வானொலியில் இருந்து விடை பெற்ற பின் அதில் இருந்து விலகி இருக்கும் போது அனுபவிக்கும் அந்த வலியை நான் இன்னும் இழக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் என் குரலில் ஒரு முழுமையான நிகழ்ச்சியை நேற்று இரவு வெற்றி வானொலியில் எனக்கு கேட்க கிடைத்தது சந்தோசம். வெற்றிக் குடும்பத்துக்கும் நிகழ்ச்சியை தொகுத்தளித்த ரஜீவுக்கும் என் முதல் கண் நன்றிகள்.
வெற்றியில் பிரதி புதன் தோறும் ஒலிபரப்பாகி பல நேயர்களின் அமோக ஆதரவை பெற்று இன்றும் வெற்றிகரமாக ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் காற்றின் சிறகுகளின் ஆகாயமுகவரி. வானலை வரம்புகளையும் மீறி உயிருடன் இல்லாதவர்களுக்கோ அல்லது நேசித்த இடம் பொருள் போன்றவற்றுக்கோ நேயர்கள் எழுதும் கடிதங்களுக்கு குரலால் உயிர் கொடுப்பது அறிவிப்பாளர்கள் எங்கள் கடமை. நான் வெற்றியில் வேலை செய்த காலத்தில் அநேகமான நாட்கள் என் குரலில் நேயர்களின் கடிதங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. ஆனால் அதை எல்லாவற்றையும் விட நேற்றைய நிகழ்ச்சி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்து எனலாம். காரணம் நான் வேலை செய்யும் பொது என் குரலை நானே கேட்டு எனக்கே போரடித்து விட்டது ஆனால் வானொலியை விட்டு ஒதுங்கிய பின் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து என் குரல் அதுவும் ஆறுதலாய் இருந்து நான் கேட்கும் போது என்னை அறியாமல் சந்தோசப்பட்டேன்.
வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு வானொலிக்கருகே அமர்ந்து விட்டேன். பாடல்களை பொருத்தமாக இடுவதில் ரஜீவ் எப்போதுமே கிரேட். நேற்று ஒலித்த நிகழ்ச்சியில் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது ரஜீவின் பாடல் தெரிவு. கதையை கேட்ட பின் எங்களை வெளியே வர விடாமல் அப்படியே கட்டிப்போட்டு மனதை ஆறவைத்தன பாடல் தெரிவுகள். மீண்டும் வெற்றிக்கு வந்துவிட்டீர்களா? அல்லது எப்படி இந்த நிகழ்ச்சி என்று கேட்டு சிலர் என்னை தொடர்பு கொண்ட போது உண்மையில் என்மேல் அன்பு வைத்த அந்த நண்பர்களை நினைத்து பெருமைப்பட்டேன். என்னை நெருங்கி இருந்த நண்பர்கள் சிலருடன் நான் இதை பகிர்ந்து கொண்டேன்.
வானொலியை விட்டு ஒதுங்கினால் என்ன வலி என்ன கவலை என்பதை அனுபவித்துக்கொண்டு ஒரு நிகழ்ச்சியை கேட்பதும் ஒரு சந்தோசம்தான். இந்த வலி சந்தோசம் என்னை மீண்டும் வானொலித் துறைக்குள் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. எந்த நாட்டில் இருந்தாலும் வானொலியோடு என் பயணம் போகவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். நடக்கும் என்ற நம்பிக்கயோடு என் சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
6 கருத்துரைகள்:
ம். ம். ம்...
கேட்டேன்.
வாழ்த்துக்கள்....
நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது...
அதுசரி, அந்தப் படத்தில நிக்கிற மற்றாள் யார்? ஒண்டு சதீஷ் அண்ணா, மற்றது யாரு? :P
உங்கள் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்...
கேக்கல ஆனா பாத்தன் :)
இலங்கை மட்டும் தான் கேட்க
முடியும் மா
அது "திண்டுக்கல் லியோனி" தானே?.
//எந்த நாட்டில் இருந்தாலும் வானொலியோடு என் பயணம் போகவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்//
நிச்சயம் நடக்கும்... வாழ்த்துக்கள் அண்ணா...:)))
Post a Comment