Sunday, April 18, 2010

மோடியின் மோகம் ஐ.பி.எல் மாயம்

இந்தியாவின் கிரிக்கெட்டை வளப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் முதல் இரண்டு தொடர்களை விட இம்முறை சுவாரஸ்யத்தையும் சர்ச்சைக்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது. கடந்த தொடர்களைப்போல் அல்லாமல் இந்த தொடர் ஆரம்பிக்கும் போது எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பெரிதான எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் போக போகப்போக சூடு பிடித்தது.


முதல் போட்டியே அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த போட்டியாக மாறியது. கடந்த முறை சாம்பியனும் இறுதி இடம் பிடித்த அணியும் மோதிய அந்தப்போட்டியில் சாம்பியன்கள் மண்ணைக்கவ்வினர். ஆனால் அடுத்தடுத்த போட்டிகள் பெரிதாக கவர்ந்திழுக்காமல் போக சூடாக வெளிவந்த விடயம் தான் இந்த போட்டித்தொடரில் லலித் மோடி என்ன சொல்கின்றாரோ அதுதான் நடக்கின்றது என்றும் எந்த அணி வெல்லவேண்டுமென சொல்பவரும் அவர்தான் என்று. இதை எப்படி நம்பமுடியும்? கோடி கோடியாக காசை கொடுத்து தங்கள் சொத்தாக வாங்கியவர்கள் தங்கள் அணியை தோற்க்கவைப்பார்களா? அல்லது சர்வதேச வீரர்கள்தான் இதற்கு ஒத்துக்கொள்வார்களா? பாண்டிங் போன்று ஆரம்பத்தில் கர்ஜித்தவர்கள் இதை வெளியே கொண்டுவரமாடார்களா? இதற்க்கான பதில்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன.

இனி நான் சொல்லப்போபவை எல்லாம் என் கோணத்தில் இருந்து பார்க்கப்படும் விடயங்கள். இது என் பார்வை என்பதை சொல்லிக்கொள்கின்றேன். காரணம் இந்தக்கருத்து பிறகு இப்படி நடக்கின்றது என நான் உறுதியாக சொல்கின்றேன் என்ற வாதத்தை கொண்டுவரக்கூடாது. முதல் போட்டியில் இப்படி ஒரு முடிவு கிடைக்கும் போதே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் இந்த தொடர் நிறைய மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது என்று.


ஒவ்வொரு அணிகளும் இம்முறை ஏற்படுத்திய ஆச்சரியங்களை பார்க்கலாம். கடந்தமுறை யுவராஜின் தலைமையில் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியத்தில் ஐந்தாம் இடத்தை பிடித்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை அதன் தலைவராக மாற்றும் போதே சில கேள்விகளை கொடுத்தது. காரணம் அந்தணியில் யுவராஜ் நன்றாகத்தான் அணித்தலைவராக செயற்பட்டார். அவருக்கு விருப்பின்றியே தலைமைப்பதவியில் இருந்து தூக்கப்பட்டது யுவி பஞ்சாபை விட்டு விலக எடுத்த முயற்சி என்பதையும் தாண்டி இப்போதைய இலங்கை அணித்தலைவராக சங்கக்கார இருப்பினும் அதே அணியில் ஆடும் மகேள சிறந்த அணித்தலைவராக இருக்கும் நிலையில் சங்ககாவை தலைவராக்கியது. இவை எல்லாம் உட்கட்சிப்பூசலாக இருக்கையில் களம் வந்தது ப்ரீத்தியின் அணி. மூன்று போட்டியில் அடிமேல் அடிவாங்கிய அணி நான்காவது போட்டியில் சென்னையுடன் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. இலகுவாக சென்னை வெல்லக்கூடிய போட்டியில் இந்த பரபரப்பான பஞ்சாபின் வெற்றி ஏன்? மீண்டும் தோல்வி முகம் கண்ட அணி போட்டிகள் சூடு பிடிக்கத் தொடக்கி அரை இறுதிக்கு அணிகள் தெரிவாகும் கட்டத்தை நெருங்க வீறுகொண்டு எழுகின்றது. பஞ்சாப். இது எப்படி சாத்தியமாயிற்று? சரி அணி தோல்வியில் இருந்து மீண்டு வந்து விட்டது என எண்ணினால் பரபரப்புக்காகவும் போட்டிகளின் விறு விறுப்பைக் கூட்டவும் தான் பஞ்சாப் இப்படி ஆடியதோ என அந்த அணியின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி என்னை கேட்கவைக்கின்றது. மொத்தத்தில் பஞ்சாப் இம்முறை அரை இறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் ஒரு அணியாகவும் பரபரப்பைக் கொடுக்கும் அணியாகவும் பயன்பட்டதா?


அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், வார்னேயின் படையாக பல்லுக் கழன்ற அணியாக ஷில்பாவின் அரவணைப்பில் களம் கண்ட ராஜஸ்தான் வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டுவந்தது. பெரிதாக சோதனை ஆட்டங்களை ஆடாவிட்டாலும் இறுதிவரை அரை இறுதியில் தொங்கும் அணியாக இருக்க வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதா என்பது என் அடுத்த கேள்வி? அடுத்ததாக கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி, கடந்த தொடரில் கடைசி இடத்தில் வந்து நம்ம இளைய தளபதிக்கு ஈடாக வலையுலகில் வசைபாடப்பட்ட அணி இம்முறை வசீம் அக்ரம் என்னும் ஜாம்பவானின் பந்துவீச்சு பயிற்சியில் வெற்றியோடு ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அணி வங்கபுலியின் அதிரடி துடுப்பாட்டம் ஆச்சரியப்படும் களத்தடுப்பினால் வெற்றிக்கொடி கட்டத்தொடங்கி இடையில் அரை இறுதிக்கே வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு மீண்டும் இன்று அரை இறுதிக்குள் நுழையலாம் என்ற வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் மும்பை,சென்னை அணிகள் மாத்திரமே அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளன. பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள் மூட்டை கட்டிவிடன. இன்று நடைபெறும் டெல்லி மற்றும் டெக்கான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் அணி மூன்றாவதாக அரை இறுதிக்குள் இன்று நுழைந்துவிடும். தன சகல போட்டிகளையும் முடித்துவிட்ட பெங்களூரின் எதிர்காலம் கொல்கத்தாவின் கையில் இருக்கின்றது. மும்பையுடன் கொல்கட்டா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால் அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிக மிக அரிதானது.

எனவே மும்பை,டெல்லி அல்லது டெக்கான்,பெங்களூர், சென்னை அணிகளே அரை இறுதியில் மோதும் வாய்ப்புள்ளன. ஆனால் இதற்காக இந்த அணிகள் பட்ட பாடு அப்பப்பா சொல்லமுடியாது. மும்பையை பொறுத்தவரை சச்சின்,சச்சின், சச்சின்.......சச்சின் ஆட்டமிழந்தால் அணியே ஆட்டம் கண்டுவிடும் என்பது கண்கூடாக இருந்தது அணியை முழுமையாக தாங்கி கொண்டுசென்றது சச்சின்தான். இதுவே ஒரு கேள்வியாகிப்போனது எனக்கு? காரணம் சச்சின் மட்டுமே மும்பையில் சர்வதேச வீரர் இல்லையே. அதேநேரம் தங்கு தடை இன்றி முதலில் அரை இறுதிக்குள் நுழைந்தது கடந்தமுறை ஏழாம் இடம் பிடித்த மும்பை.


அடுத்து இன்றுவரை எங்களை எல்லாம் சோதித்து நகம்கடிக்க வைத்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. இந்த அணியும் கிட்டதட்ட மும்பை போலவே ஆகியது. பந்துவீச்சு பலம் இல்லை. முரளி இருந்தும் பெரிதாக கைகொடுக்கவில்லை. போளிங்கேர் வந்த பின் பலம் பெற்றது. இடையில் தோணி காயத்தால் வெளியேற ரைனா தலைவராகி வெற்றியை பெற்றுக்கொடுத்தாலும் மத்திய வரிசை சொதப்ப சோடைபோன அணி மீண்டும் தோணி வர மீண்டு எழுந்தது. இவர்களை பொறுத்தவரை மங்கூஸ் கொண்டுவந்து ஹய்டேன் பெரிதாக கைகொடுக்காமல் போக விஜய் விஸ்வரூபம் எடுத்தார். தோனிக்கு தேவைப்படும் நேரம் ரைனா,பத்ரி கைகொடுக்க ஒருவாறு வந்துவிட்டார்கள். இலகுவாக வெல்லக்கூடிய போட்டிகளில் கோட்டைவிட்டது மட்டுமன்றி பலிக்கடா போல ஆடி வந்திருக்கின்றார்கள்


அடுத்து டெல்லி, கடந்த முறை புள்ளிகள் அடிப்படையில் முதலாவதாக இருந்தவர்கள் இம்முறை கம்பீரின் தலைமையில் வெற்றியுடன் ஆரம்பித்தனர் அதன் பின் அவர் காயத்தால் வெளியேற தினேஷ் கார்த்திக் தலைமையில் சொதப்பினர் மீண்டும் கம்பீர் வந்து கரை சேர போராடிக்கொண்டிருக்கின்றார். இம்முறை சேவாக் பெரிதாக வானவேடிக்கைகளை நிகழ்த்தவில்லை. என்பதுடன் பலமான அணி ஒன்று இப்படி பல்லிளித்து நின்றது. என் கேள்விகளை மேலும் கூட்டியது.


டெக்கானை பொறுத்தவரை கில்லி தான் முழு பலம். ஆனால் அவர் பலம் சில போட்டிகளில் படுத்துப்போக அவ்வப்போது சைமண்ட்ஸ்,ரோஹித் கைகொடுத்து இன்று இந்த தொங்குபாலம் வரை கொண்டுவந்து விட்டனர். கடந்தமுறை சாம்பியன்கள் இன்று வாழ்வா சாவா என போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களும் இலகுவான சில போட்டிகளில் வேண்டுமென்ற தோற்றார்களா? கடந்தமுறை இறுதிவரை வந்த பெங்களூர் இம்முறை கொல்கட்டாவிடம் தங்கி இருக்கின்றது. கலிஸ் ஆரம்பத்தில் ஆட்டமே இழக்காமல் ஆடிவர கோலியும் கைகொடுக்க வெற்றிநடை போட்டுவந்த அணி அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்தாலும் அரை இறுதி வாய்ப்பு இன்னும் இருக்கின்றது.

இவை எல்லாம் அந்தந்த அணிகளின் மீதான என் பார்வை. மும்பை முதலில் நுழைந்தாலும் தன லீக் போட்டியின் இறுதிப்போட்டியில் வென்றால்தான் உள்ளே என்ற நிலையில் ஆடிய சென்னை உள்ளே வந்துவிட்டது. இன்று இவர்கள் தோற்றிருந்தால் பஞ்சாபுக்கு கூட அரை இறுதி வாய்ப்பு கிடக்கும் அணி என சொல்லும் அளவிற்கு தொடர் வந்திருக்கும். இந்த பரபரப்பு யாரால் உருவாக்கப்பட்டது? ராஜஸ்தான் தன இறுதிப்போட்டியில் வென்றால் அரை இறுதி வாய்ப்புண்டு இல்லை என்றால் வெளியே இதேபோலத்தான் கொல்கத்தாவிற்கும் என்ற நிலையில் நடைபெற்ற நிலையில் வென்ற கொல்கத்தா ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் பரபரப்பை கூட்டி தன் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது. வென்ற அந்தப்போட்டியில் கங்குலி தனி மனிதனாக வென்று கொடுத்தார் என்றே சொல்லலாம்.


டெக்கான் டெல்லி அணிகளை பொறுத்தவரை இன்று நடைபெறும் தங்கள் கடைசிப்போட்டிவரை உள்ளே வெளியே ஆட்டத்திற்கு காத்திருக்கின்றார்கள். வெல்பவர் உள்ளே மற்றவர் வெளியே. பெங்களூருக்கும் லீக்கின் கடைசி ஆட்டத்தில் தான் தலைவிதி தெரியப்போகின்றது. கடைசிப்போட்டிவரையான பரபரப்பு உண்மையில் போட்டியால் வந்ததா? அல்லது பணத்தின் விளையாட்டா? இடையே வந்த புது அணிகளுக்காக ஏலம், அதேநேரம் இப்போது இருக்கும் அணிகளில் பல அணிகளில் மோடியின் நெருங்கியவர்களின் பங்கு இருப்பது என்பதையும் தாண்டி மோடிதான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. இன்று மோடியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் அவரின் அதிகாரங்களை குறைக்கும் வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அத்துடன் இந்த ஐ.பி.எல்லின் கறுப்பு சரித்திரத்தை பார்த்தால் இன்னும் சில உண்மைகள் வெளிவருவதுடன் வீர்களின் ஆட்டத்தை விட மோடியின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்ததோ என தோன்றுகின்றது. காரணம் இந்திய வீரர்களை ஊக்குவிக்க என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் இன்றுவரை ஒரு இந்திய வீரர் தலைமை தாங்கிய அணி சாம்பியன் ஆகியுள்ளதா? முதலாவது தொடரில் 7ம் 8ம் இடங்களை முறையே பெற்ற பெங்களூர் மற்றும் டெக்கான் அணிகள் அடுத்த தொடரில் இறுதியில் மோதின. இதில் இறுதி இடம் பிடித்த டெக்கான் சாம்பியனானது. இம்முறையும் கடந்தமுறை ஏழாம் இடம் பிடித்த மும்பை அரை இறுதிக்கு தெரிவாகி இருக்க எட்டாம் இடம் பிடித்த கொல்கத்தா அரை இறுதி வாய்ப்புக்ககா கடுமையாக போராட உள்ளது. சிலவேளை மும்பையை அசாத்தியமாக தோற்கடித்து அரை இறுதிக்குள் வந்தால் அது நிச்சயம் மோடியின் விளையாட்டே. ஆனால் தன் மேல் ஒருவிதமான பார்வை ஆரம்பித்த பின் மோடி அடங்குவாரா என்பது அடுத்த கேள்வி?


இன்னொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இந்த தொடர்களில் இதுவரை நடைபெற்ற இரண்டு தொடரிலும் நீல நிற ஆடை அணிந்த அணிகளே வென்றிருக்கின்றன. ராஜஸ்தான்,டெக்கான் அணிகள் நீல ஆடையில் கிண்ணத்தை வென்றன. இம்முறை அரை இறுதியில் இருக்கும் அணிகளில் மும்பை மட்டுமே நீல ஆடை அணிந்துள்ளது. டெக்கான் வந்தால் அதுவும் சேர்ந்துவிடும். போட்டியின் போக்கை பார்த்தால் வாய்ப்பில்லை போல தெரிகின்றது. மோடியின் ஆட்டமும் அதுதானே? எது எப்படியோ. என்னை பொறுத்தவரை அரை இறுதியில் இம்முறை மும்பையுடன் டெல்லியும் சென்னையுடன் பெங்களூரும் மோதும் என்றே எதிர்பார்க்கின்றேன். இதில் மும்பையும் சென்னையும் இறுதியில் மோதும் வாய்ப்பு உண்டு. காரணம் இறுதி மும்பையில் நடக்கப்போகின்றது. சச்சினும் தோனியும் மோதினால் போட்டியும் பரபரப்பாகுமே.அதேநேரம் இறுதியில் வெல்லப் போவதும் மும்பை தான். காரணம் இறுதிப்போட்டி மும்பையிலல்லவா நடக்கப்போகின்றது. ரசிகர் நிறைய வந்து போட்டி பிரபலமானால்தானே மோடி நிறைய பணம் கண்டு மோகத்தில் திக்கு முக்காட முடியும்.

திரு மோடி அவர்களே. நான் இதுவரை கேட்ட கேள்விகள் என் நியாயங்கள் எல்லாம் பொய்யாய் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த ஐ.பி.எல், கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவந்தது உண்மைதான். பல வீரர்கள் வெளிவந்ததும் உண்மை. ஆனால் இதெல்லாம் பொய்யாகிப்போனால் அவர்கள் திறமை மீதே நாம் சந்தேகப்பட வேண்டிவரும். அதேநேரம் பல ரசிகர்கள் இந்த போட்டியினால் மாதக்கணக்கில் கட்டுண்டு கிடக்கின்றார்கள் தங்கள் நகத்தைக்கடித்துக்கொண்டு பார்த்த போட்டிகள் எல்லாம் திட்டமிட்ட நாடகங்கள் என்றால் எப்படி இருக்கும். நாங்கள் என்ன முட்டாள்களா? கிரிக்கெட் கிரிக்கெட்டாக இருக்கட்டும். அதை உங்கள் தனி மனித ஆட்டமாக்கிவிட வேண்டாம். இந்த ஐ.பி.எல்லில் என்ன நடந்தது என்பது விரைவில் வெளிவரும். உண்மைகள் எப்போதும் உறங்காது. அந்த உண்மை சதீஷ் எழுதிய பதிவு பொய் அவன் எல்லாம் பதிவு எழுதுகின்றானா என்று என்னை கேட்டாலும் பரவாயில்லை. கனவான்களின் ஆட்டம் களங்கப்பட்டுவிடவில்லை என்றால் அது என் சந்தோசமே.

Share:

10 கருத்துரைகள்:

எல் கே said...

நல்ல அலசல் அனால் ஒரு விசயத்தை கோட்டை விட்டாச்சு நீங்க. எப்ப சென்னை ஜெய்ச்சன்களோ அப்பவே கொல்கத்தாவுக்கு ஆப்பு வச்சாச்சு .

SShathiesh-சதீஷ். said...

@LK

நடைமுறைக்கு சாத்தியமில்லைதான் ஆனால் கிரிக்கெட்டில் சாதனை ஏதாவது படைத்து வென்றால் ஓட்ட சராசரி அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கும். அந்த வெற்றி கூட சாத்திய மற்றது. இதை நான் தெளிவாக கூறி உள்ளேனே.

கன்கொன் || Kangon said...

:-o

Bala said...

//இந்தியாவின் கிரிக்கெட்டை வளப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர்

போகிற போக்கை பார்த்தால் அதிரடி திருப்பங்களுடன் நடத்தப்படும் WWE போட்டிகள் போல ஆகிவிடும் போலிருக்கிறதே. அரை இறுதிகள் பெங்களூருவில் நடப்பதால் சென்னை, பெங்களூரு கண்டிப்பாக அரையிறுதிக்கு வரும் என்று முன்பே என் நண்பர் சொன்னார். அது நடந்துள்ளது. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
இது பற்றி நான் எழுதிய பதிவு
http://balapakkangal.blogspot.com/2010/04/blog-post.html

Anonymous said...

மோடி டவுசர் கிழிஞ்சுபோச்சு.


sameer

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

சரிங்க

கன்கொன் || Kangon said...

Grrrrrrrr.......

சரி...
நான் பின்னூட்டுறன்.

மோடி மீது புகார்களெல்லாம் அளிக்கப்படுகின்றன.
தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் இந்த நிர்ணயக் குற்றச்சாட்டும் உண்டு.

ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியமென்று தெரியவில்லையே?
ஆட்ட நிர்ணயத்தில் மோடி தனித்து ஈடுபட முடியாது.
வீரர்கள் வேண்டும். அதுவும் ஓரிருவர் போதாது, இருபதுக்கு இருபதில் தனித்து ஒருவரே போட்டியை வென்று கொடுக்கலாம்.
ஆனால் அதையும் தாண்டி தனித்து ஒருவரே தோற்கவும் செய்யலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் நிர்ணயங்கள் இடம்பெற்றிருக்கும் போல தான் இருக்கிறது.
என்னால் முழுமையாகக் கருத்துச் சொல்ல முடியவில்லை.

இயலுமானால் இன்னும் சில நாட்களில் கருத்துத் தெரிவிக்கிறேன். ;)
ஆனால் தலைவர் ஏதோ இசகு பிசகு பண்ணியிருக்கிறார் என்பது வெளிப்படை.

என்றாலும் அலசல் வித்தியாசமாக இருந்தது. :)

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

//.சச்சின் ஆட்டமிழந்தால் அணியே ஆட்டம் கண்டுவிடும் என்பது கண்கூடாக இருந்தது அணியை முழுமையாக தாங்கி கொண்டுசென்றது சச்சின்தான். இதுவே ஒரு கேள்வியாகிப்போனது எனக்கு? காரணம் சச்சின் மட்டுமே மும்பையில் சர்வதேச வீரர் இல்லையே.//

நான் பார்த்த வரை அணியின் எந்த ஆட்டத்தையும் தீர்மானிப்பது சச்சின் மட்டுமே.துவக்கத்தில் சச்சின் வெளியேறி விட்டால் பின்னால் வருபவர்கள் நிலம் பார்த்தே பெவிலியனுக்கு வருவதுதான் அதிகமான ஆட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//இன்னொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இந்த தொடர்களில் இதுவரை நடைபெற்ற இரண்டு தொடரிலும் நீல நிற ஆடை அணிந்த அணிகளே வென்றிருக்கின்றன. //

இது என்ன பார்வை:)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive