Thursday, April 15, 2010

சூர்யாவின் சிங்கத்தில் விஜய்.



ஹரியின் இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ்,விவேக் நடிப்பில் சிங்கம் திரைப்படம் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் திரைப்படம். காரணங்கள் இல்லாமல் இல்லை. அரிவாளால் கமர்சியல் சொல்லும் ஹரி சூர்யா இணைவு, ஆதவன் சறுக்கலுக்கு பின்னரான சூர்யா படம், அழகுப்புயல் இப்பிடி சொல்லி அலுத்துப்போச்சு அழகு ஐஸ்கிரீம் அனுஷ்கா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் அதிரடி இசை இவற்றை தாண்டி sun பிக்செர்சின் வெளியீடு என்று எகிறுகின்றது.

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான போலீஸ் படங்களை தந்தவர்கள் இணைக்கின்றார்கள். சாமி தந்த ஹரி காக்க காக்க தந்த சூர்யா பட்டையை கிளப்புவார்கள் என நம்பலாம். பாடல்கள் கூட வெளிவராத நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் நீண்டகால நருங்கிய நண்பர் இளைய தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக சில செய்திகள் வெளிவருகின்றன. உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் வாய்ப்பு இருக்கென்று ஒருவகையிலும் இல்லை என்று இன்னொரு வகையிலும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

ஏற்கனவே தன் தோழன், ஒன்றாக நடித்தவர்,தான் நடிக்க இருந்த பெரியண்ணாவில் சூர்யாவை நடிக்க வைத்து பாடல்களை பாடி கொடுத்தவர், மேடைகளில் ஒருவரை ஒருவர் பாராட்டுவது என்பன இதற்க்கு சாத்தியம் உண்டென சொன்னாலும் அண்மைய விஜயின் சறுக்கல் சூர்யாவின் எழுச்சி, சுறா விரைவில் வர இருப்பது போன்ற சூழ்நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வியும் உள்ளது. இவற்றை விட கௌரவ வேடத்தில் விஜய் வரும் போது அது ரொம்ப பவர் புல்லான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். சூர்யாவின் படத்தில் இது இருக்குமா? என்ற கேள்விகளுடன். சிறு கதாபத்திரமா? எவ்வளவு நேரம் வருவார்? என்ன கதாபாத்திரம் விஜய் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார்? இந்த இணைவு எப்படி சாத்தியமானது? என்ற கேள்விகளுடன் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்பதே.
Share:

5 கருத்துரைகள்:

பாலா said...

//இளைய தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக சில செய்திகள் வெளிவருகின்றன

இது கண்டிப்பாக வதந்திதான்.

பனித்துளி சங்கர் said...

அப்படியா மேட்டரு !!!

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

SShathiesh-சதீஷ். said...

@பாலா
விக்கி பீடியாவில் இந்த செய்தி இருக்கின்றது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

SShathiesh-சதீஷ். said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

அதுதாங்க மேட்டர் ஆளை காணலையே எங்கே போய்டிங்க

ketheeswaran said...

INnathu sinna pilathanamana seithi. intha sethiya ipathan naaney parkiran. naan valamayaka parkum entha inayathalathilum ipadi oru seithi varavillai.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive