சச்சின் சச்சின் சச்சின் ....இந்த பெயரை கேட்டால் நாடு கடந்து இருக்கும் சின்னக்குழந்தையும் சொல்லும் யாரென்று. இவரை பற்றி முகவுரை, கை உரை காலுரை சொல்ல நானா தேவை. . சுருக்கமாக சொல்லப்போனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எதிரணியில் விளையாடினாலும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இவர் கடவுள். சாதனை என்பதற்கு சச்சின் என்று ஒரு ஒத்த சொல் அகராதியில் இடலாம். இந்த சாதாரண மனிதனை பற்றி தான் இன்று எல்லா பத்திரிகைகளிலும் இணையத்திலும். நான் சாதாரண மனிதன் என சொல்லக்காரணம் சச்சின் என்றுமே தன்னை ஒரு சாதனையாளனாக அபூர்வ பிறவியாக பார்க்காமல் இன்னும் சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக எம்மில் ஒருவராக வாழ்வதால் தான். எல்லோரும் தமக்கு தெரிந்த வடிவில் வாழ்த்து சொல்லிவிட்டார்கள். இது என் முறை அவருக்கு வாழ்த்து சொல்வதுடன். அவரிடம் இருந்து நான் கற்ற ஒரு விடயம் நம்மை பற்றி வரும் தவறான கருத்துக்களுக்கு மௌனமாக இருந்து எங்கள் வேலையை சரியாக செய்து மற்றவர் வாயை அடைப்பதே. அந்த வகையில் சச்சின் என் ஹீரோ.
இப்போது என்னை பற்றி....வெற்றி எப்.எம்மில் வானொலி அறிவிப்பாளனாக இருக்கும் போது ஆரம்பித்த இந்த வலைப்பூவில் வாசகர்களும் சக பதிவர்களும் திரட்டிகளும் தந்த ஆதரவில் நானும் ஓரளவு நல்ல பதிவாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். எம் பதிவு அதிக வாக்குகள் பெறும் போதும் பலர் படிக்கும் போதும் பலரின் பின்னூட்டங்கள் கிடைத்த போதும் வந்த சந்தோசம் மட்டுமே இன்றும் என்னை பதிவெழுத வைக்கின்றது. அந்த வரிசையில் எனக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அண்மையில் யாழ்தேவி திரட்டியினர் என்னை நட்சத்திரப்பதிவராக அறிவித்து மகிழ்வித்தனர். நீண்ட நாட்களாக ஏனோ தானோ என்று வந்த என் பதிவுகள் ஒரு கட்டுக்கோப்புக்குள் வருவதற்கும் தொடர்ச்சியாக என் பதிவுகள் வருவதற்கும் சிலர் குறிப்பிட்டதை போல சினிமாவை தாண்டி நான் பதிவிட ஆரம்பித்ததும் இந்த உற்சாகத்தால் தான். யாழ்தேவி நிர்வாக குழுவினருக்கு என் நன்றிகள்.
இதன் தொடர்ச்சியாக என்னை பற்றியும் என் வலைப்பூ பற்றியும் நாளை(25.04.2010) ஞாயிறு தினக்குரலில் ஒரு பகுதி வெளிவர இருக்கின்றது. ஏற்கனவே வானொலி அறிவிப்பாளனாய் என் நிறை குறைகள் இந்த பத்திரிகையிலும் இன்னும் சில சஞ்சிகைகளில் சில தடவைகள் விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்திருந்தாலும் வலைப்பூவை பற்றி என்னும் பொது இன்னொரு எதிர்பார்ப்பு. இந்த நேரத்தில் தினக்குரல் குழுவினருக்கு என் நன்றிகள்.
என்னை நட்சத்திரமாக்கி ஊக்கப்படுத்தியது போல இன்னும் பலரை தொடர்ந்து ஊக்குவிக்கும் யாழ்தேவிக்கும் தினக்குரலுக்கும் பதிவர்கள் சார்பாக என் நன்றிகள். காரணம் பலரை அறியாமல் நாம் அவர் தளங்களை படித்து வந்தாலும் அந்த அறிமுகத்தை கொடுப்பது இவர்களே. இன்னுமொரு விடயம் இது என் கருத்து மட்டுமே யாரும் தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை எடுத்துக்கொண்டால் நான் ஒரு அறிவிப்பாளனாய் இருக்கும் போது இந்த வலைப்பூவில் இணைந்தது என் வலைப்பதிவு நண்பர் வட்டாரத்தை இலகுவில் அதிகரித்து கொள்ள உதவியாக இருந்தது. அதேநேரம் என்னை விட நன்றாக பல இடுகைகளை இடும் பதிவர்களுக்கு இந்த நண்பர் வட்டம் கிடைக்க நீண்ட காலம் எடுத்திருக்கலாம். சிலர் இன்னும் அதை பெறாமல் இருக்கலாம். இன்றும் கூட நான் இடும் சில எதிர்பார்ப்பான பதிவுகளுக்கு வாக்கும் பின்னூட்டமும் கிடைக்காவிட்டால் கலங்கி இருக்கின்றேன். ஆனால் இதை விட ஒரு முக்கியமான விடயம் யாராயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் ரசிக்கும் வகையில் எழுதினால் அவர்களை தேடி நம் வாசகர்கள் வருவார்கள் என்பது உண்மை.
நண்பர்களே சுவாரஸ்யமாக எழுதுவோம் பயனடைய எழுதுவோம் எழுத்தால் புது விதி செய்வோம். அந்த விதியில் படியாக இருக்கும் யாழ்தேவிக்கும் தினக்குரலுக்கும் என் நன்றிகள்.
11 கருத்துரைகள்:
:)))
முற்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணே.... :)
@கன்கொன் || Kangon
வாழ்த்துக்கு நன்றி தம்பி.
முற்கூட்டிய வாழ்த்துக்கள் சதீஷு.... :)
@Subankan
நன்றி சுபாங்கன் அண்ணா.
வாழ்த்துக்கள்
@A.சிவசங்கர்
வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துக்கள்..!
@Dr. Srjith.
உங்கள் வாழ்த்துக்கு கோடான கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள் நண்பா..!
-
DREAMER
@DREAMER
வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பிந்திய வாழ்த்துக்களுடன் கமல்! தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Post a Comment