Friday, April 9, 2010

மஹிந்த ராஜபக்சவும் எட்டாம் திகதியும்-ஒரு வித்தியாச ஆய்வு.



இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ச அவர்களின் வெற்றி இந்த பாராளுமன்ற பொது தேர்தலிலும் தொடர்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவே தென்படுகின்றது. இந்த நிலையில் ஒரு சுவாரஷ்யமான விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக எதிர்கட்சித்தலைவர் என்ற பதவிகளை வகித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் அன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியானார். அது பற்றிய விபரம் கீழ்வருமாறு.

Mr. Mahinda Rajapaksha 4,887,152 50.29%
Mr. Ranil Wickramasinghe 4,706,366 48.43%
Mr. Siritunga Jayasuriya 35,425 0.36%
Mr. Achala Ashoka Suraweera 31,238 0.32%
Mr. Victor Hettigoda 14,458 0.15%
Mr. Chamil Jayaneththi 9,296 0.10%
Mr. Aruna de Zoya 7,685 0.08%
Mr. Wimal Geeganage 6,639 0.07%
Mr. Anura de Silva 6,357 0.07%
Mr. Ajith Kumara Jayaweera Arachchige 5,082 0.05%
Mr. Wije Dias 3,500 0.04%
Mr. P. Nelson Perera 2,525 0.03%
Mr. Hewaheenipella ge Shantha Dharmadwaja 1,316 0.01%

இந்த தேர்தல் நடை பெற்ற திகதியை பாருங்கள் 17.11.2005

அதனை தொடர்ந்து தன பதவிக்காலம் முடிவடைய முதலே மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை அண்மையில் நடத்தினார். வெற்றி நிச்சயம் என்ற ரீதியில் இந்த தேர்தலை அவர் எதிர்கொண்டாலும் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி சரத் பொன்சேகாவும் மஹிந்த ராஜபக்சவும் மோதினர். பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது தடவையாக தொடர்ச்சியாக இலங்கையின் முடிசூடா மன்னனாக மன்னிக்கணும் மன்னர் ஆட்சி இல்லை ஜனநாயக ஆட்சிதானே எனவே ஜனாதிபதியானார். அதன் பின் நடப்பத்துதான் உலகத்துக்கே தெரியும். இந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் முழுமையான விபரம்.

CandidatePartyVotes%
Mahinda RajapaksaUnited People's Freedom Alliance6,015,93457.88%
Sarath FonsekaNew Democratic Front4,173,18540.15%
Mohomad Cassim Mohomad IsmailDemocratic United National Front39,2260.38%
Achala Ashoka SuraweeraJathika Sangwardhena Peramuna26,2660.25%
Channa Janaka Sugathsiri GamageUnited Democratic Front23,2900.22%
W.V. Mahiman RanjithIndependent18,7470.18%
Panagoda Don Prince Soloman Anura LiyanageSri Lanka Labour Party14,2200.14%
Sarath ManamendraNawa Sihala Urumaya9,6840.09%
M.K. SivajilingamIndependent9,6620.09%
Ukkubanda WijekoonIndependent9,3810.09%
Lal PereraOur National Front9,3530.09%
Siritunga JayasuriyaUnited Socialist Party8,3520.08%
Vickramabahu KarunaratnaLeft Front7,0550.07%
Idroos Mohomad IlyasIndependent6,1310.06%
Wije DiasSocialist Equality Party4,1950.04%
Sanath PinnaduwaNational Alliance3,5230.03%
Mohamed MusthaffaIndependent3,1340.03%
Battaramulle Seelarathana TheroJana Setha Peramuna2,7700.03%
Senaratna de SilvaPatriotic National Front2,6200.03%
Aruna de ZoyzaRuhunu Janatha Party2,6180.03%
Upali Sarath KongahageUnited National Alternative Front2,2600.02%
Muthu Bandara TheminimullaOkkoma Vesiyo – Okkoma Rajavaru Sanvidhanaya2,0070.02%
Total10,393,613
Registered Voters14,088,500
Total Votes cast10,495,451 (74.50%)
Invalid Votes101,838
Valid Votes cast10,393,613

இந்த தேர்தல் நடை பெற்ற திகதியை பாருங்கள் 26.01.2010

இது பாராளுமன்ற தேர்தலுக்கான நேரம்....இந்த இடுகையை நான் இடும் இந்த நேரம் வரை மஹிந்த ராஜபக்சவின் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. எனவே ஆட்சி அமைக்கப்போவதும் ஓரளவு தெரிகின்றது.

இந்த தேர்தல் நடை பெற்ற திகதி மட்டும் என்னவாம். 08.04.2010

ஜனாதிபதி வெற்றி பெற்றிருக்கும் முன்னைய இரண்டு தேர்தல்களும் சரி இப்போது அவர் வெற்றி முகம் காட்டிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் சரி நடைபெற்ற திகதிகள் எட்டு. (முதல் தேர்தலில் 1+7=8, இரண்டாம் தேர்தல் 2+6=8, இப்போதைய பாராளுமன்ற தேர்தல் நேரடி 8) இந்த எட்டு தான் எட்ட முடியா வெற்றிகளை கூட எட்ட வைக்கின்றதோ. இந்த திகதிகளின் தெரிவுகள் திட்டமிட்டோ அல்லது எதேர்சையாகவோ இருந்தாலும் எட்டின் பங்கு மஹிந்த வாழ்வில் மறக்க முடியாததே.
Share:

12 கருத்துரைகள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அது சரி.. இந்த விசயம் மஹிந்தவுக்குத் தெரியுமா? ... :))

ஆதிரை said...

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ.

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா

ஆதிரை said...

மேன்மைமிகு ஜனாதிபதி இப்போது எட்டாம் எட்டில்...

(வயது 64)

SShathiesh-சதீஷ். said...

//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
அது சரி.. இந்த விசயம் மஹிந்தவுக்குத் தெரியுமா? ... :))//

தெரியாமலா இருக்கும் தெரியாவிட்டால் என்ன இனி தெரிந்து கொள்ளட்டும்...

SShathiesh-சதீஷ். said...

/ஆதிரை கூறியது...
எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ.

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா//

நல்லா பாட்டெல்லாம் போடிரிங்க நான் இப்போ இரண்டாம் எட்டுக்கும் மூன்றாம் எட்டுக்கும் நடுவில தான் இருக்கேன். நீங்கள்?????

SShathiesh-சதீஷ். said...

/ ஆதிரை கூறியது...
மேன்மைமிகு ஜனாதிபதி இப்போது எட்டாம் எட்டில்...

(வயது 64)//

நீங்கள் சொன்ன பாட்டில் ஒரு வரி இருக்கு நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தால் நிம்மதி இல்லை என்று.....

ARV Loshan said...

எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க சதீஷ்..
எட்டு இருக்கும் வரை யாரும் எட்டிப் பிடிக்க முடியாது மாமாவை,, மன்னிக்கவும் மன்னரை..

மொத்தத்தில் இவர் தான் எட்டுப்பட்டி ராசா.. ;)

SShathiesh-சதீஷ். said...

// LOSHAN கூறியது...
எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க சதீஷ்..
எட்டு இருக்கும் வரை யாரும் எட்டிப் பிடிக்க முடியாது மாமாவை,, மன்னிக்கவும் மன்னரை..

மொத்தத்தில் இவர் தான் எட்டுப்பட்டி ராசா.. ;)//

அதுதான் மாமா சாரி மன்னர் வேட்டி கட்டி இருக்காரே எட்டுப்பட்டி ராசாவுக்கு இதை விட என்ன அடையலாம் வேணும் அண்ணா.

EKSAAR said...

//தெரியாமலா இருக்கும் தெரியாவிட்டால் என்ன இனி தெரிந்து கொள்ளட்டும்...//

சோதிடத்தில் அபார நம்பிக்கையுள்ளவரல்லவா அவர். அவர்கையில் இருக்கும் கொரிய அதிஷ்ட இலச்சினையும் ஒரு காரணம் என்று அவர் நம்புவதுபோல் தெரிகிறது.

8 இன் ரகசியம் அவருக்கு தெரியாமல் இருந்தால் அவருக்கு எத்திவையுங்களஇலக்கங்கள் தொடர்பான ஆலோசகர் பதிவிக்கு வாய்ப்பு உள்ளது

தமிழ்நங்கை said...

நல்ல |ஆராய்ச்சி பிரியமானவரே.
உங்கள் தலைவருக்கு என்ன நம்பர் பிடிக்கும் என அறிந்து அவரின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என ஒரு பதிவு போடவும்..

SShathiesh-சதீஷ். said...

@EKSAAR
கொரியாவிலுமா? தாங்காது சாமியோவ்????
ஆலோசகா நோ நோ நாங்கெல்லாம் அதுக்கும் மேல....

SShathiesh-சதீஷ். said...

@தமிழ்நங்கை

ஏனுங்க அக்கா நல்லாய் தானே போய்கொண்டிருக்கு வண்டி.... அவர் யாரு சொல்லி அடிக்கிறதில பள்ளி சாரி கில்லியாச்சே அவருக்கு ஏதுங்க இலக்கம் சோதிடம்....

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive