உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, July 12, 2009

ஒதுக்கப்படுகின்றாரா சமிந்த வாஸ்?

பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான், அதேநேரம் தேவைப்படும் நேரங்களில் சகலதுறையிலும் பிரகாசித்து வெற்றி பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தவரும் இவரே. அவர் தான் இலங்கையின் மதுமாகல பிரதேசத்தில் ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்தேழாம் திகதி பிறந்து கிரிக்கெட்டை கலக்கிய வர்ணகுலசூரிய பட்டபெண்டிகே உஷாந்த ஜோசெப் சமிந்த வாஸ். (அப்பாடா பேர முழுசா சொல்லவே களைக்கிதே இவர் சாதனை........)
இடதுகை துடுப்பாட்ட வீரரும் இடது கை மித வேகப்பந்து வீச்சாளருமான இவர் 15.02.1994 அன்று இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது தனது களப்பிரவேசம் செய்தார். அந்தப்போட்டியிலேயே தன் முதல் விக்கெட்டாக இந்தியாவின் முக்கிய ஆட்டக்காரராக இருந்த சித்துவை ஆட்டமிழக்க செய்து தன் பயணத்தை ஆரம்பித்தார். இந்த போட்டியில் எட்டு ஓவர்கள் பந்து வீசி இரண்டு ஓட்டம் அற்ற ஓவர்கள் அடங்கலாக நாற்பது ஓட்டங்களை கொடுத்த வாஸ் இந்த போட்டியில் துடுப்பாடவில்லை.ஆனால் அந்தப் போட்டி இலங்கைக்கு எட்டு விக்கெட்டுகளால் தோல்வியைகொடுத்தது. இதுவரை 322 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ் 320 முறை களமிறங்கி 2025 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் ஐம்பது ஓட்டங்களை குவித்துள்ள வாஸ் பந்து வீச்சில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரின் சிறந்த பந்து வீச்சு பெறுமதி கேட்பவர்களை மலைக்க வைக்கும் காரணம் பத்தொன்பது ஓட்டங்களை கொடுத்து எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பதே அது. என்ன செய்வது இந்த சாதனை சிம்பாவே அணியுடன் என்னும்போது ஏனோ பெரிதாக தோணவில்லை.
ஒரே போட்டியில் ஐந்து விகேட்டுகளை நான்கு தடவைகள் கைப்பற்றி பெருமை சேர்த்திருக்கின்றார். 2003 ஆண்டு உலகக்கிண்ண தொடரின் போது பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் முதலாவது ஓவரை வீசிய வாஸ் ஒரு அதிசயம் நிகழ்த்தினார். முதல் மூன்று பந்துகளிலும் மூன்று விக்கெட்டுகள் அரங்கமே அதிர நம்பமுடியா சாதனை அது.
ஒருநாள் போட்டியின் வாழ்க்கையை எப்படி இந்தியாவுடன் ஆரம்பித்தாரோ அதேபோல அவர் இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டியும் இந்தியாவுடன் அமைந்தது வேடிக்கையான உண்மையே. இந்தப்போட்டிக்கும் வாசின் முதலாவது போட்டிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு அதேநேரம் மறக்க முடிய சில சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

தன் முதல் போட்டியில் எப்படி நாற்பது ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றினாரோ அதேபோல இந்தப்போட்டியிலும் நாற்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட். அதுவே அவரின் நானூறாவது விக்கெட் கூட. இதில் என்ன கொடுமை என்றால் யுவராஜின் விக்கெட்டை வாஸ் கைப்பற்ற யுவ்ராஜோ வாசின் விக்கெட்டினை கைப்பற்ற பதினேழு ஓட்டங்களோடு வாஸ் நடையைக்கட்டியத்தை எப்போதும் மறக்க முடியாது. அதேநேரம் வாசின் முதல் போட்டியை எப்படி தோல்வியோடு ஆரம்பித்தாரோ அதை மீண்டும் ஒருமுறை இந்தப்போட்டி நினைவூட்டியது.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடன் ஆரம்பமானது இவரின் டெஸ்ட் பயணம். இந்தப்போட்டியிலும் தோல்விமுகக்த்தோடு தான் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழலுக்கு பாகிஸ்தானின் இரண்டு வேகப்பந்து சூரர்கள் செய்துவிட்டனர். வசீம் அக்ரம் முப்பத்திரண்டு ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டை வீழ்த்த மறுமுனையில் அவரின் சகா வக்கார் யூனிஸ் முப்பத்திநான்கு ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை ஆடிப்போனது. துடுப்பாட்டத்தில் எந்தவித ஓட்டமும் பெறாமல் வெளியேறினார் வாஸ். பந்துவீச்சிலாவது அசத்துவார் என பார்த்தால் அங்கேயும் ஏமாற்றம். முதல் போட்டியிலேயே விக்கெட் இல்லை, இலங்கை அணியின் இரண்டாவது இன்னின்சின் போது வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க படு தோல்வியோடு முடிந்தது அந்தப் போட்டி.

ஆனால் அதன் பின் நூற்றிப்பத்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வாஸ் ஒரு மிகச்சிறந்த சகலதுறை வீரராக பரிணமித்து இலங்கை அணிக்கு எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஓட்டங்களை குவித்துள்ள வாஸ் பதின் மூன்று முறை ஐம்பது ஓட்டங்களை கடந்திருப்பதே அவரின் துடுப்பாட்ட திறமைக்கு சான்று. ஆனால் அதை விடவும் தன்னால் முடியும் என தன் 97வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் நூறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அதிசயிக்க வைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சில் 354 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள வாஸ், ஒரு இன்னிங்சில் எழுபத்தொரு ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டினை கைப்பற்றியதோடு ஒரு போட்டியில் அதிக பட்சமாக பதின்நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பன்னிரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டு முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருப்பது அவரின் திறமைக்கு இன்னொரு சான்று. இப்படி சாதனைகளோடு இலங்கையின் வெற்றிகளில் தன் பங்கை பெருமளவு பதித்த வாஸ் இறுதியாக பாகிஸ்தானுடன் ஆடிய டெஸ்ட் போட்டிதான் அவரின் இறுதி டெஸ்ட் போட்டியாக மாறி விடுமோ என்பதே என் கவலை மட்டுமல்ல பல ரசிகர்களின் கவலையாக இருக்கின்றது.(ஒருநாள் போட்டிகளில் இந்தியாவோடு ஆரம்பித்து இந்தியாவோடு முடிந்தது போல இது பாகிஸ்தானோடு ஆரம்பமாகி இப்போ பாகிஸ்தானுடனேயே முடியும்?........) இறுதியாக அவர் ஆடிய டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் ஒருமுறை ஆட்டமிழக்காமல் பன்னிரண்டு ஓட்டங்களையும் மறுமுறை பதினேழு ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தவர் பந்து வீச்சில் எந்த வித விக்கெட்டையும் கைப்பற்றாது மீண்டுமொருமுறை இதுதான் இவரின் இறுதிப்போட்டியா என கிலி கொள்ள வைக்கின்றது.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் தன் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாஸ் அதன் பின்னர் நடை பெறும் டெஸ்ட் தொடர்களில் புறக்கநிக்கப்படுவதே இப்போது அவரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.அதற்கு முன் கிரிகெட்டின் அடுத்த பரிமாணமான போட்டிகளில் வாஸின் பங்களிப்பும் கணிசமானதே. 2006ம் ஆண்டு சர்வதேச ரீதியில் நியூசிலாந்துடனான போட்டியில் களம் புகுந்த வாஸ் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். மழை காரணாமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி பதினெட்டு ஓட்டங்களால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல்வேறு வகையான போட்டிகளில் வாஸ் விளையாடி வருகின்றார். இவை எல்லாம் வாஸ் இலங்கை கிரிக்கெட்டுக்காக தான் விளையாடிய காலத்தில் செய்த சாதனைகளும் சொதப்பல்களுமே.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்று வரை வாசைப் போல ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை இலங்கை பெறவில்லை என்பதே உண்மை. இவரின் பந்தை எதிர்கொள்ள எத்தனையோ துடுப்பாட்டக்காரர்கள் அஞ்சி நடுங்குவர். இப்படி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மின்னிய வாஸ், இன்று கேட்பாரற்று போயிருக்கின்றாரோ என்பதுதான் தெரியவில்லை. புதியவர்களின் வருகை புத்துணர்ச்சி தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட தொடக்கி இருக்கின்றார் வாஸ். ஆனால் அவரின் இடம் இன்னும் காலியாகத்தான் இருக்கின்றது. வாஸின் திறமை கடைசி நேரத்தில் சற்று தளம்பி இருப்பது என்னவோ உண்மைதான், அதேநேரம் புதியவர்கள் பட்டையைக் கிளப்பும் போது யாரை நிறுத்தி இவரை உள்ளே கொண்டுவருவது என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியே?

இந்த பாகிஸ்தானுடனான தொடரை பார்க்கும் போது நிரந்தரமாக வாஸ் ஒதுக்கப்படுவாரோ என்னும் அச்சம் எழாமல் இல்லை. காரணம், பாகிஸ்தானை எப்படி சுருட்டினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியுமே. என்ன தான் இருப்பினும் ஒரு சகலதுறை வீரராக பல வெற்றிகளின் பங்காளியான வாஸுக்கு தலைமைப் பதவி கொடுக்காததும் ஒரு மிகப்பெரிய குறையே. இப்படிப்பட்ட பல வீரர்களை இலங்கை அணி ஏனோ கண்டு கொள்வதில்லை.(நமக்கெதுக்கப்பா வம்பு).
புதியன புகுதலும் பழயன கழிதலும் இயல்பே, ஆனால் இப்படிப்பட்ட வீரர்கள் கிரிக்கெட்டை விட்டு போக முன்னர் அதற்க்கு ஏற்ற மரியாதையை கொடுக்க வேண்டியது எந்த அணியினரின், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் கடமையே. எனவே கவலையோடு முகவரி இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியோடு அவரை வழி அனுப்பாமல், மறைமுகமாக ஒப்பந்தம் செய்தாலும் பரவாயில்லை வெளி உலகிற்கு கௌரவமாக அவரை இன்னும் ஒருசில போட்டிகளில் விளையாட விட்டு மனமார(வெளி உலகிற்கு) வாஸாகவே விடைபெறுவது போல அவரை வழி அனுப்புவதே அவருக்கு கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல அவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்.
Share:

Wednesday, July 8, 2009

இறுதிச்சடங்கு நடக்கும் நேரத்தில் ஒரு பரபரப்பு- மைக்கல் ஜாக்சன் இறக்கவில்லை-ஆவி?

போப் இசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சன் இன்னும் இறக்கவில்லை அவர் உயிரோடு தான் இருக்கின்றார், மிக விரைவில் மீண்டும் வருவார் என ஒரு சில ரசிகர்கள் பரபரப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் ஆவியை பார்த்ததாக சொல்லும் சிலரும் இருப்பது மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.

வாழும் போதும் சர்ச்சை, மறைந்தாலும் சர்ச்சை இப்போது அவர் உடல் அடக்கம் செய்யப்படப்போகும் இந்த இறுதி நேரத்திலும் சர்ச்சை என சர்ச்சைகளின் நாயகனாக செத்தும் வாழ்கின்றார் மைக்கல் ஜாக்சன். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் கூட மறையப்போகும் நேரத்தில் அவருக்கு சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி உலவுவதாக இப்போது ஒரு கதை பரவ ஆரம்பித்திருக்கின்றது.

மைக்கல் ஜாக்சனின் அந்த பண்ணை வீட்டின் சுவரில் அவரின் நிழல் உருவம் தோன்றி பின்னர் மீண்டும் மறைந்து விட்டதாக CNN தொலைக்காட்சியின் இன்சைட் நெவெர்லந்த் என்ற நிகழ்ச்சியில் ஒரு சில ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். அந்த உருவம் பண்ணை வீட்டின் கொரிடோர் வழியாக சென்று மறைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஜாக்சனின் பல ரசிகர்கள் இதனால் குழப்பமடைந்திருக்கின்றார்கள். எதுவாக இருப்பினும் மரணித்தும் ஒரு சகாப்தமாக வாழும் மைக்கல் ஜாக்சனின் பெயரை சொல்லி யாரும் தவறுகள் செய்யாமல் இருப்பதே அந்த அற்புத கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகும். இன்னும் சற்று நேரத்தில் அடங்கப்போகும் அவரின் உடலோடு சர்ச்சைகளும் அடங்கி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
Share:

Tuesday, July 7, 2009

வெற்றி-தோல்வி-டோனி.

என் கையில் எல்லாமே இருக்குதடா!
இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். மிக்ச்சிறந்த விக்கெட் காப்பாளர் மட்டுமன்றி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் நல்ல துடுப்பாட்ட வீரர், இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்திய அணிக்கு தொடர் வெற்றிகளையும் T20 உலகக்கின்னத்தையும் பெற்றுக்கொடுத்த சாதனைத்தலைவர். இதெல்லாம் கடந்த உலகக்கிண்ண தொடர் வரை தான். அதற்கு பிறகு எல்லா நிலைமையும் மாறி விட்டது.
இந்த நிலை வந்து சேருமோ?
ஷேவாக் என்னும் அதிரடி அசகாய சூரன் இல்லாமல் தாங்கள் ஜெயிப்போம் என உலகக்கிண்ணத்தில் காலடி எடுத்து வைத்தவர்களுக்கு ஷேவாக் பிரச்சனை ஏனோ தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. கூல் தலைவர் என பெயரெடுத்த டோனி சூட்டு தலைவர் ஆனார். ஒருவாறு உப்புசப்பு அணிகளை வென்று சூப்பர் எட்டுக்குள் போன அணி இங்கிலாந்து ,மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் வெல்லவேண்டிய, வெல்லக்கூடிய போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதுவும் இங்கிலாந்துடனான போட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை, அந்தப்போட்டியில் டோனி என்னும் மிகச்ச்சிறந்த தலைவன் மிகத்தவறான பல முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய தவறாக சுட்டிக்காட்டப்பட்டது ரவீந்தர் ஜடேயாவை தங்களுக்கு முன்னர் அனுப்பி டெஸ்ட் போட்டிபோல அவர் விளையாட அதன் பின் தான் வந்து ஜெயிக்கலாம் என போட்ட கணக்கே விமர்சிக்கப்பட்டது.
நான் கணக்கில புலி ஒருக்கா எனக்கு ஒருக்கா உனக்கு சரியா?

அதன்படியே வந்த டோனி இறுதி ஓவரில் செய்தது நினைவிருக்கும் T20ஐ பொறுத்தவரை அது ஒரு பெரிய ஓட்ட எண்ணிக்கை அல்ல. அப்படி இருப்பினும் டோனி மந்தமாக விளையாடி அணியை தோல்வி அடையச் செய்தார். தோனியின் தனிப்பட்ட துடுப்பாட்டம் தப்பாக அமைந்தாலும் அந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தால் ஜடேயாவை முதலே அனுப்பியது சரியென எல்லோரும் புகழ்ந்த்திருப்பர். காரணம் அந்த நேரம் விக்கெட் ஒன்று இழக்கப்பட்டாலே போட்டி படுதோல்வியில் முடிந்திருக்கும். இதை பல பதிவர்கள் பதிவு இட்டு விட்டனர். ஆனால் நான் இதை மீண்டும் சொன்னதுக்கு காரணம் என் இந்த பதிவின் அடித்தளமே இதுதான். இவை எல்லாம் முடிந்து ஆறி அடங்க முன்னமே மேற்கிந்திய தீவுகள் உடனான தொடர்.
வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோற்கிறவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்பான் ஆனால் இங்கே எல்லாமே என் கையில்

மீண்டும் ஷேவாக்,சச்சின்,சகீர்கான் போன்ற பெருந்தலைகள் இல்லாமல் பறந்தனர். முன்னமே சொல்லிவிட்டார் டோனி இந்தத்தொடரில் களங்கத்தை தீர்ப்போம் என. அதன்படியே முதல் போட்டியில் மலை என ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றனர். இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள். தொடரின் முன்னிலையை தீர்மானிக்கப்போகும் போட்டியில் இந்தியா தடுமாற தோணி போல மீட்டெடுத்தார் டோனி. இறுதிவரை தன கைகளிலேயே போட்டியை வைத்திருந்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அடுத்த போட்டியும் மழையால் கைவிடப்பட முதன் முறையாக மேற்கிந்திய மண்ணில் ஒருநாள் சரவதேச தொடர் வெற்றி ஒன்றை பதிந்தது இந்தியா. T20இல விட்ட கோட்டையை இங்கே சரி செய்தனர்.

இந்த படத்துக்கு கருத்து போட என்னால முடியல நீங்கள் முயற்சி செய்து பாருங்க.

இதெல்லாம் எங்களுக்கு தெரியும் தானே ஏண்டா இதையே சொல்லி கொல்லுறாய் என திட்டாதிங்க. இதுதாங்க விடயமே. இதே டோனி தானே T20 உலகக்கிண்ணத்தில் சொதப்போ சொதப்பென சொதப்பினார். அதுவும் மிக இலகுவாக வெல்லவேண்டிய போட்டியைக்கூட தன் கையாலேயே தாரை வார்த்த்துக்கொடுத்தார். ஒருவேளை இம்முறை பாகிஸ்தான் தான் சாம்பியன் ஆக வேண்டுமென இவரே கணக்குப்போட்டு விட்டாரா? ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியில் இறுதி ஓவரில் அப்படி ஆடி வெற்றி பெற்றுக்கொடுத்த தோனியால் ஏன் T20 போட்டியில் அதுவும் அனல் பறக்கும் ஆட்டம் ஆடும் அந்தப்போட்டியில் முடியாமல் போனது.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் இருக்கமுடியும். வழக்கமான இந்திய அணியின் நட்சத்திரங்களுக்கு வந்திருக்கும் கௌரவப் பிரச்சனையே என்பதே என் கருத்து.(இது என் கருத்து தாங்கோ மறுக்கிறவங்க பின்னூட்டத்தில் என்னை துவைத்தெடுங்கோ) அதாவது தான் நினைத்தால் இந்தியாவை வெல்ல வைக்கமுடியும் அதே நேரம் தோற்கவைக்கவும் முடியும் என்பதை டோனி யாருக்கோ சொல்லி இருக்கின்றார். தோனியை இப்படி சொல்ல வைத்தவர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் வீண் விளையாட்டு இம்முறை உலகக்கிண்ணத்தை எடுக்க தகுதியான அணியாக இருந்த ஒரு அணியை செத்த பாம்பாக்கி இருக்கின்றது. அதே நேரம் சச்சின், ஷேவாக் இல்லாமல் கூட இந்திய அணி வெல்லும் நான் திட்டம் போட்டால் என்பதோடு நான் இல்லாவிட்டால் வெல்லவே வெல்லாது என்பதைக்கூட கும்ப்ளே தலைவராக இருந்த போது நடைபெற்ற இலங்கைத்தொடரின் போது அதையும் நிரூபித்தார்.(என் டோனி ஒரு மந்திரவாதியா என்னும் பதிவை வாசித்து பாருங்கள் புரியும்http://sshathiesh.blogspot.com/2009/05/blog-post_10.html)

எதுவாக இருப்பினும் இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் டோனி ஒரு மந்திரவாதி மட்டுமல்ல இந்திய அணியின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கும் சக்தியும் அவரே என்பது தான் என் கருத்து. இதற்கு மாற்றுக்கருத்து இருப்பவர்களும் உங்கள் கருத்தை தாராளமாக சொல்லுங்கள். அதேநேரம் என் கருத்தோடு ஒத்துப்போனால் அதையும் சொல்லிவிட்டு போங்கள்.
Share:

Saturday, July 4, 2009

உலகின் முதல் AC கடற்கரை உங்களுக்காக.

உலகிலேயே முதல் குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை துபாயில் வரப்போகின்றது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் போது கூட அசராத நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. எனவேஅவர்களின் மற்றுமொரு சாதனையாகத்தான் இந்த அரிய முயற்சி எடுக்கப்படுகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு பிரமாண்டமான அருங்காட்சியகத்தோடு மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அதிலே செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் பல வீடுகள் கூட விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையிலே தான் பலேசோ வேர்சாஷ் ஹோட்டலுக்கு அருகில் கடற்கரை மணலுக்கு அடியிலே பைப்கள் மூலம் குளிரூட்டும் வசதி செய்யப்படுகின்றது. இதன்காரணமாக கோடைக்காலத்தில் கூட மணலின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு நண்பகல் 12மணிக்கு கூட கடற்கரையில் நீங்கள் நிம்மதியாக படுத்தே தூங்கலாமாம்.

கோடை என்றாலே சவுதியில் வெயில் கொளுத்தும் ஐம்பது டிகிரிக்கு,ஆனால் பலேசா வெர்ஷாஷ் ஹோட்டலை சுற்றி இருக்கும் மணல் பகுதிகளோ சும்மா சில்லின்னு இருக்குமாம். ஆனால் இந்த வசதி இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்ண்டோ தான் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக சொல்கின்றார்கள்.

அப்படி நடைபெற்றால் உலகிலேயே முதலாவது குளிரூட்டப்பட்ட(AC) கடற்கரை என்னும் சாதனைப் பெயர் துபாய் கடற்கரைக்கு கிடைக்கும். உங்களுக்கும் ஆசையாய் இருக்கும் தானே ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.
Share:

Thursday, July 2, 2009

சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்குள் நுழைந்த சூப்பர் ஸ்டார்.


நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவது தான் இப்போ Fashion. அந்த வகையில் இனி வரும் காலங்களில் சினிமாவை விட்டுவிட்டு முழுமூச்சாக அரசியலில் மட்டும் ஈடுபடப்போவதாக தெரிவித்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார்.
ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் நம் ரஜினி அல்ல, சிரஞ்சீவி.
பிரஜா ராஜ்ஜிய கட்சி தலைவராக அரசியலில் காலடி எடுத்து வைத்து பல சோதனைகளை சந்தித்தவர் இன்று முற்றுமுழுதாக இனி அரசியல் தான் என ஒரு முடிவேடுத்திருக்கின்றார்.இரண்டு குதிரைகளில் எப்படி ஒருவரால் பயணம் செய்யமுடியாதோ அதேபோல இனி என்னால் சினிமா,அரசியல் என இரட்டை சவாரி செய்யமுடியாது அதனால் சினிமாவை விட்டு ஒதுங்குகின்றேன் என அறிவித்திருக்கின்றார்.இது அவரின் ரசிகர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கின்றது.

ஹைதராபாத்தில் இதுபற்றி நிருபர்களிடம் விளக்கம் கொடுத்திருக்கும் சிரஞ்சீவி,சினிமா நான் பிறந்தவீடு, அரசியல் நான் புகுந்தவீடு. பிறந்தவீடு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த பின் எப்படி பிறந்தவீட்டுக்கு கணவனை பிரிந்து பெண்ணால் செல்லமுடியாதோ அப்படிதான் என் நிலையும் எனக்குறிப்பிட்டிருக்கின்றார்.(நம் நடிக அரசியல் வாதிகளுக்கு இது தெரியலையே, ஒருவேளை தாங்கள் ஆண்கள் தங்களுக்கு புகுந்தவீடு பிறந்தவீடு எல்லாம் ஒன்று என நினைக்கின்றார்களோ? அப்படி என்றால் சிரஞ்சீவி பெண்ணா?)

கட்சியைக் கட்டி எழுப்புவதே இப்போது தன் முதல் கடமை எனக்குறிப்பிட்ட அவர், கடந்தமுறை கட்சிக்கு கிடைத்த சின்னமே தோல்விக்கு காரணமென்பதால் இம்முறை உதய சூரியன் சின்னத்தில் உதித்தெளுவோம் என உறுதியளித்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார்.

என்னதான் அரசியலில் சென்று அவர் கலக்கினாலும் சினிமாத்துறையைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய இழப்பே. ஒரு சூப்பர் ஸ்டார் நுழைந்துவிட்டார் மற்றவர்?
Share:

Wednesday, July 1, 2009

Pen Driveஇல் நுழையும் வைரசுக்கு தீர்வு.

என்னதான் கவனமா பயன்படுத்தினாலும் Pen Driveக்குள் வைரஸ் வந்துவிடுகின்றது என்று நீங்கள் அடிக்கடி கவலைப்பட்டதுண்டா? அதேநேரம் ஒவ்வொருமுறையும் வைரசினால் பாதிக்கப்பட்டு பணம் செலவழித்து அடிக்கடி புது Pen Driveவாங்குபவரா நீங்கள்?. உங்கள் கவலை தீரத்தான் இந்த பதிவு.

Pen Driveஇல் வரும் வைரஸ்கள் எல்லாம் autorun.inf என்ற folderஐ அடிப்படையாக வைத்தே நுழைகின்றன. எனவே நீங்கள் அதே பெயரில் ஒரு flder ஐ ஏற்கனவே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது. இப்போது வைரஸ்கள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
அப்புறம் என்ன? எந்த தயக்கமும் இன்றி Pen Driveஐ பயன்படுத்தலாமே.
Share:

நயன்தாராவிற்காய் ஏங்கிய மைக்கல் ஜாக்சன்.

எல்லோருமே "கிங் ஒப் போப்" மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது நான் அதை வாசிப்பதோடு மட்டுமே நிறுத்திவிடுவேன். அதற்கு இரண்டு காரணம், ஒன்று எனக்கு மைக்கல் ஜாக்சன் பற்றி பதிவிடும் அளவிற்கு அவர் பற்றிய அறிவு போதாது. இன்னொன்று எங்கேயும் அவர் பற்றிய பதிவுகளை பார்த்த சலிப்பு. (ஆனால் அவர் பற்றி நான் தெரியாத பல விடயங்களை தெரிய உதவிய நம் பதிவர்களுக்கு நன்றி.)

நீங்கள் எல்லாம் உலகை கலக்கிய மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது, நான் ஏதோ எனக்கு தெரிந்த நம் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் அதுதாங்க பிரபுதேவா பற்றி எழுதுகின்றேன். (அதற்கு முன் எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான். அவன் என் வலைப்பதிவு பக்கம் வரவே மாட்டான், ஒருமுறை பேசும் போது சொன்னான் நீ என் செல்லம் நயனைப் பற்றி எழுது நான் வருகின்றேன் என்று. அவன் ஆசையையும் இப்போது நிறைவேற்றுகின்றேன்.)

03.04.1973 கர்நாடகாவில் பிறந்த நம் பிரபுதேவா, தமிழ் சினிமாவின் முக்கியமான நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன். ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் இந்த இரண்டுபேரும் இவரின் சகோதரர்கள் மட்டுமல்ல பிரபல நடன இயக்குனர்கள். இப்படி இருக்கும் போது பிரபுதேவா மட்டும் என்ன செய்வார்? நடனம் அவர் ரத்தத்தில் கலந்திருக்காதா அதையே தன் தொழிலாக்கிக்கொண்டு வெற்றிவிழா படத்தில் தன் வெள்ளோட்டத்தை ஆரம்பித்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் அதற்க்கு இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? அக்கினி நட்சத்திரம் படத்தில் முதல் முறையாக நடனக்குழுவில் ஆடும் ஒருவராக திரையில் தோன்றினார். அதன் பின் காதலன் படம் மூலம் கதாநாயகனாக முழு அவதாரம் எடுத்தவருக்கு அது பெரிதாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் அந்தந்த கால முன்னணி கனவுக்கன்னிகள் அத்தனை பேருடனும் நடித்துவிட்டார். தன் சகோதரர்களுடன் படத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படியே போன இவரின் வாழ்க்கையில் பல கிசுகிசுக்கள் பலருடன். ஆனால் அத்தனையையும் கடந்துவந்துவிட்டார் இன்றுவரை. பல விருதுகளை நடன கலைஞராக குவித்தவருக்கு நடிப்பு காலை வாரிவிடவே, சற்று நாள் இடைவேளையின் பின் இயக்குனராக பரினமித்து வெற்றியும் பெற்றார். அதுவும் தமிழில் முதல் திரைப்படமே விஜயை வைத்து. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அது மாற இந்த கூட்டணிதான் இன்று அத்தனைக்கும் வித்திட்டு இருக்கின்றது.

மறுபக்கம் நம் கதையின் நாயகியும் வில்லியுமான நயன்தாரா. ஹரியின் ஐயா படம் மூலம் குடும்பகுத்துவிளக்காக அறிமுகமான இவர். சிம்புவினால் கசக்கிப்பிளியப்பட்டு சிக்கி சின்னா பின்னமாகி தமிழ் சினிமாவே வேண்டாமென போய்விட்டு மீண்டும் அஜித்தின் பில்லாவில் வந்து கிறங்கடித்து இன்று கலக்கி வருகின்றார். ஆரம்பத்திலேயே ரஜினியின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த இவர் மேல் விஜய்க்கு ஒரு கண். அதற்கு ஏற்றால்போல வில்லு திரைப்படம் அமைய நாயகியாக ஒப்பந்தமாகி வந்தார். வந்தவர் விஜய்க்கு நாயகியாகவும் பிரபுதேவாவின் மனைவிக்கு வில்லியாகவும் வந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை நல்ல மனைவி என வாழ்ந்த பிரபுதேவாவும் ஆடிப்போய்விட்டார். பட கலந்துரையாடல் நன்றாகவே செய்து படமும் வந்தது. இதற்கிடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துவிட நயன் ரொம்ப அக்கறையோடு நம் மைக்கல் ஜாக்சனை கவனித்திருக்கின்றார். அதன் பின் நடந்த பல விடயங்கள் பி.பி.சியில் வராத குறையே.(விஜய் உங்கள் வில்லு ஊத்திக்கிட்டதுக்கு இதை ஒரு காரணமா சொல்லுங்கப்பா! படம் எடுக்கிறான் எண்டிட்டு இரண்டு பேரும் எதைஎதையோ எடுத்திட்டாங்க என.)

துபாயில் ஒன்றாக கூடிகும்மியடித்த இந்த ஜோடி மக்களிடம் மாட்டிய மறுநாளே விஜய் T.Vயின் யார் அடுத்த பிரபுதேவா? என்னும் நிகழ்ச்சியில் மைக்கல் ஜாக்சன் பங்கு பற்றவேண்டும். வருவாரா எனப்பார்த்தால் மனிதர் பக்காவா தயார்.(நயனுடன்தான்) எப்படியோ கை காலில் விழுந்து அந்த நிகழ்ச்சிக்கு நயனையும் விருந்தினராக அழைத்துவிட்டார் நம் மைக். இது எப்படியோ ஐயாவின் அம்மணிக்கு தெரிந்துவிடவே தன் மாமனாருடன் இணைந்து திட்டம் தீட்டி மைக்கை கவிழ்க்க தயாரானார்.

நிகழ்ச்சி அன்று மைக் நன்றாக உடுத்தி தயாராக தானும் அவருடன் வருவதாக் கூறி மனைவியும் கிளம்ப நிஜமாவே ஆடிவிட்டார் மைக்.(வாழ்க்கையில் அப்படி ஒரு ஆட்டம் ஆடி இருக்கமாட்டார் எந்த மேடையிலும்.) மனிதருக்கு என்னசெய்வதென்றே தெரிந்திருக்காது. காரணம் தொலைபேசி அழைப்புக்கூட எடுக்க முடியாதபடி பக்கத்தில் மானைவி. என்ன செய்வது அப்போது அவருக்கு கடவுள் எஸ்.எம்.எஸ் தான். ஒருவாறு நயனின் வருகையை நிறுத்திய நிம்மதியோடு ஒருகிளி தனியே சென்று வந்ததாம் அந்த நிகழ்விற்கு.

நிஜமான மைக்கல் ஜாக்சன் வாழ்வில் எவ்வளவு சர்ச்சைகள் சோதனைகள் இருந்ததோ(பெண்கள் விடயத்தில் மட்டுமே. அவர் போல இவர்மேல் யாரும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லவில்லை.) அதேபோல தன் வாழ்விலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காது வாழும் பிரபுதேவா நிஜமாகவே இந்தியாவின் மைக்கல் ஜாக்சனே.

Share:

Monday, June 29, 2009

கண்ணைக்கவரும் கவர்ச்சிப்படங்கள்.

























எனக்கு நண்பர் ஒருவர் e-mail மூலம் அனுப்பிய சில கவர்ச்சியான படங்களை இங்கே பகிருகின்றேன். நிச்சயமாக இவை உங்களை கவரும் கவர்ச்சிப்படங்கள் தானே. பிடித்திருந்தால் அப்படியே ஒருதடவை வாக்களித்துவிட்டு போங்களேன்.
Share:

Saturday, June 27, 2009

விஜய்,அஜித்தை மிஞ்சிய ஆர்யா!

நடிப்பில் நல்லா நடிப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்துவார். நடிகராக திறமையானவராக இருந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியாளர் இல்லை.அறிந்தும் அறியாமலும் தான் இதுவரை இவரின் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனால் அதுதான் முதல்படமும் கூட. ஆனால் நடிப்பில் சிகரம் தொட்டது. பாலாவின் நான்கடவுள் தான் இவரின் நடிப்பு பசியை தீர்த்தது. அப்போதும் அந்தப்படத்துக்கு அதிககாலத்தை செலவழித்த களைப்பு தீரமுதலே படம் பெட்டியைக்கட்டியது.

ஆனால் அதன் பின் இன்னுமொரு பரீட்சாத்தமாக மதராசுப்பாட்டனம் என்னும் சரித்திர படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். அடுத்ததாக சிக்குபுக்கு படமும் வரபோகின்றது. நடிப்பில் சாதிக்க எவ்வளவோ இருக்கும் போது விஜய் அஜித் கூட செய்யாத ஒரு அரிய முயற்சியை(இது எத்தனை நாளைக்கோ தெரியல) இப்போது செய்யப்போகின்றார். நடிக்கவே நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இவருக்கு "த ஷோ பீப்பிள்" என்னும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படம் தயாரிக்கப்போகின்றாராம்.

படித்துறை என்னும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைப்பது தான் மிகப்பெரிய அதிசயம். முதல் படத்திற்கே இசைஞானி இசை அமைப்பது அவருக்கு வெற்றியே. படமும் வெற்றி அடைந்தால் அதன் பின் நல்ல படங்களை கொடுத்தல் விஜய், அஜித்தை ஆர்யா மிஞ்சுவார்தானே சொல்லுங்க.
Share:

Monday, June 22, 2009

தேவையா இது?இளைய தளபதி டாக்டர் விஜய்க்கு .............


வெற்றிமாலைக்கென்று பிறந்தவனே.......


இன்றோடு உங்களுக்கு முப்பத்தாறு வயதாகின்றது. நடிக்கவந்து ஐம்பதாவது படமும் தொடப்போகின்றீர்கள். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

கொஞ்சம் உங்கள் கடந்த கால வாழ்க்கையை நீங்கள் அலசிப்பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும் போதுதான் நீங்கள் இப்போது எங்கே நிற்கிறீர்கள் அரசியல் தேவையா என்பது தெரியும்.

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்.



உங்கள் தந்தை தன்னை ஒரு புரட்சிகரமான இயக்குனராக ஓரளவு வெற்றிகரமான இயக்குனராக நிரூபிக்க, பட்ட கஷ்டங்கள் தெரிந்தவர் நீங்கள். ஒருமுறை நீங்களே ஒரு பேட்டியில், உங்கள் இளவயது கஷ்டங்களை எல்லாம் சொன்னிர்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே குடிக்கும் பால் மா இல்லாமல் கஷ்டப்பட்டது, பெட்ரோல் நிலையத்தில் இருந்து படித்தது எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும். இதை நீங்களே சொல்லி இருப்பதால் நிச்சயம் நீங்கள் பழசை மறக்காதவர் என்பது தெரிகின்றது.


குட்டி விஜயின் பிறந்தநாள்.

உங்கள் வாழ்வில் நீங்கள் கலகலப்பானவர் ஆனால், தங்கையின் இழப்பே உங்களை இப்படி மாற்றியது என்பதை ஏற்கின்றோம். இந்த அமைதி பக்குவம் எல்லாருக்கும் வராது. லயோலா கல்லூரியில் படிக்கும் போதே கல்லூரிக்கு "கட்" போட்டிட்டு உங்கள் தலைவர்(இப்போ இவர் யாரென கேட்கக்கூடாது) ரஜினியின் படம் பார்க்காப்போனது எல்லாம் உங்களுக்கு சுவையாக இருக்கும். ஆனால் அதுதான் பின்னர் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது என்பது உண்மையே.



தமிழ் திரையில் சொந்தக்காலில் விஜய்.


உங்கள் தந்தை இயக்குனர், தாய் தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகி இப்படி இருக்கும்போது நீங்கள் சினிமாவிற்கு வந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் பலர் சொல்வது போல உங்கள் தந்தை மற்றும் தாய் ஆரம்பத்தில் உங்களை தாங்கிப்பிடித்து வளர்த்ததை நீங்களும் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதனாலே மட்டும் நீங்கள் இன்று இந்த நிலைக்கு வந்தீர்கள் என்பது ஏற்கமுடியாது. வாரிசாக மட்டும் இருந்தால் ஜெயிக்கமுடியாது. திறமையும் வேண்டும், அந்த திறமை இருப்பதால் தான் இன்று உங்கள் நிலை இப்படி.


தளபதியும் இளையதளபதியும்....... ஒரேமாதிரி யோசிப்பாங்களோ?

அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை உங்கள் தந்தைக்கே நடித்து காட்டி ரஜினிதான் உங்கள் குரு என சொல்லாமல் சொல்லி நடிக்க வந்த நீங்கள் அறிந்தோ அறியாமலோ அவரை பின்பற்றியது ஆச்சரியமில்லை.(ஏனெனில் ஒரு துறையில் ஒருவரை நாங்கள் ரசிக்கும் போது அதே துறைக்கு நாம் வந்தால் அவர் பாதிப்பு நம்மிடம் வரும் என்பது தவிர்க்கமுடியாததே.) அப்படி இருக்கும் போது ஒரு சில தனித்தன்மைகளோடு உங்கள் படங்களை கொடுக்கின்றீர்கள்.

திருமணக்கோலத்தில் இலங்கைமண்ணின் மகள் சங்கீதாவுடன்.

உங்கள் திரைபிரவேச காலத்தில் நீங்கள் நடித்த சில திரைப்படங்கள் இன்று நீங்களே பார்க்கும் போது ஏன் நடித்தோம் என உங்களுக்கு தோன்றும். (உதாரணம் மாமிக்கு "soap" போடும் நல்ல தரமான காட்சிகள்.) ஆனால் அதை எல்லாம் இப்போது பேசுவதை விட காலம் கடந்தும் நிற்கும் படத்தை கொடுப்பதே உங்களுக்கு நல்லது. பொதுவாக நீங்கள் நடிக்கும் படங்கள் பெரிதாக கதை இருப்பதில்லை. ஆனால் ஏதோ சுவாரஷ்யம் இருக்கும். உங்கள் வெற்றியும் அதுதான், உங்கள் தோல்வியும் அதுதான்.


அன்றும் இன்றும் ஒரு சில வித்தியாசங்களுடன்.

இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நடித்த பல திரைப்படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியதுதான். இன்று பெரும் விமர்சனத்தை சந்தித்த வில்லு, குருவி படங்கள் கூட யாரையும் ஏமாற்றவில்லை. உங்களின் மிகப்பெரிய வெற்றி அதுதான். அதனால் தான் உங்களுக்கு எம்.ஜி.ஆர்,ரஜினி என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு வசூல் நாயகனாக ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். அதை புரிந்து நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுவயதில் விஜய்.

பொதுவாக நீங்கள் தோற்றத்தை மாற்றாது ஒரே தோற்றத்தோடு ஒரேமாதிரியான படத்தை கொடுத்தாலும் முன்னணி கதாநாயகனாக வலம் வருவது சாதாரண விடயமில்லை. அதாவது உங்கள் படம் ஓடுவது உங்களுக்காக மட்டும்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது. அதிலும் கதை சேர்த்து நடித்தால், நீங்கள் இன்னும் உங்களை உயர்த்தலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?. ஆரம்பகால உங்கள் படங்கள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானாலும் அதன் பின்னர் அதை எல்லாம் மாற்றி இன்று தாய்க்குலத்தின் மதிப்பை வென்ற ஒருவர் நீங்கள் தான். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி கட்டி வைத்திருப்பது என்பதும் ஒரு சாதனையே.

டாக்டர் பட்டம் ஷங்கருடன். எஸ்.ஏ.சியின் இரண்டு மாணவர்களும்.

நீங்கள் செய்த சமுகசேவைகள் இன்னும் அளப்பரிய சேவைகளை(என்ன என கேட்கக்கூடாது.) எல்லாம் பாராட்டித்தான் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே இன்று உங்களை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றதா என்பதே என் கேள்வி. நன்றாக போய்க்கொண்டிருந்த உங்கள் திரைப்பயணத்தில் அண்மையில் பல சறுக்கல்கள். அதை திருத்தி கொடுக்கும் அக்கறையே இல்லாதவர் போல உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. அடிமட்ட ரசிகர் முதல் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் வரை உங்களை ரசிக்கின்றார்கள்.(இந்திய சஞ்சிகை ஒன்றில் பார்த்தேன்) அப்படி இருக்கும் போது தரமான படங்களை கொடுக்கவேண்டாமா?


கிடைச்சது இதுமட்டும் தானுங்கண்ணா.......


ஒரு காலத்தில் உங்களுக்கு நடனம் தெரியாதென நடன இயக்குனர் திட்டியதால் அதன் பின் உங்கள் முயற்சியினால் தானே இன்று நடனத்தில் உங்களை யாரும் அடிக்க முடியாவில்லை. அதேபோல கதையிலும் உங்கள் நடிப்பிலும் கவனம் செலுத்தலாமே.(நான் இயக்குனர்களை நம்புறன் அவங்க தான் கவுத்து விடுறாங்க என சொல்லாதிங்க.)

உங்களின் படிக்கல். அப்போது ஏற்றிவைத்தவர். இப்போது இறக்கியும் விடுகின்றார்.

சினிமாவில் உங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் உங்கள் தந்தை என்பதை மறுக்கமுடியாது. உங்கள் ஆரம்பகாலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள் உங்களை இன்று சிகரத்தில் வைத்திருக்கின்றது. அதை இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்??????? இவ்வளவு அனுபவம் எத்தனையோ பிரச்சனைகளை எல்லாம் பார்த்து வெற்றி தோல்விகள் எல்லாம் பார்த்த நீங்கள் ஏன் முடிவெடுப்பதற்கு இன்னும் குழம்புகின்றீர்கள். நீங்கள் குழம்புவதோடு ரசிகர்களையும் குழப்புகின்றீர்கள். ஆனால் உங்களை குழப்புவது என்னவோ உங்கள் தந்தை தான். அவரை கொஞ்சம் யோசித்து பார்க்க சொல்லுங்கள். ஒழுங்காக மைக் பிடித்தது பேசத்தெரியாத உங்களுக்கு எதுக்கு அரசியல்.
இந்தியாவே விஜய்க்கு பின்னாலயாம்!!!!!!

மகனை முதல்வராக்கிப்பார்ப்பது அவருக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்த அந்த துறையில் முதலில் சாதனை நாயகானாக முன்னுக்கு வாருங்கள். ஒரு காலத்தில் ஸ்டார் பட்டத்தின் மேல் இளம் நடிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு இப்போது உங்கள் தளபதிப்பட்டம் மேலேதானே. அது ஏன் உங்களுக்கு புரியவில்லை. தமிழ் சினிமாவில் நீங்கள் இன்னும் உழைத்தால் உங்களுக்கு ஒரு சிகரத்தை தர ரசிகர்கள் காத்திருக்கும் போது ஏன் இப்பட்டிப்பட்ட ஆசை. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் அரசியல் என்ன ஆகுமென யோசியுங்கள்.


இவரும் ஒரு வழிகாட்டியா? நடக்கட்டும் நடக்கட்டும்.

எனைப்பொறுத்தவரை நீங்கள் சுயமாக சிந்திக்கவில்லை என நினைக்கின்றேன். உங்களுக்கு பிடிக்காத இந்த அரசியலில் உங்கள் தந்தையின் வலுக்கட்டாயத்தால் தான் இறங்க முடிவெடுத்தீர்கள் என நினைக்கின்றேன். இப்போது நீங்கள் அந்த முடிவை பிற்போட்டிருப்பது சந்தோசம். இந்த இடைப்பட்ட காலத்தில் யோசித்து நல்ல முடிவெடுங்கள்.

இப்பிடி கூடும்போதே திட்டம் தீட்டுவாங்களோ?


ஏராளமான ரசிகர் பலம், அரசியல் பலம் இருக்கும் ரஜினியே அரசியலுக்கு வர தயங்கும்போது உங்களுக்கு ஏன் இந்த அவசரம். ஆனால் நீங்கள் ரஜினியின் விசிறி என நிரூபிக்கின்றீர்கள். அதுதான் அரசியக்கு வருவேன்.......ஆனால் வரமாட்டேன்.


உன்னால் முடியும் என்பது உங்களுக்கும்தான் விஜய்.(நல்ல படங்களை கொடுப்பதை சொன்னேன்.)

உங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவே போதும் ஆனால் அதிலும் ரசிகர்களை சோதிக்காமல், உங்களை பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் படி உடனடியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவேண்டியதே இப்போதைய காலத்தின் தேவை. அதுமட்டுமன்றி ஐம்பதாவது படத்தை ஒரு பிரமாண்ட வெற்றிப்படமாக கொடுப்பதே இதுவரை உங்களை நம்பிய ரசிகர்களை நீங்கள் திருப்திப்படுத்த ஒரே வழி. உன்னால் முடியும் என கொடியில் பதித்திருக்கும் உங்களாலும் முடியும் என்பதை தலைவரான நீங்கள் முதலில் நம்பவேண்டும். எனவே கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உங்களை விஞ்ச எவரும் இல்லை. வெற்றிமாலை உங்கள் தோள்களில் ஆடாமல் போக வாய்ப்பும் இல்லை. அதை விட்டுவிட்டு எனக்கும் silence சொல்லிவிட்டு நீங்கள் வேண்டாத துறைதான் வேண்டுமென போனால் அங்கே உங்களுக்கு silence சொல்ல நிறையபேர் காத்திருப்பார்கள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox