வெற்றி எப்.எம்மில் வேலை செய்யும் போது எனக்கு இரவு தான் பகல் பகல் தான் இரவு. இரவு வேலை முடித்திட்டு பன்னிரண்டு மணிக்கு நம் அலுவலக வாகனத்தில் ஏறினாலும் பக்கத்தில் இருக்கும் வெள்ளவத்தைக்கு வருவதற்கு எனக்கு பன்னிப்பிட்டிய காட்டி ௦ந்ரரை இரண்டுக்கு வீட்டுக்கு கொண்டுவந்து விடும் நல்ல நண்பர் சாரதி. அப்புறம் சாப்பிட்டிட்டு அப்பிடியே வந்து இணையத்துக்கு முன்னால குந்தினால் இரண்டரை மூன்றுக்கு தான் தூக்கம் வரும்.மீண்டும் காலையில் எழும்பிறது என்னவோ பத்து மணிக்குத்தான். எழுந்தவுடன் பிரஷ் பண்றானோ இல்லையோ மீண்டும் இணையத்தில் இருக்கும் முக்கியமான சகல தளங்களும் நம் பதிவர்களின் வலைப் பூக்களையும் பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை. காலை சாப்பாடு கொஞ்சம் லயிட்டா இருக்கும். அப்புறம் ஒரு இரண்டு மணி போல மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு அலுவலகம் போனால் மாலை ஆருமநிபோல பக்கத்துக்கு கடைக்கு போறது நம்ம வழக்கம். என்னடா அடிக்கடி சாப்பிடிறான் என நினைக்கலாம். நமக்குத்தான் இப்போ வயிறில் புண் உருவாக்கி இருக்கே. அடிக்கடி கொட்டிக்கோ அதுதான் நல்லம் என்பது டாக்டரின் அட்வைஸ்.
இப்பிடி சாப்பிட்டா எப்பிடி இருக்கும் என் உடம்பு. கொஞ்சம் கூட உடற்பயிற்சி இல்லை. இதனால தான் வீட்டை விட்டு வெளிய போய் ஓடலாம் என முடிவெடுத்தேன் ஓடிறன் ஓடிறன் ஓடிக்கொண்டே இருக்கேன். (ஓடாவிட்டால் சாப்பாடு போடிறாங்க இல்லை.) ஆனால் என்ன இரண்டு ரவுண்ட் ஓடிறதுக்குள் மூச்சு வாங்கிறது. கூட யாரும் அழகான பொண்ணுங்க ஓடினால் வாங்கதோ என்னவோ? அனுபவஸ்தர் யாரும் இருந்தால் சொல்லுங்க. ஏதோ கஷ்டப்பட்டு நாமளும் கொஞ்சம் அழகாய் இருக்கணும்(அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என யாரங்க கேட்கிறது) என்கிறதுக்காக ஓடிட்டிருக்கேன். என்னாலையும் நம்ப முடியல மூன்று வார ஓட்டத்துக்கு பின் ஒரு அரை இஞ்சி குறைஞ்சிருக்கு. இதில என்ன கொடுமை என்றால் என் ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு போனால் அவள் நக்கல் தாங்க முடியல என்பதுதான் என்னுடைய இந்த கொலைவெறி ஓட்டத்துக்கு காரணம்.
நான் ஓடும் போது காலில் ஒரு சப்பாத்து அணிந்து தான் ஓடுகின்றேன். (இதை மட்டும் சொல்றாய் அப்போ உடுப்பு போடிறதில்லையா என கேட்கப்படாது.) நான் சொல்லப்போகும் விடயத்துக்கு இது முக்கியம் என்பதால் தான் சொன்னேன். சரி ஷூ இல்லாமல் ஓடலாம் என்று போனால்(எல்லாம் போட்டுக்கழற்றும் பஞ்சிதான்.) வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அப்படி ஓடாத காலில கல்லு முள்ளு குத்திடும் என பொங்கி எழுந்திடுவாங்க அப்புறம் என்ன பத்து நாள் தோய்க்காத சொக்சும் சூவும் போட்டுக்கொண்டு ஐயா ஓடிறதுதான் வேலை. எனக்கு ஓடிறதென்றால் அதற்கு கட்டாயம் ஷூ போடிறதுதான் என்ற எண்ணம் வந்துவிடாது. அதேபோல அந்த மைதானத்துக்கு வரும் பலரும் ஷூ அணிந்து வந்துதான் ஓடுகின்றனர். ஆனால் சில நாட்கள் போக வெறும் காலுடன் ஓடுபவர்களையும் நான் காணத்தொடங்கினேன். அடடா ஓடிறாங்களே அதுவும் வெறுங்காலோடு என கொஞ்சம் ஆச்சரியத்தோடு அவர்கள் செய்கையையும் கவனிக்கத்தொடங்கினேன்.
எங்களை போல எந்தவித கஷ்டமும் இன்றி மிக இலகுவாக ஓடினார்கள். பாதங்களும் முழுமையாக நிலத்தில் படும்படி அவர்கள் ஓட்டம் நேர்த்தியாக இருந்தது. கொஞ்சம் தயங்கித்தயங்கி கேட்டுவிடலாம் என்று நேற்று ஒருவரிடம் ஏன் நீங்கள் இப்படி வெறும் காலுடன் ஓடுகின்றீர்கள். ஷூ போட்டுத்தானே எல்லோரும் ஓடுகின்றார்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்னது எனக்கு சரியாகப்படது. ஷூ இன்றி ஓடும் போது காலுக்கும் பாதங்களுக்கும் எந்த தடையும் இல்லை. முழுமையாக எங்கள் பாதங்களை நிலத்தில் பதிக்க முடியும். அதுமட்டுமன்றி ஷூ அணிந்து ஓடுவது உடல் எடையை பாதிக்கும் என்று சொன்னார். எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஓடும் நமக்கு இப்படி ஒரு பிரச்சனை வருமா தெரியல. அவர் சொன்னது சரியோ தப்போ. சிலர் வெறும் காலுடன் ஓடுகின்றனர். எனவே ஏதோ ஒன்று இல்லாமல் இருக்காது. இப்போ நான் வெறுங்காலுடன் ஓடிறதா அல்லது ஷூ போட்டு ஓடிறதா தெரியல.
ஒரு முக்கியமான விஷயம் இந்த பதிவு type செய்து ரொம்ப களைத்துப்போனேன் என்று கொஞ்சம் கூல்ட்ரிங்க்ஸ் கரைத்துத் தாங்க என்று கேட்டால் .அம்மா தரமாட்டேன் என்கிறா. நன்றாக சீனியை குடிச்சு குடிச்சு இருக்கிற உடம்புக்கு வருத்தத்தை வாங்கிடாதயாம். நான் ரொம்ப பாவமுங்க.
12 கருத்துரைகள்:
அட... நான் நினைத்தேன்
இன்றைக்கு உங்களின் வீட்டிலே சுறாக்கறி. அதுதான் ஓடித்தப்புறீங்கள் என்று...
அப்பிடியே வீட்ட விட்டு ஓடிப் போயி அங்கோடயில சேர்ந்திடு.... நல்லா சீனி போட்ட தீ தருவாங்கள்....
@ஆதிரை
என்னது சுறாக்கறியா அப்பிடிஎன்றால் வீடில்லை நாட்டை விட்டே சி சி இந்தக் கண்டத்தை விட்டே ஓடிடுவேன்.
எங்க சுறா படம் என்று சொல்லிடுவின்களோ என்று பயந்திட்டன்...லொள்
@கரிகாலன்
என் வீட்டில் இருந்து அங்கோட ரொம்ப தூர தோழா. ஆனால் உங்கள் வீட்டில் இருந்து கீழ்பாக்கம் ரொம்ப கிட்டவாமே..மெய்யாலுமா?
காலையில லைட் , மதியம் கொஞ்சம் பிரைட் , நைட் கொஞ்சம் டார்க் ...என்ன இது ? சூரியனா (sun) உங்க சாப்பாடு? ஹ ஹா ...
ஹா ஹா ஹா....
ஐயோ ஐயோ....
தலைப்ப நான் 'நாட்ட விட்டு ஓடப்போறன்' எண்டு வாசிச்சிற்று சதீஷ் அண்ணாற்ற அப்ப treat கேப்பம் எண்டு ஓடோடி வந்தன்.... :(
ஓடுங்கோ ஓடுங்கோ....
பலன் வந்தாச் சொல்லுங்கோ நானும் ஓடலாம் எண்டு யோசிக்கிறன்.
ஆனா கூரே பார்க் பள்ளமாப் போடுமோ எண்டும் பயப்பிடுறன்... :(
எனக்கும் ஓவர் வெயிட் தான் பிரச்சினை. முந்தி ஒஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் மெல்லிதாக இருந்தேன். பிறகு இங்கே உள்ள உணவுகளைச் சாப்பிட்டு இணையத்திற்கு முன்னால் இருந்ததாலை ஊதிட்டன். இப்ப வீட்டிலை சாப்பாடே இல்லையாம். மெலிந்தால் தான் இறைச்சி, முட்டை, சீஸ், பட்டர் கண்ணிலை காட்டுப்படுமாம். என்ன கொடுமை இது?
@பிரபா
இது சூரியன் இல்லை அண்ணா. என் வெற்றியின் ரகசியம்.
@கன்கொன் || Kangon
கோபி உண்மையை சொல்லணும் நீ ஓடோடி வந்ததென்றால் நம்பவா முடியும்.....வேணாம்டா ராசா பார்க் நல்லாய் இருக்கு பிறகு அந்த இடம் குலமாகிடும். ஆனால் கோபி உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க நமீதா போல அழகாக இருக்க ஈன்கள் உங்கள் அழகாய் வளப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
@கமல்
ஓடுங்கள் ஓடுங்கள் ஓடிக்கொண்டே இருங்கள். கருத்துக்கு நன்றி.
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ......
@Subankan
ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாடு
Post a Comment