முதலில் நிகழ்வுகளில் வெளியான இந்த பதிவை படித்து விடுங்கள் காரணம் இந்த பதிவுதான் நான் எழுதி இருக்கும் இந்தப்பதிவிற்கு மூல காரணம்....
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து அதிரடி சாதனை நிகழ்த்தியவர் இந்திய அணியின் யுவராஜ் சிங். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள அவரது ஆட்டம் மிகவும் மோசமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிரான அந்தப் போட்டியிலும் பஞ்சாப் அணி Nப்பர் ஓவர் அடிப்படையில்தான் வெற்றியை பெற முடிந்தது.
பஞ்சாப் அணியின் ஆட்டம்தான் இந்தளவு மோசமாக இருக்கிறது என்றால் அந்த அணியில் இடம்பெற்றுள்ள யுவராஜ் சிங்கின் ஆட்டம் அதைவிட மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள 7 போட்டிகளிலும் சேர்த்து யுவராஜ் எடுத்துள்ள மொத்த ரன்களின் எண்ணிக்கை 101 மட்டுமே. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக அவர் 43 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் சிங்கின் இந்த மோசமான ஆட்டத்திற்கு அவருக்கும் அணியின் கேப்டன் சங்ககாராவுக்கும் இடையே உள்ள உரசல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் பஞ்சாப் அணியிலிருந்து விலக யுவராஜ் விரும்பியதும், அதை அணி நிர்வாகம் ஏற்க மறுத்ததும் தான் யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பாகவே அணி நிர்வாகம் யுவராஜ் சிங்கிக்கு பதிலாக சங்ககாராவை கேப்டனாக நியமித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் தாம் அணியிலிருந்து விலககி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.
பஞ்சாப் அணியிலிருந்து விலகி யுவராஜ் சிங் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போதே அணி நர்வாகம் பிசிசிஐ யிடம் யுவராஜ் விலகுவதாக கூறியதையும் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டதையும் தெரிவித்ததோடு, இதன் காரணமாக யுவராஜ் வேண்டுமென்றே மோசமாக ஆடினால் என்ன செய்வது என்றும் சந்தேகம் எழுப்பியது.
அந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் தற்போது யுவராஜ் சிங் மோசமாக ஆடி வருகிறார்.
சங்ககாராவுடன் மோதல் என்றும் அதனால் தான் சரியாவி விளையாடவில்லை என்று கூறப்படுவதை யுவராஜ் மறுத்துள்ளார். இது போன்று எழுதுவது தவறானது என்றும் கூறினார். யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாகவே சங்ககாராவும் கருத்து தெரிவித்துள்ளார்
இனி என் பதிவு.....
இந்த செய்தி மட்டும் அல்ல இன்னும் சில செய்திகளை பார்க்கும் போது இம்முறை நம் ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்க்ஸ் அணி தோல்விக்கு முழு காரணம் முதல் காரணம் யுவராஜ் தான் என்பது போல உள்ளது. அப்படி என்றால் கிரிக்கெட் ஒருவரின் ஆட்டம் என்ற கருத்துக்கு வந்துவிட்டதா? முன்பு சச்சின் ஆடாவிட்டால் இந்தியா தோல்வி என கடிந்து கொண்டது தான் நினைவுக்கு வருகின்றது. உலகின் நட்சத்திர வீரர்கள் பலர் இருக்கும் அணிதான் இது. அப்படி இருக்கையில் யுவராஜ் வேண்டுமென்றே ஆடவில்லை என்பதால் தோற்கின்றார்கள் என்பது நகைப்பாக இருக்கின்றது. யுவராஜ் நல்ல வீரர் அதிலும் T20இல் சிறந்த வீரர். அதற்காக இப்படி சொன்னால் அந்த அணியில்விளையாடும் மற்ற உலக வீரர்கள் என்ன வெறும் பொம்மைகளா?
5 கருத்துரைகள்:
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
ஐ.பி.எல் போடும் மாயம், தண்ணீரில் காணும் கோலம் நிலைக்காதம்மா..,
solla vanthittar samayal master.
ivar periya aruppu.sorry paruppu
//
SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
ஐ.பி.எல் போடும் மாயம், தண்ணீரில் காணும் கோலம் நிலைக்காதம்மா..,
//
சியர் லீடர்ஸ் நிலைச்சா போதும்தலைவா.
//பெயரில்லா கூறியது...
solla vanthittar samayal master.
ivar periya aruppu.sorry paruppu//
நான் சொல்வதில் உமக்கென்ன சலிப்பு
நான் இல்லை பெரிய பருப்பு.
உன் பெயரில் வந்து சொல்லு கருத்து
யுவராஜின் ஆட்டம் ஏன் முக்கியமாக கருத்த படுகிறதென்றால் அவர் ஆடும் இடம் முக்கயமானது (மிடில் ஆர்டர்). இருபது ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டர் என்பது அச்சாணி போன்றது. இப்போது அதில் தான் பிரச்சனை. யுவராஜ் ஆடவில்லை அதனால் அணி தோற்கிறது என்பதை விட அணி தோற்கும் போதும் யுவராஜ் ஆடுவதில்லை என்பதுதான் சரி.
Post a Comment