நான் சொல்கின்றேன். ஆனால் அதையும் மீறி இவர்கள் நடிக்க சம்மதித்தால். மூன்றாவதாக நடிக்க ஜீவா தயாராக இருக்கும் நிலையில். விஜய்-அஜித்-ஜீவா-ஷங்கர்-ஜெமினி பிலிம்ஸ் இவர்களோடு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது இன்னொரு நல்ல இசை அமைப்பாளர் உள்ளிட்ட ஷங்கரின் பிரமாண்ட கூட்டணியுடன் இணைய இருக்கும் ஹீரோயின் யார்? என்ற கேள்வியும் உண்டு. அப்படி எல்லா பிரமாண்டங்களும் தல தளபதி இணைந்தால் தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் அதே நேரம் தமிழ் சினிமாவின் போக்கும் மாறி மிகப்பெரிய வளர்ச்சி ஏற்ப்படும் என்பதில் ஐயமில்லை.



இந்த பதிவை எழுத சற்று முன்னர் என் மூஞ்சி புத்தகத்தில் இந்த இணைப்பு சாத்தியமா என கேட்டிருந்தேன் நண்பர்கள் சொன்ன பதிலை இங்கே இணைக்கின்றேன். நீங்களும் சொல்லுங்கள்.

Sathiamoorthy Shathieshan ‎3 இடியட்சில் விஜயுடன் சேர்வாரா அஜித்? உங்கள் கருத்தென்ன

about an hour ago · ·
Manoj Bose
Manoj Bose
செம காமெடி .........
about an hour ago · ·
Sellathuri Sarath
Sellathuri Sarath
அஜித் 3idiots la studient ta செம காமடீ மச்சீ (அதான் உலகம்2012அழியுதுனு சொன்னாங்கலா)
about an hour ago · ·
Gopikrishna Kanagalingam
Gopikrishna Kanagalingam
‎2 முட்டாள்கள் சேர்ந்தாயிற்று.
மூன்றாமவர் யார்?
விஷால்? பரத்?
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
கோபி அஜித் விஜய் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதா? இல்லையே பேச்சு தானே நடக்கின்றது.
about an hour ago · ·
Anuthinan Suthanthiranathan
Anuthinan Suthanthiranathan
அஜித் இணைவார் என்பதை அவரது ரசிக மன்ற தலைவர் என்ற ரீதியில் சொல்லி கொள்ள விரும்புகிறேன்
about an hour ago · ·
Gopikrishna Kanagalingam
Gopikrishna Kanagalingam
அப்ப மூன்றாவது முட்டாள் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவும்.
விஷால் அல்லது பரத் ஐ பரி்ந்துரைக்கிறேன்.
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
மூன்றாவது முட்டல் தான் ஜீவா ஆச்சே
about an hour ago · ·
Manoj Bose
Manoj Bose
சரி.. அமீர்கான் ரோல் யாருக்கு?
about an hour ago · ·
Sathiamoorthy Shathieshan
Sathiamoorthy Shathieshan
இதுவரைக்கும் விஜய் என்ற பேச்சு இருக்கிறது.. இதை பற்றி பதிவு எழுதிக்கொண்டிருக்கின்றேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாசிக்க ரெடியாகுங்கள்
58 minutes ago · ·
Vathees Varunan
Vathees Varunan
‎3 இடியட்ஸ்கு தமிழல எப்புடி பெயர் வைப்பாங்க நண்பர்களே? லோஷன் அண்ணா சொல்லுறாரு
3 மூதேவியள் என்று நீங்கள் எப்புடி பெயர் வைப்பீங்க?
54 minutes ago · ·
Manoj Bose
Manoj Bose
எழுதுங்கள் எழுதுங்கள் ... மறக்காமல் அஜித் என்ன ரோல் என்றும் சொல்லிவிடுங்கள்.... மாதவன் ரோலா? ஸ்ர்மன் ஜோஷி ரோலா? இல்ல வைரஸ் professor ரோலா ?
49 minutes ago · ·
எவனோ ஒருவன்
எவனோ ஒருவன்
எண்டா அஜித்தின் பெயரை நாசமாக்கவா ?
30 minutes ago · ·

1. விஜயுடன் அஜித் சேர்வாரா?

2. அப்படி விஜய் அஜித் இணையும் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ஹீரோ யார் இணைவார்?

3. இந்த படத்துக்கு பொருத்தமான கதாநாயகி யார்?

4. பொருத்தமான இசையமைப்பாளர் யார்?

5. படத்துக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன பெயர் வைக்கலாம்.?

மறக்காமல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போங்கள். சில நேரங்களில் உங்கள் ஆலோசனை ஷங்கருக்கு பயன்படலாம்.

தளபதியும் தலையும் சேர்ந்து ஒரு வெற்றி படம் தர வாழ்த்துவோம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox