Saturday, May 8, 2010

வதந்தியா உண்மையா? இலங்கையில் கையடக்கத்தொலைபேசியில் வரும் அழைப்பால் இறக்கின்றார்கள்?

நேற்று இரவில் இருந்து இலங்கையின் பெரும் பகுதிகளில் பரபரப்பை தோற்றுவித்த விடயம் என்ன வென்றால் கையடக்கத்தொலை பேசிகளுக்கு வரும் சில அனாமதேய அழைப்புகளை எடுப்பவர்கள் உயிரிழப்பதாகவும் இப்படி ஆறுபேர் உயிர் இழந்துள்ளதாகவும் செய்தி பரவியது. என்னதான் நடக்கின்றது என நண்பர்களிடம் வினவிய பொது உறுதிப்படுத்த முடியவில்லை இருப்பினும் இப்படி ஒரு செய்தி பரவுகின்றது என்பதே வெளியில் வந்தது.

இந்த நிலையில் இரவு பதினோரு மணிக்கு மேல் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நண்பர் ஒருவருக்கு இப்படி ஒரு அழைப்பு வந்ததாகவும் தாங்கள் அதை எடுக்கவில்லை என்றும் சொன்னார். சரி என்று வைத்துவிட்டு வீட்டில் எல்லோருக்கும் சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன். காலை எழுந்து மூஞ்சிப்புத்தகத்துக்கு வந்தால் சாட் பண்ண நண்பர்கள் எல்லாம் கேட்ட கேள்வி இது உண்மையா என்று?

இந்த நேரத்தில் தான் ஒரு நபருக்கு அழைப்பு வந்து அவர் மூக்கால் ரத்தம் சிந்தி உயிரிழந்ததாக தனக்கு யாரோ சொன்னதாக சொல்லி இருக்கின்றார். இன்னுமொரு மூஞ்சிப்புத்தாக நண்பரோ தனக்கு அதே போல அழைப்பு வர தான் எடுத்ததாகவும் பத்து செக்கனில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால் தனக்கு எந்த ஆபத்தும் இன்றி தான் நன்றாக இருப்பதாகவும் சொன்னார்.

இதேநேரம் இதை பற்றி நான் மூஞ்சிப்புத்தகத்தில் நண்பர்களுடன் விவாதிக்கும் போது நண்பர்கள் சொன்ன கருத்தையும் இங்கே பகிருகின்றேன்.

25 minutes ago ·
Praveen Purujoththaman Thangamayl
வதந்தி என்று
நினைக்கிறேன்: நேற்று இரவு 12 மணியளவில் இந்த தகவலை வெளிநாட்டிலுள்ள நண்பர் தொலைபேசியில் அழைத்து கூறியிருந்தார்.
24 minutes ago ·
Sathiamoorthy Shathieshan
அதேநேரம் இன்னொரு நண்பருக்கு இன்று காலை அழைப்பு வந்திருக்கின்றது அவர் அதை எடுத்திருக்கின்றார் பத்து செக்கனில் அந்த தொடர்ப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் நன்றாக இருக்கின்றார்.
22 minutes ago ·
Winson Gnanatheepan
but this post and comments below were posted three years ago??
22 minutes ago ·
Sathiamoorthy Shathieshan
ohh...i don't knw adt that winson....can u explain about the situation on that time
19 minutes ago ·
Shan Shafrin
annaa...... நான் நினைக்கிறேன் இது பொய் செய்தி...... அக்குரனையில் ஒருவர் உயிரிழந்தாரா ????? என்று எனக்கு கெகிராவ , மூதூர் போன்ற இடங்களிலிருந்து நண்பர்களின் அழைப்பு வந்தது.......ஆக.... நான் நினைக்கிறேன் இது பொய் செய்தி...... முதலில் இது சாத்தியமா அண்ணா ???????
19 minutes ago ·
Sathiamoorthy Shathieshan
சாத்தியக்குறைவு இருக்கின்றது. இருப்பினும் ஏதாவது கதிர் வீசல்களை உருவாக்கி அளிக்கலாம். ஆனால் தொழில் நுட்பம் நிறைந்த இந்த நேரத்தில் இதன் சாத்தியம் எந்தளவு என்பது என் கேள்வி?
18 minutes ago ·
Shan Shafrin
அண்ணா சிவப்பு நிறத்தில் அழைப்பு வருமாம் ..... கருப்பு வெள்ளை (non color display ) தொலைபேசியில் எப்படி ?????????
15 minutes ago ·
Sathiamoorthy Shathieshan
ஒருவேளை அவர்கள் கடவுளாக இருப்பார்களோ? இந்த இணைப்பை வழங்கும் நிறுவனங்களால் ஒன்றும் செய்யமுடியாதா?
13 minutes ago ·
12 minutes ago ·
Sathiamoorthy Shathieshan
நண்பர்களே அவருக்கு இவருக்கு வந்தது என்று சொல்லும் நாம் நேரடியாக இதை சந்தித்தோமா?
12 minutes ago ·
Vathees Varunan
இது ஒரு வதந்தி மட்டுமே. எனவே யாரும் இதைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை
8 minutes ago ·
Share:

16 கருத்துரைகள்:

SShathiesh-சதீஷ். said...

பதிவர் சுபாங்கன் சற்று முன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தினார். இந்த விடயம் தொடர்பாக தான் டயலாக் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு கேட்டதாகவும் இந்த விடயம் பொய் என்றும். அப்படி கதிர் வீசல்களால் ஒரு மனிதனை தாக்கும் அளவு சக்தியை கையடக்கத்தொலைபேசி வழியே செலுத்த முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். மிக விரைவில் இது பற்றிய மேலதிக விபரங்களை சுபான்கனே பின்னூட்டத்தில் தெரிவிப்பார். தலைக்கு தமிழ் எடுக்க முடியாமல் இறுக்கம் வந்திடுவார்.

SShathiesh-சதீஷ். said...

வீரகேசரியில் வெளிவந்திருக்கும் செய்தி.


நாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஒரு சில குறிப்பிட்ட இலக்கங்களில் வெளிவரும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் மேற்படி இலக்கங்களுக்குப் பதில் வழங்கிய நபர்கள் இது வரையில் 27 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தவிர, மூளைக்கு வழங்கப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே மேற்படி இறப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இலங்கையில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இவ்வாறு பரவலாகப் பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன.

இது மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் வதந்திகள் என வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

'மரண அழைப்பு' என அழைக்கப்படும் இந்த குறுஞ்செய்திகள், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானில் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளை, ஆண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் மின்னஞ்சலிலும் அவ்வாறான அச்சுறுத்தல் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பரவத் தொடங்கியதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் பீதியடையத் தொடங்கியதால் இது தொடர்பான ஆய்வுகளில் தொலைத்தொடர்புத் துறையினர் ஈடுபட்டபோதுதான் அது பொய்யான செய்தி எனத் தெரியவந்துள்ளது.

அதேபோன்று, அச்சுறுத்தல் விடுக்கும் குறுஞ்செய்திகள் 2004 ஆம் ஆண்டு நைஜீரியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியதாக 'இன்டிபென்டன்ட் ஒன்லைன்' செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

SShathiesh-சதீஷ். said...

THanks to Daily mirror


No truth in deadly SMS
SATURDAY, 08 MAY 2010 11:29
1 2 3 4 5
( 2 Votes )
An SMS making rounds urging mobile users to beware of calls from some mobile numbers saying it could harm the brain and even kill you is false, the Director General of the Telecom Regulatory Commission (TRC) Anusha Pelpita told Daily Mirror online.

The text message was circulating yesterday and raised the alarm among many mobile users. Mr. Pelpita said that the authenticity of the SMS has been discussed with mobile operators and it has been found that the message is false.

The SMS said "Dont attend to calls from 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587. These numbers come in red colors. U may get brain hemrage due to high frequency. 27 persons died just recieving the call"

Subankan said...

தொழில்நுட்ப ரீதியாக ஒரே தடவையில் மூளையைத் தாக்கி செயலிழக்கவைக்கக்கூடியளவு கதிர்வீச்சை தொலைபேசிகளால் ஏற்படுத்த முடியாது.

இதுதொடர்பாக நான் டயலோக்கைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்களும் அதை உறுதிப்படுத்தினர். ஆனால் துரதிஸ்டவசமாக பரவும் வதந்தியைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை :(

வந்தியத்தேவன் said...

மருமகனே இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் பல பிரபலங்களுக்கு கோல் எடுத்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு வதந்தி அவ்வளவுதான்.

ஆனாலும் சிலவேளைகளில் தொலைபேசியில் சிறிய மொபைல் குண்டு வைத்து அவர் தனது தொலைபேசியில் ஒரு குறிப்பிட்ட நம்பரில் இருந்து வரும் அழைப்புக்கு பதில் கொடுத்தால் அந்தக் குண்டு வெடிக்கும் சாத்தியம் இருக்கின்றது.

உன் தொலைபேசி நம்பர் என்ன? உனக்கு ஒருக்கால் கோல் எடுக்கவேண்டும்

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

அவனா நீங்கள் சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும். மாமா முதலில உங்கள் நம்பருக்கு நான் எடுக்கவா? வேண்டாம் வேண்டாம் பாவம் நீங்கள் உங்களை நம்பி எத்தனை உயிர் இருக்கு. நீங்கள் சொன்னது யதார்த்தமானது சிந்திக்க வேண்டிய விடயம்.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

உங்கள் தகவலுக்கு நன்றி. மேலதிக விபரங்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

Shan Shafrin இது சாத்தியமானதாக இருப்பின்...... யுத்தங்களில் பிரதான ஆயுதமாக இதை பயன்படுத்தியிருப்பார்களே........ ( சதாம் ஹுசைனை தேடி ஈராக் போயிருக்க அவசியமில்லையே...... ஒரு அழைப்பில் ஆள் காலி....... )
37 minutes ago ·

Bavan Thavapalan இது சாத்தியமே இல்லை.. ஏனெனில் தொலைபேசிகளுள் காணப்படும் பில்டர் 300-4000Hz வரையான அதிர்வலைகளுள் வரும் ஒலியை மட்டுமே பில்டர் செய்து சாம்பிள் ப்ணி ப்ரொசெசஸ் பண்ணி தருகிறது.. நம்மால் 20-20000Hz வரைக்கும் கேட்க முடியும்.. ஆனால் அலைகளின் பவர் கூடவாக இருக்கும் போ சற்று வலி எற்படும்.. எல்லை மீறும்போது காது செவிடாகும்.. ஆனால் அத்தகைய பவர் வேண்டுமாயின் போனை 4MW ஜெனரேட்டருடன்தான் இணைக்கவேண்டும்..

ஆனால் , சரி மைக்ரோவேவாக (அதிக பிரிக்குவென்சி) இருக்கும் பட்சத்திலும் சற்று நேரத்தில் மனித கலத்தை பாதிக்குமளவுக்கு வீரியமுள்ள அலைகளை தொலைபேசியல் ஒருபோதும் உற்பத்திசெய்யமுடியாது.. நான் ரேடாருக்கு அருகில் அரைமணித்தியாலம் நின்றிருக்கிறேன்.. சாடையான தலைவலி லரும் அவளவுதான்.. அதில் வரும் பவருக்கும் பிரிக்குவென்சிக்கும் கிட்டயும் வரமுடியாது இந்த தொலைபேசிகள்.. இது நூற்றுக்கு நூறு வீதம் பொய்த்தகவல்

SShathiesh-சதீஷ். said...

Shan Shafrin இது சாத்தியமானதாக இருப்பின்...... யுத்தங்களில் பிரதான ஆயுதமாக இதை பயன்படுத்தியிருப்பார்களே........ ( சதாம் ஹுசைனை தேடி ஈராக் போயிருக்க அவசியமில்லையே...... ஒரு அழைப்பில் ஆள் காலி....... )
42 minutes ago ·

Bavan Thavapalan இது சாத்தியமே இல்லை.. ஏனெனில் தொலைபேசிகளுள் காணப்படும் பில்டர் 300-4000Hz வரையான அதிர்வலைகளுள் வரும் ஒலியை மட்டுமே பில்டர் செய்து சாம்பிள் ப்ணி ப்ரொசெசஸ் பண்ணி தருகிறது.. நம்மால் 20-20000Hz வரைக்கும் கேட்க முடியும்.. ஆனால் அலைகளின் பவர் கூடவாக இருக்கும் போ சற்று வலி எற்படும்.. எல்லை மீறும்போது காது செவிடாகும்.. ஆனால் அத்தகைய பவர் வேண்டுமாயின் போனை 4MW ஜெனரேட்டருடன்தான் இணைக்கவேண்டும்..

ஆனால் , சரி மைக்ரோவேவாக (அதிக பிரிக்குவென்சி) இருக்கும் பட்சத்திலும் சற்று நேரத்தில் மனித கலத்தை பாதிக்குமளவுக்கு வீரியமுள்ள அலைகளை தொலைபேசியல் ஒருபோதும் உற்பத்திசெய்யமுடியாது.. நான் ரேடாருக்கு அருகில் அரைமணித்தியாலம் நின்றிருக்கிறேன்.. சாடையான தலைவலி லரும் அவளவுதான்.. அதில் வரும் பவருக்கும் பிரிக்குவென்சிக்கும் கிட்டயும் வரமுடியாது இந்த தொலைபேசிகள்.. இது நூற்றுக்கு நூறு வீதம் பொய்த்தகவல்

SShathiesh-சதீஷ். said...

Subankan Balasubramaniam ஒரே தாக்கில் ஆளைக் காலி செய்யவேண்டுமாயின் 8MHz வேண்டுமாம். நல்லாக் கெளப்புறாங்கப்பா பீதிய

கானா பிரபா said...

நல்லா கிளப்புறாங்க்ப்பா அவ்வ்வ்

செல்வராஜா மதுரகன் said...

என்னுடைய பதிவைப் பாருங்கள் குட்டை உடைத்து விட்டேன்..
தொலைபேசிச் சாவுகள் உண்மையா ??

Bavan said...

இப்ப டயலொக் ரெலிகொம் சொல்லிரிச்சு பொய்யின்னு.. http://twitter.com/dialogtelekom/status/13596640783

SShathiesh-சதீஷ். said...

@Bavan

பரிமாறியதர்க்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@கானா பிரபா

முதல் முறையாக என் தளம் வந்துள்ளீர்கள் அண்ணா. வரும் போதே பீதியோட வர வேண்டி ஆச்சே. தொடர்ந்து வந்தால் சந்தோசப்படுவேன்.

SShathiesh-சதீஷ். said...

@செல்வராஜா மதுரகன்

படித்தேன். நன்றாக உடைக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive