உழவன் திரைப்படத்தில் பிரபு பானுப்பிரியாவுடன் இணைந்து நடித்து தன் அறிமுகத்தை மேற்கொண்ட தொடையழகி கார்த்திக்குடன் இணைந்து நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தையும் அள்ளிவிட்டார். தொடர்ந்து அர்ஜூனுடன் அடிமைச்சங்கிலி, பிரபுதேவா அப்பாசுடன் சிம்ரனும் ரம்பாவும் இணைந்து வி.ஐ.பில் கலக்கி எடுத்தனர். அதற்க்கு அடுத்த திரைப்படம் ரம்பாவின் திரை உலக வாழ்க்கையில் இன்னொரு மைக்கல். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூடவே வரும் கதாபாத்திரம் (ஆனால் ஜோடி இல்லை.) அருணாச்சலத்தில் அனார்கலியாகி அள்ளினார் மீண்டும் ரசிகர்களை. அடுத்த படம் அடுத்த தலைமுறையில் முக்கிய நாயகனான தல அஜித்துடன். ஆனால் அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை திரைப்படங்கள் ரம்பாவை ஏமாற்றின.
ஆனால் அடுத்த வருடம் உலக நாயகன் பிரபுதேவா இணைவில் வந்த காதலா காதலா படம் ரம்பாவிற்கு இன்னொரு வரலாறு. அதே ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஓ மரியா பாடலுக்கு மட்டும் ஆடினார். படம் படுத்தாலும் அந்த பாடலின் நிலை உங்களுக்கே தெரியும். இவர் நடிக்கும் படங்களில் அனேகமாக இரண்டு கதாநாயகிகள் இருந்து கொண்டே வந்தனர். இந்த வரிசையில் இன்னொரு முக்கிய நடிகரான இளைய தளபதியுடன் முதல் முறையாக கைகோர்த்தார் ரம்பா நினைத்தேன் வந்தாயில். இடுப்பு மச்சத்தை வைத்தே மனதில் பச்சை குத்தியது இளைஞர் கூட்டம்.
ஆனால் அடுத்து வந்த ஜானகி ராமன் பெரிய பெயரைக் கொடுக்கா விட்டாலும் அடுத்து வந்த உனக்காக எல்லாம் உனக்காகவில் மீண்டும் கார்த்திக்குடன் ஜோடி சேர உனக்காக நாங்கள் இருக்கின்றோம் என மீண்டும் ரசிகர்களை சொல்ல வைத்தார். அடுத்து பார்த்தீபனுடன் உன்னருகே நானிருந்தால் படத்தில் நடித்தார். அந்த வருடம் நிறைய படங்களில் ரம்பா நடித்திருந்தாலும் பெரிதாக போன படங்கள் ஒன்று இரண்டுதான்.
குடும்பக்கதையாக காதலை கலந்து வந்த பிரஷாந்தின் பூமகள் ஊர்வலம் படமும் மீண்டும் ஒருதடவை குஷ்பூ,மோனிக்காவுடன் இளையதளபதி நடித்த மின்சாரக்கண்ணாவில் விஜய் ஜோடி இல்லாமல் கதாநாயகியாக நடித்தார். படம் படுத்துக்கொண்டது. அடுத்ததும் அதேவருடம் வந்தது விஜயுடன் என்றென்றும் காதல். இந்த படமும் ஏமாற்றியது. இடையில் சுயம்வரம் படத்தில் பல நாயகர்கள் நாயகிகளுடன் இணைந்து உலக சாதனை படைத்தார் இந்த சிணுங்கல் நாயகி.
தொடர் தோல்விகள் கொஞ்சம் ஆட்டியதோ என்னவோ லொள்ளு நாயகனுடன் குங்குமப்பொட்டுக்கவுண்டர் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் கௌசல்யா இன்னொரு நாயகி. அடுத்து அன்புடனில் அருண்குமாருடனும்(இப்போதைய அருண் விஜய்) மீண்டும் அர்ஜூனுடன் நடித்த சுதந்திரமும் தொடையை சாரி காலை வாரி விட்டது. மீண்டும் கார்த்திக்குடன் இணைந்த அழகான நாட்கள் அழகியை மறக்கவேண்டிய நாட்களாக்கிவிட அடுத்து வந்த ஆனந்தத்தில் தலைகாட்டினார் ரம்பா. மம்முட்டி, முரளி, அப்பாசுடன் நாயகிகள் தேவயாணி, சினேகா நடித்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் அதற்க்கு பின் யாரும் ரம்பாவை சீண்டவில்லை. இதனால் தன் சொந்த செலவில் சூனியம் வைக்க தயாராகி த்ரீ ரோசெஸ் என்ற படத்தில் ஜோதிகா, லைலாவுடன் சேர்ந்து நடித்துப்பார்த்தார். அதுவும் சூனியமாகிப்போக அப்படியே தமிழை விட்டு மெதுவாக ஒதுங்கிய ரம்பா, அதன் பின் தன் முதல் நாயகன் பிரபு அப்பாஸ் நடித்த பந்தா பரமசிவத்தில் நடித்தார் அந்தப்படம் பந்தா காட்டாமல் விட சத்ரபதி அழகிய தீயே படங்களில் சிறு காட்சிகளில் வந்து போனார் .சுக்ரனில் விஜயுடன் குத்தாட்டம் போட்டார்.
அப்படியே அண்மைக்காலத்தில் மானாட மயிலாடாவில் நடுவராக அசத்தி வந்தவர் தன் திருமண வாழ்விற்கான இந்திரனை கண்டுபிடித்துவிட்டார் இந்த ரம்பை. அண்மையில் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பிற்கு ரம்பாவின் தொடையையும் கவர்ச்சியையும் காட்டி வெற்றி பெற்ற ரஜினி,கமல்,விஜய் அஜித் போன்ற முன்னணி நாயகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கவலையான விடயமே. ஒரு காலத்தில் கலக்கோ கலக்கென கலக்கிய புயலின் வீரியம் குறைந்து விட்டது என நினைத்தார்களா இந்த நட்சத்திரங்கள். இப்போதே இப்படி என்றால் ஒரு காலத்தில் ரம்பாவிற்கு ஒரு கவலைக்குரிய விடயம் நடந்தாலோ அல்லது ஏதும் பிரச்சனை என்று வந்தாலோ இவர்கள் எல்லாம் ஏறேடுத்துப்பார்பார்களா? தயவு செய்து இந்த நடிகர்களின் ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம் ஆனால் இதுவும் ஒரு வேலையாக கொண்டு நீங்கள் செய்யத்தானே வேண்டும் காரணம் உங்களை எல்லோரும் கவனிக்கின்றார்கள். இல்லாவிடால் என்னை போல ஒரு சிலர் எழுதலாம் ஊடகங்கள் கிழிக்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே உங்களுடன் நடிக்காத தப்பு செய்த புவனேஸ்வரிக்கு வக்காலத்து வாங்கிய கூட்டத்துக்கு போனீர்கள் வாழ்த்து சொல்ல நேரம் இல்லையா உங்களுடன் நடித்தவருக்கு?
உலகநாயகனே உங்களுக்கு வேண்டுமென்றால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் பந்தத்தில் இணைபவர்களுக்கு வாழ்த்துவது மரபுதானே.
இளைய தளபதி உங்களுக்கு ஆயிரம் தலைவலிதான் ஆயிரம் திருமணம் செய்துவைப்பதை விட ஆயிரம் காலப்பயிர் ஒன்று நன்றாய் வாழவேண்டுமென வாழ்த்துவது எவ்வளவு முக்கியம் என தெரியாதா? த்ரிஷா உங்கள் திருமணத்துக்கும் வரமாட்டார். அரசியலில் ஆணி பிடுங்கமுதல் இப்படி நாலு இடம் போய் வாழ்த்தினால் தானே நீங்களும் அரசியல் வாதி ஆகலாம். காரணம் கடைசியில் சொல்கின்றேன்.
தல கல்யாணம் போய் வாழ்த்த கட்டுப்பாடு இல்லை யாரும் கட்டாயப்படுத்திறதும் இல்லை. நீங்கள் இங்கே இல்லையோ தெரியாது ஆனால் சோனா பிறந்தநாளுக்கு போறிங்க யாரும் கட்டாயப்படுத்தாமல் இந்த ரம்பைக்கு ஒரு வாழ்த்து சொன்னால் என்ன தல.
இவங்கெல்லாம் இருக்கட்டும் வந்தா என்ன வராவிட்டால் என்ன இவ்வளவு வேலைகளுக்கும் நடுவில் இந்த வயதிலும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் கலைஞர் கருணாநிதி நேரே வந்து வாழ்த்தும் போது உங்களுக்கு எங்கே போய்விட்டது. எனக்கு இப்போ காரணம் புரிந்து விட்டது ரஜினி,கமல்,விஜய்,அஜித். அவர் போனால் பாராட்டு விழா வைப்பாங்க இவ்வளவு சுமைக்கு நடுவில் வந்து வாழ்த்தியதுக்கு வாழ்த்து தெரிவித்து மிக விரைவில் பாராட்டு விழா நடக்கும் அப்போது இங்கே வராத இவர்கள் அங்கெ வர வேண்டுமே. இங்கே வராததுக்கு காரணம் அஜித் சொன்னதுபோல எல்லா இடமும் போனால் டஎர்ட் ஆகிடுவாங்க. அதேபோல இவங்க வந்தா என்ன பாராட்டு விழாவா நடத்தப்போறாங்க.
7 கருத்துரைகள்:
மிக மிக சுவையான பதிவு சதீஷ்..!
இந்திரகுமார் - ரம்பா தம்பதிகளின் திருமண அழைப்பிதல் பார்க்க கிடைத்தது.. (மாப்பிளை நம்மாளுள்ளே...) அந்தகாலத்து அரசோலை மாதிரி...
நடிகர்களுக்கு கொடுத்திருக்கும் நச் அருமை சதீஷ்...
@உண்மைத் தமிழன்(15270788164745573644)
உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
மணப்பெண் கோலத்தில் ரம்பா கொள்ளை அழகு..
//தல கல்யாணம் போய் வாழ்த்த கட்டுப்பாடு இல்லை யாரும் கட்டாயப்படுத்திறதும் இல்லை. நீங்கள் இங்கே இல்லையோ தெரியாது ஆனால் சோனா பிறந்தநாளுக்கு போறிங்க யாரும் கட்டாயப்படுத்தாமல் இந்த ரம்பைக்கு ஒரு வாழ்த்து சொன்னால் என்ன தல.
அஜித் வாழ்த்து சொல்ல வில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? கலந்து கொள்ளவில்லை. அதற்க்கு வேண்டுமானால் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். யார் கண்டது? உங்க பாராட்டு விழாவுக்கு வந்து அவ்வளவு கோபப்பட்டாரு, ஆனா ரம்பா கல்யாணத்துல மட்டும் கலந்துக்கிராறு என்று யாராவது அய்யாவிடம் பற்ற வைத்து விடுவார்களோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்.
@AKAM
இந்திரன் ரம்பை திருமணத்திற்கு அரசோலை போல அழைப்பிதழை இருந்தது ஆச்சரியமில்லையே......நீங்களும் அதனுடன் ஒரு கிளாசில் மதுவுடன் காதல் காயங்களே பாடல் பாடிக்கொண்டு சென்றதாக கேள்வி...நிஜமாவா?
@Bala
அழகாய் ஆராதித்திருக்கின்றீர்கள் போல
இந்த ரம்பைக்கு ஒரு வாழ்த்து சொன்னால் என்ன தல என்ற என் வசனம் அவர் நேரே சென்று வாழ்த்தாததை குறித்தே எழுதி இருந்தேன். ஆனால் அதில் நான் தெளிவின்றி எழுதி இருந்ததால் நீங்கள் அப்படி கூறி இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். யார் கண்டா நீங்கள் சொன்னது போல பத்தினாலும் பத்திவிடும்....
'விஜய் முரசு', 'திரை நிலா அஜித்', 'சினிமா அந்தரங்கம்' மற்றும் 'ரொமான்ஸ் ரகசியம்' மாத இதழ்களை இப்போதுwww.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.
Post a Comment