நவீன '3டி' கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓவியர்கள் குழு ஒன்று, இயேசுவின் முகத்தை வரைந்துள்ளது.இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும், 'டெலிகிராப்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது.இயேசு உயிர் நீத்தபின், அவரை கல்லறையில் அடக்க செய்யும் போது, அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த லினன் ரக துணியால் ஆன போர்வையில், அவரின் உருவம் அமைப்பு பதிந்ததாக நம்பப்படுகிறது. அதை பயன்படுத்தி, இந்த ஓவியர்கள் குழு, தற்போது இயேசுவின் முகத்தை, '3டி' கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் வரைந்துள்ளனர்.
இதை பதிவு செய்த, 'டிவி' சேனல் ஒன்று,'தி ரியல் பேஸ் ஆப் ஜீசஸ்' என்ற பெயரில் அதை ஒளிபரப்பியது.இதுகுறித்து, இத்திட்டதின் தலைமை ஓவியரான, ரே டவுனிங் கூறுகையில்,'இயேசுவின் முகத்தை மீண்டும் வரைய விரும்பினால், அதற்கு அவரது உண்மையான முகம் தேவை. அதற்கு தற்போது ஆதாரமாக இருக்கும் ஒரே பொருள், இயேசுவின் உடலில் போர்த்தப்பட்டிருந்த போர்வை தான்' என்றார்.இவ்வாறு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
2 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள் சதீஸ். குரலால் எமை வசப்படுத்தி தமிழால் எம் இதயங்களைக் கவர்ந்து என்றென்றும் நட்சத்திரமாக வாழ வாழ்த்துக்கள் நண்பா.
@கமல்
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவு இருப்பின் ஒன்றாக சாதிப்போம்.
Post a Comment